அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Wednesday 26 August 2015

ஹஜ்ஜின் வணக்கங்கள்



இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐந்தாம் கடமை ஹஜ் எனும் புனித யாத்திரை. வசதி வாய்ப்புள்ளவர்கள் சரி வர பிற கடமைகளை செய்து முடித்துவிட்ட பிறகு ஹஜ் எனும் புனித யாத்திரையை நிறைவேற்றுவார்கள்.

ஹஜ் என்றால் என்ன? 


இது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். மக்கா சென்று வர பொருள் வசதியும், உடல் சக்தியும் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு தடவை புனித மக்கா சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவது கட்டாய கடமையாகும். 



ஹஜ் யார் மீது கடமை?

1. முஸ்லிமா இருத்தல்.
2. பருவமடைந்திருத்தல்.
3. சித்த சுவாதீனமாயிருத்தல்.
4. சுதந்திரமாயிருத்தல்.
5. வழியில் அச்சம் அற்றவனாக இருத்தல்.
6. ஒரு பெண்ணுக்கு தகுந்த துணை இருத்தல் வேண்டும்.
7. சரீர சுகத்துடன் இருத்தல்.
8. போய் சேருவதற்கு தகுந்த காலம் இருத்தல்.

ஹஜ்ஜின் பர்ளுகள் என்ன?

1. இஹ்ராம் கட்டுதல்.
2. துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் இரவு சிறிது நேரம் முஜ்தலிபாவில் தங்குதல்.
3. தவாபு செய்தல்.
4. ஷபா, மர்வா என்ற இடங்களுக்கு தொங்கோட்டம் ஓடுதல்.
5. ஆண்கள் தலையின் முடியின் மூன்றுக்கு குறையாமல் சிரைத்து கொள்ளுதல், பெண்கள் கட்டையாக்கி கொள்ளுதல்.
6. மேற்கூறப்பட்ட பர்ளுகளை ஒழுங்கு முறையாய் நிறைவேற்றுதல். -


இஹ்ராம் கட்டியவர் செய்யக்கூடாதவை என்ன?


1. உடலுறவு கொள்ளுதல்.

2. தாடிமயிர், தலைமயிர் ஆகியவற்றில் என்னை தேய்தல்.
3. நிக்காஹ் செய்தல்.
4. வாசனை திரவியங்கள் பூசுதல்.
5. சவரம் செய்து கொள்ளல்.
6. நகத்தை வெட்டுதல்.
7. ஆண்கள் தலைப்பாகை, தொப்பி அணிதல்.
8. பெண்கள் முகத்தில் சிலதை மறைத்தல்.
9. வேட்டையாடுதல்.


ஹஜ் , உம்ரா செய்யும் முறை


ஹஜ் செய்வதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. கிறான் முறை. இப்றாத் முறை என வேறு இரு வழிகளும் உள்ளன.

ஷவ்வால் துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய ஹஜ்ஜுடைய மாதங்களில் ஹஜ்ஜுக்கான உம்ராவை நிறைவு செய்து அதே கால இடைவெளியில் ஹஜ்ஜையும் நிறைவேற்றுவது ‘தமத்துஉ’ முறை எனக் கொள்ளப்படும். இந்த முறைப்படி ஹஜ் செய்பவர் கடமையை நிறைவு செய்ய ஒரு ஆடு குர்பான் கொடுக்க வேண்டும்.

உம்ராவையும் ஹஜ்ஜையும் நிறைவு செய்வது பற்றி அவதானிக்கலாம். விமானத்தில் நிய்யத்து வைப்பது நல்லதாகும். இதனால் இஃறாமை முறிக்கும் காரியங்களிலிருந்து விலகிக் கொள்ள முடியும். அதற்காக விமானத்தில் சொல்லித் தருகின்றார்கள் முன்னதாக நிய்யத்து வைப்பவர் இஃறாமுடைய சட்ட திட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். நீண்ட நேரம் இஃறாமுடன் இருப்பது இலகுவாவதற்கு இது ஒரு முறையாகும். தத்தமது ஊரைவிட்டும் புறப்பட்ட வேளையிலும் நிய்யத்து வைக்க முடியுமென்பது இதிலிருந்து அறிய முடிகின்றது.

உம்றாவுக்கு நிய்யத்து வைக்கு முன் குறித்த நறு மணம் பூசிக் கொண்டு, இஃறாமுக்குரிய உடையை அணிந்து இரண்டு றகாஅத் சுன்னத்தான தொழுகையை நிறைவேற்றிக் கொண்டு உரிய நிய்யத்தை (அல்லாஹும்ம லப்பைக் உம்றதைன்) என்று சுருக்கமாகக் கூறி மனதில் தரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இஃறாம் உடை என்பது ஆண்களுக்கு தைக்கப்படாத இருதுணிகளாகும். வெள்ளை நிறமாக இருப்பது சுன்னத்து. பெண்களுக்கு இஸ்லாம் அனுமதிக்கும் எந்த உடையும் ஆகுமானதாகும். பெண்கள் மணிக்கட்டுவரை கையையும், அத்துடன் முகத்தையும் மறைக்கலாகாது. ஆண்கள் ஒருதுணியை உடுத்து மற்றதை தோளில் போட வேண்டும். நிய்யத்து வைத்தது முதல் இஃறாமை முறிக்கும் கருமங்களைப் புரியாது தல்பியாவை ஓதிக் கொள்ள வேண்டும்.

தொங்கோட்டம் “றம்லு” மூன்று முறை ஆண்களுக்குப் போதுமாகும். பெண்களுக்கு றம்லு. சுன்னதாகாது. முடியுமானால் அஸ்வத்தை. முத்தமிடலாம். அல்லது தொட்டு முத்தமிடலாம். முடியாவிடின் கையை உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று கூறவும். றுக்னுல்யமானி மூலையிலுள்ள கல்லை வாய்ப்புக் கிடைத்தால் தொட்டு முத்தமிடலாமே தவிர அதை முத்தமிடலாகாது. றப்பனா ஆதினா என்ற துஆவை ஓதுவது சுன்னத்து.
அஸ்வத்கல்லை அடையும் போது அல்லாஹு அக்பர் என உரைக்கவும். இதன்பின் இரண்டு றக் அத்து சுன்னத்து தொழுது ஸம் ஸம் நீரை அருந்தி துஆவை ஓத வேண்டும். தொழும் போது குல்யாவையும், குல்ஹுவல்லாஹு அஹது என்பதையும் இரு றகஅத்திலும் அல்ஹம்துக்குப் பின் ஓதுவதும் சுன்னத்தாகும். மகாமு இப்றாஹீம் முன் நின்று தொழுவது நல்லது.

ஸஃயு ஓடும் போது பச்சை அடையாளமிடப்பட்ட இடைவெளியில் ஆண்கள் தொங்கோட்டம் ஓட வேண்டும். பெண்களுக்கு அது சுன்னத்தாக மாட்டாது.

ஏழுமுறை ஓடி முடித்து கஃபாவை நோக்கி துஆ ஓதியபின் தலை முடி களைந்து கொள்ள வேண்டும். ஆண்கள் மொட்டை அடிப்பது நல்லது. ஆனால் பெண்கள் முடியின் நுணிகளைக் கத்தரிப்பது போதுமானதாகும். இதுவரை குறிப்பிட்ட 1. இஹ்றாம் கட்டல், 2. தபாவு, 3. சயீ, 4. முடிகளைதல், 5. இந்த ஒழுங்குமுறை ஆகிய ஐந்து முக்கிய கடமைகளும் உம்றாவுக்குரியன.

ஹாஜியின் சிறப்பு. ஹஜ்ஜுக்குப் புறப்படும்போது மற்றவர்களின் துஆவை வேண்டுகின்ற ஹாஜி, தன் ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பும்போது அவருடைய துஆவிற்காக மற்றவர்கள் காத்திருக்கும் நிலைக்கு உயருகிறார்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ (بخاري)


உளத்தூய்மையுடன் கூடிய ஹஜ்ஜுக்கு மட்டுமே இந்தச் சிறப்பு கிடைக்கும். ஹஜ்ஜில் உளத்தூய்மை மிக அவசியம்.
ஹஜ் கடமையைப் பற்றி கூறப்படும் வசனம் லில்லாஹி என்று தான் துவங்குகிறது.

உளத்தூய்மை இல்லாமல் ஹஜ் செய்பவர்களின் எண்ணிக்கை கடைசி காலத்தில் பெருகும் என்பதைப் பற்றியும்


وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا (97ال عمران) عن أنس رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم يأتي على الناس زمان يحج أغنياء الناس للنزاهة وأوساطهم للتجارة وفقراؤهم للمسألة وقراؤهم للسمعة والرياء (كنز العمال)


தன்னுடைய அமலைப்பற்றி தானே பெருமைப்பட்டுக் கொள்வது மனிதனை நாசமாக்கும் செயல்களில் ஒன்றாகும்


عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثٌ مُهْلِكَاتٌ شُحٌّ مُطَاعٌ وَهَوًى مُتَّبَعٌ وَإِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ، وَثَلَاثٌ مُنْجِيَاتٌ خَشْيَةُ اللهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ، وَالْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَكَلِمَةُ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ (بيهقي)


ஹாஜியிடம் நமது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற ஆதரவும், அதே நேரத்தில் நம்முடைய ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆகி விடுமோ என்ற அச்சமும் இருக்க வேண்டும். இத்தகையவர் தன் அமலைப் பற்றி பெருமைப்பட மாட்டார்

No comments: