அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 20 August 2015

இஸ்லாம் கூறும் மனிதநேயம்




நம் அண்டை வீடு தொடங்கி அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு விபத்தால், கொடிய நோயால், உள்நாட்டுப் போரால், இயற்கை சீற்றத்தால், ஏதேனும் பாதிப்பு என்கிற போது சாதி, மதம், இனம், நிறம் மற்றும் மொழிப் பாகுபாடுகளை தாண்டி நேரடியாக சென்று உதவ வேண்டுமென நம் உள்ளத்தில் ஏற்படுகிற அனுதாபங்களும், கவலைகளும் இயற்கையாகவே இறைவன் நமக்கு வழங்கிய உணர்வுகளாகும்.

ஆனால்..? இன்றோ மனிதநேயம் கடைசரக்காகிப் வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காரணம், மனிதநேயத்தின் அவசியத்தை சொல்வதற்கு இன்று மனிதநேய மாநாடுகள் தேவைப்படுகிறது. இல்லையேல் வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச மனிதநேய தினத்தின் வழியாக மனிதநேயம் என்று ஒன்று உள்ளதுஎன்கிற நமக்கு நினைவூட்டல் தேவைப்படுகிறது.
ஏன்? இந்த அவலநிலை? இயற்கையாக இறைவன் தந்துள்ள மனிதநேய உணவுர்கள் அற்ற மிருகங்களாகிப் போய்விட்டாதா? மானிட உலகம். ஒன்றும் புரியவில்லை.

படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் குடுமபத்தை சார்ந்தவை. அவர்களில் மிகச் சிறந்தவர்  யார் என்றால் மனித சமுதாயத்தை எவர் நேசிக்கின்றாரோ, நன்மை புரிகின்றாரோ அவர் தான். அவரையே இறைவன் நேசிக்கின்றான் என்றார்கள் நாயகம்.

மனிதநேய மிகு உதவிகள் தான் உலகம் இருப்பதற்கும், இயங்குவதற்குமான சாட்சிகளாகும்.  மனிதநேயமும், மனிதாபிமானமும் ஆன்மீகப் பாதையின் படிக்கட்டுகளாகும். பிறரின் சிறு அசௌகரியத்திற்கும் காரணமான அத்துனை செயல்களும் மனிதநேயத்தை தகர்க்கிற காரியங்கள் என்கிறது இஸ்லாம்.

நடைபாதையில் கிடக்கின்ற சிறிய கற்களை, முற்களை, எலும்புகளை, கண்ணாடி துண்டுகளை அகற்றுவது போன்ற மனிதநேயமிகு உதவிகள் ஒரு முஸ்லிம் ஏற்றுள்ள இறை நம்பிக்கை என்கிற மரத்தின் தாழ்வான கிளையாகும் என நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

தான் சந்திக்கின்ற ஒவ்வொரு இஸ்லாமியனிடமும் அவன் தனக்கு பிடிக்காத எதிரியானலும் கட்டாயம் சொல்ல வேண்டிய இஸ்லாமிய முகமனாக மார்க்கம் கற்றுத் தந்துள்ள இரு வார;த்தைகளின் உள்ளார்ந்த பொருள் உலக மனிதநேயத்திற்கான 'தாரக மந்திரங்கள் என சொல்வது மிகையாகாது.
காரணம், சுய விருப்பமின்றி தன் எதிரியைப் பார;த்தும் கூட நீ இறை அருள் பெற்று நிம்மதியோடு வாழ்க - என பொருள்பட அமைந்துள்ள 'அஸ்ஸலாமு அலைக்கும்'; 'வஅலைக்கும் ஸலாம்' என்கிற இஸ்லாமிய முகமன்கள் மானுட உலகிற்கு மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்ற சுலோகங்களாகும்.

திருடினால் கைவெட்ட வேண்டும். விபச்சாரம் (திருமணமானவர்) செய்தால் கல் எறிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணை அவதூறாக இட்டுக்கட்டினால் சாட்டையடி கொடுக்க வேண்டும் என உலகத்தில் ஒரு முஸ்லிம் செய்கிற குற்றங்களுக்கு அதன் தராதரத்திற்கு ஏற்றாற் போல் கடுமையான தண்டனைகளை   இஸ்லாம் விதித்துள்ளதின் அடிப்படை காரணம்..?
மனிதநேயம் மறந்தும் இழந்தும் ஒருவனின் உயிர் தொடங்கி அவனின் உடமைகளுக்கும், உணர்வுகளுக்கும் ஏற்படுத்துகின்ற கலங்கமும் இழப்புகளும் தான் காரணமாகும்.
நாளை மறுமையில் இறைவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் நடைபெறும் உரையாடல் குறித்து பெருமானார் (ஸல்) அவர;கள் சொன்னார்கள். என் அடியானேநான் உன்னிடம் பசியில் உண்ண உணவு கேட்டேன். தாகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன் என்கிறான் இறைவன்.
உடனே  இறைவாநீ பசித்திருந்தாயா? நீ தாகித்திருத்திருந்தாயா? அதன் நிமித்தம் என்னிடம்  நீ கேட்டாயா? என ஆச்சரியத்தோடு வினவுவான் அந்த அடியான்.
ஆம்இன்ன ஏழையான அடியான் பசியில் தாகத்தில் உணவு வேண்டி உன் வீட்டு வாயற்படியில் நின்றானே. அவன் கேட்ட ஆகாரத்தை நீ வழங்கியிருந்தால் என் தரிசனத்தை அதாவது என் முழுபொருத்தததை நீ பெற்றிருப்பாயே என்கிறான் இறைவன். ஆக மனிதநேயமிகு செயல்கள் வெறும் உதவியல்ல. அது ஓர் இறைப்பணியாகும்.

நாயகம் (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறைவன் வானவர;களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக குர்ஆனின் முதல் வசனத்தை இறக்கினான் என்கிற சரித்திரம் நமக்கு தெரியும்.

அப்போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வானுக்கும் பூமிக்குமாக நின்றிருந்த தோற்றத்தில் பிரம்பித்து ஒரு வித அச்ச உணர்வோடு இல்லம் திரும்பிய நாயகத்திடம் கதீஜா (ரலி) அவர்கள் சொன்ன வார;த்தைகள் மிகுந்த கவனத்தோடு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.
என தருமை கணவரேஉறவுகளை அரவணைக்கிறீர், சிரம்மத்தில் இருப்பவர்களை ஆதரிக்கிறீர், விருந்தினர்களை உபசரிக்கிறீர், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிகின்றீர்; இப்படி பிற மனிதர்களுக்கு பல உதவிகளை செய்கிற உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான் என அத்தருணத்தில் கதீஜா (ரலி) அவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகளாகும் இது.

ஆக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமானாரைப் பின்பற்றி மதவாதியாக இருப்பதோடு ஒரு மனித நேயவாதியாகவும் இருப்பது கட்டாயம் என்பதையும், பிறருக்கு மனிதாபிமானத்தோடு நாம் செய்கிற உதவிகளின் காரணமாக நமக்கு இறைவனின் உதவி என்றும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்கிற புரிதலையும் கதீஜா (ரலி) அவர்களின் ஆறுதல்கள் நமக்கு சொல்கிறது.

மனிதநேயமும்; மனிதாபிமானமும்; சில வேளைகளில் ஒருவனின் மனமும், மதமும் மாறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்ட சரித்திரம் இஸ்லாத்தில் நிறைய உண்டு.
தம்மீது குப்பைப் கொட்டிய மூதாட்டியை தேடிச் சென்று நலம் விசாரித்த நேயத்தை நாம் பெருமானாரிடமிருந்து மட்டுமே முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியும்.

ஒருசமயம் ஒரு மனிதர் மதினாவிலுள்ள மஸ்ஜிது நபவி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார் அதைப் பார்த்துவிட்ட நபித்தோழர்கள் அவரை உடனே வெளியேற்ற முயன்றனர். ஆனால் நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களைத் தடுத்து அவருடைய தேவை நிறைவேறிய பின் அவரை வெளியேற்றி அதைச் சுத்தம் செய்துவிடுங்கள் என்றுக் கூறினார்கள்.

பரிவோடு  அநாதையின் தலையை தடவுவதாலும், ஏழைகளுக்கு உணவளிப்பதாலும் இரக்கமற்று இறுகிப் போன அரக்க மனமும் இளகிப் போகும்என்றார்கள் நாயகம் (ஸல்).
மனிதநேயத்தை மறந்தவர்களுக்கு இறைவன் தருகிற தண்டனை என்ன தெரியுமா? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாலைவனத்தில் வசிக்கும் ஒரு முஸ்லீம் தன்னிடம் மீதமுள்ள தண்ணீரை அவ்வழியே பிரயாணம் செய்யும் தாகித்த மனிதனுக்கு தர மறுத்தால், மறுமையில் அவனுக்கு இறைதரிசனம் என்கிற அருட்பெரும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும் என்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

உண்டான துக்கத்தால் சற்று வேகப்பட்டு அழுகிறவனை பார்க்கும் நேரத்தில், ஏதோ நமக்கு ஏற்பட்டத்தைப் போல தன்னிலை மறந்து கண்களும் கலங்கி இருகரமேந்தி இறைவாஎன்று பிரார்த்தனை செய்ய எத்தனிக்கின்ற நிலை, நாம் மனித நேயத்தை மறந்தாலும், மறுத்தாலும் அது நம் உடலோடும் உயிரோடும் கலந்துபோனது என்பதை ஆத்மார்தமாக உணர்த்துகிறது.

எனவே சாலையில் அடிப்பட்டு கிடப்பவனைப் பார்த்துவிட்டு நமக்கேன் வம்பு என்று ஓதுங்கிவிடாமல் அனைவரிடமும் அன்பாக சகோதரத்துடனும், இரக்கத்துடனும் நடப்போமாகஅதன் வழியாக மனிதநேயத்தை மலரச் செய்வோமாக

மனித நேயத்தை மறக்கடிக்கும் நவீனங்கள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பொதுத் தளங்கள் வந்த பிறகு, மனித நேயம் குறைந்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி, ஒருவனின் தந்தையின் தந்தை இறந்துவிடுகிறார். ஆனால் இறந்த மைய்யித்தோடு ஒரு புகைப்படத்தை எடுத்து அதை பதிவிடுகிறார்.
ஒரு விபத்து ஏற்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர் இரத்தம் சொட்ட சொட்ட துடித்துக் கொண்டிருக்கிறார். உடனே முதலுதவி செய்யாமல், அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

இதுபோன்று ஏராளமான நிகழ்வுகள். தங்களுடைய பதிவிற்கு லைக்கையும் ஷேரையும் பெறுவதற்காக மனித நேயமில்லாமல் நடந்து கொள்ளும் அளவிற்கு நவீனங்கள் இவர்களின் உணர்வுகளை சாகடித்துவிட்டது.

பொதுத் தளங்களை திறந்தாலே இதுபோன்ற விடயங்களைத்தான் அதிகமாக பார்க்கமுடிகிறது. அவரவர்களின் வக்கிர குணங்களைத் தான் எடுத்துக் காண்பிக்கிறது. மனித நேயத்தை வகுப்பெடுத்து சொல்லிக் கொடுக்க முடியாது. அது உணர்வோடு சம்பந்தப்பட்டது. இந்த விளம்பர உலகில் மனித நேயமும் இறக்கமும் கூட ஃபேஷனாகிவிட்டது.

மனித நேயம் என்பது பிற மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செய்லபடுவதே. ஒரு கூட்டம் ட்ராஃபிக் நெருக்கடியிலும் ஆம்புலன்ஸின் அலறல் சத்தத்தை கேட்டவுடன் வழிவிடுகிறது. அதே சமயம் மற்றொரு கூட்டம் ட்ராஃபிக் சிக்காமல் இருக்க ஆம்புலன்ஸிற்கு பின்னாலே செல்கிறது. பொதுநலவாதிகளை ஆம்புலன்ஸிற்கு முன்னால் பார்க்கலாம். சுயநலவாதிகளை ஆம்புலன்ஸிற்கு பின்னால் பார்க்கலாம்.

உறவினர்களுக்கே இல்லாத மனிதநேயம்

ஜகாத், ஃபித்ரா போன்ற விஷயங்களில் உறவினர்களுக்கே முன்னுரிமை. ஆனால் கஷ்டப்படுபவர்களுக்கு மூன்றாவது மனிதர்களிடத்தில் கூட கடன் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் உடன் பிறந்தவர்களிடத்திவோ அல்லது உறவினர்களிடத்திலோ கேட்கத் தோன்றுவிதில்லை. அவர்களோ பெருமைக்காக ஊர் உலகுக்கே உதவி செய்வார்கள். ஆனால் மறைவாக கஷ்டப்படும் உறவினர்க்கு செய்ய மாட்டார்கள். பிறரின் கஷ்டத்தை விட அவரவர்களின் சுக போகங்கள் தான் முக்கியமாக தெரிகிறது. இதைத் தாண்டி ஜகாத் கொடுப்பவர்கள், ஒரு 50 பேருக்கு வேஷ்டி சட்டைகளை எடுத்து கொடுப்பார்கள். ஆனால் 50 வேஷ்டிகள் மற்றும் சட்டைகளின் தொகையை ஒருவருக்கே மறைவாக கொடுத்து உதவி புரிய மறுக்கிறார்கள். 50 பேருக்கு கொடுத்தால் ஊருக்கே தெரியும். ஆனால் ஒருவருக்கு கொடுத்தால், யாருக்கு தெரியும். மனித நேயம் என்பது எதையும் எதிர்பார்க்காமல் வரும் உணர்வு.


(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.



அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ர­லி) அவர்களிடம் உத்தரவிட பிலால் (ர­லி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது விட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ''மக்களே! உங்களை ஒரே ஆன்மாவி­ருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்'' எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள ''நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று தாம் எதை முற்படுத்தியுள்ளோம் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்'' எனும் (59:18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். 



அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளி­ருந்தும் வெள்ளிக் காசுகளி­ருந்தும் ஆடைகளி­ருந்தும் ஒரு ஸாஉ கோதுமையி­ருந்தும் ஒரு ஸாஉ பேரீத்தம் பழத்தி­ருந்தும் தர்மம் செய்தார்கள்.


அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டு இருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்து விட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் கண்டேன்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர­லி) நூல்: முஸ்லி­ம் (1691)


மனித நேயத்தை உணருவோம்

No comments: