அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 10 September 2015

குடும்பவியல்




இறைவன் ஏற்படுத்திய அமைப்புகளில் குடும்பம் என்பது மிக உன்னதமானது. ஒருவனின் அமைதி, நிம்மதி என்பது குடும்பங்களிலிருந்து ஏற்படுகிறது. அதற்கு எதிர்மறையான கவலை, துன்பம் என்பதும் குடும்பங்களிலிருந்தே உருவாகிறது.

இறைவன் திருமறையில் தங்குமிடத்தித்திற்கு “சகீனாஎன்கிற வார்த்தையை பயன்படுத்துவான். அதற்கு நிம்மதி, அமைதி என்று மற்றாரு பொருளும் உண்டு. ஆனால் இன்றைய காலங்களில் குடும்பங்கள் அப்படியிருப்பதில்லை. பெரும்பாலான கவலைகளும் பிரச்னைகளும் குடும்பங்களிலிருந்தே உருவாகிக் கொண்டிருக்கிறது.

முந்தைய காலங்களில் மிகச் சிறப்பான உறவுக்கு கணவன் – மனைவி உறவையே எடுத்துக்காட்டாக காண்பிப்பார்கள். ஆனால் இன்று கணவன் மனைவி உறவு என்பது கேளி கூத்தாகிவிட்டது. கணவர்களுக்கு மனைவி என்றாலே வேண்டா வெறுப்பானவளாகவே சுட்டீஸ் குட்டீஸிலிருந்து பட்டிமன்றங்கள் வரைக்கும் பேசப்படுகிறது. மனைவிகளும் பிள்ளைகளும் சுமையாக சித்தரிக்கப்படும் அளவிற்கு குடும்பவியல் சீரழிந்திருக்கிறது.

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் குடும்பவியல் என்பது தேவைக்கு அதிகமாக செலவழிப்பது அல்ல. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வது அல்ல. நினத்தது கிடைப்பதும் ஆடம்பரமாய் வாழ்வதே குடும்பம் அதற்காக உழைப்பவனே குடும்பத் தலைவன் என்று கருதப்படுவது அநாகரீகம். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பவர்கூட அதிகம் சம்பாதிப்பதை பார்க்கிறார்களே தவிர மார்க்கத்தையோ குணநலன்களையோ பார்ப்பதில்லை. அதன் தொடர்ச்சியாக வரும் மனைவியும் சம்பாத்தியத்தை பார்க்கிறார்கள். அதன் வழியை பார்ப்பதில்லை.

தவறான முறையில் வருமானத்தை கண்டிக்கும் மனைவியை பார்ப்பது அரிது. தேவைக்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொள்ளமல் இருக்கும் பிள்ளைகளை பார்ப்பதும் அரிது.

அல்லாமா இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் நிர்ணயித்த்தையே நீ பெற்றுக் கொள்வாய். அப்படியிருக்க, நிர்ணயிக்கப்பட்ட்டதை ஹலாலான முறையில் தேடிக் கொள் என்று கூறினார்கள்.

விளம்பர உலகின் போதைக்கு அனைவரும் அடிமையாகிவிட்ட நிலையில் பணத்தை எதிர்பார்த்து ம்ட்டுமே உறவு கொண்டாடுவது அபத்தமாகும். அதுவே விவாகரத்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்கும் உறவில் ஒரு சுவையும் ஈடுபாடும் இருக்க வேண்டும். வணக்கத்திற்கு இணையாகும் அந்த உறவை இச்சையை தணிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது.

குடும்பவியல் என்றாலே நம் வரலாறுகளில் நமக்கு ஞாபகம் வருவது நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்களின் மனைவி ஹாஜரா அம்மையார் அவர்களும் தான். இந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் (அலை) அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது.

இபுறாகீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.


இறைவா! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு! (அல்கு ஆன் 14:40)  
என்ற அவர்களது பிரார்த்தனை அவர்களது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவனுக்காக தன் குடும்பத்தை துறந்தார்கள். ஆனால் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அவர்களது குடும்பம் எந்தளவிற்கு ஒத்துழைத்த்து என்பது தான் கவனிக்க வேண்டியவை. ஹாஜரா அம்மையார் அவர்களையும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தனியாக தங்கவைத்துவிட்டு சென்றபோதும் இறைவனுக்காக கணவனையும் முழுமையாக் பொருந்திக் கொண்டார்கள். தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள எந்த சூழ்நிலையும் இல்லாத இடத்தில் தன் கணவர் விட்டுவிட்டு செல்கிறார் என்று நினைக்காமல் உயர்ந்த குடும்பவியலை கடைப்பிடித்த்தாலே அவர்களின் சிறிய சிறிய செயல்களையும் நாம் வணக்கமாக எடுத்து செய்கிறோம்.

தன் மனைவியைப் பார்த்தால் கணவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது பரஸ்பர புரிதல் ஏந்பட்டாலே தவிர மகிழ்ச்சி ஏற்படாது. கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் சரியான புரிதல் இருக்க வேண்டும். கணவனின் ஒவ்வொரு அசைவின் பொருளையும் மனைவி உணர வேண்டும். மனைவியின் ஒவ்வொரு சைகையின் பின்னணியையும் கணவன் உணர வேண்டும். இந்த பரஸ்பர புரிதல் இருந்த்தாலே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் ஹாஜரா அம்மையார் அவர்களும் சிறந்த குடும்பவியலுக்கு எடுத்துக்காட்டாக மாறினார்கள்.

இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கையில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.


முஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது.
ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்கள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்.



ஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.



ஒரு குடும்பத்தலைவனிடம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும் பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும்பத்தை வழி நடத்த அது உத்வும். நபி இபுறாகீம் (அலை) அவர்களிடம் உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.



எங்கள் இறைவனே! நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு! கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)



பிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான்.



பெற்றோர் பிள்ளை உறவு

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் கேட்டு பெற்ற வரம் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள். பிள்ளை தந்தையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் இந்தக் குடும்பமே முன்னுதாரணம்.

தந்தையின் கோபத்தில் இறைவனின் கோபம் உள்ளது. தந்தையின் பொருத்த்த்தில் இறைவனின் பொருத்தம் உள்ளது என்பது நபிமொழி

தந்தையின் பொருத்த்த்தை பெற்றதாலே நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் இறைவனின் பொருத்த்த்தை பெற்றார்கள். தந்தை தன் கனவை மகனின் மீது திணிக்கிறார். என்று பேச்சுக்காக ஒரு விஷயத்தை சொல்வோம். ஆனால் இங்கு மகன் தன் தந்தையின் கனவை புரிந்து கொண்டு தன் தந்தையின் கனவை நினைவாக்க கடைசி வரை தந்தைக்காக ஒத்துழைப்பு தந்து தன் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

ஒரு குடும்பத் தலைவனின் கனவனுக்கு ஒத்துழைப்பு தந்தது மகன் மட்டுமல்ல. மனைவி ஹாஜரா (அலை) அவர்களும் தான். தன் கணவனின் கனவை நிறைவேற்ற செல்லும் மகனை அலங்காரப்படுத்தி அனுப்பினார்கள். ஒரு குடும்பத் தலைவனுக்கு கட்டுப்பட்ட குடும்பமே குடும்பவியலுக்கு உதாரணமாக வந்துள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்றைய குடும்பவியல்

தற்போது ஒரு வழக்கம் வந்துகொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தகாத உறவுகளாலும் தவறான புரிதலாலும் விவாகரத்தும் குடும்ப்ப் பிரச்னைகளும் எல்லை மீறி செல்கிறது. எனவே (Pre Counseling) என்று திருமணம் நடைபெறுவதற்கு முன்பு ஒரு கவுன்ஸிலிங் வகுப்பு எடுக்கப்படுகிறது. பின்பு திருமணம் நடந்து முடிந்த பிறகு ஒரு கவுன்சிலிங் நடைடிபெறுகிறது. அதாவது திருமணத்திற்கு முன்பு திருமணம் என்றால் என்ன? அந்த உறவின் முக்கியத்துவம் என்ன? என்ன என்ன பிரச்னைகள் ஏற்படலாம்? போன்ற வகுப்புகள் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பின்பு இந்தப் பிரச்னைகளையெல்லாம் எப்படி கையாள்வது? போன்ற வகுப்புகள் நடைபெறுகிறது. இதுபோன்ற வகுப்புகள் குடும்பவியலை சரியாக கையாள வழிவகுக்கும் என்று சந்தோஷப்பட்டாலும், குடும்பவியலுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு சமூகம் சீரழிந்துவிட்டதை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மத்தியில் ஏற்பட்ட இடைவெளியே காரணம். நம் பண்பாட்டையும் குடும்பவியலையும் சரியாக பிள்ளைகளிடத்தில் கொண்டு சேர்க்காத்தே இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதை இந்த்த் தலைமுறையோடு ஒழித்துவிட்டு நம் பிள்ளைகளை படிப்பில் கவனம் செலுத்துமாறும் சம்பாத்தியத்தில் கவனம் செலுத்துமாறும் எப்படி அழுத்தம் கொடுக்கிறோமோ அதே போல் ஒழுக்கம், குடும்பவியல் சார்ந்த பாடங்களை கற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துவோம்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் செயல்களையும் அவர்களின் குடும்பங்களின் செயல்களையும் நாம் இன்று வணக்கமாக எடுத்து செய்கிறோம் என்றால், அதற்கு காரணம் இறைபொருத்த்த்தொடு சேர்ந்த குடும்பவியல் இருந்த்தாலே. குடும்பவியல் என்பது இறைவனோடு கலந்த விஷயம். இறைவனை தேடுபவர்கள் குடும்பத்தில் கவனம் செலுத்தட்டும். அதுவே இறைவனிடம் சென்றடையச் செய்யும்.

No comments: