அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 5 March 2020

எதிர்பார்க்கப்படும் வெற்றிகள்




நமது நாட்டில் CAA,NRC, மற்றும் NPR இந்த சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இன்றளவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள் வெற்றியை தேடியவராக! இது ஒருபக்கம்
இப்படிப்பட்ட பரபரப்பான ஒரு சூழ்நிலையில் அதே பரபரப்புடன் பொதுத்தேர்வுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் மாணவர்கள்!
இரண்டு விதமான போராட்டங்கள்
 ஒரு கூட்டம் வாழ்வதற்காகவும் மற்றோரு கூட்டம் வாழ்க்கைக்காகவும்
போராடிக்கொண்டு இருக்கிறது!

இரு போராட்டங்களின் நோக்கமும் வெற்றியை நோக்கி தான்?
வெற்றி பெற்றவர்களின் தன்மைகளைப்  பற்றி அல்லாஹ் சொல்லும் போது

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ * الَّذِينَ هُمْ فِي صَلاتِهِمْ خَاشِعُونَ * وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ * وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ * وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ * إِلا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ * فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ * وَالَّذِينَ هُمْ لأمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ * وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ * أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ * الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ} [ المؤمنون

ஓரிறை நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள். இன்னும் அவர்கள் வீணானவற்றை விட்டுவிலகி இருப்பார்கள். இன்னும் அவர்கள்  ஜகாத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் வெட்கத்தலத்தை பாதுகாத்து கொள்வார்கள். அவர்கள் தம் அமானிதங்களையும், தம் வாக்குறுதியையும் பேணுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பாதுகாத்து கொள்வார்கள். இத்தகையோர்தான் வெற்றியாளர்கள். சுவர்க்கத்தை வாரிசாக்கி கொள்பவர்கள்’

அல்லாஹ் வெற்றியின் இலக்கணத்தை தொழுகையைக் கொண்டே ஆரம்பிக்கின்றான். தொழுகையை கொண்டே முடித்து வைக்கின்றான். ஆக தொழுகையில் தான் வெற்றி என்பதை உறுதி செய்கின்றான். வெற்றியின் பரிசாக சொர்க்கத்தை இறைவன் சுட்டிக்காட்டுகின்றான்.

அல்லாஹ்விற்கு பிடித்த அமல்களில் மிகவும் சிறந்த நற்செய்கை எதுவென்று நபிகளிடம் கேட்ட போது, ‘உங்களுடைய தொழுகையை உரிய நேரத்தில் குறிப்பிட்ட முறையில் முறையாய் நிறைவேற்றுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

எந்தவித படை பலமுமின்றி, நிராயுதபாணிகளாக, இறையச்சத்தையும், தொழுகையையும் மட்டுமே கொண்டு வெற்றி கொண்ட நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு.

பத்ர் யுத்தத்தில் நபிகளாருடன் இருந்தவர்கள் வெறும் முன்னூற்று முப்பத்து மூன்று ஏழை சஹாபாக்கள். அவர்கள் போர் வீரர்களும் அல்ல. போர்த்தளவாடங்கள் கொண்டவர்களும் அல்ல. அவர்களை எதிர்த்து நிற்பதோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்த்திறன் கொண்ட போர் வீரர்கள், குதிரை, ஒட்டக, யானைப்படை.

கண்மணி நாயகம் கண் துஞ்சவில்லை. தொழுகையில் நிற் கிறார்கள். தரையில் சிரம் பணிந்து அல்லாஹ்விடம் மன்றாடு கிறார்கள்.

பொழுது புலர்கிறது. எதிரிப்படைகள் துவம்சம் செய்யப்பட்டது. எங்கிருந்து வந்தது இந்த சக்தி. எந்த யுக்தியைப் பயன்படுத்தினார்கள். யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் வெற்றி கிட்டியது உண்மை.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ‘தொழுகையில் வெற்றி இருக்கிறது’ என்பது மட்டும் தான். ‘உள்ளத்தின் உறுதியில், இறையச்சத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கை மட்டும் தான்.

போர்க்களத்தில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வெற்றிக் கனியைப் பறித்து விடலாம் என்ற நிலை இருந்தபோது, தொழுகை நேரம் நெருங்கி விட்டது. இறைகட்டளை அவர்களின் ஞாபகத்திற்கு வருகிறது.

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآٮِٕكُمْ وَلْتَاْتِ طَآٮِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ‌  وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً‌  وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ‌  وَ خُذُوْا حِذْرَكُمْ‌  اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏.                          

(நபியே! போர் முனையில்) நீங்களும் அவர்களுடன் இருந்து அவர்களைத் தொழவைக்க நீங்கள் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கையில்) தங்களுடைய ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) "ஸஜ்தா" செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கையில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள் களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டு மென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினாலோ அல்லது நீங்கள் நோயாளியாக இருந்தோ உங்கள் ஆயுதங்களைக் (கையில் பிடிக்க முடியா விட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:102)


வெற்றியைத் தோல்வியை நிர்ணயிக்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தொழுகையைத் தாமதிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. அப்படி என்றால், வீணான காரியங் களிலும், கூட்டம், விழாக்கள், சினிமா, கேளிக்கைகள் என்ற காரணங்களால் தொழுகையை தாமதிப்பது அல்லது உரிய நேரத்தில் தொழாமல் விட்டுவிடுவது முறையாகுமா?

இஸ்லாமிய படையினரிடையே இருந்த இரண்டு முக்கிய பண்புகளை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒன்று கடமையை முழு மனதாய் உறுதியாய் நிறைவேற்றுகிறார்கள். அச்சப்படுவதில்லை, இறப்பை கண்டு அஞ்சுவதுமில்லை. நம்பிக்கையோடு போராடுகிறார்கள். வெற்றியை அல்லாஹ்விடமே வேண்டு கிறார்கள். வெற்றியையும் தோல்வியையும் தன்னகத்தே கொண்டவன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا‏ 
(நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உங்களுக்குப் பலமான உதவி புரிந்தே வருவான்.
(அல்குர்ஆன் : 48:3)
.
எனவே இறை நம்பிக்கையோடு செயல்பட்டு, தொழுகையை   தவறாமல் கடைப்பிடித்து ஈருலக வாழ்க்கையின் வெற்றிகளை நாம் பெற்றுக்கொள்வோம்.

அதேபோல புத்தகங்களோடு வெற்றியை நோக்கி போராடுகின்ற மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் இஸ்லாத்தின் ரீதியில் சில விஷயங்கள்
நம் மேல் சொன்ன வெற்றியாளர்களின் தன்மைகளில் ஒன்று
         وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ.                             
 இன்னும் அவர்கள் வீணானவற்றை விட்டுவிலகி இருப்பார்கள்.

 وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ }وهو الكلام الذي لا خير فيه
 ولا فائدة، { مُعْرِضُونَ } رغبة عنه، وتنزيها لأنفسهم، وترفعا عنه، وإذا مروا باللغو مروا كراما، وإذا كانوا معرضين عن اللغو.                                          
                              ‌.    
حدثني عليّ، قال: ثنا عبد الله، قال: ثني معاوية، عن عليّ، عن ابن عباس، قوله: ( وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ) يقول: الباطل.                                
                                  
حدثنا ابن عبد الأعلى، قال: ثنا ابن ثور، عن معمر،
 عن الحسن: ( عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ) قال: عن.              المعاصي.               .                                     
வெற்றியை நோக்கிப் பயணிப்பவர்கள் யாரும் வீணான விஷயங்களில் ஈடுபடுவதில்லை
வீணான விஷயங்களில் ஈடுபடுபவர்கள் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.       

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்கள் உடைய வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால் அவர்களில் யாரும் வீணானவற்றில் ஈடுபட்டதாக இல்லை.

வெற்றி பெறுவதற்கு முயற்சியை தவிர வேறு  குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் வீணான விஷயங்களை விட்டும் ஒதுங்கி முயற்சி என்னும் பாலத்தில் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்

கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும்மாணவர்களுக்கு அழுத்தம் தந்து அச்சுறுத்தாமல் பெற்றோர் ஆதரவாக இருக்க வேண்டும்.

மாணவர்களும் தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த பீர்க்கன்காரணையில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வை முன்னிட்டு தொலைக்காட்சி இணைப்பை துண்டித்ததால் பெற்றோருடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் அந்தமாணவர் தவறான முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்வு தொடங்கும்முன்பே நடைபெற்ற இந்த சம்பவம்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொதுத்தேர்வு காலமான தற்போது பிள்ளைகளுக்கு ஆதரவாக பெற்றோர் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என நிபுணர்கள்அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்துஉளவியல் நிபுணர் எஸ்.அபிலாஷா கூறியதாவது:

ஏற்கெனவே மாணவர்கள் தேர்வுகுறித்த அச்சத்தில் இருப்பார்கள். இந்தச் சூழலில் பெற்றோர், குழந்தைகள் மீது மேலும் அழுத்தத்தை திணிக்காமல் அவர்களுக்கு சுதந்திரம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். பிள்ளைகளிடம் தோழமையுடன்பழகி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுதல்அல்லது இவ்வளவு மதிப்பெண் எடுத்தால்தான் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பன போன்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை பிள்ளைகளின் கவனத்துக்குகொண்டு செல்லக் கூடாது.

தினமும் சிறிது நேரம் விளையாடவும், தொலைக்காட்சி பார்க்கவும்அனுமதிக்கலாம். அது அவர்களுக்குபுத்துணர்ச்சி அளிக்கும். அதேநேரம்முடிந்தவரை அவர்களுடன் நல்லவிதமாக பேசி செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். கண்டிப்பு காட்டுவதை விட்டு அன்பாக பேசி ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில், குழந்தைகளின் மனதில் தவறான எண்ணங்கள் உருவாகி அதை நோக்கி அவர்கள் நகரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் செல்வகுமார் கூறும்போது, ‘‘தேர்வில் தோல்வி பயம், மனஅழுத்தம் உட்பட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தவறானமுடிவுகளை நோக்கி தள்ளப்படுகின்றனர். மதிப்பெண்கள் ஒருபோதும் பிள்ளைகளின் திறமைக்கு அளவுகோல் கிடையாது. அதனால் பெற்றோர்கள் முதலில் தங்களின் தேர்வு பயத்தை போக்க வேண்டும். தேர்வுக்கு தயாராக தேவையான வசதியை செய்து தந்து, பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மேலும், பிள்ளைகளின் மனநலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும்’’என்றார்.
ஆகவே வாழ்வதற்காக மக்களுக்கும் மாணவர்களுக்கும் மகத்தான வெற்றியை எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் புரிவானாக ஆமீன்!

No comments: