அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 8 September 2016

இந்த ஈதுக்கு என்ன செய்யலாம் ?

நம்முடைய இந்த துன்யாவின் வாழ்க்கை அனைத்தும் நமது மறுமையின் விளை நிலம் தான் என்று நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நவின்றிருக்கின்றார்கள்.

ஆக இந்த நம்முடைய இந்த வாழ்க்கை அனைத்தும் அல்லாஹ்விற்காக தான் இருக்க வேண்டும். அப்படி இருப்பதற்காக தான் நமக்கு இஸ்லாம் எல்லா விதத்திலும் வழி செய்கிறது.

நம்முடைய முன்னாள் வாழ்ந்த கூட்டத்தினருக்கு எப்படி சிறப்பான நாட்கள் என்று அல்லாஹ் அமைத்து தந்தானோ, அதே போல நமக்கும் அல்லாஹ் நாம் சந்தோஷத்துடன் இருக்க நமக்கும் சிறந்த நாட்களாக இந்த ஈதுடைய நாட்களை அல்லாஹ் நமக்கு அமைத்து தந்திருக்கிறான் .!!!

قال - تعالى -: "ولكل أمة جعلنا منسكاً ليذكروا اسم الله" [ الحج: 34]، قال ابن عباس والكلبي والفراء: عيداً

இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
என்று அல்லாஹ் கூறுகிறான்.

நாம் செய்யும் நம்முடைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்காக அமைவதற்கு நாம் எப்பொழுதும் அவனை நினைவுகூறுபவர்களாக இருக்க வேண்டும்.

أنس رضي الله عنه- قال: "قدم رسول الله - صلى الله عليه وسلم - المدينة ولهم يومان يلعبون فيهما في الجاهلية فقال: "إن الله - تعالى -قد أبدلكم بهما خيراً منهما يوم الفطر ويوم النحر"

ஜாஹிலிய்யா காலத்தில் மக்கள் சந்தோஷமாக இருப்பதற்காக சிறப்பான நாட்களாக 2 நாட்களை மக்கள் வழக்கத்தில் கொண்டிருந்தனர். பின்னர் நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மதினாவிற்கு வந்த பின்னர் அந்த நாட்களை நோன்பு பெருநாளாகவும், ஹஜ்ஜு பெருநாளாகவும் மாற்றினார்கள்.

அப்படி அதை மாற்றியது மட்டுமின்றி அந்த நாட்களில் செய்ய வேண்டிய அமல்களையும் சொல்லி தந்தார்கள்.

குர்பானி கொடுத்தால் : 


عن جابر بن عبد الله قال : ضحى رسول الله صلى الله عليه وسلم في يوم عيد بكبشين وقال حين ذبحهما : " وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ، ( إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين

“வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

என்று சொல்லி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்லி அறுத்தார்கள் என்று ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 

குடும்ப சொந்தங்களுடன் விசாலமாகவும் சந்தோஷத்துடன் இருத்தல் :

عائشة -رضي الله عنها- قالت: «عن عروة عن عائشة: أن رسول الله صلى الله عليه وسلم دخل عليها وعندها جاريتان تضربان بدفين فانتهرهما أبو بكر فقال النبي صلى الله عليه وسلم دعهن فإن لكل قوم عيدا دخل عليّ رسول الله -صلى الله عليه وسلم- وعندي جاريتان تغنيان بدفين بغناء بعاث، فاضطجع على الفراش، وحول وجهه، وجاء أبو بكر فانتهرني وقال: مزمارة الشيطان عند النبي -صلى الله عليه وسلم- فأقبل عليه رسول الله -صلى الله عليه وسلم- فقال: "دعهما يا أبا بكر، إن لكل قوم عيداً وهذا عيدنا»

நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் நுழையும் பொழுது இரு சிறுமிகள் தப் அடித்தவர்களாக இருந்தார்கள் (இன்னொரு அறிவிப்பில் : தப் அடித்து பாட்டு பாடி கொண்டிருந்தார்கள்). ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை தடுக்க முனைந்த பொழுது நாயகம் ஸல்லலாலஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களை விட்டு விடுங்கள். ஒவ்வொரு கூட்டத்தினருக்கு பெருநாள் உண்டு இது நம்முடைய பெருநாள் என்று சொன்னார்கள்.

நாம் இந்த நாளில் நம்முடைய குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களுக்காக விசாலமானவர்களாக இருக்க வேண்டும் .

சுத்தமாகி நறுமணத்துடன் இருப்பது :

عبد الله بن عمر، قال: «أخذ عمر جبة من إستبرق تباع في السوق، فأتى بها رسول الله -صلى الله عليه وسلم- فقال: يا رسول الله ابتعْ هذه تجملْ بها للعيد وللوفود»

நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவ்வாறு குளித்து சுத்தமாகி நறுமணம் பூசி புத்தாடை அணிந்திருப்பதை விரும்பி உள்ளார்கள்.

நாமும் அந்த சிறப்பு மிக்க நாட்களில் அவ்வாறு நல்ல தூய்மையாகி நறுமணம் பூசி புத்தாடை அணிந்து இருக்க அல்லாஹ் வின் பொருத்தமும் ரஹ்மத்தும் பெற்ற நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவான்.

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது தக்பீர் முழக்கத்துடன் செல்வது :

وعن ابن عمر كان إذا غدا يوم الفطر ويوم الأضحى يجتهد بالتكبير حتى يأتي المصلى، ثم يكبر حتى يخرج الإمام


ஈத் பெருநாள் அன்று நாம் பெருநாள் தொழுகைக்காக வெளியே செல்லும் பொழுது தக்பீர் சொல்லியவர்களாக செல்ல வேண்டும்.

عن الزهري قال: «كان الناس يكبرون في العيد حين يخرجون من منازلهم حتى يأتوا المصلى وحتى يخرج الإمام فإذا خرج الإمام سكتوا فإذا كبر كبروا»

நாம் செல்லும் வழியில் தக்பீர் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும. பின்னர் இமாம் அவர்கள் வந்தவுடன் தக்பீர் சொல்வதை நிறுத்தி விட வேண்டும. பின் இமாம் அவர்கள் சொல்ல ஆரமித்ததும் அவர்களுடன் சேர்ந்து நாமும் சொல்ல வேண்டும்,


 
தொழுகைக்காக நடந்து செல்வது :

وأصاب السنة فعن علي بن أبي طالب -رضي الله عنه- قال: «من السنة أن يأتي العيد ماشيا

தொழுகைக்காக நடந்து செல்வது சுன்னத் ஆகும்.

قال ابن المنذر -رحمه الله-: "المشي إلى العيد أحسن وأقرب إلى التواضع ولا شيء على من ركب

ஈத் தொழுகைக்காக நடந்து செல்வது பணிவை காட்டும். யார் வாகனத்தில் வருகிறாரோ அவர் மீது ஒன்றுமேயில்லலை.



சொந்தங்களை சந்தித்து பணிவுடன் இருப்பது :


عن جبير بن نفير، قال: «كان أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقوا يوم العيد يقول بعضهم لبعض، تُقُبِّل منا ومنك

இந்த சிறப்பு மிக்க நன்னாளில் நம்முடைய சொந்தங்களை சந்திக்கும் பொழுது   تُقُبِّل منا ومنكஎன்று சொல்ல வேண்டும். இப்படி தான் ஸஹாபிக்கள் செல்பவர்களாக இருந்தார்கள். 

அமைதியாக குத்பாவை கேட்பது :

عبد الله بن السائب قال: شهدت مع رسول الله -صلى الله عليه وسلم- العيد فلما قضى الصلاة قال: «إنا نخطب فمن أحب أن يجلس للخطبة فليجلس ومن أحب أن يذهب فليذهب»

இந்த சிறப்பு மிக்க ஈதுடைய நாளில் இமாம் அவர்கள் ஓதும் குத்துபவை கேட்பது விரும்பத்தக்கதாக உள்ளது. இமாம் அவர்களின் அந்த நாளில் அறிவுரை பெற்று சிறப்பு மிக்க நாளில் மேலும் நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சென்ற வழி அல்லாமல் வேறு வழியாக திரும்புவது : 

عن جابر ابن عبد الله -رضي الله عنهما-: «كان النبي -صلى الله عليه وسلم- إذا كان يوم عيد خالف الطريق»

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  பெருநாட்களில் தான் சென்ற வழி அல்லாமல் வேறு வழியாக திரும்புபவர்களாக இருந்தார்கள். 

இது மட்டும் அல்லாமல் இந்த சிறப்பு மிக்க ஈத்உடைய நாளில் நமது நேரத்தை ஹராமான விஷயங்களில் செலவு செய்து அல்லாஹ்வின் கோபத்தை பெறாமல், அவனுக்காக நல்ல அமல்களை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னதை பின்பற்றி நம்முடைய செயல்களை நல்லமல்களாக ஆக்கி அல்லாஹ்வின் திரு பொருத்தத்தையும் நம் குடும்பத்தார்கள் சந்தோஷத்தையும், மற்ற முஃமின்களின் சந்தோஷத்தையும் பெற்றவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக !! ஆமீன் !!

No comments: