நொடிக்கு நொடி மாற்றம் காணும் இந்த விஞ்ஞான உலகில் மனிதர்கள் மனம் என்ற மணத்தை மறந்து வாழ்க்கை நடத்தும் காலமாகிவிட்டது !!!
ஆனாலும், நமக்கு வாழ்க்கை நெறி கற்று தரும் இஸ்லாம், மத வெறியை அகற்றி அனைத்திற்கும் அப்பாற்பட்டு மனிதர்களாய் வாழும் வழியை காட்டுகிறது. அதை சென்னையில் பெய்த பெருமழை நம் கண்களுக்கு சாட்சியாக்கியதை காலை நேர கதிரவனாய் கண்டோம் !!
அன்பளிப்புகள் பிரியத்தை அதிகமாக்கும்.
நம்முடைய உள்ளங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி பிரியத்தை உண்டாக்குபவன் தானே என அல்லாஹ் கூறுகிறான்.
إِذْ كُنتُمْ أَعْدَاء فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَاناً
நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;
رسول الله صلّى الله عليه و آله : الهَدِيَّةُ تورِثُ المَوَدَّةَ ، وتُجَدِّدُ الاُخُوَّةَ ، وتُذهِبُ الضَّغينَةَ
( عوالي اللآلي : ج ۱ ص ۲۹۴ ح ۱۸۳ ، بحار الأنوار : ج ۷۷ ص ۱۶۶ ح ۲ )
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிக பிரியமிக்க நெருங்கிய தோழராக இருந்த ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் ரலியல்லஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீது மிகுந்த ப்ரியம் வைத்திருந்ததை வரலாற்று பக்கங்கள் இடை விடாமல் நமக்கு உணர்த்தி கொண்டே இருக்கிறது. ஆனாலும், அதில் நாம் உணர வேண்டிய ஒன்று.
அவர்களது ப்ரியம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீது இத்தனை அதிகமாக காரணம், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்பாக பொருட்களை அதிகம் வழங்கினார்கள் என்பதை விட தங்களுடைய வாழ்வையே அவர்களுக்காக அற்பணித்தார்கள் என்பதே உண்மை.
عن زيد بن أسلم عن أبيه قال: سمعتُ عمر بن الخطاب رضي الله عنه يقول: أمَرَنا رسول الله صلى الله عليه وسلم أن نتصدق، فوافق ذلك مالاً عندي، فقلتُ: اليوم أسبقُ أبا بكر إن سبقتُه يومًا، قال: فجئتُ بنصف مالي، فقال رسول الله صلى الله عليه وسلم: ((ما أبقيتَ لأهلك؟))، قلت: مثله، وأتى أبو بكر بكل ما عنده، فقال: ((يا أبا بكر، ما أبقيتَ لأهلِكَ؟))، قال: أبقيتُ لهم الله ورسوله، قلتُ: والله لا أسبقه إلى شيء أبدًا.
(سنن الترمذي 3675)
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்காக அன்பளிப்பு கொடுத்து அவர்களை சந்திப்பது கடமையாகி இருந்தது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً ۚ ذَٰلِكَ خَيْرٌ لَّكُمْ وَأَطْهَرُ ۚ فَإِن لَّمْ تَجِدُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
(سورة المجادلة - 12)
இந்த வசனத்தை பற்றி ஹழ்ரத் அலி ரலியல்லஹு அன்ஹு அவர்கள் கூறுவார்கள் ..... குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது அந்த வசனத்திற்கு எனக்கு முன்பும் யாரும் அமல் செய்ததில்லை எனக்கு பின்பும் யாரும் அமல் செய்யவில்லை.
حدثنا أبو كُرَيب، قال: ثنا ابن إدريس، قال: سمعت ليثًا، عن مجاهد، قال، قال عليّ رضي الله عنه: آية من كتاب الله لم يعمل بها أحد قبلي، ولا يعمل بها أحد بعدي، كان عندي دينار فصرفته بعشرة دراهم، فكنت إذا جئت إلى النبي صَلَّى الله عَلَيْهِ وَسَلَّم تصدقت بدرهم، فنسخت، فلم يعمل بها أحد قبلي: ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً ).
மனைவிக்கு அன்பளிப்பு கொடுப்பது :
عن أبي هريرة – رضي الله عنه- قال : قال رسول الله صلى الله عليه وسلم :" تَهَادَوُا تَحَابُّوا ". رواه البخاري في الأدب المفرد (594)
தான் திருமணம் செய்த மனைவிக்கு அன்பளிப்பு கொடுப்பது பற்றி இமாம் குர்துபி ரஹ்மதுல்லஹி அலைஹி அவர்கள் கூறுவது :
يقول الإمام القرطبي – رحمه الله- : "الهدية مندوب إليها، وهي ممّا تورث المودة وتذهب العداوة" .
تفسير القرطبي (13/132)
குழந்தைகளுக்கு கொடுப்பதில் நீதி வேண்டும் :
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் (அம்ரா) பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து சில அன்பளிப்புகளை எனக்கு வழங்குமாறு கேட்டார். என் தந்தை ஒரு வருடம் இழுத்தடித்தார். பிறகு (எனக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்று) அவருக்குத் தோன்றியது. (ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.) அப்போது என் தாயார் "என் மகனுக்கு அன்பளிப்பாக (இந்த அடிமையை) வழங்கியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சாட்சியாக்காத வரை இதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார்.
ஆகவே, என் தந்தை சிறுவனாயிருந்த எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா, தன் மகனுக்கு நான் அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுக்குத் தங்களைச் சாட்சியாக்க வேண்டும் என விரும்புகிறார்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பஷீர்! இவரைத் தவிர வேறு குழந்தை உமக்கு உண்டா?" என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்ற அன்பளிப்பை வழங்கினீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று சொன்னார்கள். "அப்படியானால் என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்கமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நம்முடைய வாழ்நாளில் பிற மக்களுடன் சேர்ந்து அன்புடன் வாழ்வதற்கு இஸ்லாம் காட்டித்தந்த அழகிய வழிமுறையை பின்பற்றி அன்பளிப்புகளை கொடுத்து பிறருடன் அன்பை வளர்த்து வாழ்வை நலமாக வாழ்ந்த நல்லடியார்களின் வரிசையில் நம்மையும் ஆக்கியருள்வானாக ...!!! ஆமீன் !!!
No comments:
Post a Comment