அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 29 September 2016

நாமும் ஹிஜ்ரத் செய்யலாம்...!!!!

அல்ஹம்துலில்லாஹ் !!!

நமது இஸ்லாமிய   புதிய வருடத்தை சந்திக்க மிக அருகில் இருக்கின்றோம் !!! அல்லாஹ் நமக்கு நாம் சந்திக்க இருக்கும் இந்த வருடத்தை சாலமதாக்கி அதில் ஆபியத் ஆனா வாழ்க்கை வாழ தௌபீக் செய்வானாக!

நம்முடைய  இஸ்லாமிய வருட கணக்கிற்கு நாயகம் சல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்கத்து காபிர்களின் தொல்லைகள் காரணமாக தனது பிறந்த மண்ணை துறந்து ஹிஜ்ரத் செய்து மதினமா நகர்த்தில் குடிபெயர்ந்தார்கள். இந்த நிகழ்வை இந்த நிகழ்வு நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவ ஓர் சிறந்த ஆரம்பமாக அமைந்தது.

இன்று பெருமானார் ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்களின் காதலர்களாக அவர்களின் வழிமுறைகளை தவறாது பின்பற்றும் ஒரு சில மக்கள் தற்போதும் வாழத்தான் செய்கிறார்கள்.
அந்த கூட்டத்தில் அல்லாஹ் நம்மையும் சேர்த்தருல்வானாக.

இந்த காலத்தில் யார் பெருமானார்  ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஒரு சுன்னத்தை பின்பற்றுகிறாரோ அவருக்கு பெருமானாரின்

 قال رسول الله- صلى الله عليه وسلم- من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مائة شهيد

யார் என்னுடைய உம்மத்தின் குழப்பமுடைய காலத்தில் எனது சுன்னத்தை பின்பற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் பாதையில் தனது உயிர் நீத்த  நூறு நபர்களின் கூலி வழங்கப்படும் என்று 

சுபசோபனம் உண்டு. 

நாயகம் ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் மற்றும் அனைத்து சஹாபாக்களும் 2 விதமான ஹிஜ்ரத்கள் செய்தார்கள்.

                         الهجرة خصلتان، إحداهما أن تهجر السيئات، والأخرة أن تهاجر إلى الله ورسوله، ولا تنقطع الهجرة ما تقبلت التوبة).

ஹிஜ்ரத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் செய்யும் பாவங்களை விடுவது, மற்றொன்று அல்லாஹ் மற்றும் ரசூலின் பக்கம் செல்வது.

முதலில் எல்லா தீங்குகளையும் விடுவது ஒரு ஹிஜ்ரத். முதலில் சஹாபாக்கள் அதை தான் செய்தார்கள். இதை செய்து தங்களது உள்ளங்களை தூய்மை செய்த பிறகு தான் இரண்டாவது ஹிஜ்ரத்தை செய்தார்கள்.

ஆனால் , நாயகம்  ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் 

ورد في صحيح مسلم أن مجاشع بن مسعود السلمي
 قال: جئتُ بأخي أبي معبد إلى رسول الله صلى الله عليه وسلم بعد الفتح، فقلت: يا رسول الله بايعه على الهجرة. فقال صلى الله عليه وسلم: (قد مضت الهجرةُ بأهلها) قال مجاشع: فبأي شيء تبايعه؟ فقال رسول الله صلى الله عليه وسلم: (على الإسلام والجهاد والخير). ويقول صلى الله عليه وسلم: (لا تنقطع الهجرة حتى تنقطع التوبة، ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها). أما قوله صلى الله عليه وسلم: (لا هجرة بعد الفتح، ولكن جهاد ونية) فالمراد بها هنا أن لا هجرة واجبة بعد الفتح، وقد زاد مسلم (وإذا استنفرتم فانفروا) 


ஒரு நபர் தனது  சகோதரரை அழைத்துவந்து இவருக்கு ஹிஜ்ரத்தை கொண்டு பைஅத் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நாயகம் நாயகம்  ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் முடிந்து விட்டது.வெற்றிக்கு பின் ஹிஜ்ரத் இல்லை என்று சொன்னார்கள். அப்பொழுது எதை கொண்டு பைஅத் செய்வீர்கள் என்று கேட்க........ இஸ்லாமை கொண்டும் ஜிஹாதை கொண்டும் நல்ல காரியங்களை கொண்டும் பைஅத் செய்கின்றேன் என்று சொன்னார்கள். மேலும் சொன்னார்கள் : ஹிஜ்ரத் என்பது தவ்பா முடியும் வரை முடியாது. தவ்பா என்பது..... சூரியன் அதன் மேற்கு திசையிலிருந்து உதிக்கும் வரை முடியாது. 

எனவே, இப்பொழுது ஓர் இடத்தை விட்டு இடம் குடிபெயர்வது ஹிஜ்ரத் ஆகாது. ஆனாலும், அல்லாஹ்விற்காகவும் அவனது ரசூலிற்காகவும் நமது பாவங்களை விட்டு பரிசுதமாவதே நாம் செய்யும் ஹிஜ்ரத்.
அந்த ஹிஜ்ரத்தில் எப்படி நாம் நம்முடைய உடலை அல்லாஹ்வின் பாதையில் துறந்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயருகின்றோமோ அதே போல அவனுக்காக நம்முடைய உள்ளதை பாவங்களிலிருந்து அவனின் பக்கம் அவனது பாதையில் திரும்ப வேண்டும். 

அதனால் தான் நாயகம் ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிமின் அடையாளமாக 

فقال عليه الصلاة والسلام: (المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر ما نهى الله عنه). (رواه البخاري

ஒரு முஸ்லிமாகிறவர் மற்றொரு முஸ்லிமான நபருக்கு தனது நாவைகொண்டும் கையை கொண்டும் நோவினை தராமளிருப்பவரே. இன்னும் முஹாஜிர் என்பவர் அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து தவிர்ந்திருப்பவரே ....!!

என்று கூறியுள்ளார்கள். 

இந்த ஹதீஸில் நாயகம் ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் நாவின் தீமையை முற்படுத்த காரணம் 

ஒரு நபர் மற்றொருவருக்கு தனது கரத்தால் கொடுக்கும் நோவினை விட நாவல் கொடுக்கும் நோவினையே மிக அதிகமான நோவியானையை உண்டாக்கும். 

அதனால் தான் நாயகம்  ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹாசன் பின் ஸாபித் ரலியள்ளஹு அன்ஹு அவர்களிடம் 


                          واللسان اسم العضو الذي يصدر عنه الكلام، وعبر الحديث باللسان عن الكلام ليندرج تحته كل أنواع الكلام، وقدم الحديث اللسان على اليد لأن الإيذاء باللسان أسهل وأشد تأثيراً على النفس من الإيذاء باليد. ولهذا كان النبي صلى الله عليه وسلم يقول لحسان بن ثابت: (اهجُ المشركين فإنه أشق عليهم من رشق النبال)

நீங்கள் இணைவைப்பவர்களை உங்களது வார்த்தைகளை கொண்டு தாக்குவது தான் அம்பின் தாக்குதலை காட்டிலும் மிக வேதனை தரும் என்று சொன்னர்கள் .

இப்படி நாம் நம்முடைய நாவை கொண்டு மட்டுமல்ல .... நமது மனதாலும் பிறரை துன்பபடுதாமல் இருக்க வேண்டும். எனவே நமது உள்ளம் சமந்தப்பட்ட பாவங்களையும் தவிர்ந்து இருக்க வேண்டும். 

قال النبي عليه الصلاة والسلام:
((أَلا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ, وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ, أَلا وَهِيَ الْقَلْبُ))

[أخرجه البخاري عن النعمان بن بشير في الصحيح]

நம்முடைய உடலில் ஒரு பகுதி உண்டு அது சீரடைந்தால் உடல் முழுவதும் சீராகிவிடும். சீர்கேட்டுவிட்டால் உடல் முழுவதும் சீர்கெட்டுவிடும் . அது தான் உள்ளம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 


என்று நாயகம் ஸல்லல்லஹு  அலைஹிவ ஸல்லம்  அவர்கள் சொன்னார்கள். 

எனவே நாம் முதலில் நமது உள்ளதை பாதுகாத்து அல்லாஹ்வின் பக்கம் அதை திருப்ப வேண்டும். 

எனவே, அப்படி நம்முடைய உள்ளதை அவனின் பக்கம் மற்ற பிற பாவமான, தவறான சிந்தனைகளை விட்டு பாதுகாத்து, நமது மனதாலும் பிறருக்கு துன்பம் கொடுக்காமல் நம்முடைய உள்ளத்தை பாதுகாத்து ஹிஜ்ரத் செய்து ... இந்த புனிதமிக்க ஹிஜ்ரி வருடத்தில் ஹிஜ்ராதுடைய பலனை நாமும் பெற அல்லாஹ் நமக்கும் வைப்பளிப்பானாக.!!!
















No comments: