அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Friday 20 June 2014

போதைக்கு அடிமையாக வேண்டாம்!!

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
59:18. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்

அல்லாஹ் மனிதனை படைத்து அவனுக்கு அழகான தோற்றத்தையும் அமைத்து தந்திருக்கிறான். அவனுக்கு நேர்வழி காட்ட வேதங்களையும் அனுப்பி இருக்கிறான். உலகில் அவன் வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி அவனுக்கு பல அருள்களை வழங்கியிருக்கிறான். அந்த அருட்கொடைகளுக்கு மனிதன் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلالاً طَيِّباً وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
16:114. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.

எனவே அல்லாஹ்வின் சொல்படி ஒரு முஸ்லிம் எல்லா நேரத்திலும் ஹலாலான பொருளை மட்டுமே தேட வேண்டும், அதற்கான முயற்சிகள் செய்ய வேண்டும். தான் உண்ணும் உணவு குடிக்கும் தண்ணீர் உடுத்தும் உடை இருக்க இடம் ஆகிய அனைத்திலும் ஹலால் மட்டுமே கலந்திருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. அவ்வாறுதான் நபி சல்லல்லாஹ் அலைஹி வ ஸல்லம் அவர்கள் இருந்தார்கள் வாழ்ந்தார்கள்.

அவர்களை பற்றி குர்ஆண் இப்படி சொல்லும்.
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ
நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்.

அதே போல் அல்லாஹ் நல்லவைகளையும் சாப்பிட சொல்லி கூறுகிறான். நல்லவைகள் என்ன என்பதை நமக்கு அறிஞர்கள் சொல்கிறார்கள். “ நல்லவை என்பது அல்லாஹ் ஹலால் என்று எதை கூறி இருக்கிறானோ அவைகள் அனைத்தும நல்லவைகள். மனிதனுக்கு மார்க்க விஷயத்திலும் உலக விஷயத்திலும் அதில் பலன்கள் உண்டு. அல்லாஹ் எவற்றை ஹராமாகி இருக்கிறானோ அவைகள் தடுக்கப்பட்டைகள். அவைகளில் மார்கத்திலும் உலக காரியங்களிலும் நன்மைகள் இல்லை மாறாக இடையூறு தான் இருக்கும்”

அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவான்.
يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الأَرْضِ حَلالاً طَيِّباً وَلا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
2:168. மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.

அல்லாஹ் நல்லவற்றை ஹலாலான உணவை உண்ண சொல்கிறான். நல்ல உணவுகள் எப்போதும் மனிதனுக்கு இடையூறு தராது. நோய்களைவிட்டும் அவனை பாதுகாக்கும். நல்ல பொருட்கள் மனிதனின் உடலையும் பாதுகாக்கும் அவன் சிந்தனைக்கும் பயன்படும் மூளையையும் பாதுகாக்கும். ஷைத்தான் இது போன்ற நல்ல பொருட்களை சாபிடவிடாமல் மனிதர்கள் தடுப்பான் என்பதால் அல்லாஹ் இந்த அழகிய கட்டைளையுடன் ஷைத்தான் பாதையில் செல்ல வேண்டாம் என்பதையும் சேர்த்தே சொல்கிறான்.

ஷைத்தான் மனிதன் சரியான பாதையில் சொல்வதை விரும்புவது இல்லை. அதிலும் குறிப்பாக ஹலால் ஹராம் அனுதினமும் பேணும் உணவு பழக்கவழக்கங்களில் தன் மாய வலையை வீசுகிறான்.

காலத்திற்கேற்ப அவன் மாய வலைகளின் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அவன் சூழ்ச்சிகளின் திட்டங்களும் வடிவங்களும் மிக நேர்த்தியானதாக இருக்கும். எதையும் ஒரு கட்டத்திற்கும் மேல் புரிந்து கொள்ளும் சுதாரிப்புடைய மனிதனுக்கு உண்டு. எனவே எல்லா மாய வலைகளை விட்டும் ஒரு மனிதனால் கொஞ்சம் யோசித்தால் வெளியே வர முடியும்.
            
             அதனால் ஷைத்தான் தன மாய வலைகளை மனிதனின் அறிவிற்கே விரித்தான். மனிதனின் அறிவை மங்கச்செய்து அவனை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அடிமை படித்தி விட்டால் அவனால் மீண்டும் நல்வழி பக்கம் திரும்பவும் வர முடியாது என திட்டம் தீட்டி மனிதர்களை போதைக்கு அடிமை படுத்தும் முயற்சியில் ஷைத்தான் ஈடுபடுகிறான்.

இன்றைய உலகில் போதைக்கு அடிமையாகாதவர்கள் மிகவும் குறைவு என்றும் சொல்லும் அளவிற்கு போதைபோருட்களின் பல்வேறுபட்ட வடிவங்களில் மனிதர்கள் சிக்கி தவிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் அறிவை மறைக்கிற மழுங்கச்சைகிற அனைத்து போதைவச்த்துக்களையும் ஹராம் ஆக்கியது.

உம்மு சலமஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.
نَهَى رَسُولُ اللَّهِ عَنْ كُلِّ مُسْكِرٍ وَمُفَتِّرٍ
நபி சல்லல்லாஹ் அலைஹி வ சல்லம் அவர்கள் போதை உண்டாக்கு பொருட்கள், (உடலை) பலகீனப்படுத்தும் பொருட்களையும் தடுத்தார்கள்.

போதை பொருட்கள் மனிதனின் அறிவை மழுங்கச்செய்யும். உடலை பலகீனப்படுத்தும். அல்லாஹ் மனிதனுக்கு அறிவை வழங்கியிருப்பது மிகப்பெரிய அருள். உலகின் பல மாற்றங்களுக்கு மனிதனின் அறிவே காரணம். உலகத்தில் உள்ள கட்டிடங்கள் தொழில் நுட்ப வளர்சிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதனால் சாதிக்க முடியாது என் நினைத்த அனைத்தையும் மனிதனின் அறிவு சாதித்தது. அவனால் செல்ல முடியாத பல தூரங்களுக்கு அவன் அறிவு அவனை அழைத்து சென்றது. அந்த அளவிற்கு அறிவிற்கு ஆற்றல் உண்டு. ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு கல்லை மனிதனால் சுமக்க முடியாது. ஆனால் பல ஆயிரம் கிலோ எடை கொண்ட பொருட்களை மனிதன் பல நாடுகளையும் தாண்டி கொண்டு போகிறான்.


இது மனிதனின் உடல் செய்யவில்லை அவன் அறிவு செய்த சாதனை. மனிதனின் அறிவு மிகப்பெரிய அல்லாஹ்வின் அருள்.


உமர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.

மனிதனின் அஸ்திவாரம் அவன் அறிவு. அவரின் பாரம்பரியம் அவன் மார்க்கம். அவனின் பண்பு அவனுடைய நல்ல குணங்கள்.

அல்லாஹ் வழங்கிய அறிவை நல் வழியில் பயன்படுத்தாமல் அதை போதைக்கு அடிமையாக்கி பால்படுத்துகிரார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் கடுமையான வேதனைகளை வைத்திருக்கிறான்.

நபி சல்லல்லாஹ் அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْداً لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ
அல்லாஹ் தன் மீது சில உறுதிமொழி எடுத்திருக்கிறான். அது போதைஉண்டாகும் பொருட்களை யார் குடிக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் (மறுமையில்) தீனதுல் கபாலை குடிக்க செய்வான்.
 (சஹாபாக்கள்) கேட்டார்கள் : அல்லாஹ்வின் தூதரே! தீனதுல் கபால் என்றால் என்ன? அதற்கு நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அது  நரகவாசிகளின் வியர்வைகள் என்றார்கள்.
யாருடைய அறிவு மழுங்கிபோயவிட்டதோ அவரின் உடலும் அறிவும் பலகீனமாகிவிடும்.

ஒரு மனிதனின் உடலும் உயிரும் அல்லாஹ்விற்கு சொந்தம். அதை தன விரும்பிய வழியில் பயன்படுத்த முடியாது. உடலும் உயிரும் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு அடமான பொருள்.

அல்லாஹ் குர்ஆனில் சொல்லுவான்.

قُلْ إِنَّ صَلاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
6:162. (அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.

அல்லாஹ் வழங்கிய அமானிதமான உடலையும் உயிரையும் யார் நல வழியில் பயன்படுத்த வில்லையோ அவர்களை அல்லாஹ் கடுமையாக தனது திருமறையில் எச்சரிக்கிறான்.

وَلا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيماً* وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا
(இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான். 4:30. எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதே!

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

مَنْ تَحَسَّى سَمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسَمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِداً مُخَلَّداً فِيهَا أَبَداً
யார் ஒருவன் (இந்த உலகத்தில்) விஷம் குடித்து தன்னை மாய்த்து கொண்டானோ அவன் (மறுமையில்) தன் கையில் விஷம் (கொடுக்கப்பட்டு) நிரந்தரமாக நரகத்தில் அதை குடித்துகொண்டே (வேதனை செய்யப்பட்டு கொண்டு) இருப்பான்.

எனவே அல்லாஹ் வழங்கிய இந்த அற்புதமான அழகிய வாழ்கையை நாம் போதைக்கு அடிமையாகி வீணாக்கி விடக் கூடாது. இந்த வாழ்கையை நல் வழியில் பயன்படுத்த வேண்டும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

إِنَّ اللَّهَ كَرِهَ لَكُمْ ثَلاَثاً: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ
அல்லாஹ் மூன்று விஷயங்களை வெறுக்கிறான். பொய் புரளிகளை பரப்புவது,பொருளை வீணாக்குவது,(தேவை இல்லாத) கேள்விகளை கேட்பது.

ஒரு மனிதன் போதைக்கு அடிமையாகி விடுகிற பொது அவன் தன் சம்பாதியங்களை முறையாக செலவு செய்ய முடியாது. தன குடும்பங்களை சரிவர பராமரிக்க முடியாது. தன் குடும்ப பொறுப்பில் கொஞ்சம் அவன் சருக்கும் சூழ்நிலை இல்லை முழுமையாக சருக்கும் சூழ்நிலை ஏற்படும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

كَفَى بِالْمَرْءِ إِثْماً أَنْ يُضَيِّعَ مَنْ يَعُولُ
ஒரு மனிதன் (தன் குடும்பத்திற்கு) செலவு செய்வதை விட்டும் வீணடித்தவன் பாவத்திற்கு அந்த ஒரு செயலே போதுமானது.

மேலும் சொன்னார்கள் “ ஒருவன் தன மீதுள்ள பொறுப்புக்களை கவனித்தான என்பதை அல்லாஹ் (மறுமையில்) கேட்பான். அவன் (தன் பொறுப்புகளை) முறையாக பேணி பாதுகாத்தான அல்லது வீனடித்தான என அல்லாஹ் விசாரிப்பான். தன் குடும்ப பொறுப்பை எப்படி கவனித்தான் என்பது உட்பட அல்லாஹ் கேட்பான்”

எனவே போதைக்கு அடிமையாகி குடும்ப பொறுப்புகளையும் சரியாக கவனிக்க தவறுபவர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனைகளும் வேதனைகளும் உண்டு. அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும். சிறிய போதை பழக்கமோ பெரிய பழக்கம் என்று நாம் எதையும் வகை பிரித்து பார்க்க கூடாது. போதை பழக்கம் அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்கையை சீரழிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  
எப்பயாவது மட்டும்தான் எப்பவும் செய்தால் தான் தவறு என்றும் நாம் பிரித்து பார்க்க கூடாது. எப்பவாவது என்று சிலர் ஆரம்பிக்கு இந்த தவறு தான் பின்னாளில் அவர்களை அதற்கு முழு அடிமைகளாக மாற்றி அவர்களின் வாழ்கையை  சீரழித்து விடுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ
4:59. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபருக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.

நம்மை சுற்றி உள்ளவர்களின் நத்வாவடிக்கைகளையும் நாம் பார்த்த அவர்களையும் நாம் சரி செய்ய கடமைபட்டிருக்கிறோம். அவர்களுக்கு நல வழிகளை நாம் எடுத்து சொல்ல வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன்!

No comments: