அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 10 July 2014

சுகாதாரம் சுகம் தரும்

ள்ளத்தை பரிசுத்தமாக வைத்துக்கொள்வது  இஸ்லாத்தில் மிகுந்த கவனம்செலுத்தப்படவேண்டிய விஷயம்அது போல உடலையும் பரிசுத்தமாக வைதுக்கொள்வதும் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட விஷயம்நாகரீகத்தின் உச்சத்தில் வாழும் மக்களுக்கு கூட சுத்தத்தை பற்றி பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

சுத்தம் ஈமானின் ஒரு அங்கம் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் வலியுறுத்துகிர அளவுக்கு சுத்தத்தின் மேன்மை இஸ்லாத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.

மக்கள் விளங்கும் சாதாரன சுத்தத்தை பற்றி மட்டும் அல்லசுத்தத்தை சுத்தப்படுத்தவேண்டும் எனவும் இஸ்லாம் கூரியது.
சுத்தப்படுத்தும் தண்ணீர் மூன்று வகை. 1. அசுத்தமானது  2. சுத்தமானது  3 மிக சுத்தமானது(தானும் சுத்தமாக இருந்து மற்றதை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது)
இப்படி சுத்தப்படுத்தும் தண்ணீருக்கு தரம் பிரித்து மூன்றாம் வகை தண்ணீரை கொண்டு தான் சுத்தப்படுத்தமுடியும் என்ற கட்டளையை போட்ட மார்க்கம் இந்த மார்க்கம் மட்டும்  தான்.

பாலைவனத்தில் வாழ்பவர்களுக்கு சுத்ததைப் பற்றி என்ன தெரியும்?. ! என்றஅழுத்தமான கேள்விக்கு பின்னணியில் சுத்தத்திற்கு இவ்வளவு முக்கியதுவம் கொடுத்த முஹம்மது நபியை பார்த்து இந்த உலகம் வியக்குகிறது.

அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களூக்கு வஹியைவழங்கினான் சில காலங்கள் வஹி வரவில்லை சில மாதங்களுக்குப் பிறகு அல்லாஹ் நாயகத்திற்கு இறை செய்தியை எத்தி வைக்கும் கட்டளையை சொல்லிக்காட்டும் போது சுத்தத்தை பிரதானப்படுத்தி அல்ல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.

يَا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ (3) وَثِيَابَكَ فَطَهِّرْ (4) وَالرُّجْزَ فَاهْجُرْ (5)
உங்கள் ஆடைகளை பரிசுத்தப்படுத்தி கொள்ளுங்கல் மேலும் அசுத்தங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்எழுந்து மார்க்க செய்தியை எத்தி வையுங்கள் என்ற இறை கட்டளைக்கு அடுத்து அல்லாஹ் சுத்ததை பற்றி சொல்கிறான் என்றால் சுத்தம் உண்மையில் மிகுந்த கவனம் செலுத்தப்ட வேண்டியவை.

சுத்தம் பேணவேண்டிய விஷயத்தில் இஸ்லாமியர்கள் எங்கு கவனம் குறைந்து விடுவார்களோ என்ற காரணத்தினால் கூட சுத்தத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம்வழங்கப்பட்டிருக்கலாம். சுத்ததை இஸ்லாம் சில நேரங்களில் கட்டாய கடமையாக்கி வைதிருக்கிறதுசில நேரங்களில் சுன்னத் என்றும் சில நேரங்களில் முஸ்தஹப்பு என்றும் அமைக்கப்பட்டிருக்கிறதுஇந்த வகையான் சுத்தத்தை நாம் உழூ குளிப்பு என வரையருக்கிறோம்
مسند أبي يعلى- مشكول (1/  357، بترقيم الشاملة آليا)
 عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم ، قَالَ : إِنَّ اللَّهَ طِيبٌ يُحِبُّ الطِّيبَ ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ ، كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ ، جَوَادٌ يُحِبُّ الْجُودَ ، فَنَظِّفُوا بُيُوتَكُمْ ، وَلا تَشَبَّهُوا بِالْيَهُودِ الَّتِي تَجْمَعُ الأَكْنَافَ فِي دُورِهَا
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிரார்கள்அல்லாஹ் சுத்தமானவன் சுத்ததை விரும்பிகிறான்யூதர்கள் குப்பைகளை வீடுகளில் சேர்ப்பதை போல முஸ்லிம் இருக்க கூடாது என்றும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும்  நாயகம் நவின்றார்கள்அசுத்ததை ஷைத்தான் தான் விரும்புவான் அது அவன் அடியாளமும் இருப்பிடமும் கூட என்பதை நாம் விளங்க வேண்டும்.
المستدرك على الصحيحين للحاكم (1/  258)
عن زيد بن أرقم قال : قال رسول الله صلى الله عليه و سلم : إن هذه الحشوش محتضرة فإذا أحدكم دخلها فليقل : أعوذ بك من الخبث و الخبائث
ஷைத்தான்களும் ஜின்னுகளும் வந்து போகும் இடங்கள்என நாயகம் கூறி அங்கு ஓத வேண்டிய துவாவையும் சொல்லிகொடுத்தார்கள். أعوذ بك من الخبث و الخبائث
குரானில் அல்லாஹ் சிலரை பற்றி தான் குறிப்பிட்டு புகழ்வான்குரான் சில நபர்களை புகழ்ந்தால் அல்லாஹ் புகழ்வதும் முஸ்லிம் முமீங்கள் புகழ்வதை போல.அத்தகைய நபர்களை அல்லாஹ் கூருகிறான்.
{لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ (108) } [التوبة: 108، 109]
சுத்ததை விரும்பும் மக்கள் இருக்கிறார்கள் அல்லாஹ் அவர்களை விரும்புகிறான் என்ற இவ்வசன கருத்து சுத்தமாக இருப்பவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
அத்தகைய சுத்தம் சிறுநீர் கழிக்கும் போது தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுதினார்கள் என்பது தான்.
وأنس بن مالك أن هذه الآية لما نزلت { فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْ } قال رسول الله صلى الله عليه وسلم : « يا معشر الأنصار إن الله قد أثنى عليكم خيراً في الطهور ، فما طهوركم هذا؟ قالوا : نتوضأ للصلاة ونغتسل من الجنابة ، قال : فهل مع ذلك غيره؟ قالوا : لا ، غير أن أحدنا إذا خرج إلى الغائط أحبّ أن يستنجي بالماء ، قال : هو ذاك فعليكموه »
அசுத்தமான் வீடுகளில் மலக்குமார்கள் கூட நுழைய விரும்புவது கிடையாது.
المعجم الأوسط لأبو القاسم الطبراني (2/  312)
 سمعت عبد الله بن يزيد يحدث عن النبي صلى الله عليه و سلم قال لا ينقع بول في طست في البيت فإن الملائكة لا تدخل بيتا فيه بول ينقع ولا تبولن في مغتسلك
சிறுநீர் தேக்கி வைக்கப்படும் வீடுகளில் மலக்குமார்கள் நுழைவது கிடையாது.
காரணம் அது ஷைதான்களின் இருப்பிடம் மலக்குமார்களுக்கு அங்கு வேலை கிடையாது.
சுத்தமில்லாதவனுக்கு மண்ணறையில் கடுமையான வேதனை உண்டு.
السنن الكبرى للنسائي (1/  40)
عن جسرة قالت حدثتني عائشة قالت دخلت
علي امرأة من اليهود فقالت إن عذاب القبر من البول فقالت كذبت
فقالت بلى وإنا نقرض منه الجلد والثوب فخرج رسول الله صلى الله
عليه وسلم وقد ارتفعت أصواتنا فقال ما هذا يا عائشة فأخبرته بما
قالت فقال صدقت فما صلى بعد يومئذ إلا قال في دبر الصلاة رب جبريل
ورب ميكائيل واسرافيل أعذني من حر النار وعذاب القبر
ஆயிஷா ரழியல்லாஹ் அவர்களிடம் ஒரு யூத பெண்மனி " மண்ணறையின் வேதனை சிறுநீர் மூலமாக ஏற்படுகிறதுஎன கூறினாள்அதை ஆயிஷா ரழியல்லாஹு அவர்கள் மறுத்தார்கள்அதற்கு அப்பெண் நாங்கள் எங்கள் ஆடைகளில் தோல்களில் சிறிநீர் பட்டுவிட்டால் அதை நாங்கள் துண்டிப்போம் என கூறினாள்இப்படியே சில சல சலப்புகள் இருக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹு வசல்லம் அவர்கள் வந்தார்கள்இந்த நிகழ்ச்சியை கேட்டுவிட்டு அந்த பெண் உண்மை சொன்னாள் என நாயகம் அங்கீகரித்தார்கள் எனில் சுத்தம் இல்ல்லாத நிலை மண்ண்றை வேதனையை உண்டாக்கும்.
السنن الكبرى للنسائي (1/  477)
 عن بن عباس قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستبرئ من بوله وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها نصفين ثم غرز في كل قبر واحدة فقالوا يا رسول الله لم صنعت هذا قال فلعلهما أن يخفف عنهما ما لم تيبسا

சுத்தமாக இரவில் தூங்குவதால் மலக்குமார்கள் நமக்கு துவா செய்கிறார்கள்.
المعجم الكبير الطبراني (12/  446)
 عن ابن عمر رضي الله عنه Y قال قال رسول الله صلى الله عليه و سلم : ( طهروا هذه الأجساد طهركم الله مامن عبد بات طاهرا إلا بات في شعاره ملك كلما تقلب من الليل ساعة قال الملك : اللهم اغفر عبدك كما بات طاهرا )
சுத்தததை  இஸ்லாம் பல அமைப்புகளில் நமக்கு விளக்கி இருக்கிறது.

பல் சுத்தத்தை பற்றி பல இடங்களில்கூறிய இஸ்லாம்
المصنف لإبن أبي شيبه (1/  179)
عن عائشة أن النبي صلى الله عليه وسلم كان لا يرقد ليلا ولا نهارا فيستيقظ إلا تسوك قبل أن يتوضأ .


உடைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது
عَنْ جَابِرٍ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرًا فِي مَنْزِلِنَا فَرَأَى رَجُلًا شَعِثًا فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ رَأْسَهُ وَرَأَى رَجُلًا عَلَيْهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يَغْسِلُ بِهِ ثِيَابَهُ (احمد)
பங்கரை தலையிடனும் அழுக்கான ஆடையுடனும் உள்ள ஒருவரை பார்த்த நபி நாயகம் இவர் தலையை ஒழுங்கு படுத்துவதற்க்கு ஒரு சாதனமும் பெறவில்லையா.இவர் ஆடையை துவைப்பதற்கு ஒன்றும் இவருக்கு இல்லாமல் போய்விட்டதோஎன கேட்டார்கள்.

தூங்கி எழுந்தவுடன் கைகளை கழுக வேண்டும்.
سنن الترمذي (1/  19)
عن ابى هريرة عن النبي صلى الله عليه وسلم قال : (إذا استيقظ احدكم من الليل فلايدخل يده في الاناء حتى يفرغ عليها  مرتين أو ثلاثا ، فإنه لا يدرى
اين باتت يده)

சுத்ததை பற்றிய பத்து விஷயங்கள் ஒரு மனிதனின் இயற்கை குணத்திலிருந்து இருக்க வேண்டும்
السنن الكبرى للنسائي (5/  367)
عن عائشة عن رسول الله صلى الله عليه وسلم قال عشرة من الفطرة قص الشارب وقص الأظفار وغسل براجم وإعفاء اللحية والسواك والاستنشاق ونتف الإبط وحلق العانة وانتقاص الماء قال مصعب ونسيت العاشر إلا إن تكون المضمضة

மீசையை குறைப்பதுநகத்தை வெட்டுவதுஇடுக்கு பகுதிகளை கழுகுதல்தாடியை வளர்ப்பதுவாய் சுத்திகரிப்பதுநாசிக்கு தண்ணீர் செலுத்துவதுஅக்குல் முடியை புடுங்குவதுமறைவிட முடியை களைவதுசிறுதொடக்குகளை நீக்குவதுபத்தாவது மறந்துவிட்டேன் எனினும் அது வாய் கொப்ப்ளிப்பதாக இருக்கலாம்.
இவ்வாறு சுத்தத்தை பற்றி பல இடங்களில் இஸ்லாம் கூறிய அறிவுரைகள் நமக்கு ஏராளம்எனவே சுத்தம் இறைவனின் பொருத்தம் எனும் சோறு போடும்.

No comments: