அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 29 June 2017

உணவுப் பொருளா? அல்லது உயிர்கொல்லியா?

இந்த உலகத்தில் எல்லா பொருட்களும் இயங்க சக்தி, ஆற்றல் தேவைபடுகின்றது. அதே போல மனிதனின் இயக்கத்திற்கும் குறிப்பிட்ட ஆற்றல் தேவைபடுகின்றது. அது உணவின் மூலம் கிடைக்கின்றது. உணவு மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்று. உணவின்றி மனிதனால் தொடர்ந்து இந்த உலகத்தில் பயணிக்க முடியாது. அதனால் தான் இஸ்லாம் ஒரு மனித எவற்றை உண்பது கூடம் எவையெல்லாம் உண்பது கூடாது என்பத்தை கூட தெளிவுபடுத்துகிறது. காரணம் ஒரு மனித வாழ்விற்கு இன்றியாமையமாத ஒன்றை பற்றி தெரிந்திருப்பது அதில் வரும் கெடுதிகள் பற்றி அறிந்திருப்பதும் அவனுக்கு கடமை. மனித வாழ்விற்கு வழிகாட்ட வந்த திருமறை கூட உணவு கோட்பாடுகளை பற்றி பேசுகின்றது.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.

{يَاأَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا } [البقرة: 168]

இந்த வசனம் ஒட்டுமொத்த மக்களையும் பார்த்து பேசுகின்றது. மேலும் உணவின் நிபந்தனைகளாக அல்லாஹ் இங்கு இரண்டை குறிப்பிடுகின்றான்.

1. ஹலாலாக இருக்கவேண்டும்.

2. நல்லவையாக இருக்க வேண்டு. 

இந்த இரண்டு நிபந்தைகள் உள்ள உணவை அல்லாஹ் உண்ணும்படி இறைவன் சொல்லுகின்றான்.

ஆனால் இன்றைய உலகில் இந்த இரண்டு நிபந்தைகளை பூர்த்திசெய்யும் உணவுகள் கிடைப்பது மிக அரிது. தரம் குறைந்த உணவு பொருட்கள், பின்விளைவுகளை உண்டாகும் உணவு பொருட்கள் சந்தைகளில் அதிகம் காணபடுகின்றது. கார்பைடு கற்களால் அலுக்க வைத்த மாம்பழங்கள், கெட்டுப்போன இறைச்சி பார்சல்கள் போன்றவைகள் மனித ஆரோக்கியத்தோடு விளையாடும் உணவு பொருள்கள். இதை தாயாரிக்கும் நிறுவனங்கள் கூடல் தங்களின் இலாபங்களை கணக்கிடுகிரார்கலே தவிர இதை சாப்பிடும் மக்களின் நிலையை கணக்கில் கொள்வதில்லை. இத்தகைய உணவுபொருட்கள் பெரிய பெரிய நிறுவனங்கள் தயாரிப்பதால் அவைகள் தரமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடம் ஆழமாகம் பதிந்துள்ளது. சிறு வணிகர்கள் வியாபாரிகள் செய்யும் தவறுகள் உடனடியாக தேய்வது போல பேரு நிறுவனக்களின் தவறுகள் தெரிவதில்லை தெரியவும் அவர்கள் விடுவதில்லை.

இத்தகையை உணவு தர மோசடிகளை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இதை பற்றி நம் முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

(102) وَحَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் (சந்தையில்) ஒரு உணவு குவியலை கடந்து சென்றார்கள். அதில் தன் கையை (உள்ளே) நுழைத்த பார்த்தபோது அது ஈரமாக இருந்தது. அந்த உணவு பொருள் உரிமையாளரிடம், “ இது என்ன என்று கேட்டார்கள்”   அதற்கு அவர் “ இது மழையின் காரணமாக ஈரமாகிவிட்டது அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்  “ இதை மக்கள் பார்க்கும்படி உணவிற்கு மேலே வைத்திருக்க கூதாதா? யார் நம்மை ஏமாற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் இல்லை”

உணவு பொருளில் இருக்கும் குறைகளை வெளிக்காட்டாமல் விற்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஏமாற்றுவேலை என்றும் அதை செய்பவர் தன்னை சார்ந்தவர் இல்லை என்றும் கநடித்திருக்கிறார்கள் எனில் உன்ன தகுதியில்லாத உணவுகளை விற்பனை செய்யக்கூடிய வியாபார முறை மார்கத்தில் எந்த அளவிற்கு கண்டிக்க தகுந்தது என்பதை யோசிக்க வேண்டும். சில நேரங்களில் சந்தையில் விற்பனையாகும் 

உணவுகள் உயிர்கொள்ளியாக கூட மாறி விடுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு முன்பு தோன்றிய நபிமார்களை பகைத்தவர்கள் நிராகரித்தவர்கள் எதிர்த்தவர்கள் ஆகியோர்களை அல்லாஹ் அழித்திருக்கிறான். அத்தகைய மக்களிடம் ஏற்பட்ட சில தவறுகளின் காரணமாக.

லூத் அலைஹி ஸலாம் அவர்களின் கூட்டத்தார்கள் ஓரின சேர்கையின் காரணமாக அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் அத்தாத்சியாக இருந்த ஒட்டகத்தை அறுத்து அல்லாஹ்வையை நிராகரித்த ஸாலிஹ் அலைஹி ஸலாம் அவர்களின் கூடத்தை அல்லாஹ் அழித்தான். அதே போல வியாபார நடவடிக்கைகளில் நிறுத்தல், அளத்தல் அளவுகளில் மோசடி செய்த கூடத்தையும் அல்லாஹ் அழித்தான். எனவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருப்பது மட்டுமல்ல மனிதர்களின் நலனை சீர்குலைக்கும் எந்த செயலும் அல்லாஹ்வின் சாபத்தையும் கோபத்தையும் பெற்று தரும்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3)

83:1. அளவில் மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.

வியாபார மோசடிகளை பற்றி அல்லாஹ் சொல்லும்போது அளவில் ஏற்படும் மோசடிகளை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். அளவில் ஏற்படும் மோசடிகள் அடுத்தவருக்கு வர இருக்கிற இலாபத்தை குறைக்கும் அல்லா கொஞ்சம் நட்டத்தை கூட்டி தாரும். அதை குர்ஆன் வன்மையாக கண்டிக்கிறது. ஆனால் இன்று அதையும் தாண்டி பொருளின் அளவில் அல்ல பொருளின் தரத்தில் மோசடிகள் ஏற்படுகின்றது. இதன் விளைவு பணத்தில் ஏற்படும் நஷ்டமோ அல்லது இலாப குறைவோ அல்ல மனித உயிர்களில் ஏற்படும் இழப்பு. இது அல்லாஹ்விடத்திலே மிகப்பெரிய குற்றத்தை பெற்று தரும்.

صحيح البخاري (1/ 11)

، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ،

ஒரு முஸ்லிம் என்பவன் அவன் நாவாலும் கரத்தாலும் ஏற்படும் தீங்கை விட்டும் மற்ற முஸ்லிம்கள் நிம்மதி பெற்றிருப்பார்களே அவன்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்.

இது ஒரு முஸ்லிமின் இலக்கணத்தை படம் பிடித்து காடும் ஹதீஸ். எனவே நம்மை நம்பி வியாபாரம் செய்யும் அல்லது  பொருளை வாங்கும் வியாபாரிகளுக்கும் நாம் துரோகம் செய்யகூடியவர்களாக இருக்க கூடாது. அது ஒரு முஸ்லிமின் அடையாளம் அல்ல. ஒரு முஸ்லிம் அவன் ஏமாற்ற கூடியவனாக இருக்க மாட்டான்.

அதே சமயத்தில் ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருள் தரமானத என்று பார்த்து வாங்கும் பொறுப்பு வாடிக்கையாளர்களுக்கு உண்டு.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لاَ يُلْدَغُ المُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ»

ஒரு முஸ்லிம் ஒரே போனதில் இருமுறை கொத்துப்படமாடான் “ என்ற நபியின் வார்த்தை முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை உணர்வை தூண்டுகிறது. தரமற்ற பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றது என்ற செய்திகள் நமக்கு தெரிகிற போது எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு நம் உணவுப் பொருள்களை தரமான பொருளாக வாங்க முயற்சிக்க வேண்டும்.

நல்ல உணவு உண்பது என்பது நம் வாழ்வியல் சார்ந்த விஷயமாக இருந்தாலும் அதை அல்லாஹ் எல்லா நபிமார்களையும் பார்த்து ஏவுகிறான்.

يَاأَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ (51)

23:51. (நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) "என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகின்றவனாகவே இருக்கிறேன்.

 எனவே நல்லவைகளை உண்பது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதை உணர்த்துகின்றது.

இன்றைக்கு  உண்பதற்குள்ள விற்பனை பொருள்கள் உண்ணும் நோக்கத்தை தாண்டி பகட்டுக்காகவும், ஸ்டைலிர்க்காகவும் சாப்பிடும் நிலை உருவாகி விட்டது.

உண்மையில் அந்த பொருளை உண்பதின் நோக்கமோ நினைப்போ அவனுக்கு இல்லாமல் இருந்தாலும் சமூகத்திற்கு முன்னாள் தன்னை அந்தஸ்து உள்ளவனாக காட்டி கொள்ளும் தோரணைக்கு அடிமைப்பட்டு போன இளைஞற்கள் உலகில் நிறைய.

கொடுக்கிற விலைக்க மதிப்பில்லாத குளிர்பானங்ளுக்கு நம் இளைஞர்கள் அடிமை. காரணம் அவைகளை கையில் வைத்திருந்தாள் தன்னால் சில பெண்களை கவர முடியும் என்ற ஷைத்தானின் எண்ணங்கள் அதற்கு காரணம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் 

سنن ابن ماجه (2/ 1112)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ السَّرَفِ، أَنْ تَأْكُلَ كُلَّ مَا اشْتَهَيْتَ»

“நீ விரும்புவதையெல்லாம் உண்பது வீண் விரயம் “

  ஒரு காலத்தில் உணவுப் பொருள் மோசடி என்பது கலப்படமாக இருந்தது. அரிசியில் கல்லையும் குருனைகளையும் சேர்த்து எடையை கூடுவது. அனைவரும் அறிந்த பாலில் தண்ணீரை சேர்ப்பது போன்றவைகள். ஆனால் இன்றைய சூழலில் மோசடிகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து இறந்து போன கோழிகாரி, புளிக்கொட்டை கலந்த டீ தூள், பப்பாளி விதை கலந்த மிளகுகள் என்று வளர்ச்சி அடைந்து சந்தையில் தரம் இழந்த பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

அதையும் தாண்டி இப்பொழுது சுவைக்காக சில ரசாயன பொருள்கள் சேர்க்கப்பட்டு அதை தொடர்ந்து உண்பவர்களுக்கு உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று சொல்லுகிற அளவிற்கு உணவுப்பொருள்கள் சுலோ பாய்சனாக மாறிவருகின்றது.

இது உண்மையில் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய சூழ்ச்சியும் மோசடியுமாகும்.

صحيح ابن حبان - محققا (12/ 369)

5559 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ بْنِ الْجَهْمِ (2) ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، وَالْمَكْرُ وَالْخِدَاعُ فِي النَّارِ»

நம்மை ஏமாற்றுபவன் நம்மை சார்ந்தவன் இல்லை மேலும் சூழ்ச்சியும் மோசடியும் நரகில் உல்லைவைகள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

 இதை அரசாங்கமும் அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மட்டும் அல்ல இது போன்ற உணவு பொருள்களை தாயாரிக்கும் நிறுவங்களில் உள்ள நபர்களும் இதை அனுமதிக்க கூடாது. அவ்வாறு அவர்களின் மேற்பார்வையில் இது நடந்தால் அவர்களும் இதற்கு குற்றவாளியாகுவார்கள்.

صحيح مسلم (1/ 125)

«مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللهُ رَعِيَّةً، يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ، إِلَّا حَرَّمَ اللهُ عَلَيْهِ الْجَنَّةَ»

ஒரு அடியானுக்கு அல்லாஹ் ஒன்றை கவனிக்கு பொறுப்பை கொடுத்து அவன் பொறுப்பை சரியாக கவனிக்காமல் மோசடி செய்து மரணித்தால் அல்லாஹ் அவனுக்கு சொர்கத்தை ஹராமாக்குகிறான்.

எனவே நாமும் உணவு பொருள்கள் வாங்கும் விஷத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது தொடர்பான நிறுவங்களில் வேலைசெய்யும் போது அந்த தவறுகள் நிறுத்த நம்மால் இயன்ற முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இப்படி மக்களை ஏமாற்றி செய்யப்படுகிற மோசடிகளில் அல்லாஹ் பரக்கத்தை வைப்பது இல்லை. சில நேரங்களில் மக்களை ஏமாற்றி தரம் இழந்த பொருள்களை விற்பதால் மக்களும் அதை நல்ல பொருள் என்று நம்பி அதிக விலை கொடுத்து வாங்குவதால் நல்ல இலாபம் கிடைப்பதை போன்று தோன்றினாலும் அல்லாஹ் அந்த இலாபத்தில் பரகத் கொடுப்பது இல்லை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

صحيح البخاري (3/ 58)

2079 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، - أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا - فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "

விற்போரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்து கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பெசிக்குரைகளைத் தெளிவுபடுத்திருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பறக்கத் அளிக்கப்படும். குரியாளை மறைத்துப் பொய் சொல்லி இருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரகத் நீக்கப்பட்டு.”

இப்படி மோசடிப்போருள்கள் சந்தையில் விற்கப்படுவது தெரிந்தால் அதை அடுத்தவருக்கு சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு.

مسند أحمد مخرجا (25/ 394)

16013 - حَدَّثَنَا أَبُو النَّضْرِ، قَالَ: حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ يَعْنِي الرَّازِيَّ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو سِبَاعٍ، قَالَ [ص:395]: اشْتَرَيْتُ نَاقَةً مِنْ دَارِ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ، فَلَمَّا خَرَجْتُ بِهَا، أَدْرَكَنَا وَاثِلَةُ وَهُوَ يَجُرُّ رِدَاءَهُ، فَقَالَ: يَا عَبَدَ اللَّهِ، اشْتَرَيْتَ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: هَلْ بَيَّنَ لَكَ مَا فِيهَا؟ قُلْتُ: وَمَا فِيهَا؟ قَالَ: إِنَّهَا لَسَمِينَةٌ ظَاهِرَةُ الصِّحَّةِ، قَالَ: فَقَالَ: أَرَدْتَ بِهَا سَفَرًا، أَمْ أَرَدْتَ بِهَا لَحْمًا؟ قُلْتُ: بَلْ أَرَدْتُ عَلَيْهَا الْحَجَّ، قَالَ: فَإِنَّ بِخُفِّهَا نَقْبًا، قَالَ: فَقَالَ صَاحِبُهَا: أَصْلَحَكَ اللَّهُ، مَا تُرِيدُ إِلَى هَذَا تُفْسِدُ عَلَيَّ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَحِلُّ لِأَحَدٍ يَبِيعُ شَيْئًا أَلَّا يُبَيِّنُ مَا فِيهِ، وَلَا يَحِلُّ لِمَنْ يَعْلَمُ ذَلِكَ أَلَّا يُبَيِّنُهُ»

அபூ சிபா ரஹ்மாதுல்லாஹி அவர்கள் கூறுகிறார்கள் நான் வாசில இப்னு அல் அச்காஹ் அவர்களின் வீட்டிலிருந்து ஒரு ஒட்டகையை வாங்கினேன். நான் வெளியே வந்த போது வாசில் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் துணியை இழுத்துக்கொண்டு வெளியே என்னை நோக்கி வந்து “இந்த ஒட்டகத்தை வாங்கிவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த ஒட்டகத்தின் குறைகளை விளக்கினார்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் அதில் என்ன குறை இருக்கிறது.  இந்த ஒட்டகம் கொளுத்த நல்ல திடகாத்திரமான ஒட்டகையாகத்தான் உள்ளது என்றேன்.

அதற்கு வாசில் அவர்கள் “ இதை உண்பதார்காக வாங்கிசெல்கிறீர்களா அல்லது வாகனமாக பயன்படுத்த வாங்கினீர்களா? என்று கேட்டார்கள். “ நான் ஹஜ்ஜுக்கு செல்வதற்காக இந்த ஒட்டகையை வாங்கினேன்” என்றேன். அதற்கு வாசில் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “ இந்த ஒட்டகையின் காலில் ஓட்டை உள்ளது“என்றார்கள்.

இதற்குள் அந்த ஒட்டகையை விற்றவர் வந்து “ என்ன அவரிடத்தில் குழப்பம் செய்கிறீர்கள் என்று கேட்டார். அதர்க்கு வாசில் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்ல நாகேட்டேன் ஒருபொருளின் குறைகளை தெளிவாக்காமல் வியாபாரம் செய்வது கூடாது. அந்த பொருளின் குறையை தெரின்வதவரும் அதை (வாங்கிவருக்கு) தெளிவாக்காமல் இருப்பதும் கூடாது ”

எனவே நாம் வாங்குகிற பொருள்களை தரமானதாகவும் சுத்தமானதாகவும் வாங்கி பயன் பெற அல்லாஹ் துணை செய்வானாக- அமீன்  

1 comment:

fazil hussain said...

அல்ஹம்து லில்லாஹ் மிகவும் அருமை காலத்திற்கு தோதுவான செய்திகள்