அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 6 April 2017

ஐ.பி.எல்.லா அல்லாஹ்வின் அருளா?


மனித வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் கோட்பாடுகளை இஸ்லாம் அழகாய் வகுத்துத்தந்துள்ளது. எது நல்லது எது கெட்டது. எதை ஏற்று நடக்க வேண்டும் எதை கேட்டு(வுடன்) தவிர்ந்து கொள்ள  வேண்டும். எதில் ஆரோக்கியம் எவற்றில் அழிவு என மனிதனுக்கு தேவையான வாழ்வியல் வட்டத்தில் ஓர் புள்ளியையும் குறைக்காமல் முழுதாய் இஸ்லாம் அருளியுள்ளது. எதுவெல்லாம் மனிதனுக்கு தீங்கு என்று அமையுமோ அவையனைத்தையும்  இஸ்லாம்  ஓரங்கட்டி வைக்கச் சொல்கிறது. குடி குடியை கெடுக்கும் எனவே அதனை நீ முகர்ந்தும் கூட பார்க்க வேண்டாம், தவறான பார்வை தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் எனவே நீ பார்க்கும் பார்வையை பேணுதலாக்கிக் கொள். தீயவரின் நட்பு உம்மை நாசகார வேலையை செய்யத்தூண்டும் எனவே நீ தீயவரை விட்டும் விலகிக்கொள் என்று இஸ்லாம் தீமைகளை குறித்து விரிவாகவே பேசுகிறது. அந்த வரிசையில்  சூதாட்டம் குடும்பத்தையே சுத்தமாய் வலித்து ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும் எனவே நீ சுதாட்டத்தை தவிர்ந்துகொள் என்றும் இஸ்லாம் இயம்புகின்றது.  எவற்றிலெல்லாம் போதை கலந்திருக்குமோ அந்தப் பொருள் தடைசெய்யப்பட்டது என்பது போன்று சூதாட்டம் எதிலெல்லம் கலந்திருக்குமோ அத்தகு செயலும் தடைசெய்யப்பட்டதே. இத்தகு சூதாட்டங்கள் இன்றைக்கு பரவலாய் காணப்படுவது விளையாட்டுகளில் தான் என்பது வெள்ளிடமழை . சீட்டு விளையாடுதல், கோலிகுண்டு என தொடங்கிய இச்சூதாட்டத்தின் பரினாம்வளர்ச்சி இன்றைக்கு  உலகளாவிய முறையில் இரசித்தும், ருசித்தும் ஆரவாரத்திர்கும், கைதட்டல்களுக்கும் பஞ்சமில்லாத கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் என எல்லா உலகத்தர விளையாட்டுகளையும் எட்டியருக்கின்றது. இஸ்லாம் ஒரு போதும் விளையாட்டிற்கு முற்றிலுமாக முட்டுக்கட்டையாக இருந்து தடை என்று குறிப்பிடுவது கிடையாது. உடம்பிற்கு வலுசேர்க்கிற, ஆரோக்கியத்தை மையமாக கொண்ட எந்த விளையாட்டும் இஸ்லாமிய மார்க்கத்தால் அங்கிகரிக்கப்பட்டனவையே. 
குதிரைப் போட்டியை அங்கிகரித்த இஸ்லாம்
حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: "أَجْرَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنْ الْخَيْلِ مِنْ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنْ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ". قَالَ ابْنُ عُمَرَ وَكُنْتُ فِيمَنْ أَجْرَى.
(صحيح البخاري)
இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் பெருமானார் ஸல் அவர்கள் மெல்லிய ஒல்லியான குதிரைகளுக்கு சனியத்துல் வதாவிலிருந்து ஹஃப்யா வரையும்  வலுவான குதிரைகளுக்கு சனியத்துல் வதாவிலிருந்து மஸ்ஜிது பனி ஜுரைக் வரையிலும் போட்டி வைத்தனர் என்று இப்னு உமர் ரலி அவர்கள் கூறிவிட்டு அந்த குதிரையை ஓட்டியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸை பதிவுசெய்துவிட்டு உம்ததுல் காரிவுடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். போட்டிகள் என்பன வீணானவைகள் கிடையாது என்றும், அது ஓர் பயிற்சி என்றும். அதன் மூலம் தேவையான நேரத்தில் பயனடைந்து கொள்ள முடியும் என்பதனால் கூடும் என்றும் இன்னும் சிலர் சுன்னத் என்று கூறுகின்றனர் என்றே கூறுகிறார்கள்.
وفيه مشروعية المسابقة وأنه ليس من العبث بل من الرياضة المحمودة الموصلة إلى تحصيل المقاصد في الغزو والانتفاع بها عند الحاجة وهي دائرة بين الاستحباب والإباحة بحسب الباعث على ذلك وجعلها بعضهم سنة وبعضهم إباحة وقال القرطبي لا خلاف في جواز المسابقة على الخيل وغيرها من الدواب وعلى الأقدام وكذا الترامي بالسهام واستعمال الأسلحة لما في ذلك من التدريب على الحرب
(عمدة القاري)
ஆயுதங்களை வைத்து விளையாடுதல்
" حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ جَاءَ حَبَشٌ يَزْفِنُونَ فِى يَوْمِ عِيدٍ فِى الْمَسْجِدِ فَدَعَانِى النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَوَضَعْتُ رَأْسِى عَلَى مَنْكِبِهِ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ حَتَّى كُنْتُ أَنَا الَّتِى أَنْصَرِفُ عَنِ النَّظَرِ إِلَيْهِمْ.
(صحيح المسلم)
ஆயுஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். ஓர் ஈத் பெருநாளில் ஆயுதங்களால் ஹபஷியர்கள் விளையாடினார்கள் பெருமானார் ஸல் அவர்கள் என்னை அழைத்து காண்பத்தினர். நானாகவே அந்த இடத்தை விட்டு செல்லுகின்ற வரை என் தலையை பெருமானாரின் புஜங்களில் வைத்து அவர்களின் விளையாட்டை பார்த்தேன்.

பெருமானார் தன் மனைவியிடம் ஓட்டப்பந்தயம் நடத்தியது.
عن هشام بن عروة عن أبيه وعن أبي سلمة عن عائشة رضي الله عنها: (أنها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر قالت: فسابقته فسبقته على رجلي، فلما حملت اللحم سابقته فسبقني فقال: هذه بتلك السبقة) ] 
سنن ابي داؤد 
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் பெருமானாரோடு பிரயாணம் செய்தேன் அப்பொழுது என்னுடைய பாதங்களால் பெருமானாரை முந்திச் சென்றேன். ஆனால் என்னுடைய உடல் பருமன் கூடியபோது பெருமானார் என்னை முந்திசென்றார்கள்.

யஹ்கூப் அலை அவர்கள் தன் பிள்ளையை அனுப்பியது.

أَرْسِلْهُ مَعَنَا غَدًا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
அவரை எங்களோடு நாளை அனுப்புங்கள் ஆடுமெய்கட்டும் விளையாடட்டும் .

இப்படி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிற, எவருக்கும் தீங்கு விளைவிக்காத,  உடம்பிற்கு வலுசேர்க்கிற விளையாட்டுகளை இஸ்லாம் ஆதரிக்கிறது. ஆனால் எப்பொழுது அதில் மக்களின் வியர்வைகள் உரிஞ்சப்படுமோ, மக்களின் பணம் வீண் விரையமாக்கப்படுமோ, பிரயோஜனமில்லாமல் நேரம் விரையமாகுதலை உள்ளடக்கியிருக்குமோ அத்தகைய விளையாட்டுகளை இஸ்லாம் பெயரளவிலும் அனுமதிப்பதோ ஆதரவளிப்பதோ இல்லை. இன்றைக்கு சூதாட்டத்தின் உருவத்தை காண நினைப்பவர்கள் விளையாட்டு என்னும் பெயரில் நடத்தப்படக்கூடிய  ஐ.பி.எல் போட்டியை காணலாம். வியாபாரத்தை நோக்கமாகக் கொண்டு, மதுவையும் மாதுவையும் கலக்கச்செய்து, மக்களின் நேரத்தையும் பணத்தையும் கொல்லையடித்து, கருப்பு பணங்களை வெள்ளைதாள்களாக மாற்ற எடுக்கப்பட்டிரும் ஓர் முயற்ச்சியே ஐ.பி.எல். பெயரளவில் வேண்டுமானால் உள்ளூர் வீரர்களை உலக வீரர்களாக்க நாங்கள் நடத்துகிறோம் என்று வேண்டுமானால் வாய்பாடு பாடலாம். ஆனால் பணத்தையும், ஆடம்பரத்தையும், வீண்விரையத்தை மட்டுமே மிகுதமாய் கொண்டது ஐ.பி.எல். ஐ.பி.எலில் முதல் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை மட்டுமே 10கோடி. இதை தவிர இரண்டாம் அணிக்கு 7.5கோடி என்றும் அடுத்த இரு இடங்களில் உள்ள அணிக்கு 3.75 கோடி என்றும் அதிக சிக்ஸ் அடித்தவீரர், ஆட்ட நாயகன், போட்டியின் நாயகன், சிறந்த கேட்ச் என்று இதன் பணப்பட்டியலை படிக்கும் போதே தலைசுற்றுகிறது. இப்போட்டியின் சிறப்பம்சம் என்னவெனில் இதில் பங்குபெறுபவர், ஒளிபரப்புபவர், ஆடுபவர், நடத்துபவர் என எல்லோருக்கும் இலாபம் தான் ஆனால் பாமர மக்களாக, இரசிகர்களாக இருக்கையில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே நஷ்டம். காசு கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத பொன்போன்ற நேரத்தில் நஷ்டம். இத்தகைய விளையாட்டுகளை ஊக்குவிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்வதே நாளைய வளரும் சமுதாயத்திற்கு அவசியம். குறிப்பாக இஸ்லாமிய விழுமியங்களை ஏற்று நடக்கிற எந்த இது போன்ற பைத்தியக்கார விளையாட்டை ஆதரவுக் கரம் நீட்டுவது கூடாது. பொதுமக்களுக்கு நேரம் விரையம் என்றால் முஸ்லிம்களுக்கு ஒரு படி மேலாய் அல்லாஹ்வின் நினைவை விட்டும், மறுமையின் சிந்தனையை விட்டும் இது திசை திருப்புகின்றது.
பொருட்களில் வீண் விரையம் செய்பவர்களை பற்றி இஸ்லாம்
وَلا تُبَذِّرْ تَبْذِيرًا
கதாதா ரஹிமஹுல்லாஹ் இந்த ஆயத்திற்கு விளக்கம் தரும்போது பாவங்களிலும் குழப்பங்களில் பொருட்களை செலவு செய்யுதல் என்று குறிப்பிடுகிறார்கள்.
عن قتادة، قوله(وَلا تُبَذّرْ تَبْذِيرًا) قال: التبذير: النفقة في معصية الله، وفي غير الحقّ وفي الفساد.
பிர்அவ்னை பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அவன் வீண்விரையம் செய்பவனாக இருந்தான் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
قال تعالى : [ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الأَرْضِ وَإِنَّهُ لَمِنَ المُسْرِفِينَ ] ( يونس : 83 )

வீண்விரையம் செய்பவர்கள் நரகவாசிகள்
وفي آية أخرى قال تعالى : [ وَأَنَّ المُسْرِفِينَ هُمْ أَصْحَابُ النَّارِ ] ( غافر : 43 ) .

அல்லாஹ் தஆலா எனக்கு ஒன்பது குணங்களை கொண்டு வஸிய்யத் செய்தான் என்று பெருமானார் ஸல் அவர்கள் கூறிவிட்டு அதில் ஒன்றாக செல்வசெழிப்பிழும், வருமையிலும் நடுநிலையை பேணுதல் என்றார்கள்.
حدثني شجاع بن الأشرس ، حدثنا إسماعيل بن عياش ، عن عبد الله بن أبي الحارث ، عن الحسن بن ذكوان ، أن داود ، عليه السلام قال : « أوصاني ربي عز وجل بتسع خصال (1) : أوصاني بخشيته في السر والعلانية ، والعدل في الغضب والرضا ، والاقتصاد في الغنى والفقر ، وأوصاني أن أصل من قطعني ، وأن أعطي من حرمني ، وأعفو عمن ظلمني ، وأن يكون نظري عبرا ، وصمتي تفكرا ، وقولي ذكرا »
பனு இஸ்ரவேலர்கள் அளவுக்கு மீறி ரோட்டியைக் கொண்டு துப்பரவு செய்ததால் அல்லாஹ் வருமையை சாட்டினான். பொருட்கள் காசு பணங்கள் அதிகமாக கையில் புரண்டாலும் அதனை அதற்குரிய இடத்தில் செலவு செய்யாமல் தேவையற்ற இடத்தில் செலவு செய்தால் அது இஸ்ராப் என்பதோடு மட்டுமல்ல அல்லாஹ்வின் ஆபத்தும் இறங்கும் என்றுண்டு.
حدثنا علي بن الجعد ، عن أبي عبد الرحمن التميمي ، عن جعفر بن محمد ، عن أبيه ، قال : كان بنو إسرائيل يستنجون بالخبز ، فسلط الله عليهم الجوع ، فجعلوا يتبعون حشوشهم فيأكلونها

நேரத்தில் அல்லாஹ்வின் சிந்தனையில் செலவு செய்வது அவசியம்.
ثابت البناني المحدث الكبير بكى حتى ذهبت عينه من خشية الله، وبقيت عينٌ واحدة، قالوا: نخرج بك إلى حدائق خراسان لعلك ترى الخضرة والماء، علك إذا رأيت الخضرة أن يعود لك بصرك، فخرجوا به، فرأى الحدائق الخضراء في خراسان ، ورأى البساتين، ورأى الماء يجري، لكن كلما رأى بستاناً بكى وتذكر الجنة، وكلما رأى حديقة بكى وتذكر الجنة.
சாபிதுல் பன்னானி என்ற பெரியாருக்கு அல்லாஹ்வின் அச்சத்தால் அவர்களது ஓர் கண்ணின் பார்வை போய்விட்டது. அவர்களுடன் இருந்தவர்கள் மீதமுள்ள ஓர் கண்ணால் ஹுராஸான் தேசத்தின் பசுமையை பார்த்தால் மற்றொரு கண்ணின் பார்வை வந்துவிடும் என்று அவர்களை அத்தேசத்தின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள் ஆனால் அவர்கள் அந்த பசுமையை பார்த்து மறுமையின் நினைவும் சொர்க்கத்தின் நினைவும் வந்து அழஆரம்பித்து விட்டார்கள்.
كان معروف الكرخي يعتمر ، فأتى من يقص شارب معروف الكرخي ، فحلق رأسه ، ثم قال للقصاص: " خذ من شاربي "، فأخذ معروف يسبح الله ، فقال له القصاص: " أنا أقص شفتك ، اسكت " ، قال: " أنت تعمل، وأنا أعمل "، وذكروا عنه أنه ما رئي إلا متمتماً بذكر الله، ويقولون : كان إذا نام عند أهله سبّح ، فلا يستطيعون النوم
மஃரூபுல் கர்ஹி என்ற பெரியார் உம்ரா செய்து விட்டு தன்னுடைய தலையை மொட்டையடிக்கவும் மீசையை குறைக்கவும் வந்தார்கள். இவர்களுக்கு தலையின் முடி எடுக்கப்பட்டது பிறகு மீசையை குறைக்க முடிதிருத்துபவன் தன் கத்தியை அவர்களின் உதட்டின் அருகில் கொண்டுவந்தான் ஆனால் அவர்களின் உதடுமோ அல்லாஹ் அல்லாஹ் என்று தஸ்பீஹ் செய்து கொண்டிருந்த்து. இதைக் கண்ட அவன் உதடை அசைக்காமலிருக்க கூறினான் அதற்கு இந்த பெரியார் உரைத்த பதில் நான் என் வேலையை பார்க்கின்றேன் நீ உம் வேலையை பார் என்றார்கள். அவர்களை பற்றி கூறும் போது குறிப்பிடுகிறார்கள் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு உறங்கும் நேரத்தில் கூட தஸ்பீஹ் செய்பவராக இருந்தார்கள்.
நேரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவேண்டும், பணத்தை வீண்விரையமோ, ஆடம்பரச் செலவில் ஈடுபடுத்தவோ கூடாது என்று குர்ஆனும் ஹதீஸும் நல்லோர்களின் வழிகாட்டுதல்களும் நமக்கு ஏராளமாக இருக்கின்றன. நாளை மனிதன் கியாமத்தில் கேட்கப்படுகின்ற கேள்விகளில் ஒன்று பொருளை எவ்வாறு சம்பாரித்தாய், எதில் செலவழித்தாய், காலத்தை எவ்வாறு கழித்தாய் என்பதாகும். இத்தகு எச்சரிக்கைகளை உணர்ந்து ஐ.பி.எல் கூத்துக்களுக்கு பலியாகாமலிருக்கவும் அல்லாஹ்வின் அருளை பெற்றிடவும் வருங்காலத்தில் நாம் தளைபடுவோம். அல்லாஹ் அருள்புரிவானாக.







.

No comments: