அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 17 March 2016

மணம் கமழும் மதீனா நகரம்



நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்கள் தொட்ட........
இல்லை இல்லை .......அவர்கள் பார்வை பட்ட அனைத்தும் சிறந்திருப்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம் !!!

அந்த வரிசையில்   ''மதின மாநகரும்''   அடக்கம் தான். 

மக்க மாநகரத்தை அல்லாஹ் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது நாவில் ஹரமாக ஆக்கினான். மதீனாவை அல்லாஹ் குர் ஆன் ஓதும் அவனது ஹபீபின் நாவுகளில் வைத்து கண்ணியப்படுத்தி அழகு பார்க்கிறான்.

அதனால் தான்,  எப்படி மக்காவில்  போர் செய்வதும், செடி கொடிகளை பிடுங்குவதும், பிறருக்கு கஷ்டத்தை கொடுப்பது போன்றவை தடுக்கபட்டுள்ளதோ, அதே போல மதினமா நகரிலும் தடுக்கப்பட்டுள்ளது. 


 فقد روى مسلم في صحيحه مِن حَدِيثِ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رضي اللهُ عنه: أَنَّ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم قَالَ: "اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ فَجَعَلَهَا حَرَمًا، وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ حَرَامًا، مَا بَيْنَ مَأْزِمَيْهَا، أَنْ لَا يُهْرَاقَ فِيهَا دَمٌ، وَلَا يُحْمَلَ فِيهَا سِلَاحٌ لِقِتَالٍ، وَلَا تُخْبَطَ فِيهَا شَجَرَةٌ إِلَّا لِعَلْفٍ"

மற்றொரு ஹதீஸில் 


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

"மதீனாவின் இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனிதமானதாக ஆக்கப்பட்டுவிட்டது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தினரிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று, 'பனூ ஹாரிஸா குலத்தினரிடம்! நீங்கள் ஹரம் எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்!" என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்துவிட்டு. 'இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்!" என்றார்கள். 



மதீனாவின் மீது நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களது ப்ரியம் :



மதினாவிற்காக நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்கள்    ''யாஅல்லாஹ் மதினாவின் மீது எங்களது பிரியத்தை மக்காவின் மீதிருக்கும் எங்களது பிரியத்தை போல அல்லது அதை விட அதிகமாக ஆக்கிதருவாயாக !! 



(( اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدّ )).


என துஆ செய்தார்கள். 

இன்னும் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்கள்  பயணத்தில் இருந்து மதினாவிற்கு திரும்பினால்

وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ (أَيْ أَسْرَعَ) وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا مِنْ حُبِّهَا .

மதினாவின் கண்ணியம்

அல்லாஹ் ஒவ்வொரு நபிக்கும் ஒரு இடத்தை கண்ணியமிக்கதாக ஆக்கி இருப்பதை போல அவனது ஹபீப் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களது துஆ வைக்கொண்டு மதீனாவை கண்ணியமிக்கதாக ஆக்கினான். 

قَالَ صلى الله عليه وسلم : (( لِكُلِّ نَبِيٍّ حَرَمٌ ، وَحَرَمِي الْمَدِيْنَة اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُهَا بِحُرَمِك ؛ أَنْ لاَ يُؤْوَى فِيهَا مُحْدِث ، وَلاَ يُخْتَلَى خَلاَهَا، وَلاَ يُعْضَدُ شَوْكُهَا ، وَلاَ تُؤْخَذُ لُقَطَتُهَا إِلاَّ لِمُنْشِد )).


மதீனாவின் பரகத்

மதீனா நகரமே பரகத் பொருந்தியது தான். அதில் உள்ள அனைத்திலும் அல்லாஹ் பரகத் செய்துள்ளான். 

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்காவிற்காக செய்த துஆ :

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَـَذَا بَلَداً آمِناً وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ ......(126)

இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக”என்று கூறினார்.


மதினவிற்காக நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்கள் செய்த துஆ  :

وَقَالَ صلى الله عليه وسلم :

(( اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَفِي ثِمَارِنَا وَفِي مُدِّنَا وَفِي صَاعِنَا بَرَكَةً مَعَ بَرَكَة )). 


وَقَالَ صلى الله عليه وسلم :

(( اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، اللَّهُمَّ اجْعَلْ مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْن )). 

மஸ்ஜிதுன் நபவீயின் சிறப்பு :

قَالَ اللهُ تَعَالَى
[ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ  يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْ وَاللهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ ] 


நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

மஸ்ஜிதுன் நபவியில்  தொழுவது  மற்ற இடங்களில் 1000 தொழுகைகளை தொழுவதை விட சிறந்தது. 

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :

( صَلاَةٌ فِي مِسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلفِ صَلاَةٍ فِيْمَا سِوَاهُ مِنْ الْمَسَاجِد، إِلاَّ الْمَسْجِدَ الْحَرَام ). 

சொர்கத்து பூங்கா : 

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : (( مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّة )).

மலக்குகள் பாதுகாக்கும் மாமதினா

கியாமத் நாள் நெருங்கும்போது தஜ்ஜாலுடைய வருகையில் அவன் மதீனாவை நெருங்காமல் இருக்க அல்லாஹ் மலக்குகளை வைத்து மதினாவை பாதுகாப்பான் .

قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : (( لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ الدَّجَّال ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ عَلَى كُلِّ بَابٍ مَلَكَان )).


وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
(( عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ وَلاَ الدَّجَّال )).


இன்னும் ஏராளமான சிறப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மதீனாவை பற்றியே சொல்லி முடிக்க இயலவில்லை. பின் எப்படி மதீனத்து ராஜா எங்கள் கல்புக்கனி கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ) அவர்களின் சிறப்பை எப்படி பாடி முடிக்க முடியும் ??

நம்முடைய வாழ்வில் ரசூலுல்லஹ்வின் மீது உண்மையான ஈமான் உடையவர்களாக நம்மை மரணிக்க செய்வானாக. ஆமீன் !!!




No comments: