அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 26 June 2014

சிக்கலை தீர்க்கும் ரமலான்

{يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)} [البقرة: 183]
அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நாம் எதிர்பார்த்த ரமலானை தர இருக்கிறான். ரமாலான் வந்தாலே முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி. காரணம் நன்மைகள் நிறைய கொள்ளைடிக்கும் மாதமாக ரமலான் உள்ளது.
நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ரமலானை கண்டித்து கூறிய எச்சரிக்கை பற்றி நாம்
யோசிக்க வேண்டும்.
 مسند البزار = البحر الزخار (10/ 192)
عَنْ جَابِرِ بْنِ سَمُرة، رَضِي اللَّهُ عَنْهُ، قَالَ صَعِدَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم الْمِنْبَرَ فَقَالَ: آمِينَ آمِينَ آمِينَ فَلَمَّا نَزَلَ سُئِلَ عَن ذَلِكَ فَقَالَ: أَتَانِي جِبْرِيلُ فَقَالَ: رَغِمَ أَنْفُ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ قُلْ: آمِينَ قُلْتُ: آمِينَ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ قُلْ آمِينَ فَقُلْتُ آمِينَ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ وَالِدَيْهِ، أَوْ أَحَدَهُمَا فَلَمْ يغفر له، أو لا يدخلانه الجنة آمِينَ قُلْتُ آمِينَ. هَذَا
யாரையும் சபிக்காத உம்மத்துகளுக்கு நன்மையையும் மட்டுமே ஆதரவு வைக்கும் நபி, ரமலானை குறித்து வீணடித்த ஒருவனை சபிக்க  ஆமீன் சொல்லுகிறார்கள் என்றால் நாம் இந்த ரமலான் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
وَالصِّيَامُ جُنَّةٌ
நோன்பு ஒரு கேடையம். ஆபத்துகளை விட்டும் காக்கும் ஒரு அமல்.
நோன்பு பல பிரச்சனை தீர்க்கும் ஒரு  அற்புத சக்தியாக அல்லாஹ் வழங்கி இருக்கிறான். மர்யம் அலைஹி ஸலாம் அவர்கலுக்கு கரு தரித்த பொது மற்ற மக்கள் அந்த  செயலை வைத்து தன்னை தவறாக பேசுவார்களே என நினைத்த மர்யம் அலைஹி ஸலாம் அவர்களுக்கு ஒரு தீர்வை சொல்லி கொடுக்கிறான்.
{فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (26) فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَامَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا (27) يَاأُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا (28) فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا (29) قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا (30) وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا (31) وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا (32) وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا (33)} [مريم: 26 - 33]
நோன்பு வைக்க சொல்லி அல்லாஹ் ஏவினான்.
இன்றைய மோக உலகில் பல இளைஞர்கள் சிக்கி தவிக்கும் ஆபாசத்திற்கு நோன்பு மட்டும் தான் தீர்வு என்பது நபி வழி.
صحيح البخاري (3/ 26)
قَالَ: «مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»
மறுமையின் வெற்றிக்கு வழிவைபுகளை ஏற்படுத்தும் நோன்பு. மற்ற அமல்களை நோன்பு நம்மை மறுமையில் பிரதானமாக இருந்து பாதுகாக்கும்.
شعب الإيمان (5/ 205)
" كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ "؟ فَقَالَ ابْنُ عُيَيْنَةَ: هَذَا مِنْ أَجْوَدِ الْأَحَادِيثِ وَأَحْكَمُها، إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ يُحَاسِبُ اللهُ عَزَّ وَجَلَّ عَبْدَهُ وَيُؤَدِّي مَا عَلَيْهِ مِنَ الْمَظَالِمِ مِنْ سَائِرِ عَمَلِهِ حَتَّى لَا يَبْقَى إِلَّا الصَّوْمُ، فَيَتَحَمَّلُ اللهُ عَزَّ وَجَلَّ مَا بَقِيَ عَلَيْهِ مِنَ الْمَظَالِمِ وَيُدْخِلُهُ بِالصَّوْمِ الْجَنَّةَ
அதனால் தான் அல்லாஹ் நோன்பை மாத்திரம் தனக்கு சொந்தம் என்று சொல்லிக்காடுகிறான். அதற்கு நான் கூலி வழங்குகிறேன் அல்லது நானே கூலி என்று சொல்லுவதும் அல்லாஹ் நமக்கு வழங்கிய சிக்கல் நீக்கி நோன்பு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
மறுமையில் மன்றாடும் இரண்டு அமல்கள்
مسند أحمد ط الرسالة (11/ 199)
 عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي (1) فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ "، قَالَ: " فَيُشَفَّعَانِ "
அல்லாஹ்வை சந்திக்கவும் அவனிடம் பேசவும் நோன்பு நோன்பின் வாயிலிருந்து வரும் துர்வாடையும் காரணம்
تفسير القرطبي (7/ 274)
أَمَرَهُ أَنْ يَصُومَ الشَّهْرَ وَيَنْفَرِدَ فِيهِ بِالْعِبَادَةِ، فَلَمَّا صَامَهُ أَنْكَرَ خَلُوفَ فَمِهِ فَاسْتَاكَ. قِيلَ: بِعُودِ خَرْنُوبٍ، فَقَالَتِ الْمَلَائِكَةُ: إِنَّا كُنَّا نَسْتَنْشِقُ مِنْ فِيكَ رَائِحَةَ الْمِسْكِ فَأَفْسَدْتَهُ بِالسِّوَاكِ. فَزِيدَ عَلَيْهِ عَشْرُ لَيَالٍ مِنْ ذِي الْحِجَّةِ. وَقِيلَ: إِنَّ اللَّهَ تَعَالَى أَوْحَى إِلَيْهِ لَمَّا اسْتَاكَ: (يَا مُوسَى لَا أُكَلِّمُكَ حتى يعود) فُوكَ إِلَى مَا كَانَ عَلَيْهِ قَبْلُ، أَمَا عَلِمْتَ أَنَّ رَائِحَةَ الصَّائِمِ أَحَبُّ إِلَيَّ مِنْ رِيحِ الْمِسْكِ (. وَأَمَرَهُ بِصِيَامِ عَشَرَةِ أَيَّامٍ.
நோன்பு உடல் நலத்தை கூட்டுமே தவிர குறைக்காது
الطب النبوي لأبي نعيم الأصفهاني (1/ 236)
 قال رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم: صوموا تصحوا.
ஒவ்வொரு நோய்க்கு நிவாரணம் தேட நோன்பை வைத்தே அல்லாஹ்விடம் உதவி தேடி இருக்கிறார்கள்.
عن دغفل ابن حَنْظَلَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (كَانَ عَلَى النَّصَارَى صَوْمُ شَهْرٍ فَمَرِضَ رجل منهم فقالوا لئن شفاه الله لنزيدن عَشْرَةً ثُمَّ كَانَ آخَرُ فَأَكَلَ لَحْمًا فَأَوْجَعَ فاه فقالوا لئن شفاه الله لنزيدن سَبْعَةً ثُمَّ كَانَ مَلِكٌ آخَرُ فَقَالُوا لَنُتِمَّنَّ هَذِهِ السَّبْعَةَ الْأَيَّامَ وَنَجْعَلَ صَوْمَنَا فِي الرَّبِيعِ قَالَ فَصَارَ خَمْسِينَ
ரமலான் மாதத்திற்காக அல்லாஹ் நமக்கு ஏற்படுத்திய வரவேற்புகள்.
سنن النسائي (4/ 129)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ»
அத்தகைய ரமலானில் நாம் தவிர்ந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்
وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ "
நம் சிக்கல்களை நீக்கும் ரம்லானை நாம் வரவேர்போம்.



Friday, 20 June 2014

பிலாலியா உலமா பேரவையின் சேவைகள்

பிலாலியா உலமா பேரவையின் சேவைகள்
Bilalia Ulama Association Social Service activities

Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

1. வெள்ளியரங்கம்
Friday Sermons

2. இலவச வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்
Career Guidance Program

3. சாதித்து காட்டுவோம்
10th, +2 Guidance Event

4. கோடை கால தீனியாத் வகுப்புகள்
Tarbiyah Summer Camp

5. இலவச மருத்துவ முகாம்
Free Medical Camp

6. மகிழ்வித்து மகிழ்
Entertaining With  The Peoples In Home

7. அநாதைகளை காப்போம்
Saving Orphans

8. முதியோர்களை அரவணைப்போம்
Visiting Old Age Home

9. ஊனமுற்றோருக்கு உதவிடுவோம்
Hands To Hearts

10. நிலவேம்பு முகாம்
Nilaveambu Camp

11.ரமலான் கிட்
Ramadan Kit

12. பெருநாள் கிட்
Eid Kit

13. பேரிடர் மீட்பு பணி
Disaster Rescue

14. பசுமை காப்போம்
Planting

15. உணவு வீணாகுவதைத் தடுத்தல்
Don’t Waste Food

16. ஆலிம்களை தங்க வைத்தல்
Stay & Rest - Free For ULAMAS

17. ஆறுதலால் அறம் செய்வோம்
Pay A Visit To Sick

18. இயல்வது கரவேல்
Donate Your Stuff

19. தூய்மை செய்வோம்
Clean Up The City

20. கல்வி ஊக்கத்தொகை
Educate The Poor

21.இரத்த தான முகாம்
Blood Donation Camp

22. புனித ஹஜ் வழிகாட்டுதல்
Hajj Pilgrimage Guidance

23. மீலாது விழா
Meelad Nabi

24. மாதாந்திர பயான் நிகழ்ச்சி
Monthly Bayyan Program

25. SBZ மின்னிதழ்
SBZ E-Magazine : http://sbzemagazine.blogspot.ae/2017/05/sbz-e-magazine-may-2017.html

26.சிறப்பு கருத்தரங்குகள்
Special Colloquium
 
27.அமீரக ஜும்ஆ உரை தமிழாக்கம்
AWQAF UAE Jumma Translation
 
28.விழிப்புணர்வு ஆக்கங்கள்
Awareness Posters
 
29.பசுமை பாதுகாத்தல்
Save Green.

போதைக்கு அடிமையாக வேண்டாம்!!

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
59:18. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்

அல்லாஹ் மனிதனை படைத்து அவனுக்கு அழகான தோற்றத்தையும் அமைத்து தந்திருக்கிறான். அவனுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும் அனுப்பி இருக்கிறான். உலகில் அவன் வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவனுக்கு பல அருள்களை வழங்கியிருக்கிறான். அந்த அருட்கொடைகளுக்கு மனிதன் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلالاً طَيِّباً وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
16:114. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.

எனவே அல்லாஹ்வின் சொல்படி ஒரு முஸ்லிம் எல்லா நேரத்திலும் ஹலாலான பொருளை மட்டுமே தேட வேண்டும், அதற்கான முயற்சிகள் செய்ய வேண்டும். தான் உண்ணும் உணவு குடிக்கும் தண்ணீர் உடுத்தும் உடை இருக்க இடம் ஆகிய அனைத்திலும் ஹலால் மட்டுமே கலந்திருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. அவ்வாறுதான் நபி சல்லல்லாஹ் அலைஹி வ ஸல்லம் அவர்கள் இருந்தார்கள் வாழ்ந்தார்கள்.

அவர்களை பற்றி குர்ஆண் இப்படி சொல்லும்.
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ
நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்.

அதே போல் அல்லாஹ் நல்லவைகளையும் சாப்பிட சொல்லி கூறுகிறான். நல்லவைகள் என்ன என்பதை நமக்கு அறிஞர்கள் சொல்கிறார்கள். “ நல்லவை என்பது அல்லாஹ் ஹலால் என்று எதை கூறி இருக்கிறானோ அவைகள் அனைத்தும நல்லவைகள். மனிதனுக்கு மார்க்க விஷயத்திலும் உலக விஷயத்திலும் அதில் பலன்கள் உண்டு. அல்லாஹ் எவற்றை ஹராமாகி இருக்கிறானோ அவைகள் தடுக்கப்பட்டைகள். அவைகளில் மார்கத்திலும் உலக காரியங்களிலும் நன்மைகள் இல்லை மாறாக இடையூறு தான் இருக்கும்”

அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவான்.
يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الأَرْضِ حَلالاً طَيِّباً وَلا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
2:168. மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.

அல்லாஹ் நல்லவற்றை ஹலாலான உணவை உண்ண சொல்கிறான். நல்ல உணவுகள் எப்போதும் மனிதனுக்கு இடையூறு தராது. நோய்களைவிட்டும் அவனை பாதுகாக்கும். நல்ல பொருட்கள் மனிதனின் உடலையும் பாதுகாக்கும் அவன் சிந்தனைக்கும் பயன்படும் மூளையையும் பாதுகாக்கும். ஷைத்தான் இது போன்ற நல்ல பொருட்களை சாபிடவிடாமல் மனிதர்கள் தடுப்பான் என்பதால் அல்லாஹ் இந்த அழகிய கட்டைளையுடன் ஷைத்தான் பாதையில் செல்ல வேண்டாம் என்பதையும் சேர்த்தே சொல்கிறான்.

ஷைத்தான் மனிதன் சரியான பாதையில் சொல்வதை விரும்புவது இல்லை. அதிலும் குறிப்பாக ஹலால் ஹராம் அனுதினமும் பேணும் உணவு பழக்கவழக்கங்களில் தன் மாய வலையை வீசுகிறான்.

காலத்திற்கேற்ப அவன் மாய வலைகளின் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அவன் சூழ்ச்சிகளின் திட்டங்களும் வடிவங்களும் மிக நேர்த்தியானதாக இருக்கும். எதையும் ஒரு கட்டத்திற்கும் மேல் புரிந்து கொள்ளும் சுதாரிப்புடைய மனிதனுக்கு உண்டு. எனவே எல்லா மாய வலைகளை விட்டும் ஒரு மனிதனால் கொஞ்சம் யோசித்தால் வெளியே வர முடியும்.
            
             அதனால் ஷைத்தான் தன மாய வலைகளை மனிதனின் அறிவிற்கே விரித்தான். மனிதனின் அறிவை மங்கச்செய்து அவனை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அடிமை படித்தி விட்டால் அவனால் மீண்டும் நல்வழி பக்கம் திரும்பவும் வர முடியாது என திட்டம் தீட்டி மனிதர்களை போதைக்கு அடிமை படுத்தும் முயற்சியில் ஷைத்தான் ஈடுபடுகிறான்.

இன்றைய உலகில் போதைக்கு அடிமையாகாதவர்கள் மிகவும் குறைவு என்றும் சொல்லும் அளவிற்கு போதைபோருட்களின் பல்வேறுபட்ட வடிவங்களில் மனிதர்கள் சிக்கி தவிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் அறிவை மறைக்கிற மழுங்கச்சைகிற அனைத்து போதைவச்த்துக்களையும் ஹராம் ஆக்கியது.

உம்மு சலமஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.
نَهَى رَسُولُ اللَّهِ عَنْ كُلِّ مُسْكِرٍ وَمُفَتِّرٍ
நபி சல்லல்லாஹ் அலைஹி வ சல்லம் அவர்கள் போதை உண்டாக்கு பொருட்கள், (உடலை) பலகீனப்படுத்தும் பொருட்களையும் தடுத்தார்கள்.

போதை பொருட்கள் மனிதனின் அறிவை மழுங்கச்செய்யும். உடலை பலகீனப்படுத்தும். அல்லாஹ் மனிதனுக்கு அறிவை வழங்கியிருப்பது மிகப்பெரிய அருள். உலகின் பல மாற்றங்களுக்கு மனிதனின் அறிவே காரணம். உலகத்தில் உள்ள கட்டிடங்கள் தொழில் நுட்ப வளர்சிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதனால் சாதிக்க முடியாது என் நினைத்த அனைத்தையும் மனிதனின் அறிவு சாதித்தது. அவனால் செல்ல முடியாத பல தூரங்களுக்கு அவன் அறிவு அவனை அழைத்து சென்றது. அந்த அளவிற்கு அறிவிற்கு ஆற்றல் உண்டு. ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு கல்லை மனிதனால் சுமக்க முடியாது. ஆனால் பல ஆயிரம் கிலோ எடை கொண்ட பொருட்களை மனிதன் பல நாடுகளையும் தாண்டி கொண்டு போகிறான்.


இது மனிதனின் உடல் செய்யவில்லை அவன் அறிவு செய்த சாதனை. மனிதனின் அறிவு மிகப்பெரிய அல்லாஹ்வின் அருள்.


உமர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.

மனிதனின் அஸ்திவாரம் அவன் அறிவு. அவரின் பாரம்பரியம் அவன் மார்க்கம். அவனின் பண்பு அவனுடைய நல்ல குணங்கள்.

அல்லாஹ் வழங்கிய அறிவை நல் வழியில் பயன்படுத்தாமல் அதை போதைக்கு அடிமையாக்கி பால்படுத்துகிரார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் கடுமையான வேதனைகளை வைத்திருக்கிறான்.

நபி சல்லல்லாஹ் அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْداً لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ
அல்லாஹ் தன் மீது சில உறுதிமொழி எடுத்திருக்கிறான். அது போதைஉண்டாகும் பொருட்களை யார் குடிக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் (மறுமையில்) தீனதுல் கபாலை குடிக்க செய்வான்.
 (சஹாபாக்கள்) கேட்டார்கள் : அல்லாஹ்வின் தூதரே! தீனதுல் கபால் என்றால் என்ன? அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அது  நரகவாசிகளின் வியர்வைகள் என்றார்கள்.
யாருடைய அறிவு மழுங்கிபோயவிட்டதோ அவரின் உடலும் அறிவும் பலகீனமாகிவிடும்.

ஒரு மனிதனின் உடலும் உயிரும் அல்லாஹ்விற்கு சொந்தம். அதை தன விரும்பிய வழியில் பயன்படுத்த முடியாது. உடலும் உயிரும் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு அடமான பொருள்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவான்.

قُلْ إِنَّ صَلاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
6:162. (அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.

அல்லாஹ் வழங்கிய அமானிதமான உடலையும் உயிரையும் யார் நல வழியில் பயன்படுத்த வில்லையோ அவர்களை அல்லாஹ் கடுமையாக தனது திருமறையில் எச்சரிக்கிறான்.

وَلا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيماً* وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا
(இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான். 4:30. எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதே!

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

مَنْ تَحَسَّى سَمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسَمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِداً مُخَلَّداً فِيهَا أَبَداً
யார் ஒருவன் (இந்த உலகத்தில்) விஷம் குடித்து தன்னை மாய்த்து கொண்டானோ அவன் (மறுமையில்) தன் கையில் விஷம் (கொடுக்கப்பட்டு) நிரந்தரமாக நரகத்தில் அதை குடித்துகொண்டே (வேதனை செய்யப்பட்டு கொண்டு) இருப்பான்.

எனவே அல்லாஹ் வழங்கிய இந்த அற்புதமான அழகிய வாழ்கையை நாம் போதைக்கு அடிமையாகி வீணாக்கி விடக் கூடாது. இந்த வாழ்கையை நல் வழியில் பயன்படுத்த வேண்டும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثاً: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ
அல்லாஹ் மூன்று விஷயங்களை வெறுக்கிறான். பொய் புரளிகளை பரப்புவது,பொருளை வீணாக்குவது,(தேவை இல்லாத) கேள்விகளை கேட்பது.

ஒரு மனிதன் போதைக்கு அடிமையாகி விடுகிற பொது அவன் தன் சம்பாதியங்களை முறையாக செலவு செய்ய முடியாது. தன குடும்பங்களை சரிவர பராமரிக்க முடியாது. தன் குடும்ப பொறுப்பில் கொஞ்சம் அவன் சருக்கும் சூழ்நிலை இல்லை முழுமையாக சருக்கும் சூழ்நிலை ஏற்படும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

كَفَى بِالْمَرْءِ إِثْماً أَنْ يُضَيِّعَ مَنْ يَعُولُ
ஒரு மனிதன் (தன் குடும்பத்திற்கு) செலவு செய்வதை விட்டும் வீணடித்தவன் பாவத்திற்கு அந்த ஒரு செயலே போதுமானது.

மேலும் சொன்னார்கள் “ ஒருவன் தன மீதுள்ள பொறுப்புக்களை கவனித்தான என்பதை அல்லாஹ் (மறுமையில்) கேட்பான். அவன் (தன் பொறுப்புகளை) முறையாக பேணி பாதுகாத்தான அல்லது வீனடித்தான என அல்லாஹ் விசாரிப்பான். தன் குடும்ப பொறுப்பை எப்படி கவனித்தான் என்பது உட்பட அல்லாஹ் கேட்பான்”

எனவே போதைக்கு அடிமையாகி குடும்ப பொறுப்புகளையும் சரியாக கவனிக்க தவறுபவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனைகளும் வேதனைகளும் உண்டு. அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும். சிறிய போதை பழக்கமோ பெரிய பழக்கம் என்று நாம் எதையும் வகை பிரித்து பார்க்க கூடாது. போதை பழக்கம் அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்கையை சீரழிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  
எப்பயாவது மட்டும்தான் எப்பவும் செய்தால் தான் தவறு என்றும் நாம் பிரித்து பார்க்க கூடாது. எப்பவாவது என்று சிலர் ஆரம்பிக்கு இந்த தவறு தான் பின்னாளில் அவர்களை அதற்கு முழு அடிமைகளாக மாற்றி அவர்களின் வாழ்கையை  சீரழித்து விடுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ
4:59. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.

நம்மை சுற்றி உள்ளவர்களின் நத்வாவடிக்கைகளையும் நாம் பார்த்த அவர்களையும் நாம் சரி செய்ய கடமைபட்டிருக்கிறோம். அவர்களுக்கு நல வழிகளை நாம் எடுத்து சொல்ல வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன்!

Contact us

பிலாலியா உலமா பேரவை
16, நாராயணன் நாயக்கன் தெரு,
புதுப்பேட்டை
சென்னை - 600002.

தலைவர் : மௌலானா.மௌலவி.முஹம்மது நிஸார் ஃபாஸில் ஜமாலி M.A. M.Phill.

செயலாளர் :  மௌலானா.மௌலவி. லுத்ஃபுல்லாஹ் பிலாலி B.com, M.A.
தொடர்புக்கு : 96000 17467

பொருளாளர் : மௌலானா.மௌலவி. முஹம்மது ஹாமீம் பிலாலி B.com.
தொடர்புக்கு : 98406 36314

Thursday, 5 June 2014

நிரந்தர இல்லம்

அல்லாஹு மனிதர்களையும் ஜின்களையும் தன்னை வணங்கவும் வழிபடவும் அல்லாஹ் படைத்தான். அவ்வாறு யார் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு வழிபட்டு நடக்குகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் தன பொருத்தத்தை தருவதோடு மட்டுமல்லாமல் உயர்ந்த சொர்கத்தையும் தருகிறான்.

குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக்காட்டுவான்.
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
3:133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் மனிதர்களுக்கு சொர்கத்தில் அனைத்து விதமான அருட்கொடைகளையும் வைத்திருக்கிறான். அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு உண்டு. சொர்க்கத்தில் யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை இல்லை. அச்சமில்லாத சூழலை அல்லாஹ் அமைத்து தந்திருக்கிறான். நிரந்தர சுகம் சொர்க்கத்தில் மட்டும் தான் கிடைக்கும். தனக்கு கிடைக்கும் சுகங்களும் இன்பங்களும் தன்னை விட்டும் வெகு விரைவில் போய்விடுமோ என்ற கவலை யார் மனதிலும் இருக்காது. அப்படிப்பட்ட இடம் தான் சொர்க்கம். தன்னை படைத்த இறைவனை கண்டு மகிழ்கிற வாய்ப்பு சொர்க்க வாசிகளுக்கு உண்டு.
சொர்கவாசிகளுக்கு நிரந்தர பணியாட்கள் உண்டு. இந்த சுகங்களும் இன்பங்களும் இவ்வுலகில் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்தவர்களுக்கு கிடைக்கும் பாக்கியம்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொர்கத்தை பற்றி வர்ணிக்கும்போது சொன்னார்கள்.
“ சொர்க்கத்தில் முதல் படித்தரத்தில் நுழைபவர்கள் பெளர்ணமி நிலவை போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்து (நுழைபவர்கள்) வானத்தில் உள்ள ஒளி மிகுந்த நட்சத்திரத்தை போன்று இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரு நபரின் உள்ளத்தின் மீது இருக்கும். அவர்களுக்கு மத்தியில் எந்த விரோதமும் பொறாமை எண்ணமும் இருக்காது. ”

இன்பங்கள் மட்டும் அல்லாஹ் இன்றைக்கு மனிதன் தொலைத்த தாக நினைத்துகொண்டிருக்கும் மன நிம்மதியும் சொர்க்கத்தில் கிடைக்கும்.
சொர்க்க வாசிகள் சொர்க்கத்தில் நுழையும் பொது மலைக்குமார்கள் அவர்களை சலாம் சொல்லி அன்போடு அழைப்பார்கள். இன்முகத்துடன் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவான்.

وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
39:73. எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்)

கம்பீரமான குரலில் ஒரு அழைப்பாளரின் சப்தம் சொர்க்க வாசிகளின் காதுகளில் விழும். அது பாதுகாப்பு வாக்குறுதி சப்தம். அந்த சப்த்தத்தை கேட்ட பின் சொர்கவாசிகளுக்கு உள்ளத்தில் பயம் ஏதும் இருக்காது. பயம், வலி, மரணம், நோய் போன்றவைகள் ஏற்படாத ஒரு பாதுகாப்பான இடத்தில் நாம் இருக்கிறான் என்ற உணர்வும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்படும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
:« يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلاَ تَسْقَمُوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلاَ تَمُوتُوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلاَ تَهْرَمُوا أَبَداً، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلاَ تَبْتَئِسُوا أَبَداً
(சொர்க்கத்தில்) ஒரு அழைப்பாளர் உரக்க சொல்லுவார்  “நிச்சயம் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு உண்டு. ஒருபோதும் உங்களுக்கு நோய் ஏற்படாது. இங்கு நீங்கள் நிரந்தரமாக வாழ்வீர்கள் மரணம் உங்களுக்கு இல்லை. நீங்கள் இளமையாக இருப்பீர்கள் வயோதிகம் உங்களுக்கும் ஒருபோதும் ஏற்படாது. நீங்கள் இன்பவாக இருப்பீர்கள் சிரமங்கள் உங்களுக்கு இல்லை ”

இதை தான் அல்லாஹ் குர்ஆனிலும் சொல்லிக்காட்டுவான்.
وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ
 "பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்

மக்கள் சொர்க்கத்தில் பார்த்தல் மெய் சிலிர்த்து போய்விடுவார்கள். அதன் கட்டிட அமைப்பு வியக்கவைக்கும். வெள்ளியும் தங்கமும் சுவற்றின் கற்களாக அமைந்திருக்கும். கஸ்தூரி நறுமண வாசம். போடிக்கர்களுக்கு பதில் முத்துக்கள் போடப்பட்டிருக்கும். அறைகள் மேல் அறைகளின் காட்சி பார்பவரை கவரும்.

அல்லாஹ் சொல்கிறான்.
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ
39:20. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்பட்டு நடக்கின் றார்களோ அவர்களுக்கு, (சுவனபதியில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மென்மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாறமாட்டான்

இத்தகைய பிரம்மாண்டமான ஒரு சொர்கத்தை நிரந்தர சுக உலகத்தை அல்லாஹ் வெற்றி பெற்ற நம்பிக்கையாளர்களுக்கு வைத்திருக்கிறான். அல்லாஹ் நாடிய அந்த வெற்றி பெற்ற கூட்டம் மட்டும்தான் இந்த சுகங்களை அனுபவிக்க முடியும். இல்லை என்று சொல்லுகிற வார்த்தை சொர்கத்தில் வசிப்பவர்களுக்கு தேவை இல்லை. அனைத்தும் கிடைக்கும் நிரந்தரமாக கிடைக்கும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

“ முமீன்களுக்கு சொர்க்கத்தில் ஒரு கூடாரம் இருக்கிறது. அது ஒரே முத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் நீளம் அறுபது மயில் தூரம். அதில் வேறு மக்களும் இருப்பார்கள். ஆனால் ஒருவர் மற்றவரை காணமாட்டார் ”

அல்லாஹ் சொர்க்கத்தில் இன்னும் பல இன்பங்களை வைத்திருக்கிறான். அவர்களுக்கு சொர்க்கத்தில் பல மனைவிமார்களை வைத்திருக்கிறான். ஹூருல் ஐன் பெண்கள் அவர்களுக்காக அல்லாஹ் வழங்குவான்.

குர்ஆனில் அல்லாஹ் சொல்லுகிறான்.
الَّذِينَ آمَنُوا بِآيَاتِنَا وَكَانُوا مُسْلِمِينَ* ادْخُلُوا الجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ
43:69. இவர்கள்தாம் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் வழிபட்டு நடப்பவர்கள் 43:70. ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) "நீங்களும் உங்கள் மனைவிமார்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சுவன பதிக்குச் சென்றுவிடுங்கள்" (என்று கூறப்படும்)

சொர்க்கத்தில் அல்லாஹ் பல ஆறுகளை வைத்திருக்கிறான். தண்ணீரால் நிரம்பிய ஆறுகள் மட்டுமல்ல. பால் தேன் நிறைந்து ஓடும் ஆறுகள்.

குர்ஆனில் அல்லாஹ் இதை வர்ணிக்குப்போது சொல்லிக்காட்டுகிறான்.
مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ
47:15. இறை அச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக்கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. அன்றி, அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவர்க்கங்கள் இருப்பதுடன், இறைவனின் மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. (இத்தகைய இன்பங்களை அனுபவிப் பவனுக்கு) நரகத்தில் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக்கூடிய நரகவாசி ஒப்பாக முடியுமா?

சொர்க்க வாசிகளின் உணவை பற்றி அல்லாஹ் சொல்கிறான்.
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ* وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
56:20. இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -56:21. விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).

56:32. ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -56:32. ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும்

சொர்கவாசிகளின் குடிபானங்களை அல்லாஹ் வர்ணிக்கிறான்.
إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا
76:5. நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும்,

وَيُسْقَوْنَ فِيهَا كَأْساً كَانَ مِزَاجُهَا زَنجَبِيلاً
76:17. மேலும் (ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

 وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَاباً طَهُوراً
அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

சொர்கவாசிகள் உயர்தர ஆடைகளை உடுத்தி இருப்பார்கள். அதை குர்ஆனில் பல இடங்களில் சொல்லிக்காட்டுகிறான்.

يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ

அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.

يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا
அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.  

அல்லாஹ் இவ்வுலகில் நல அமல்கள் செய்து அவனுக்கு வழிபட்டு நடந்த அடியார்களுக்கு மறுமையில் சுவனபதிகளை வைத்திருக்கிறான். அத்தகைய பாக்கியத்தை நமக்கும் தந்து அருபுரிவானாக! ஆமீன்!