அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 30 March 2017

ஏப்ரல் கணக்கு கற்றுத் தரும் வாழ்வியல் தத்துவங்கள்

ஏப்ரல் மாதத்தை நெருங்க ஆரம்பித்தாலே எல்லா வியாபாரிகளின் கடைகளிலும், சிறு பெரு நிறுவனங்களிலும் அந்த வருடத்தின் கணக்கை சரி பார்ப்பதிலும், தங்களது கணக்கு இலாபமா அல்லது நஷ்டமா என்ற எதிர்பார்பில் வேலைசெய்வதிலும் மும்முரமாக இறங்கிவிடுவர்.  நஷ்டமாக இருந்தால் வருங்காலத்தில் அதனை சரிகட்டுவதற்கு வழி என்ன என்ற மாற்று வழியை யோசித்து செயல்படுவதற்கும் இவர்கள் தவறமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நிறுவனங்கள் தங்களது கம்பெனி நஷ்டத்தில் பலியாகாமலும், படுத்துவிடாமலும் இருக்க வருடாந்திர கணக்கை முன்னெச்சரிக்கையாக  காலாண்டு கணக்கில் அல்லது மாதாந்திர கணக்கில் சரிபார்க்கின்றனர். இது உலகத்தின் நடைமுறை. இன்னும் சொல்லப்போனால் போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றி பெற துடிக்கும் நிறுவனங்கள் தங்களது கணக்கை வருடத்திற்கு ஒருமறையோ மாதத்திற்கு ஒருமையோ சரிபார்க்காமல் அன்றைய தினத்தின் கணக்கை அன்றே சரிபார்த்து தங்களின் தவறுகளை திருத்தி வெற்றிபாதையில் பயணிக்க முயற்ச்சிக்கின்றன இறுதியில் வெற்றியின் கனியை சுவைத்தும் விடுகின்றன. இப்படி செல்வத்தை அடைய, பொருளாதாரத்தை பெருக்க, நஷ்டத்தை ஒழிக்க, இலாபத்தை ஈட்ட  நினைப்பவர்களே தங்களது வரவையும் செலவையும் வருடத்திற்கல்ல அரையாண்டிற்கல்ல காலாண்டிற்கல்ல மாதாந்திரமாக வாராந்திரமாக தினசரியாக கணக்குப்பார்க்கவேண்டியிருக்கிறது என்றால் விலை மதிப்பற்ற, அழியாத , காசு கொடுத்தாலும் கிடைக்காத அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்கும், அன்பை அடைவதற்கும், சொர்க்கத்தை சொந்தமாக்கிக்கொள்வதற்கும் வரவும் செலவுமான நமது நன்மைகளையும் தீமைகளையும் கணக்கிட்டுப் பார்ப்பது எவ்வளவு அவசியம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
நாளை நம்முடைய மறுமைக்கான பயணத்தில் கட்டுச்சாதமாக நாம் என்ன சேமித்து வைத்திருக்கின்றோம் என்ற நினைவு நம்மில் மிகைத்திருக் வேண்டும். மறுமை மற்றும் மரணத்தை பற்றிய சிந்தனை நம்மில் அதீத அளவில் தென்படுவதே  நாம்  கணக்கிடுவதற்குண்டான அடையாளமாகும். எவரிடத்தில் இந்தத் தன்மை தென்படுகிறதோ அவரே  வரவு செலவு கணக்கிலும் வெற்றி பெறவும் செய்வார்.

நப்ஸை கணக்கிட்டுபார்த்தல் வெற்றிக்கு வழிவகுக்கும்.

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْحِمْصِىُّ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنِى ابْنُ أَبِى مَرْيَمَ عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ عَنْ أَبِى يَعْلَى شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- : « الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا ثُمَّ تَمَنَّى عَلَى اللَّهِ ».
رواه ابن ماجة

பெருமானார் ஸல் அவர்கள் அறிவாளி என்பவன் தன்னுடைய நப்ஸை கணக்கிடுபவனும் இன்னும் மரணத்திற்கு பின்னால் உள்ள ஒன்றுக்கு அமல் செய்தவன் என்றார்கள்.

وروى ابن ابي الدنيا عن عمر رضي الله عنه قال حاسبوا انفسكم قبل ان تحاسبوا وزنوا اعمالكم قبل ان توزنوا فانه اخف عليكم في الحساب غدا

நீங்கள் கேள்விகேட்கப்படுவதற்கு முன் நீங்கள் உங்களது நப்ஸை கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் உங்களுடைய அமலை நிறுத்திப் பார்க்கப்படுவதற்கு முன் நீங்கள் உங்களது அமல்களை நிறுத்திப் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற உமர் ரலி அவர்களின் வாசகம்  நம் கடந்த கால வாழ்க்கையில மறுமைக்காக என்ன சேர்த்து வைத்துள்ளோம் என்பதை திரும்பிப் பார்க்கக்கூறுகின்றது. விதை விதைத்தவனே அதற்குண்டான பலனையும் அனுபவிப்பான் என்பது போன்று நாம் செய்கின்ற அமலே நமக்கு துணையாக வருமே அன்றி நமது குடும்பமோ உறவுகளோ கிடையாது. உலகத்தின் ஆசைகளை துறந்து நல்ல அமல்களை செய்வதில் விரைவோமே எனில் அந்த அமல்கள் நாளை கியாமத்தில் ஆபத்தில் உதவி செய்யும் நண்பனை போன்று இருக்கும்.

 அமல்கள் மறுமையினுடைய வெற்றியை நிர்ணயிக்கும்
حدثنا علي بن احمد بن أبي غسان البصري قال ثنا محمد بن خالد الراسبي قال ثنا محمد بن احمد بن الحكم قال ثنا الحكم بن مروان قال ثنا سلام بن سليم عن زيد العمي عن معاوية بن قرة عن معقل بن يسار عن النبي صلى الله عليه و سلم قال ليس من يوم يأتي على ابن آدم الا ينادي فيه يا ابن آدم أنا خلق جديد وأنا فيما تعمل عليك غدا شهيد فاعمل في خيرا أشهد لك به غدا
حلية الاولياء
ஒரு ஹதீஸிலே பெருமானார் இப்படி குறிப்பிடுகிறார்கள் ஒவ்வொரு நாளும் (தான்) வருகிறபோது மனிதரிடத்தில் (அந்த நாள் )கூறுகிறதாம் ஆதமுடைய மகனே நான் ஒரு புதிய படைப்பாக இருக்கின்றேன் இன்னும் நீர் செய்கின்ற அமலுக்கு நாளை நான் சாட்சியாளனாக இருக்கின்றேன் எனவே என்னிடத்திலே நீ நல்லதையே செய் நான் உனக்காக நாளை சாட்சி பகர்கிறேன் என்று கூறுமாம்.


أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَحْمَدَ الْمَلِيحِيُّ ، أَنَا أَبُو سَعْدِ بْنِ أَبِي أَحْمَدَ الزَّاهِدُ ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِمْرَانَ الأَخْنَسِيُّ ، سَمِعْتُ أَبَا بَكْرِ بْنِ عَيَّاشٍ ، يُحَدَّثُ عَنْ سُلَيْمَانَ التَّمِيمِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ جَمَعَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَهْلَ الْجَنَّةِ صُفُوفًا ، وَأَهْلَ النَّارِ صُفُوفًا ، فَيَنْظُرُ الرَّجُلُ عَنْ صُفُوفِ أَهْلِ النَّارِ إِلَى الرَّجُلِ مِنْ صُفُوفِ الْجَنَّةِ ، فَيَقُولُ لَهُ : يَا فُلانُ ، أَمَا تَذْكُرُ يَوْمَ اصْطَنَعْتُ إِلَيْكَ مَعْرُوفًا ؟ قَالَ : فَيَقُولُ اللَّهُمَّ إِنَّ هَذَا اصْطَنَعَ إِلَيَّ فِي الدُّنْيَا مَعْرُوفًا ، قَالَ : فَيُقَالُ لَهُ : خُذْ بِيَدِهِ ، فَأَدْخِلْهُ الْجَنَّةَ بِرَحْمَةِ اللَّهِ تَعَالَى ، قَالَ أَنَسٌ : فَأَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ
(شرح السنة للبغوي, كنز العمال)
கியாமத் நாளில் சொர்க்கவாசிகள் ஒரு பக்கமும் நரகவாசிகள் ஒரு பக்கமும் நிற்பார்கள். நரகவாசிகளிலின் வரிசையிலிருந்து ஒரு நபர் சொர்க்கவாசியைப் பார்த்து  அன்று நான் உனக்கு நல்லது செய்ததை நினைத்துப் பார்க்கமாட்டாயா என்று கூறியவுடன் அந்த சுவனவாசி  அல்லாஹ்விடத்தில் கூறுவான் யா அல்லாஹ் நிச்சையமாக இந்த மனிதன் எனக்கு உலகத்தில் நன்மை செய்தான் என்று கூறுவான் அப்பொழுது அந்த சுவனபதியிடத்தில் அவனது( நரகவாசியது) கரத்தைப்  படித்து சுவனத்திற்குச் செல் என்று கூறப்படும் என்ற சம்பவத்தில் நாம் கூறவருகின்ற செய்தி கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு என்றார் போன்று நாம் செய்கின்ற அமல்கள் சிறிதாக இருந்தாலும் அதனுடைய தாக்கமும் பிரயோஜனும் மட்டிலடங்காதவை. எந்த அமல் நம்மை சுவனத்திற்கு இழுத்துச் செல்லும் என்பதை நம்மால் ஊர்ஜிதமாக கூறமுடியாது. இப்படியிருக்க அமல்களே செய்யாமல் மறுமையில் வெற்றி பெற்றுவிடலாம் என்று இருமாப்போடு இருப்பது ஒரு பெரும் கைசேதத்தையும் விளைவையும் தான் ஏற்படுத்தும்.

சஹாபாக்கள் அமல்களில் காட்டிய ஆர்வம்

 وقال ابن الكلبي : كان عمرو بن الجموح آخر الأنصار إسلاما ولما ندب رسول الله صلى الله عليه و سلم الناس إلى بدر أراد الخروج معهم فمنعه بنوه بأمر رسول الله صلى الله عليه و سلم لشدة عرجه . فلما كان يوم أحد قال لبنيه : منعتموني الخروج إلى بدر فلا تمنعوني الخروج إلى أحد !
 فقالوا : إن الله قد عذرك . فأتى رسول الله صلى الله عليه و سلم فقال : يا رسول الله إن بني يريدون أن يحبسوني عن هذا الوجه والخروج معك فيه والله إني لأرجو أن أطأ بعرجتي هذه في الجنة !
 فقال رسول الله صلى الله عليه و سلم : أما أنت فقد عذرك الله ولا جهاد عليك وقال لبنيه : لا عليكم أن لا تمنعوه لعل الله أن يرزقه الشهادة . فأخذ سلاحه وولى وقال : اللهم ارزقني الشهادة ولا تردني إلى أهلي خائبا . فلما قتل يوم أحد جاءت زوجه هند بنت عمرو عمة جابر بن عبد الله فحملته وحملت أخاها عبد الله بن عمرو بن حرام فدفنا في قبر واحد فقال رسول الله صلى الله عليه و سلم : " والذي نفسي بيده لقد رأيته يطأ في الجنة بعرجته "
(اسد الغابة)

அம்ர் இப்னு ஜமூஹ் என்ற சஹாபி அவருடைய காலில் இருக்கும் குறை காரணமாக போர் செய்வதை விட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டவர். இருந்தாலும் போர் செய்வதற்கு விருப்பப்பட்டு பத்ருக்கு வர முற்படும்போது அவருடைய மகன்கள் தடுத்துவிடுகின்றனர். தடுக்கப்பட்ட அம்ரு இப்னு ஜமூஹ்விற்கு உஹதில் கலப்பதற்கு மற்றொறு முறை சந்தர்ப்பம் கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை. தன்னுடைய மகனை அழைத்து தன்னை தடுக்கக்கூடாதென்று முறையிடுகின்றார் பின்பு பெருமானாரிடமும் சென்று முறையிடுகின்றார். பெருமானார் உன் மீது போர் செய்வது கடமையில்லை என்கிறார்கள் ஆனாலும் அம்ரு இப்னு ஜமூஹ் விடுவதாக இல்லை அல்லாஹ்விற்காக போர் செய்து தன்உயிரை இறையாக்க வேண்டும் என்கின்ற ஆவல். கடைசியில் பெருமானாரும் அவருடைய மகனிடத்திலே தடுக்கவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். போருக்காக ஆயுதங்களை ஏந்தி யுத்தகலத்திற்கு செல்கிறபோது அந்த சஹாபி கேட்ட துஆ இறைவா என்னை உன்னுடைய பாதையில் மரணிக்கும் பாக்கியத்தை கொடு, என்னை நிராசையடைந்தவனாக திருப்பி அனுப்பிவிடாதே என்று துஆ செய்து யுத்தத்தில் கலக்கிறார்கள். அல்லாஹ்வும் அவர்களுடைய துஆவை கபூல் ஆக்கினான். கடைசியில் பெருமானார் அவர்கள் அவருடைய குறயுள்ள காலுடன் சொர்க்கத்தில் நடப்பதை நான் பாரக்கின்றேன் என்று சுபச்செய்தி கூறுவார்கள்.

அல்லாஹ்விற்காகவும், மார்க்கத்திற்காகவும் போர் செய்வது என்பது மகத்தானது என்பதுமட்டுமல்ல அது பெரும்கஷ்டத்திற்குள்ளானதும், மிகப்பெரும் அமலுமாகும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இபாதத்களிலே சிறந்து என்றால் அது அல்லாஹ்விற்காக போர் செய்வது. வேறொரு பாஷையில் கூறினால் தன் உயிரை அற்பனிப்பது. தன் உயிரை அற்பனித்தல் , இறைபாதையில் இறையாக்குதல் என்ற மிகப்பெரும் அமலை தன் மீது கடமையாக்கப்படாமலே , தனக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தும் செயதார்கள் என்றால் சஹாபாக்களுக்கு இபாதத்களில் இருந்த ஆர்வத்தையும் தேட்டத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றது. எவ்வளவு பெரிய வணக்கமாக இருந்தாலும் அதிலே சஹாபாக்கள் சோம்பலோ, பொடுபோக்கோ, அசட்டுத்தனமோ துளியளவும் இருந்தது கிடையாது. எனவே தான் அவர்கள் அல்லாஹ்வின் அன்பை, பிரியத்தை, பொருத்தத்தை பெற்ற பாக்கியவான்களாகவும் , மறுமை வாழ்வில் வெற்றிவாகை சூடிய கதாநாயகர்களாகவும் மாறினார்கள். மறுமையின் வாழ்வை வென்றெடுக்க நினப்பவர்கள் ஏப்ரல் கணக்கு சொல்லித்தரும் வாழ்வியல் தத்துவமான  நம் அமல்களில் உள்ள நிறைகளையும் குறைகளையும் கணக்குப்போட்டு சரிபார்த்து திருத்தியும் திருந்தியும் வாழ்ந்தால் நம் கணக்கு இலாபமே ஒழிய நட்டமாக இருக்கவே இருக்காது.



No comments: