அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 7 April 2016

தவ்பா செய்து தூய்மையாகுவோம் !!!





எந்த திசையில்  திருபினாலும் busy என்ற வார்த்தை மட்டும் ஒலித்துகொண்டே இருக்கிறது. எதற்குமே நேரமில்லை !!'' நேரமில்லை''  - இந்த வார்த்தை தான் பல தவறுகளுக்கு காரணமாகவும், சாக்கு போக்கு சொல்ல ஏதுவாகவும் இருக்கிறது.
சில நேரங்களில் அறியாமல் பாவம் செய்கின்றனர்.... பல நேரங்களில் தெரிந்தே செய்கின்றனர்....!!!
ஆனால், மனிதன் தவறிழைப்பவன் தான் என்பது நபிகள் நாயகம் (ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் பொன்மொழி.
என்ன தான் பாவம் செய்பவனாக இருந்தாலும்.....யார் அந்த பாவத்திலிருந்து தவ்பா செய்து மீள்கின்றார்களோ அவர்களை தான் அல்லாஹ் வெற்றியாளர்களாக குறிப்பிடுகிறான். 


(وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون  (النور : 31)

மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

அதிலும், தவ்பா செய்துவிட்டு மீண்டும் மீண்டும் அதே பாவத்தின் பக்கம் மீளாமல் அந்த பாவத்தை விட்டும் முழுமையாக தவிர்ந்திருப்பதே அல்லாஹ் நம் தவ்பாவை ஏற்றுகொண்டதர்கான அடையாளம். 


﴿ يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا  (التحريم : 8)

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்;

என்று இறைவன் கூறும் இந்த வசனத்தில் கலப்பற்ற மனதோடு என்ற வார்த்தைக்கு பொருள், மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் மீளமாட்டோம் என்ற உறுதியுடன் இறைவனிடத்தில் தவ்பா செய்ய வேண்டும் என்பதை நமக்கு சுட்டி காட்டுகிறது. 

ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை தவிர  தனது அடியார்களின்  அனைத்து பாவங்களையும் மனித்து விடுகின்றான். 



اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا  (4:117) 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (4:117) 

அதுமட்டுமில்லாமல், ஒரு முமினான அடியான் தன்னிடத்தில் பாவமநிப்பு கோரும் பொழுது இறைவன் மிகுந்த சந்தோஷம் அடைகின்றான். 


قال رسول الله صلى الله عليه وسلم : ((الله أفرح بتوبة العبد المؤمن من رجل نزل في أرض دوية مهلكة معه راحلته عليها طعامه وشرابه فوضع رأسه فنام نومه فاستيقظ وقد ذهبت راحلته فطلبها حتى إذا اشتد عليه الحر والعطش أو ما شاء الله قال: أرجع إلى مكاني الذي كنت فيه فأنام حتى أموت. فوضع رأسه على ساعده ليموت ، فاستيقظ فإذا راحلته عنده عليها زاده وشرابه ، فالله تعالى أشد فرحا بتوبة العبد المؤمن من هذا براحلته)) متفق عليه

இன்னும் அவனிடத்தில் தவ்பா செய்து, அதன் மீதே நிலைத்து, தனது வாழ்நாள் முழுக்க  அவனுக்கு அடிபணிந்து நடப்பவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் மண்ணறையிலும், மறுமையிலும் நற்கூலி வழங்குகிறான்.

அதே போன்று பாவம் செய்து அவனிடத்தில் தவ்பா செய்யாமல் மரணிப்பவர்களுக்கு தகுந்த தண்டனையும் வழங்குகின்றான். 
அதற்க்கு சான்றாக தான் பின்வரும் உமர் (ரலியள்ளஹு அன்ஹு ) அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம் நமக்கு பாடம் சொல்லி தருகிறது. 

عن عبد الملك بن مروان أن شابا جاء إليه باكياً حزيناً فقال : يا أمير المؤمنين إني ارتكبت ذنباً عظيماً .. فهل لي من توبة؟  
قال: وما ذنبك؟  
قال: ذنبي عظيم ..  
قال: وما هو ؟ تب الى الله - تعالى - فإنه يقبل التوبة عن عباده ويعفو عن السيئات  
قال: ياأمير المؤمنين كنت أنبش القبور، وكنت أرى فيها أمورا عجيبة ..  
قال: وما رأيت؟   
قال: ياأمير المؤمنين نبشت ليلة قبراً فرأيت صاحبه قد حول وجهه عن القبلة فخفت منه وأردت الخروج واذا بقائل يقول في القبر: ألا تسأل عن الميت لماذا حول وجهه عن القبلة؟ فقلت لماذا حول؟ قال: لأنه كان مستخفا بالصلاة ، هذا جزاء مثله..  
ثم نبشت قبراً آخر فرأيت صاحبه قد حول خنزيراً وقد شد بالسلاسل والأغلال في عنقه ، فخفت منه وأردت الخروج واذا بقائل يقول لي :ألا تسأل عن عمله لماذا يعذب؟ قلت : لماذا قال : كان يشرب الخمر في الدنيا ومات على غير توبة..  
والثالث ياأمير المؤمنين نبشت قبراً فوجدت صاحبه قد شد بأوتار من نار وأخرج لسانه من قفاه، فخفت ورجعت وأردت الخروج فنوديت : ألا تسأل عن حاله لماذا ابتلي؟ فقلت : لماذا؟ فقال كان لا يتحرز من البول ، وكان ينقل الحديث بين الناس ، فهذا جزاء مثله..   
والرابع ياأمير المؤمنين نبشت قبرا فوجدت صاحبه قد اشتعل ناراً فقال : كان تاركا للصلاة..  
والخامس ياأمير المؤمنين نبشت قبراً فرأيته قد وسع على الميت مد البصر وفيه نور ساطع والميت نائم على سرير وقد أشرق وجهه وعليه ثياب حسنه فأخذني منه هيبة ، وأردت الخروج فقيل لي : هلا تسأل عن حاله لماذا أكرم بهذه الكرامة؟ فقلت : لماذا أكرم؟ فقيل لي : لأنه كان شابا طائعا نشأ في طاعة الله-عز وجل-وعبادته..  
   
فقال عبد الملك عند ذلك : إن في هذه لعبرة للعاصين وبشارة للطائعين.. 
فالواجب على المبتلى بهذه المعايب المبادرة الى التوبة والطاعة ، جعلنا الله وإياكم من الطائعيين وجنبنا أعمال الفاسقين إنه جواد كري


அவர்கள் தான் அல்லாஹ்வுக்கு பிடிதமானவர்களாகவும் இருக்கின்றார்கள். இதை 

قوله تعالى : ﴿ إن الله يحب التوابين ويحب المتطهرين ﴾ (البقرة : 222) 



பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

என்று இறைவன் கூறுகின்றான். 

நாம் யோசித்து கொள்ள வேண்டும். நாம் மண்ணறைக்கு சென்ற பின், நம்முடைய ரூஹ் நம் உடலை விட்டு வெளியேற்றப்பட்ட பின்பு நிச்சயமாக நம்மால் நல்ல அமல்களை செய்ய முடியாது. செய்த பாவங்களுக்கு அவனிடத்தில் மன்னிப்பு கோரவும் முடியாது. 

நம்முடைய நிலை 

فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏ 

“என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.

என்பது போல ஆகிவிட கூடாது. 

இது போன்ற நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாத்து, நல்லவர்களின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்து, மறுமையிலும் நல்லோர்களின் கூட்டத்தில் நம்மை ஆக்கி அருள, அவனிததில் தவ்பா செய்து, அவன் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து, அவன் ஏவியவற்றை செய்து நம்முடைய வாழ்வை அவனுடைய பாதையில் கழிக்க வல்ல ரஹ்மான் நமக்கும் தௌபீக் செய்து ஈருலகிலும் வெற்றியை தருவானாக !!! ஆமீன் !!




No comments: