அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Monday 11 April 2016

கல்வி - கற்ப்போம்....கற்பிப்போம் ...!!



வல்ல ரஹ்மான் ஆகிய அல்லாஹு தஆலா, நம்மை படைத்தது, நம்முடைய வாழ்வில் கல்வி கற்பதை கடமையாகியுள்ளான். இன்னும், ஒவ்வொரு நாளிலும் நமக்கு முன்னுள்ள மக்கள் மற்றும் சமகாலத்து மக்களின் வாழ்வில் படிப்பினைகளை வைத்துள்ளான்.

இறைவன் நமக்காக அருளிய வேதம் குர்ஆனுடய முதல் இறக்கப்பட்ட வசனம் நமக்கு கற்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

அதிலும் அதை சிறுவயது பருவத்திலேயே கற்பது

العلم في الصغر كالنقش على الحجر

''சிறு வயதில் கற்கும் கல்வி கல்வெட்டு போல''  என்ற அரபு பழமொழி, நமது பிள்ளைகளின் ஆரம்ப காலத்தை நாம் அமைக்கும் வழிமுறையை நமக்கு கற்றுகொடுக்கிறது.

அல்லாஹ்வும், அவனது தூதர் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களும் இரண்டு விஷயங்களில் மட்டும் தான் அதிகமாக கேட்க கற்றுக்கொடுத்தார்கள்.
1. கல்வி 
2. பால் 

கல்வியை இறைவன் : 

 وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا ﴾  طه: 114)

இன்னும்,( நபியே ) இறைவனே எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி தருவாயாக என்று நீர் கூறுவீராக ! 

எனக் கூறுகிறான்.

நாயகம்  (ஸல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் ,

وقد ذكر النبي صلى الله عليه وسلم فضل اللبن على فضله من الطعم فقط، قال:
((فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ, وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ, وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا, فَلْيَقُلِ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ, فَإِنَّهُ لَيْسَ شَيْءٌ يُجْزِئُ مَكَانَ الطَّعَامِ وَالشَّرَابِ غَيْرَ اللَّبَنِ))
[أخرجه الإمام أحمد في مسنده]

பால் புகட்டபெற்ற நபர்,  யா அல்லாஹ்!இதில் எனக்கு பரக்கத் செய்து, இதிலிருந்து இன்னும் அதிகமாக்கி தருவாக என்று சொல்லட்டும்  என்று நவின்றார்கள்.

அப்படி தன்னுடைய சிறு வயது முதலே சீரான கல்வி பயின்று நற்பேறு பெற்ற நன் மக்களுக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து பல நன்கொடைகளையும், உயர் அந்தஸ்துகளையும் வழங்குகிறான்.

அவர்களது சொர்க்கத்து பாதையையும் லேசாக்குகிறான்.

فعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ -صلى الله عليه وسلم- ... وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ. 

''எவர் ஒருவர் கல்வியை தேடி ஒரு பாதையில் செல்கிறாரோ, அதை கொண்டு அல்லாஹ் சொர்க்கதிற்க்கான அவரது பாதையை இலகுவாக்குகிறான்''  என நாயகம்(ஸல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் நவின்றார்கள். 

இது போன்ற உயர் அந்தஸ்துகளை தான் நாடியவர்களுக்கு தான் கொடுக்கின்றான். 

روى البخاري (71) ، ومسلم (1037) عن مُعَاوِيَةَ بن أبي سفيان رضي الله عنهما قال: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ).

"''யாரைக்கொண்டு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ, அவரை மார்க்கத்தில் சட்ட மேதையாக்குகின்றான்''

அல்லாஹ்வினுடைய பல கிருபைகளை அனுபவிப்பாவர்கள் கல்வி ஞானத்தை கற்றவர்கள் தான்.

எங்கு கல்வியும் இறையச்சமும் ஒன்று சேர்கிறதோ அவர்கள் தான் மேலுள்ள அனைத்து சிறப்புகளுக்கும் உரித்தானவர்கள். ஏனென்றால், வல்ல ரஹ்மான் தன திருமறையில்,

تعالى: ﴿ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ ﴾ [فاطر: 28].

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம்.

என்று கூறுகிறான்.

இந்த வசனத்தில்

 وَ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ‌  2:283

ஆதலால் அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளுங்கள், அல்லாஹ்வே உங்களுக்கு (யாவற்றையும்) கற்றுகொடுக்கிறான்.  

எனவே, இறையச்சம்  உள்ளவர்களிடத்தில் தான் கல்வி ஞானம் இருக்கும், கல்விஞானம் உள்ளவர்களிடத்தில் தான் இறையச்சம் இருக்கும் என்று, இரண்டும் ஒரு சேர இருப்பவரே சிறப்புகளுக்கும் அந்தஸ்துகளுக்கு உரித்தானவர் என்று இறைமறை நமக்கு உணர்த்துகிறது. 

கல்வியை கற்பதும், கற்பிப்பதன் ஒழுங்குமுறைகள் :


قال سفيان بن عيينة رحمه الله تعالى: (أوّلُ العِلْمِ حُسْنُ الاسْتماعِ، ثُمَّ الفَهْمُ، ثُمَّ الحِفْظُ، ثُمّ العملُ، ثُمَّ النّشْرُ

சுப்யான் இப்னு உயைனா ரலியள்ளஹு அன்ஹு சொல்வார்கள் : 

கல்வியில் ஆரம்பமானது, அழகிய முறையில் செவிமடுப்பது, பின்னர் அதை விளங்கிக்கொள்வது , பின் அதை பாதுகாப்பது, அடுத்து அதைக்கொண்டு அமல் செய்வது, பின்னர் அதனை பிறருக்கு பரப்புவது (கற்பிப்பது). 

இவ்வோலகில் வாழ்பவர் இவ்விரண்டில் ஒருவராக இருக்க வேண்டும். அவ்வாறு  வாழ்வது தான் சிறந்தது. 
அதனால் தான் மார்க்க அறிஞர்கள் : 

قال بعض العلماء: (لا تصحب إلّا أحد الرجلين: رجلاً تتعلَّم منه شيئاً في أمر دينِكَ فينفعكَ، أو رجلاً تُعَلِّمهُ شيئاً في أمر دينِهِ فَيَقْبَلُ مِنْكَ. وأما الثالث: فَاهْرُبْ مِنهُ).

நீ இரண்டு வகையான நபர்களை தவிர மற்றவருடன் தோழமை கொல்லாதே : 
1. ஒரு நபர், அவரிடமிருந்து நீ மார்க்க விஷயங்களை கற்றுக்கொண்டு பயனடைய வேண்டும், அல்லது 
2. ஒரு நபர் நீ அவருக்கு மார்க்க விஷயங்களை எடுத்துகூற, அதை அவர் ஏற்பாவராக இருக்க வேண்டும். 
இந்த இருவர் அல்லாத மூன்றாம் நபரை விட்டும் நீ விரண்டோடி விடு'' 

என்று உபதேசிப்பார்கள்.

இந்த அந்தஸ்துகளை அடைய வழி

இவ்வாறான அந்தஸ்துகளை நாம் அடைய நம்மிடமிருந்தும் முயற்சிகள் இருக்க வேண்டும். 

 அதில் ஆரம்பமாக நாம் நம்முடைய உள்ளங்களை தூய்மைப்படுத்த வேண்டும். 

அல்லாஹ் தன் அருள் மறையில் வேறு எதற்கும் சத்தியமிடாத அளவு அதிக சத்தியமிட்டு  முக்கியதுவம் கொடுத்து சொல்லும் ஒரு விஷயம் 

 قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். (91:9.)

என்று சொல்கின்றான்.

ஏனென்றால், 

நம்முடைய உள்ளம் தூய்மையானால் தான் மார்க்க கல்வி நம்முடைய உள்ளங்களில் நிலை பெரும். 
இன்னும், நம்முடைய பாவங்களை விட்டு பாதுகாப்பானால் தான் நம்முடைய உள்ளம் தூய்மையடையும்.

இதை தான் இமாம் ஷாபி ரலியள்ளஹு அன்ஹு  அவர்கள் தன்னுடைய மறதிக்கான மருந்தை தனது ஆசானிடம் வேண்டும்போது அவர்கள் இமாம் ஷாபி ரலியள்ளஹு அன்ஹு அவர்களை பாவங்களை விட்டுவிடுமாறு உபதேசம் செய்வார்கள். 

قال الإمام الشافعي رحمه الله تعالى: [من البحر الوافر]
شَكَوتُ إلى وَكِيعٍ سُوْءَ حِفْظِي 
فأرشَدَني إلى تَرْكِ المَعَاصِي 
وَأَخبَرني بِأَنّ العِلمَ نُورٌ 
وَنُورُ الله لا يُهْدَى لِعَاصِي


எனவே, நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம், சிறிய பெரிய பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பது. 

அடுத்ததாக, 

நல்ல எண்ணங்களுடன் வாழ்வது.

அதாவது, பிறரை தன்னை விட தாழ்ந்த பார்வை கொண்டு பார்க்கமலிருப்பது. 

قال أبو حازم رحمه الله:
" لاَ تكون عَالمًا حتَّى تكُونَ فيِكَ ثلاث خِصالٍ: لاَ تَبغِي عَلىَ مَنْ فوقكَ، وَلاَ تحقرْ مَنْ دُونَكَ، وَلاَ تأخذْ عَلىَ عِلْمِكَ دُنْيَا"
[ شعب الإيمان، للبيهقي: 2/288]


ஹழ்ரத் அபு ஹாசிம் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் சொல்வார்கள் : 

உன்னிடத்தில் மூன்று குணங்கள் இருக்கும் வரை நீ அறிஞனாக ஆகா முடியாது.
1. உன்னை விட உயர்ந்தவர்களிடத்தில் இருப்பதை தேடாமலிருப்பது
2.உனக்கு கீழ் உள்ளவர்களை கேவலப்படுதமலிருப்பது
3. உன்னுடைய கல்வியை கொண்டு துன்யாவின் பயனை நாடமளிருப்பது.

இவை தான் ஒரு சிறந்த கல்வி மானாக இருப்பதற்கான தகுதிகள்.

வல்ல ரஹ்மான் அப்படிப்பட்ட உயர்ந்த தரஜக்களை அடைய நம் அனைவருக்கும் அணைத்து நற்குணங்களையும் அளித்து உண்மையான் கல்வியை கற்று அதன் படி அமல் செய்பவர்களாக ஆக்கி அருள்வானாக !!!
ஆமீன் !!


No comments: