அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 1 September 2016

ஈமானின் பலம் அறிவோம் !!

அல்லாஹு தஆலா தன் அருள்மறையில்

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏ 



2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

என்று சொல்லி காண்பிக்கிறான்.

நம்முடைய வாழ்வில் வரும் சோதனைகள் தான் நம்முடைய ஈமானை அளவிடுகின்றது.

روى الترمذي (2398) عَنْ سَعْد بن أبي وقاص رضي الله عنه قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ , أَيُّ النَّاسِ أَشَدُّ بَلاءً ؟ قَالَ : الأَنْبِيَاءُ , ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ , فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ , فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلاؤُهُ , وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ , فَمَا يَبْرَحُ الْبَلاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் மக்களிலே யார் அதிகம் சோதிக்க படுவார்கள் என்று கேட்கப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : நபிமார்கள் தான் அதன் பின்பு அவர்களை  போன்றவர்கள் அதன் பின் அவர்களை போன்றவர்கள் என்று சொன்னார்கள்.

நம்முடைய ஈமானின் ஒரு பகுதி நபிமார்கள். நம்முடைய ஈமானின் ஒரு பகுதியாக இருக்க கூடிய நபிமார்களுக்கு தான் அல்லாஹ் அதிகமான சோதனைகளை தருவான்.

அதனால் தான் அனைத்து நபிமார்களின் வாழ்க்கையிலும் பல சோதனைகளை கண்டிருப்பார்கள். அவர்களின் வாழ்வு நமக்கு படிப்பினைகளாக அமைந்திருக்கிறது.

ஹழ்ரத் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னுடைய பாசமிக்க மகன் ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சிறு வயதில் பிரிந்து அதன் வாட்டத்தில் சோகத்துடனேயே அவர்களின் வாழ்நாளை கடந்தார்கள்.

ஆனால்  ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாதுகாத்து வளர்த்து மிஸ்ர் நாட்டின் பிரதிநிதியாக ஆக்கிவைத்தான். அந்த சமயம் ஹஸ்ரத் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஊர்களில் பஞ்சம் நிலவ ஹஸ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆட்சிக்கு கீழ் அந்த நாட்டு மக்களுக்கு தானியங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொழுது யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன்களில் புன்னியாமீன் அவர்கள் வராததால்  அவர்களையும் அழைத்து வருமாறு மிஸ்ர் நாட்டின் அரசர் கூற .....

பின்னர் அவர்களையும் அழைத்து வந்தபொழுது தன்னுடைய சகோதரனை சந்தித்த சந்தோஷத்தில் மிஸ்ர் நாட்டின் அரசரான ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புன்னியாமீன் அவர்களை தன்னுடனேயே தரிப்படுத்தி கொண்டார்கள். 


அந்த நேரம் தன்னுடைய இன்னொரு மகனையும் இழந்துவிடுவோமோ என்று ஹழ்ரத் யாகூப் அலைஹிஸலம் அவர்கள் மிஸ்ர் நாட்டு அரசருக்கு ஒரு கடிதம் எழுதுவார்கள் :


மிஸ்ர் நாட்டின் அரசரே !! நிச்சயமாக நாங்கள் ஒரு கண்ணியமிக்க வம்சத்தை சார்தவர்கள். எங்களுடைய குடும்பத்தை சோதனை ஆட்கொண்டுள்ளது. எங்களுடைய பாட்டனார் ஹழ்ரரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நம்ரூதுடைய நெறுப்பை கொண்டு சோதித்தான். அந்த நேரத்தில் அவர்கள் பொறுமையுடன் இருந்தார்கள். இன்னொரு பாட்டனார் ஹழ்ரத் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் அறுப்பதை கொண்டு சோதித்தான், ஆனாலும் அவர்களும் பொறுமையாக இருந்ததால் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தான். அதே போன்று என்னை, என்னுடைய பாசமிக்க மகனான யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை என்னை விட்டு பிரித்து விட்டான். அவர்களின் பிரியத்தால் அழுது அழுது எனது கண்கள் போய்விடது. என்னுடைய உடலும் மெலிந்து விட்டது. தற்போது என்னுடைய மற்றொரு பாசமிக்க மகனான புன்னியாமீன் அவர்களை தற்போது நீங்கள் உங்களிடத்தில் தரிப்படுத்தி கொண்டீர்கள். 

நிச்சயம் எங்களுடைய வம்சத்தில் எவரும் இது போன்ற காரியங்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார். எனவே தயவுசெய்து அவர்களை நீங்கள் விட்டு விடுங்கள் என்று நபிமார்களின் சோதனைகளை வரிசை படுத்தி ஏழுதினார்கள். 

அந்த கடிதத்தை படித்த மிஸ்ர் நாட்டு அரசர் அவர்கள்  பதில் ஏழுதினார்கள் : 

உங்களுடைய கடிதம் எனக்கு கிடைத்தது, நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரிந்தது. உங்களுடைய கடித்ததில் உங்களுடைய மூதாதையர்கள் அனுபவித்த சோதனைகளை சொல்லி இருதீர்கள். அப்பொழுது அவர்கள் பொறுமையாக இருந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தான். இப்பொழுது உங்களை அல்லாஹ் சோதிக்கிறான். நீங்கள் பொறுமையாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கும் வெற்றியை தருவான் என்று எழுதினார்கள்.

அதே போன்று தான் நம்முடைய சோதனைகளின் பொழுது நாமும் எந்த விதத்திலும் சோர்ந்து விடாமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து பொறுமையுடன் அதை எதிர்கொண்டால் அனைத்து நபிமார்களுக்கும் வெற்றியை கொடுத்த  அல்லாஹ் நிச்சயம் நமக்கும் வெற்றியை கொடுப்பான். 
அந்த சோதனைகள் தான் நம்முடைய ஈமானை அளவிடும் அளவுகோல்கள். 


No comments: