அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 17 September 2015

விஞ்ஞானமும் மெஞ்ஞானமும்

இஸ்லாமிய மார்க்கம் எல்லா காலங்களிலும் மனித முன்னேற்றத்திற்கு ஆதரவாகவே உள்ளது. தீவிரமாக மார்க்கத்தை பின்பற்றுபவர் விஞ்ஞானத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும் என்று இஸ்லாம் ஒரு போதும் கூறியது கிடையாது. ஆதலால் மெஞ்ஞானத்தை விரும்புபவர்கள் விஞ்ஞானத்தை எதிர்ப்பவர்களும் கிடையாது. உண்மையான மெஞ்ஞானத்தை அறிந்த எவரும் விஞ்ஞானத்தை கண்டு மகிழ்வார்கள். மெஞ்ஞானத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் விஞ்ஞானமே திறவுகோல்.



கணினி உலக இயக்கத்தின் ஒரு பகுதி என்றே சொல்லலாம். விஞ்ஞானத்தின் உச்சம் என்றும் சொல்லலாம். சாதாரண பாமரனும் கூட இதை வைத்து முன்னேறினான். இதை வைத்து மிகப் பெரிய ஆன்மீகத்தை சொல்லிவிட முடியும். ஆன்மீகத்தின் அடிப்படைளை விளக்க இதைவிட ஒரு உதாரணம் இருக்க முடியும்£ என்று தெரியவில்லை. கணினியை பொறுத்தவரை இரண்டு அம்சங்கள் 1. மென்பொருள் (ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ) 2. வன்பொருள் (பிணீக்ஷீபீஷ்ணீக்ஷீமீ) இந்த இரண்டும் சரியாக இயங்கும் பட்சத்தில் கணினியை பயன்படுத்த முடியும். இவையிரண்டில் ஒன்று கோளாறானாலும் கணினியை பயன்படுத்த முடியாது.




ஆன்மீகத்தை உணர்த்த இதை அப்படியே மனிதனுக்கு ஒப்பிடலாம். கணினியின் வன்பொருளை (பிணீக்ஷீபீஷ்ணீக்ஷீமீ) நாம் எப்படி பாதுகாப்போமோ அதுபோன்று நம் உடல் உறுப்புகளை நாம் பாதுகாக்க வேண்டும். அவ்வப்போது தூசி தட்டி துடைத்து பாதுகாப்பது போன்று மருத்துவரிடம் சென்று நாம் நம் உடலுறுப்புகளை பாதுகாக்க வேண்டும். கணினியின் மென்பொருளை (ஷிஷீயீtஷ்ணீக்ஷீமீ) வைரஸ் தாக்காமல் இருக்க நாம் எப்படி ஆன்டி லைரஸ் போட்டு பாதுகாக்கிறோமோ அதுபோன்று நம் உள்ளம் பழுதடையாமல் பொறாமை, பொய், முகஸ்துதி போன்ற வைரஸ்கள் தாக்காமல் இருக்க தக்வா என்கிற ஆன்டி வைரஸ் போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும்.




இதுபோன்றே விஞ்ஞானத்தின் ஒவ்வொரு வளர்ச்சியை சற்று கவனித்தால் அதிலுள்ள மெஞ்ஞானத்தை புரிந்து கொள்ள முடியும். 


மெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.

திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர்கள்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .கண்களால் காண்பது விஞ்ஞானமெனில், கண்களால் காணாமல் நம்புவது மெய்ஞானம்.]

இந்த உலகின் மாபெரும் அற்புதம் நிச்சயமாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வால், அகிலத்தின் அருட்கொடையான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட ''திருக்குர்ஆன்'' தான். அதற்கு இணையான ஒரு அற்புதத்தை எவராலும் காண்பிக்க முடியாது.

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் மட்டுமல்ல, மனிதவர்க்கத்திற்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட மாபெரும் பரிசாகும். அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமேயில்லை. சிந்திப்பவர்களுக்கு அதில் கிடைக்காதது எதுவுமில்லை.

ஏழு கடல் நீரை மையாகப் பயன்படுத்தி, உலகெங்குமுள்ள மரம், செடி, கொடிகளை எழுதுகோலக பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கமளிக்க முயன்றாலும் முடியாது. இதுபோன்று இன்னுமொரு மடங்கு கடல்நீரை பயன்படுத்தினாலும் சரியே, கடல் நீர்தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல! அந்த அளவுக்கு பொருள் பொதிந்தது அல்லாஹ்வின் திருவேதம்.

திருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதைக் கவனியுங்கள்;

''(
நபியே!) நீர் கூறுவீராக் ''என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!'' (அல்குர்ஆன் 18:109)

''
மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.'' (அல்குர்ஆன் 31:27)

No comments: