அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 15 September 2016

தியாகங்கள் தொடரட்டும்...!!

தியாகத்தை எடுத்துரைக்கும் ஈது பெருநாளை கடந்து இன்று ஜும்மா வை அடைந்திருக்கின்றோம்.
ஹழ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக குர்பானி கொடுத்திருப்போம்.

ஆனால் அத்துடன் நமது கடமை முடிவடைவது கிடையாது. அந்த நாளில் மட்டும் தான் இஸ்லாம் தியாகத்தை வலியுறுத்துகிறது என்பது கிடையாது.
இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க தியாகத்தை வருடம் முழுவதும் நமக்கு எடுத்து காட்டிக்கொண்டே இருக்கிறது.

அதனால் தான் இஸ்லாமிய மாதத்தின் ஆரம்பம் முஹார்ர்ரம். அதில் ஹழரத் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தியாகத்தையும், வருடத்தின் கடைசியில் ஹழரத் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயில் அலைஹிமுஸ் ஸலாம் அவர்களின் தியகதியும் உணர்த்துகிறது. 

தொடர்ச்சியான அமல் : 

மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கு பிடித்த அமல் என்பது தொடர்ச்சியானது தான் என்று நாயகம் சல்லள்ளஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்லிகாட்டினார்கள். 

قليل دائم خير من كثير منقطع

குறைவானதாக இருந்தாலும் நிலையானதாக இருந்தால் அதுவே அதிகமான தொடர்சியற்ற அமலை விட சிறந்தது என்று கூறினார்கள். 

அதுமட்டுமில்லை.....


((عَنْ عَلْقَمَةَ قَالَ سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قَالَ قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ كَيْفَ كَانَ عَمَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كَانَ يَخُصُّ شَيْئًا مِنَ الْأَيَّامِ قَالَتْ لَا كَانَ عَمَلُهُ دِيمَةً وَأَيُّكُمْ يَسْتَطِيعُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَطِيعُ ))

நாயகம் சல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் எந்த ஒரு அமலை செய்தாலும் தொடர்ந்து செய்பவர்களாக இருந்தார்கள் என்று ஆய்ஷா நாயாகி ரலியாலல்ஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள். 

روت أم حبيبة رضي الله عنها قالت : سمعت رسول الله "صلى الله عليه وسلم":يقول :
" ما من عبد يصلي لله تعالى في كل يوم اثنتي عشرة ركعة تطوعاً غير الفريضة ،
إلا بنى الله له بيتاً في الجنة " رواه مسلم


இப்படி யார் ஒருவர் ஒரு அமலை தொடர்ச்சியாக செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பரிசாக மறுமையில் ஒரு வீடு அவருக்காக கட்டப்படுகிறது. 

அமல்களில் சிறந்தது : 

عن عبدالله بن مسعود قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال: (الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته لزادني) رواه البخاري

அமல்களில் சிறந்தது எது என்று நாயகம் சல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட போது 

1. தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது
2, தாய் தந்தையருக்கு பணிவிடை செய்வது 
3. இறை பாதையில் போர் செய்வது 

என்று சொன்னார்கள்.

இவ்வனைதுமே தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும் என்று தான் நாயகம் அவர்கள் இந்த அமல்களை சொன்னார்கள். 

அனைத்திலும் சஹாபாக்கள் செய்து வெற்றி அடைந்தார்கள்.

தியாகம் செய்வதில் போட்டி : 

சஹாபாக்களுக்கு மத்தியில் தியாகங்கள் செய்வதிலும் போட்டி போடுபவர்களாக இருந்தார்கள்.

அதிலும் அந்த காலத்தில் மிகவும் பெரிதாக கருதப்பட்ட தங்களது உயிரை தியாகம் செய்வதில் மிகவும் முனைப்புடனும் ஆர்வத்துடனும் போட்டி போட்டுகொண்டு செய்தார்கள். 

لمَّا خرج رسول الله صلى الله عليه وسلم إلى بدر أراد سعد بن خيثمة وأبوه جميعاً الخروج معه، فذُكر ذلك للنبي صلى الله عليه وسلم فأمر أن يخرج أحدهما. فإسْتَهما، فقال خيثمة بن الحارث لابنه سعد – رضي الله عنهما -: إنه لا بدّ لأحدنا من أن يقيم، فأقمْ مع نسائك، فقال سعد: لو كان غيرَ الجنة لآثرتك به، إنِّي أرجو الشهادة في وجهي هذا، فإستهما، فخرج سهم سعد؛ فخرج مع رسول الله صلى الله عليه وسلم إلى بدر. فقتله عمرو بن عبد ود.

அதனால் தான்,

பத்ர் போருக்காக நாயகம் சல்லலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தயாரான போது ஸாது ரலியள்ளஹு அவர்களும் அவர்களின் தந்தையும் கிளம்பிய செய்தி ரசூல்லுள்ளஹ்வுக்கு எத்திய போது இருவரில் ஒருவரை மட்டும் வர சொன்னார்கள். 
 எனவே அவர்களின் தந்தை  மட்டும் கலந்து கொண்டு ஷஹீத் ஆனார்கள்.  ஹழ்ரத் ஸாது ரலியள்ளஹு அன்ஹு அவர்கள் உஹது போரில் ஷஹீத் ஆனார்கள்.

இப்படி எல்லா விஷயங்களிலும் தொடர்ந்து தியாகம் செய்வதில் மிக கவனமாக இருந்தார்கள். 

நாம் என்ன தியாகம் செய்வது : 

அந்த காலத்தில் சஹாபாக்கள மிகவும் உயர்ததாக கருதப்பட்ட தங்களது உயிரை தியாகம் செய்தார்கள்.

அனால் இன்றைய காலத்தில் உயிரை விட பணம்  தான் உயர்வாக கருதப்படுகிறது.

ஆனால் சஹாபாக்கள் அதை தியாகம் செய்வதிலும் மிகவும் முனைப்புடன் இருந்தார்கள். 

عن عمر بن الخطاب رضي الله عنه قال: ((أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نتصدق، ووافق ذلك عندي مالاً، فقلت: اليوم أسبق أبا بكر إن سبقته يوماً. قال فجئت بنصف مالي، فقال رسول الله صلى الله عليه وسلم: ما أبقيت لأهلك؟ قلت: مثله. وأتى أبو بكر رضي الله عنه بكلّ ما عنده فقال: يا أبا بكر ما أبقيت لأهلك؟ قال: أبقيت لهم الله ورسوله. قلت: لا أسبقه إلى شيءٍ أبداً)) هذا حديث حسن صحيح

போருக்காக நாயகம் சல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பொருட்ளை கேட்ட போது ஹழ்ரத் உமர் ரலியாள்ளஹு அன்ஹு அவர்கள் அபூபக்கர் ரலியள்ளஹு அன்ஹு அவர்களை விட அதிகம் கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய சொத்தில் பாதியை கொண்டு வந்தார்கள். ஆனால் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது முழு சொத்தையும் கொடுத்து முதன்மையானர்கள். 

அல்லாஹ் குர் ஆனில்  நாம் அதிகம் பணத்தை தான் விரும்புவோம் என்று சொல்கின்றான். 

﴿وَتُحِبُّونَ الْمَالَ حُبّاً جَمّاً﴾
[سورة الفجر الآية:20]

எனவே நாம் செய்யும் தியாகம் என்பது நம்முடைய பணத்திலிருந்து நாம் எதை பிறருக்காக செலவு செய்கின்றோமோ அது தான் சிறந்தது. 

நம்முடைய கடைசி தருணத்தை மீண்டும் தருமாறு இந்த செயலை செய்வதற்காக தான் திரும்ப கேட்போம் என்று அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.


அப்படிப்பட்ட பணத்தை நாம் பிறருக்காக ஒரு பங்கு தொடர்ச்சியாக செலவு செய்து மறுமையின் வெற்றியை நோக்கி நமது பயணத்தை தொடர்ந்து அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அவனது ரசூலின் பொருத்தத்தையும் பெற்றவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக !!!!







No comments: