அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 31 March 2016

மரணத்தை மறக்காதே !

எந்த வித நிர்பந்தமும் இல்லாமல்  அனைத்து மக்களாலும் நிச்சயிக்கப்பட்ட விஷயம் மரணம் தான். மரணம் எப்போது வரும் என்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நிச்சயம் ஒரு நாள் நிச்சயம் வந்தே தீரும் என்பது ஏக இறைவனை ஏற்க்காதவரும் ஏற்றுகொள்கிறார்.

இறைவன் அருள்மறையில் கூறும்

  قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.

என்னும் இந்த வசனத்தை ஈமான் கொள்ளாதவர்களும் மறுக்க மறுக்கின்றனர். 

ஆனால், அந்த இறுதி முடிவு யாருக்கு சிறப்பாக அமைகிறது என்பது தான் மறுமைக்கான தீர்ப்பின் ஆரம்பம். 

அந்த வகையில் நல்லடியார்களின் கடைசி நொடிகளை அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு விளக்குகிறான். 

   اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏ 

நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (அல் குர்ஆன் 41:30)


இந்த உலகில் வாழும் மக்களுக்கு பல பேர் பல விதத்தில் அவர்களின் நன்மைக்காக பல உபதேசங்களை செய்கிறார்கள். பல மேடை சொற்பொழிவுகள், பல வகையான நிகழ்சிகளாக அரங்கேறுகின்றது. ஆனால், அனைத்தையுமே இரத்தின சுருக்கமாக பேசும் நமது கண்மணி நாயகம் (ஸள்ளலாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் ஒரே வார்த்தையில் உபதேசத்தை உள்ளடக்கினார்கள்.

 (( كفى بالموت واعظًا ))
ஒருவருக்கு உபதேசமாக மரணமே போதுமானது. 

என்ற வார்த்தை அனைத்தையும் உள்ளடக்கியது. 

வாழும் காலங்களில் தற்பெருமை, கோபம், பொறாமை, போன்ற எண்ணற்ற கர்வத்தோடு வாழும் யாரும் திருந்த எந்த உபநியாசியும் தேவை இல்லை. நம்முடைய மனதில் நிச்சயம் நாம் மரணத்தை சந்திக்க இருக்கின்றோம் என்ற நினைவு நம்முடைய மனதி விட்டும் கலராமல் இருந்தால் அதுவே ஒரு சிறந்த மனிதனாக வாழ உயர்ந்த உபதேசமாகும். 

எத்தனை பெரிய பணக்காரன் , கோடீஸ்வரன் , பல மைல்களுக்கு அதிபதியானாலும் கடைசி தருணம் மிஞ்சுவது 6அடி குழி மட்டுமே என்னும் நினைவைமறக்க கூடாது. 

No comments: