அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 4 June 2015

ரமளானுக்கு தயாராகுவோம்



ம்மை நோக்கி ரமளானுடைய மாதம் வர இருக்கிறது. ரமளானை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா?. ஒரு பரகத்தான மாதம். குர்ஆன் இறங்கிய மாதம் என்று இந்த மாதத்தின் அறிமுகத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நேர்வழியும் உம்மத்தின் தெளிவும் அடங்கிய வேத புத்தகம் இறங்க அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம் இந்த ரமளான் மாதம். இந்த மாதத்திற்கு நாம் தயாராக வேண்டும். 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

صحيح البخاري 1/ 16

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

“நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிபார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்” 

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் புகாரி எண்: 38


எனவே நன்மையை எதிர்பார்த்து நிற்பவருக்கு இந்த மாதம் ஒரு பொக்கிஷம். நன்மைகளை அவரால் கொள்ளையடிக்க முடியும். வாழ்கையின் முகப்பெரிய விமோசனம் என்று அனைவரும் எதிர்பார்க்கும் பாவ மன்னிப்பு இந்த மாதத்தின் பரிசு. அந்த பரிசுகளை பெற நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.



இது ஏனைய மாதங்களை போல இல்லை. இதில் கூடுதல் கவனம் நமக்கு தேவை. அல்லாஹ் மற்ற வணக்களிலும், காலங்களிலும் வழங்காத ஒரு சிறப்பு சலுகைகளை இந்த மாதத்தில் நமக்கு வணங்குகிறான். 


صحيح البخاري 3/ 25

حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي أَنَسٍ، مَوْلَى التَّيْمِيِّينَ: أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள், “ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். 

தொழுகையில் ஷைத்தானின் குழப்பங்கள் உண்டு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நாம் எங்கு சென்றாலும் எல்லா இடங்களிலும் ஷைத்தானின் படைகளும் பட்டாளங்களும் இருக்கின்றன. ஆனால் ரமளானில் அவன் விளங்கிடப்படுகின்றான். அல்லாஹ் நாம் அமல் செய்ய தடையில் ஒரு சூழலை இந்த மாதத்தில் ஏற்படுத்தி தருகின்றான். வேறு எந்த மாதத்திற்கும் இத்தகைய சிறப்புகள் இல்லை.

இமாம் திர்முதி அவர்கள் சில கூடுதல் தகவலுடன் இந்த ஹதீஸை பதிவு செய்கிறார்கள் 

وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ "

மேலும் ஒரு அழைப்பாளர் அழைப்பார் “நன்மையை தேடுபவனே நீ முன்னோக்கி வா மேலும் தீமையை தேடுபவனே நீ (பாவங்களை) குறைத்துகொள்.” அல்லாஹ்வால் நரகத்திலிருந்து (இந்த மாதத்தில்) விடுதலைபெற கூடியவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறே ஒவ்வொரு நாளும் இருக்கும். 

இந்த ஹதீஸில் ஒரு அழைப்பாளர் அழைப்பார் என்பதின் விளக்கம் 

قوت المغتذي على جامع الترمذي 1/ 254

المراد أنه يُلقي ذلك في قلوب من يريد الله إقباله على الخير:

இதன் கருத்து நன்மைகளின் பக்கம் முன்னோக்கி வரவேண்டும் என்று அல்லாஹ் யாரை நாடுகிறானோ அவர்களின் உள்ளங்களில் மலக்குமார்கள் இந்த சிந்தனையை போடுவார்கள். 

நன்மைகளை செய்ய வேண்டும் என்று மட்டும் அல்லாஹ் சொல்லாமல் அதை செய்வதற்கான வாய்ப்புகளையும் சூழல்களையும் அல்லாஹ் நமக்கு அமைத்து தருகின்றான்.இந்த மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாகவும் இந்த மாதத்தை நமக்கு வசதியாகி தந்திருக்கின்றான். 

ஷைத்தானின் மூலம் எந்த குழப்பங்களும் வந்துவிட கூடாது என்பதற்காக அல்லாஹ்  அவைகளை விளங்கிடுகின்றான். 

ஆனால் ஷைத்தான் விலங்கிடப்பட்ட பிறகும் கூட ரமளான் மாதத்தில் சில குழப்பங்களும் மார்க்கம் என்ற பெயரில் நடத்தப்படும் பிரச்சனைகளால் ரமளானின் கண்ணியமே பொய் விடுகின்றது. 

وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ البقرة: 191

குழப்பம் கொலைசெய்வதை விட மிக கடுமையானது என்று அல்லாஹ் சொல்லி காட்டுகின்றான். 

கண்ணியமாக அமல் செய்யவேண்டிய மாதத்தில் கொள்கை, சட்டம் என்று அந்த மாதத்தில் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் உருவாக்கி சண்டையிட்டுகொள்கிறோம். இதனால் அந்த மாதத்தின் கண்ணியம் போய்விடுகின்றது. குழப்பங்களும் பிரச்சனைகளும் நமக்கு வர இருக்கிற நன்மைகளை தடுத்துவிடும். 

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَنَا بِلَيْلَةِ القَدْرِ فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ المُسْلِمِينَ فَقَالَ: «خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ القَدْرِ، فَتَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ، فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ، وَالسَّابِعَةِ، وَالخَامِسَةِ»
صحيح البخاري 3/ 47

உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். 

“லைலதுல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிபதர்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்க புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் “லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்.. அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்” என கூறினார்கள். 

லைலத்துல் கத்ருடைய நாள் என்ன ? என்று நமக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் சண்டையும், பகைமையும் என்று மேல்கண்ட ஹதீஸ் காட்டுகின்றது. குழப்பம்  என்னும் தீயில் குளிர்காய்வதற்கு நினைக்கு கூட்டங்களுக்கும் மத்தியில் சிக்கி நம்முடைய கண்ணியமான ரமலானை வீணாக்கிவிட கூடாது. பிரச்சினைகளால் தங்களின் இருப்பிடங்களை தக்கவைத்து கொள்ள நினைக்கும் மனித எண்ணங்களை விட்டும் நம்மை தூரபடுத்திகொள்ள வேண்டும். 

صحيح البخاري 1/ 16

 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ )} البقرة: 183

இறைஅச்சம் பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நோன்பை கடமை ஆக்கி வைத்திருக்கிறான். எனவே அல்லாஹ் இந்த நோன்பின் மூலம் நாம் அடைய நினைத்த இந்த நோக்கத்தை பெற இந்த ரமலானில் முயற்சி செய்வோம்
المعجم الصغير للطبراني 2/ 156

 عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ , فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ , أَوْصِنِي قَالَ: «عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ فَإِنَّهَا جِمَاعُ كُلِّ خَيْرٍ

அபூசயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ ஒரு நபர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று நான் கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ்வை அஞ்சுவதை பற்றிபிடித்துகொள். ஏனெனில் அது அனைத்து நன்மைகளையும் ஒன்று சேர்க்ககூடியது. 

தக்வா நன்மைகளின் திறவுகோல். அல்லாஹ் நம்மை பார்கிறான் என்ற உணர்வு.

நோன்பின் உண்மையான நோக்கம் தக்வா. நம் பசியினாலும் தாகத்தினாலும் அல்லாஹ்வை திருப்திபடுத்த முடியாது.

அல்லாஹ் சொல்லுகிறான்

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلاَ دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ

குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். 

அது போல அல்லாஹ் நோன்பின் மூலம் நம் பசியை தாகத்தை விரும்புவதில்லை அதன் மூலம் வரும் இறைஅச்சத்தை விரும்புகிறான். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் 
صحيح البخاري 8/ 17

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ وَالجَهْلَ [ص:18]، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»

“பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை” என அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். 

எனவே நம் தக்வாவை அதிகரிக்கும் கருவியாக ரமலான் இருக்கவேண்டுமே தவிர குழப்பங்களும் பிரச்சனைகளும் சங்கமிக்கும் காலமாக இருக்க கூடாது.

ஷார்ட் டெம்பர் என்று சொல்லப்படும் குறுகிய நேரத்தில் கோபம் கொள்ளுபவர் தம் உணர்சிகளை ரமளானில் கட்டுபடுத்த வேண்டும். 
صحيح البخاري 3/ 24

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ "

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். “நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடவேண்டாம். யாரேனும் அவருடம் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் “நான் நோன்பாளி என்று இருமுறை கூறட்டும் என்று அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். 

நூல் புஹாரி எண்: 1894

நோன்பின் நேரத்தில் நம்மின் மீது கோபம் படுபவர் மீது கூட ஒரு நோன்பாளி கோபம் கொள்ளாமல் சுமூகத்தை உருவாக்க வேண்டும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் இந்த அறிவுரை வெளிஉலகத்திற்கு மட்டும் அல்ல. நம் வீட்டிலும் அதை தான் கடைபிடிக்க வேண்டும். 

நோன்பு திறக்கும் நேரத்தில் மனைவு உணவை தாமதபடுத்தினால் சப்தமிடுவதும், கடுமையாக கடிந்து கொள்ளுவதும் நல்ல குணம் அல்ல. அவர்களும் நோன்பு வைத்திருந்தும் நோன்பு திறப்பதற்குண்டான தயாரிப்புகளில் அவர்கள் ஈடுபடுவதை புகலவேண்டுமே தவிர அவர்கள் உள்ளம் புண்படும்படி எதையும் சொல்லுவது கூடாது.  

நோன்பு மக்களுக்கு மகிச்சியை தரும் மாதம். இந்த உலகத்தில் மட்டுமல்ல. நம்மை விட்டும் மறைந்த மூமினான அடியார்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி உண்டு.  எனவே நல்ல அமல்கள் செய்யவும், நல்ல குணங்களை மெருகூட்டவும் இந்த மாதத்தை பயன்படுத்த வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ரமளான் மாதம் வருவதற்கு முன்பாக அந்த மாதத்தை பற்றி ஒரு நீண்ட உரை நிகழ்த்தி அதன் மீது ஆர்வத்தை தூண்டுகிறார்கள்.

صحيح ابن خزيمة ط 3 2/ 911

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَلْمَانَ قَالَ:

خَطَبَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ، فَقَالَ: "أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ، شَهْرٌ مُبَارَكٌ، شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، جَعَلَ اللَّهُ صِيَامَهُ فَرِيضَةً، وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا، مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْرِ، كَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً، كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَهُوَ شَهْرُ الصَّبْرِ، وَالصَّبْرُ ثَوَابُهُ الْجَنَّةُ، وَشَهْرُ الْمُوَاسَاةِ، وَشَهْرٌ يَزْدَادُ فِيهِ رِزْقُ الْمُؤْمِنِ، مَنْ فَطَّرَ فِيهِ صَائِمًا كَانَ مَغْفِرَةً لِذُنُوبِهِ، وَعِتْقَ رَقَبَتِهِ مِنَ النَّارِ، وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ". قَالُوا: لَيْسَ كُلُّنَا نَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ. فَقَالَ: "يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى تَمْرَةٍ، أَوْ شَرْبَةِ مَاءٍ، أَوْ مَذْقَةِ لَبَنٍ، وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ، مَنْ خَفَّفَ عَنْ مَمْلُوكِهِ غَفَرَ اللَّهُ لَهُ، وَأَعْتَقَهُ مِنَ النَّارِ، وَاسْتَكْثِرُوا [197 - ب] فِيهِ مِنْ أَرْبَعِ خِصَالٍ: خَصْلَتَيْنِ تُرْضُونَ بِهِمَا رَبَّكُمْ، وَخَصْلَتَيْنِ لَا غِنًى بِكُمْ عَنْهُمَا، فَأَمَّا الْخَصْلَتَانِ اللَّتَانِ تُرْضُونَ بِهِمَا رَبَّكُمْ، فَشَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَتَسْتَغْفِرُونَهُ، وَأَمَّا اللَّتَانِ لَا غِنًى بِكُمْ عَنْهُمَا، فَتَسْأَلُونَ اللَّهَ الْجَنَّةَ، وَتَعُوذُونَ بِهِ مِنَ النَّارِ، وَمَنْ أَشْبَعَ فِيهِ صَائِمًا، سَقَاهُ اللَّهُ مِنْ حَوْضِي شَرْبَةً لَا يَظْمَأُ حَتَّى يَدْخُلَ الْجَنَّةَ".

சல்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஷபானின் கடைசி நாளில் பிரசங்கம் செய்தார்கள். “ மக்களே! உங்களுக்கு மகத்தான ஒரு மாதம் வந்திருக்கிறது. பரகத்தான மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு அந்த மாதத்தில் உள்ளது. நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். இரவில் நின்று வணங்குதலை உபரி வணக்கமாக அமைத்திருக்கிறான். யார் ஒரு நன்மையை செய்கிறாரோ மற்ற மாதத்தில் அவர்கள் பர்ளை நிறைவேற்றின நன்மை. யார் அதில் ஒரு பர்ளை நிறைவேற்றுகிறாரோ எழுபது பர்ளை செய்த நன்மை கிடைக்கும். அது பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி சொர்க்கம். ------

இவ்வாறு நோன்பின் மகத்துவங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்லி மக்களை உற்சாக படுத்துகிறார்கள். 
இந்தமாதத்தில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அமல்கள். 

1. குர்ஆனை அதிகம் ஓதுதல். 


صحيح البخاري 1/ 8

 عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல் அலைஹி ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை ரமளான் மதத்தில் சந்திக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் அலைஹி ஸலாம் அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைச் சந்தித்து (அது வரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுப்படுத்துவார்கள். இருவருமாக குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் ஆற்றை விட (வேகமாக) நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையையாகவே திகழ்ந்தார்கள்” என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். 

எனவே குர்ஆனை ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுவது சுனத்தும் நன்மைகளை அல்லிதருவதொடு மட்டும் அல்லாமல் அந்த திருமறை நமக்கு மறுமையில் சிபாரிசு செய்யும்.

مسند أحمد ط الرسالة 11/ 199

، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي (1) فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ "، قَالَ: " فَيُشَفَّعَانِ 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 

“நோன்பும் குர்ஆணும் மறுமைநாளின் ஒரு அடியானுக்கு பரிந்துரை செய்யும். நோன்பு சொல்லும் “ இறைவா! நான் பகலில் அவனுக்கு உணவையும், இச்சையையும் தடுத்தேன். எனவே என்னை அவனுக்கு பரிந்துரை செய்யபவனாக ஆக்கு.”. குர்ஆன் சொல்லும் “ நான் அவனை இரவில் (ஓதுவதினால் ) தூங்க விடாமல் தடுத்தேன். எனவே என்னை அவனுக்கு பரிந்துரை செய்யகூடியவானாக ஆக்கு. அவைகள் இரண்டும் பரிந்துரை செய்யும். 

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு 
நூல் அஹ்மத் எண் :   6626

குறிப்பாக ரமலான் மாதத்தில் பல்வேறுப்பட்ட இமாம்கள் அதிகமாக குர்ஆன் ஓதுவதில் ஆர்வம் கண்டார்கள். 

سير أعلام النبلاء ط الحديث 5/ 15

 عَنْ مَنْصُوْرٍ، عَنْ إِبْرَاهِيْمَ، قَالَ: كَانَ الأَسْوَدُ يَخْتِمُ القُرْآنَ فِي رَمَضَانَ فِي كُلِّ لَيْلَتَيْنِ وَكَانَ يَنَامُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ وَكَانَ يَخْتِمُ القُرْآنَ فِي غَيْرِ رَمَضَانَ فِي كُلِّ سِتِّ لَيَالٍ

அஸ்வத் இப்னு யாஜீத் அவர்கள் ரமளானில் இரண்டு நாளைக்கு ஒரு குர்ஆன் ஓதி முடிப்பார்கள்.  ரமலான் அல்லாத நாட்களில் ஆறு இரவில் ஒரு குர்ஆன் முடிப்பார்கள். 

அஸ்வத் இப்னு யாஜீத் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை பின்பு அவர்களின் மரணத்திற்கு பிறகு இஸ்லாத்தை  ஏற்றுகொண்டவர்கள்

سير أعلام النبلاء ط الحديث 8/ 248

قَالَ الرَّبِيْعُ بنُ سُلَيْمَانَ مِنْ طَرِيْقَيْنِ عَنْهُ بَلِ أَكْثَرَ: كَانَ الشَّافِعِيُّ يَخْتِمُ القُرْآنَ فِي شَهْرِ رَمَضَانَ سِتِّيْنَ خَتْمَةً

ஷாபிஈ ரஹ்மாதுல்லாஹி அவர்கள் ரமளான் மாதத்தில் அறுபது குர்ஆன் ஓதி முடிப்பார்கள். 

2. தஸ்பிஹ் செய்வது

பொதுவாக தச்பீஹிற்கு ஏராளமான சிறப்புகள் இருந்தால் குறிப்பாக ரமளானுடைய மாதத்தில் தஸ்பிஹ் செய்வது அல்லாஹ்வின் சிந்தனையை அதிகப்படுத்தும் 

பல ஹதீஸ் தொகுப்புகள் அடங்கிய நூல்களை எழுதிய இமாம் பைஹகி ரஹ்மாதுல்லாஹி அவர்கள் தங்கள் நூல் ஷுஅபுல் ஈமானில் குறிப்பிடுகிறார்கள்.

شعب الإيمان 5/ 422

 قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نَوْمُ الصَّائِمِ عِبَادَةٌ، وَصَمْتُهُ تَسْبِيحٌ، وَعَمَلُهُ مُضَاعَفٌ، وَدُعَاؤُهُ مُسْتَجَابٌ، وَذَنْبُهُ مَغْفُورٌ "

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்
“ நோன்பாளியின் தூக்கம் வணக்கமாகும். அவரின் மௌனம் தஸ்பிஹ் ஆகும். அவரின் செயல்கள் இரட்டிப்புமடங்கு கூலிக்கு சொந்தமானவை, அவரின் துஆ அங்கீகரிக்கப்படும் அவரின் குற்றங்கள் மன்னிக்கப்படும். 
எனவே தஸ்பிஹ் ரமளான் மாதத்தில் முழுக்க அல்லாஹ்வின் சிந்தனையில் நம்மை இழுக்கும். 


3. தானங்கள் செய்வது


ரமலான் மாதத்தில் செய்யப்பட்டு எல்லா அமல்களுக்கும் இயல்பாகவே இரட்டிப்பு மடங்கு கூலி கிடைக்கிறது. தானம் செய்வது குறிப்பாக ரமளான் மாதத்தில் நோன்பாளிக்கு செய்வது நன்மைகளை அதிகமாக ஈட்டிதரும்.

سنن الترمذي ت شاكر 3/ 162

عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்

“ யார் நோன்பாளி ஒருவருக்கு உணவு கொடுத்து நோன்பை திறக்க செய்கிறாரோ அவர்க அந்த நோன்பாளியை போல கூலி உண்டு. எனினும் அந்த நோன்பாளியின் கூலியிலிருந்து ஏதும் குறைக்கப்படமாட்டாது. 

سير أعلام النبلاء ط الحديث 5/ 530

وَبَلَغَنَا أَنَّ حَمَّاداً كَانَ ذَا دُنْيَا مُتَّسِعَةٍ، وَأَنَّهُ كَانَ يُفَطِّر فِي شَهْرِ رَمَضَانَ خَمْسَ مائَةِ إِنْسَانٍ، وَأَنَّهُ كَانَ يُعْطِيْهِم بَعْدَ العِيْدِ لِكُلِّ وَاحِدٍ مائَةَ دِرْهَمٍ.

ஹம்மாது பனு அபி சுலைமான் அவர்கள் ரமளானில் ஐநூறு நபர்களுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வார்கள். பெருநாள் அன்று ஒவ்வொருவறும் நூறு திர்ஹம்கள் தருவார்கள். 

ஹாமாது இப்னு அபி சுலைமான் அவர்கள் தாபியீன். மிகச்சிறந்த மார்க்க மேதை. அதிகமான ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்.

எனவே ரமலானை இது போன்ற பயனுள்ள வணக்கங்களில் ஈடுபட்டு நன்மைகளை கொள்ளையடிக்க வேண்டும். ஆனால் நம்முடைய மக்கள் அவர்களை அதிகமான கவனங்கள் பெருநாளுக்கு துணி எடுப்பதிலும், நோன்பில் சுவையான உணவுகள் சமைக்க வேண்டும் என்ற அக்கரையில் இப்தார் நேரத்தின் மகிமைகளை உணராமல் அதை வீணடிக்கிறார்கள். 
அல்லாஹ் நம்மை முழுமையான நோன்பு நல்லடியார்கள் கூட்டத்தில் கபூல் செய்வானாக! ஆமீன்!

No comments: