அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 20 April 2017

விண்வெளி பயணம்

அல்லாஹ் மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றலை வழங்கி அவன் செய்ய வேண்டிய சில கடமைகளைம் கொடுத்திருக்கிறான். அந்த கடமைகளை சரியாக செய்ய வழிகாட்டியாக நபிமார்களையும் தூதுவர்களையும் அனுப்பி வைத்திருக்கிறான்.
 குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்.
اللَّهُ يَصْطَفِي مِنَ المَلائِكَةِ رُسُلاً وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ22:75. மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் அல்லாஹ் (தன்னுடைய) தூதர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ் நபிமார்களையும் ரசூல்மார்களையும் கண்ணியப்படுத்தி அவர்கள் மார்கத்தை எத்திவைக்கும் பணியை சிறப்பாக செய்ய அவர்களுக்கு அருள்புரிந்திருக்கிறான். நபிமார்களும் தூதுவர்களும் இவ்வுலகிற்கு வந்தது இந்த மார்கத்தை மக்களுக்கு மத்தியில் பரப்பி அதை விளக்கி தருவதற்காகத்தான்.
 அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவான்.
فَهَلْ عَلَى الرُّسُلِ إِلاَّ الْبَلاغُ الْمُبِينُநம் தூதர்களுக்கு (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது.)

அல்லாஹ் இவ்வுலகிற்கு வந்த நபிமார்களுக்கும் தூதுவர்களுக்கும் பல அற்புதங்களையும் அத்தாச்சிகளையும் வழங்கினான். அவைகளை பயன்படுத்தி தங்கள் கூறும் மார்க்கம் உண்மையானது என்று மக்களுக்கு மத்தியில் நபிமார்களும் ரசூல்மார்களும் நிரூபித்தார்கள்.
 குறிப்பாக நமது கண்மணி நாயகம் சள்ளல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை சிறப்பு படுத்தினான். எந்த நபியும் நெருங்கிய வானவர்களும் பெறாத சிறப்பை அல்லாஹ் வழங்கினான். அதுதான் மிஹ்ராஜ் என்னும் விண்வெளி பயணம்.
 நபியாக அனுப்பப்பட்டு பனிரெண்டு ஆண்டுகள் கடந்தன. கடுமையான சோதனைகளும் இன்னல்களும் நபியவர்களும் அவர்களின் தோழர்களும் அடைந்தார்கள். பெருன்கொண்டான எண்ணிக்கைகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நபி சள்ளல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள்.
“இருள்களும் ஒலி பெற காரணமாக, இவ்வுலகம் மற்றும் மருவுலகத்தின் காரியங்கள் சீர்பெருவதற்கு காரணமாக இருக்கும் உன் ஒளியின் பொருட்டால் நான் பாதுகாவல் கேட்கிறேன் உன் கோவத்தை என் மீது இறக்கி விடாதே. நீ பொருந்தும் வரை இறுதி முடிவு உனக்கே சொந்தம். ஆற்றல் அனைத்தும் உன்னிடத்திலே உண்டு. ” அல்லாஹ் நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் துஆவிற்கு பதில் அழைத்து அவர்களை மிஹ்ராஜ் என்னும் விண் வெளி பயணத்திற்கு அழைத்தான்.
 குரானில் அல்லாஹ் சொல்கிறான்.سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ المَسْجِدِ الحَرَامِ إِلَى المَسْجِدِ الأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ البَصِيرُ17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். மஸ்ஜிதுல் அக்ஸாவில் எல்லா நபிமார்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு இமாமாக நபி சல்லல்லாஹு அவர்களை தொழவைத்தார்கள். பின் அங்கிருந்து வானத்தை நோக்கிய பயணம் தொடங்கியது. இது அல்லாஹ்வை சந்திப்பதற்கான பயணம். முஸ்லிம்களுக்கு இந்த பயணத்தில் தான் தொழுகை கடமையானது.
 நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
فَلَمْ أَزَلْ أَرْجِعُ بَيْنَ رَبِّي تَبَارَكَ وَتَعَالَى وَبَيْنَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ حَتَّى قَالَ: يَا مُحَمَّدُ إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ، لِكُلِّ صَلاَةٍ عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ صَلاَةً“(ஐம்பது நேர தொழுகை கடமையாகி திரும்பி வரும்போது மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் (ஆறாவது வனத்தில்) என்னிடம் ஐம்பது நேர தொழுகையை உங்கள் உம்மத்தால் நிறைவேற்ற முடியாது என்று சொல்லி என்னை அல்லாஹ்விடம் குறைக்க சொல்லி கேட்க சொன்னார்கள்) இவ்வாறே நான் அல்லாஹ்விடம் திரும்பசென்று  குறைக்க சொன்னேன். இப்படியே தொடர்ந்து நடந்தது. இறுதியாக அல்லாஹ் சொன்னான் “ முஹம்மதே! ஒவ்வொரு நாளும் ஐந்து நேர தொழுகைகள். ஒவ்வொரு தொழுகையும் பத்து தொழுகைக்குரிய நன்மை. எனவே அவர்களுக்கு ஐம்பது நேர தொழுகையின் நன்மை ( ஐந்து நேர தொழுகையை நிறைவேற்று பவர்களுக்கு உண்டு)” எனவே இந்த தொழுகை மூலம் ஒரு அடியான் அல்லாஹ்வை நெருங்குகிறான். அவனுடன் சம்பாஷனை செய்கிறான். இது அல்லாஹ் முஹ்மீன்களுக்கு வழங்கிய வாய்ப்பு.நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَا سَأَلَ، فَإِذَا قَالَ الْعَبْدُ: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. قَالَ اللَّهُ تَعَالَى: حَمِدَنِي عَبْدِي. وَإِذَا قَالَ: الرَّحْمَنِ الرَّحِيمِ. قَالَ اللَّهُ تَعَالَى: أَثْنَى عَلَىَّ عَبْدِي. وَإِذَا قَالَ: مَالِكِ يَوْمِ الدِّينِ. قَالَ: مَجَّدَنِي عَبْدِي. فَإِذَا قَالَ: إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ. قَالَ: هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ. فَإِذَا قَالَ: اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ. قَالَ: هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَஅல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் சொல்கிறான் “ தொழுகையை எனக்கு என் அடியானுக்கு மத்தியில் இரண்டு பங்காக பிறித்து வைத்திருக்கிறேன். என் அடியான் அவன் கேட்பது அவனுக்கு கிடைக்கும். ஒரு அடியான் தொழுகையில் الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ என்று சொன்னால் அல்லாஹ் “ என்னுடைய அடியான் என்னை புகழ்கிறான் என்று சொல்லுவான். الرَّحْمَنِ الرَّحِيمِ என்று சொன்னால் அல்லாஹ் என் அடியான் என்னை புகழ்கிறான் என்று சொல்லுவான்.  مَالِكِ يَوْمِ الدِّين என்று சொன்னால் என் அடியான் என்னை புகளுக்குரியவனாக புகழ்கிறான் என்று சொல்லுவான். إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ என்று சொன்னால் இது எனக்கும் என் அடியானுக்கும் மத்தியில் உள்ளது. என் அடியான் கேட்டது அவனுக்கு கிடைக்கும். اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ என்று சொன்னால் அல்லாஹ் சொல்லுவான் “என் அடியானே என் அடியான் (இந்த பிரார்த்தனையை கேட்டிருக்கிறான்) அவன் கேட்டது அவனுக்கு கிடைக்கும்” எனவே தொழுகையை அவசியம் பேணி பாதுகாத்து தொழவேண்டும். தொழுகையில் அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழியும் அவனிடத்தில் நாம் கோரிக்கைகள் நிறைவேற நேரமும் உள்ளது.
قَدْ أَفْلَحَ المُؤْمِنُونَ* الَّذِينَ هُمْ فِي صَلاتِهِمْ خَاشِعُونَ23:1. நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். 23:2. அவர்கள் எத்தகையவரென்றால் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்.நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மிஹ்ராஜ் என்னும் விண்வெளி பயணத்தில் சொர்கத்தையும் அதில் உள்ளவர்கள் அனுபவிக்கும் பாக்கியங்களை பார்த்தார்கள். அதே போல் நரகமும் அதில் உள்ளவர்களின் வேதனைகளையும் பார்த்தார்கள்.
 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.“ நபி சல்லலாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொர்க்கத்தில் ஒரு லேசான சப்தத்தை கேட்டார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் அது என்ன சப்தம் என கேட்ட போது ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் “ அது பாங்கு சொல்லும் பிலாலின் சப்தம் என்றார்கள.” ” நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “ நீங்கள் இஸ்லாத்தில் செய்த சிறந்த அமலை சொல்லுங்கள் காரணம் உங்கள் காலடி சப்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் என சொன்னார்கள்.” அதற்கு பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் “ நான் இஸ்லாத்தில் பயன் தரும் பெரிய அமலை செய்திருக்க வில்லை. ஆனால் நான்  ஒவ்வொரு நாளும் ஒளு செய்தால் ஒளு தொழுகையை நான் தவறாமல் தொழுவேன்.” நபி சல்லல்லாஹு அவர்கள் நரகத்தின் உள்ள வேதனைகளையும் பார்த்தார்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “ஒரு கூட்டத்தை கடந்து சென்றபோது அம்மக்கள் செம்பினாலான நகங்கள் மூலம் அவர்களின் முகங்களையும் நெஞ்சங்களை கீறிகொண்டு இருந்தார்கள். இவர்கள் யார்? என நான் கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் “ இவர்கள் மக்களின் கறியை சாப்பிட்டு அவர்களின் மரியாதைக்கு பங்கம் விளைவித்தவர்கள் (புறம் பேசியவர்கள்)” எனவே முஹ்மீன்கள் புறன் பேசுதல் அவதூறு பரப்புதல் போன்ற காரியங்களை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும்.
 நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் விண்வெளி பயணம் நடந்த செய்திகளை மறுநாம் மக்காவாசிகளுக்கு சொல்கிறார்கள். ஆனால் இணைவைத்தவர்கள் அவற்றை ஏற்று கொள்ளாமல் பரிகாசம் செய்தார்கள். சிரிக்க தொடங்கினார்கள். சிலர்கள் பைத்துல்முகத்தஸ்க்கு சென்றதாக சொல்லும் நீங்கள் அதன் அடையாளங்களை சொல்லுங்கள் என கேட்டார்கள். காரணம் பைத்துல்முகத்தஸிற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் முன்பு சென்றதில்லை. அது மக்காவை விட்டும் தூரம்.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கவலையாக உட்கார்ந்திருக்கும் போது அபுஜஹ்ல் அவர்களை பார்த்து கேலியாக முஹம்மதே! இன்றைக்கு ஏதேனும் புது செய்திகள் உண்டா என கேட்டான். அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஆம் என சொன்னார்கள். அது என்ன அன்று அபுஜஹ்ல் கேட்டான். நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் நேற்று இரவு விண்வெளி பயணம் சென்றேன் என்றார்கள். எங்கே என கேட்டான். பைத்துல் முகத்தஸ்ஸுக்கு என்று சொன்னார்கள் இதை கேட்டு ஆச்சர்யப்பட்டு சொன்னான் “ இரவு பைத்துல் முகத்தஸ்க்கு சென்று காலையில் வந்துவிட்டீர்களா? என்று கேலியாக சொல்லி எல்லா மக்களை அழைக்கிறேன் அவர்களிடமும் இந்த செய்தியை சொல்லுங்கள் என்று சொன்னான்.” மக்கள் வந்தபிறகு நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இந்த விண்வெளி பயணத்தை பற்றி சொன்னார்கள். சிலர் அதை ஏற்றார்கள். சிலர் அதை கேலிசெய்தார்கள். சிலர் பைத்துல் முகத்தசை பற்றி அதன் அடையாளங்களை கேட்டார்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அதன் அடையாளங்களை சொன்னார்கள். அந்த அடையாளங்களை கேட்ட மக்கள் உண்மையில் இவர்கள் சரியாக அடையாளம் சொல்கிறார்கள் என்று வியந்து போனார்களுக்கு.
அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் ஈமான் கொள்ளும் நமக்கு வியப்பு ஏதும் இல்லை. அல்லாஹ் நம் அனைவரையும் அவன் காட்டிய வழியில் நடக்க செய்வானாக. ஆமீன்.
  

No comments: