அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 25 May 2017

பாவ மன்னிப்பு தேடுதல்

மறதியும், பொடுபோக்கு தன்மையும் மனிதனின் இயற்கையான குணம். எனவே அவன் பெரும்பாலும் பாவங்கள் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால்தான் மனிதனிக்கு அல்லாஹ் தன பெரிய அருளாக தன் மன்னிப்பை அவனுக்கு வழங்கி இருக்கிறான். பாவம் செய்யும் இயல்புள்ள அடியான் அல்லாஹ்விடத்தில் அந்த பாவத்திற்காக பிழைபொறுக்க தேடும்போது அல்லாஹ் தன் கருணை உள்ளம் கொண்டு பார்கிறான். இந்த அடியான் செய்த பாவத்தை மனிப்பதொடு மறைக்கவும் செய்கிறான்.

குர்ஆனில் அல்லாஹ் சொல்லிகாட்டுவான்.

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

அதாவது ஒருவன் பாவம் செய்து அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டால் அல்லாஹ் அவனை மன்னிக்கிறான், அவனை மறுமையில் தண்டிக்காமல் அவன் குற்றங்களை மறைத்து கண்ணியப்படுத்துகிறான்.

        அல்லாஹ்வின் இந்த மன்னிப்பு அல்லாஹ்வின் காரியத்தில் குறை வைத்திருந்தால் அல்லது தவறு செய்திருந்தால் மட்டும் தான். ஆனால் ஒருவன் மற்றவருக்கு ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால் அதன் மூலம் வரும் பாவத்திற்கு அவன் அல்லாஹ்விடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் குறிப்பாக அந்த அடியானிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

        எனவே கருனையுள்ள அல்லாஹ்விடத்தில் நம் பாவங்களை சொல்லி மனிப்பு கேட்க முற்பட வேண்டும். அல்லாஹ்விடத்தில் பாவம் கேட்கும் அடியான் அதே பாவத்தில் மீண்டும் செய்யமாட்டேன் என்ற உறுதியுடன் கேட்க வேண்டும். அதே தவறை திரும்பவும் செய்ய மாட்டேன் என்ற உறுதி உள்ளத்தில் வர வேண்டும். மறுமை என்ற ஒரு நாள் உண்டு அல்லாஹ் அந்த நாளில் நாம் அல்லாஹ்விற்கு முன் நிற்கவைக்கப்பட்டு நம் செய்த நன்மை தீமை பட்டியல்கள் விரித்து நமக்கு காட்டப்படும் என்ற அச்சம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். மறுமை நாளில் நம் அமல்களின் பட்டியல் பாவத்தால் நிரப்பப்பட்டு நம்மை நாம் கேவலப்படுத்திவிட கூடாது. எனவே நாம் செய்த குற்றங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் நாம் மானிப்பை கேட்க வேண்டும்.

ஒரு அடியான் எவ்வளவு பெரிய குற்றத்தை செய்தாலும் அல்லாஹ் மாணிக்க தயாராக இருக்கிறான்.ஷிர்கை தவிர உள்ள மற்ற குற்றங்கள்.

அல்லாஹ் குர்ஆனில் அழகாக சொல்லுவான்.

إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَة

53:32. நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; 

தன் மன்னிப்பு விசாலமானது என்று என்ன முடியாத அளவை சொன்ன அல்லாஹ் தன அடியார்களை அழைத்து மற்றொரு இடத்தில் என்னிடம் பாவம் மானிப்பாய் தேடுங்கள் உங்கள் குற்றங்களை சொல்லி என்னிடம் மன்றாடுங்கள் என்று சொல்கிறான்.

وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ

நபி ஸல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் சொல்வதாக சொல்லிகாடுக்கிறார்கள்.

يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ

“ என் அடியார்களே நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறேன். எனவே என்னிடத்தில் பாவ மன்னிப்பு தேடுங்கள் நான் மன்னிக்கிறேன்.”

இது அல்லாஹ்வின் அழைப்பு. கொஞ்சம் நினைத்து பாருங்கள்! அகிலம் அனைத்தையும் படைத்த அல்லாஹ் அவன் அடிமைகளாக இருக்கும் நாம் செய்த குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவன் நமக்கு மன்னிப்பு வழங்குவதாக வாக்குருதியும் தருகிறான் அந்த அறிய வாய்பை பயன்படுத்த சொல்லி நம்மை அழைக்கவும் செய்கிறான்.

        முஸ்லிம்களே! இந்த வாய்ப்பை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம். அல்லாஹ்வின் இந்த சலுகையை நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் மறுமையில் நஷ்டவாளிகளே.

        அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு தேடுவது மார்கத்தில் ஒரு முக்கியமான வணக்கம் ஆகும். உயர்ந்த வழிபாடுகளில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். இது இறை அச்சத்தின் அடையாளம்.

சுருக்கமாக சொன்னால் பாவமன்னிப்பு என்பது இந்த உலகத்தில் நான் செய்த குற்றங்களை குறைகளை மறைத்து மன்னித்து அதற்குரிய தண்டனைகளை மறுமையில் பெறாமல் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் வழங்கிய வாய்ப்பாகும். ஆனால் தெளிவாக சொன்னால்  இத்தகைய செயல் யார் தன் தவறை உண்மையில் உணர்ந்து அதை மீண்டும் செய்ய மாட்டேன் என  மனதில் உறுதி கொள்கிறானோ அவனிடத்தில் மட்டும் தான் ஏற்படும்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான்.

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

3:135. தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

பாவமன்னிப்பு தேடுவதால் அல்லாஹ் தன அடியார்களுக்கு பல நன்மைகளை வைத்திருக்கிறான். முதன்மையாக அவர்களின் பாவங்களும் குற்றங்களும் மன்னிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

وَمَن يَعْمَلْ سُوءاً أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُوراً رَّحِيماً

4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்ல நான் கேட்டேன். “ அல்லாஹ் சொல்கிறான் “ ஆதமின் மகனே! (மன்னிப்பை வேண்டி) என்னை நீங்கள் அதரவு வைத்து அழைத்தால் நான் உங்களிடம் இருக்கும் குற்றங்களை மன்னிப்பேன். ஆதமின் மகனே! வானத்தின் மேகங்கள் அளவிற்கு நீ பாவம் செய்து என்னிடத்தில் நீ பாவ மன்னிப்பு தேடினாலும் நான் உன்னை மன்னிக்கிறேன். ஆதமின் மகனே! நீங்கள் பூமியின் அளவு பாவம் செய்து எனக்கு இணை வைக்காமல் என்னை நீ சந்தித்த்தால் (பாவ மன்னிப்பு தேடினால்) நான் பூமி அளவிற்கு மன்னிப்பை உனக்கு தருவேன்.””

ஒரு அடியான் பாவமன்னிப்பு தேடினால் அவன் உள்ளம் பரிசுத்தம் அடைகிறது. கசடுகள் அவன் உள்ளத்தை விட்டும் நீங்கி சுத்தமாகிறது.

إِنَّ العَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ، فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ

நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்” ஒரு அடியான் ஒரு பாவம் செய்தால் அவன் உள்ளத்தில் ஒரு கருப்பு வடு விழுகிறது. அவன் அந்த பாவத்தை விட்டு நீங்கி தவ்பா செய்தால் அவன் உள்ளம் பரிசுத்தம் அடைகிறது. ”

  பாவமன்னிப்பு தேடுவதால் அல்லாஹ் இவ்வுலக வாழ்கையை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுகிறான். ரிஜ்கை அடிகக்கப்படுதுகிறான். உலக தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி தருகிறான். எனவே நம் உலக தேவைகள் நிறைவேறுவதற்கு பாவமன்னிப்பு தேடுதல் ஒரு காரணமாக உள்ளது.

அல்லாஹ் குரானில் சொல்லுகிறான்.

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا* يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا* وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا

71:10. "உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்" என்றும் கூறினேன். 71:11. (அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான். 71:12. பொருள்களையும், மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்.

எனவே யார் தொடர்ந்து இஸ்திக்பார் என்னும் பாவமன்னிப்பை அல்லாஹ்விடம் கேட்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் இந்த உலகத்தில் பல நலவுகளை வழங்குகிறான் அவர் கவலைகள் கச்தங்கங்களை நீகுகிறான்.

நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்

مَنْ أَكْثَرَ مِنَ الاِسْتِغْفَارِ؛ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجاً، وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجاً، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ

“ யார் அதிகமாக பாவமன்னிப்பு தேடுகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் ஒவ்வொரு கவலைகளை விட்டும் நிவாரணம் வழங்குகிறான் ஒவ்வொரு நெருக்கடிகளை விட்டும் நீங்க ஒரு வழியை ஏற்படுத்துகிறான் அவர் அறியாத விதத்திலும் அவருக்கு வாழ்வாதாரங்களை வழங்குகிறான்.”

பாவமன்னிப்பு தேடுவது நபிமார்களின் பண்புகளில் ஒன்று. உயர்ந்த அந்தஸ்திலும் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் என சொல்லப்படும் நபிமார்கள் அல்லாஹ்விடம் அதிகம் பாவ மன்னிப்பு தேடி உள்ளார்கள்.

நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்களும் அவர்களின் மனைவி ஹவ்வா அலைஹி ஸலாம் அவர்களும் பாவ மன்னிப்பை தேடியதை அல்லாஹ் குர்ஆனில் சொளிகிறான்.

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

7:23. (அதற்கு அவர்கள்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.

நபி நூஹ் அலைஹி ஸலாம் அவர்கள் தேடிய இஸ்திக்பாரை அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِناً وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

71:28. என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்த வனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே!" (என்றும் பிரார்த்தித்தார்).

நபி மூசா அலைஹி ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட பாவமன்னிப்பை அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

رَبِّ اغْفِرْ لِي وَلِأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

7:151. (பிறகு மூஸா இறைவனை நோக்கி) "என் இறைவனே! எனக்கும் என் சகோதரருக்கும் நீ பிழை பொருத்தருள்வாயாக! உன்னுடைய அன்பிலும் எங்களை சேர்த்துக் கொள்வாயாக! நீ கிருபை செய்பவர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்.

நபி தாவூத் அலைஹி ஸலாம் அவர்கள் பாவமன்னிப்பு தேடிய முறையை குர்ஆன் சொல்கிறது.

فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ

இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.

நபி சுலைமான் அலைஹி ஸலாம் அவர்கள் செய்த துஆவை குர்ஆன் சொல்கிறது

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكاً لا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

38:35. ஆகவே, அவர் "என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி" என்று பிரார்த்தனை செய்தார்.

நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي كُلِّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ

நான் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் நூறு முறை பாவமன்னிப்பு தேடுகிறேன்.

அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.

“ நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை விட அதிகமாக பாவ மன்னிப்பை வேண்டும் வேறு யாரிடமும் நான் உட்கார்ந்தது இல்லை.”

எனவே நபிகள் நாயகம் சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். நம் வாழ்கையில் அதிகம் அதிகம் பாவ மன்னிப்பை வேண்டி  நம் உள்ள அழுக்குகளையும் கசடுகளையும் நீக்க வேண்டும்.

நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பர்லான தொழுகைகளுக்கு பிறகு மூன்று முறை பாவ மன்னிப்பு கேட்பார்கள்.

முஹ்மீண்களின் பண்புகளில் ஒன்று அவர்கள் குறிப்பாக விடயற்காலை அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பை வேண்டுவார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்

كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ* وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

51:17. அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்வார்கள். 51:18. அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.


நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்

“யார் ஒரு சபையில் அமர்ந்து அங்கு அவரின் ( செயலாலோ அல்லது பேச்சாலோ) தவறுகள் அதிகரித்து அந்த சபையை விட்டும் எழுவதற்கு முன்பு “سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ, أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ” இந்த துவாவை செய்தால் அந்த சபையில் அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படும்.”

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ, أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

நீயே பரிசுத்தமானவன். இறைவா! உன் புக்ழைகொன்டே! உன்னை தவிர்த்து வேறு கடவுள் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். உன்னிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறேன்.

எனவே அல்லாஹ்விடம் ஆதிகம் அதிகம் பாவமன்னிப்பை கேட்கவேண்டும். அல்லாஹ் நமக்கு வழங்கிய இந்த அற்புத வாய்பை நம் மறுமை வெற்றிக்கு நாம் பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்!



No comments: