அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 24 March 2016

இறை நினைவை மறவாதே !!!

நாம் வாழ்ந்துவந்த வழிப்பாதையை திரும்பிப்பார்த்தால்.........அவசியமானவற்றை விட மற்ற அதிகப்படியான விஷயங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்போம்.

உணவுகளை வகை வகையாக உண்கிறோம், அனால் அது நம்முடைய உடலிற்கு சத்தானதா என்பதில் கோட்டைவிடுகின்றோம் .அதிகம் உணவுகளையும், மருந்துகளையும்  உண்ணு உடலுக்கு வலிமை சேர்க்கும் நாம், நமக்கு நோய் என்றதும் மருத்துவரிடம் ஓடோடி செல்லும் நாம், நமது உள்ளத்தை கண்டுகொள்வதில்லை. அதன் போக்கில் அதை விட்டு விடுகின்றோம்!!

அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான் :

فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ

ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். (2:152)

இறைவனை நினைவுகூர்வதில் அணைத்து விதமான சந்தோஷங்களும் நம்மை தேடி வரும். இன்னும் அது பலவிதமான நன்மைகளை நமக்கு தரும் என இமாம் பெருமக்கள் நமக்கு காண்பித்து தருகின்றார்கள். ஏனென்றால், வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடத்தில் அவர்கள் தான் உயிருடயவர்களாக பார்க்கப்படுகின்றார்கள்.

عن أبي موسى، عن النبي  قال: ) مثل الذي يذكر ربه، والذي لايذكر ربه مثل الحي والميت(
)صحيح البخاري(

உயிருடன் இருக்கும் மனிதனுக்கும் மரணித்த மனிதருக்கும் வேறுபாடு உண்டா இல்லையா..? நிச்சயம் இருக்கிறது. இறைவனை நினைவுகூருபவனுக்கும் இறைநினைவே இல்லாதவனுக்குமான வேறுபாடும் அவ்வாறுதான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உவமையுடன் ஒருதடவைக் கூறிக்காட்டினார்கள். (புகாரி)
இறைவனை நினைவு கூருவதால் வேறெந்த வெகுமதியும் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை.. இறைவனே நம்மை நினைவு கூரும் பாக்கியம் மட்டும் கிடைத்தால் போதாதா..?
ஹஸனுல் பஸரி (ரஹ்மதுல்லாஹி  அலைஹி ) அவர்களிடம் ஒருவர் வந்து,
 ‘‘எனது உள்ளத்தில் இரக்கமற்ற தன்மை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. என்ன செய்ய.?’’ என்று கேட்டார்.
அதற்கு, ‘‘இறைவனை அதிகமாக நினைவு கூருவதன் மூலம் அதற்குப் பயிற்சி கொடு. நிவாரணம் பெறுவாய்’’ என்று பதில் அவர்கள்  கூறினார்கள்.

*      يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْراً كَثِيراً http://www.kalemat.org/gfx/braket_l.gif [الأحزاب:41
*      http://www.kalemat.org/gfx/braket_r.gifوَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيراً وَالذَّاكِرَاتِ http://www.kalemat.org/gfx/braket_l.gif [الأحزاب:35]،

இறைவனை நினைவுகூறுமாறு வலியுறுத்தும் வசனங்களை இன்னும் அடுக்கிகொண்டே போகலாம்.
ஏனென்றால், தன்னை நினைவுகூரும் தனது அடியார்களை பார்த்து இறைவன் மிக சந்தோஷமடைகின்றான்.


وفي الصحيحين عن أبي هريرة قال: قال رسول الله http://www.kalemat.org/gfx/article_salla.gif: { يقول الله تبارك وتعالى: أنا عند ظن عبدي بي، وأنا معه إذا ذكرني، فإن ذكرني في نفسه ذكرته في نفسي، وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم، وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا، وإن تقرب إلي ذراعا تقربت منه باعا، وإذا أتاني يمشي أتيته هرولة.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவுகூருவேன்''.


நாம் இறைவனை நினைவுகூருவதன் பயன் நாம் இறைவனிடத்தில் கேட்டு பெறும் பாக்கியங்களை விட உயர்ந்த பாக்கியங்களை நமக்கு கிடைக்க செய்கிறது.

}من شغله ذكري عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين.{

என்று அல்லாஹ் கூறுகிறான்.

எனவே, நம்முடைய உள்ளத்தை பாதுகாப்பது, இறை நினைவை கொண்டு தான் முடியும். நம்முடைய உள்ளம் சீராக இருந்தால் தான் நம்முடைய உடல் சீராக இருக்கும்.  கண்மணி நாயகம் (சல்லலாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் சொல்வார்கள் :


قال صلى الله عليه وسلم} : ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله , وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب{.



நாம் முதலில் கவனிக்க வேண்டியது நம்முடைய உள்ளதை தான். அதனை சரி செய்தால் மற்ற அனைத்தும் சீராகிவிடும் .

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا  91:9    

என்று அல்லாஹ் திருமறையில் சத்தியமிட்டு கூறும் 
வெற்றியாளர்களில் நம்மையும் ஆக்கிவைப்பானாக !! 

No comments: