அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 30 January 2020

அஞ்சா நெஞ்சம் கொள்வோம்



இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் நம் நாட்டு  அரசியல் ஆட்சியில் நிறைய இஸ்லாமியர்கள் அநீதி இழைக்க படுவதோடு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு குடி உரிமையையே ஒரு கேள்விக்குறியாக ஆக்கி வைத்துள்ளது.?

காலங்களுக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கு, இல்லை இஸ்லாத்திற்கு எதிர்ப்புக்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது.
இஸ்லாம் அது கடந்து வந்த பாதையில் நிறைய எதிர்ப்புக்களையும், சவால்களையும் சந்தித்தும் இருக்கிறது, அதை சமாளிக்கும் இருக்கிறது.
எதிர்ப்புக்கள் இஸ்லாத்திற்கும் சரி, இஸ்லாமியர்களுக்கும் சரி புதிதல்ல!
ஒரு அறிஞன் இப்படி சொல்வான் இஸ்லாமிய மார்க்கம் சந்தித்த எதிர்ப்புகளை போல மற்ற மதங்கள் சந்தித்திருந்தால் அழிந்து போயிருக்கும்!
இந்த இஸ்லாமிய மார்க்கத்தை கட்டிக்காக்க கூடிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் உண்டு.

 அதனால்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்
المؤمن لايجبن.                                                  
ஒரு முஃமீன் அவன் கோழையாக இருக்கமாட்டான்


கோழையாக இருக்கும் ஒரு முஃமின் அவன் இஸ்லாத்தை காக்க மாட்டான் அதனால்தான் முஃமின்களின் குணங்களில் ஒன்று தைரியம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இப்படி துவா செய்தார்கள்

                                                                اللَّهُمَّإِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا  عَذَابِ الْقَبْرِ

நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலில் இருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று பிரார்த்திப்பது வழக்கம்.
அறி: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி 2823
وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " شرُّ ما في رجل شحٌّ هالع، وجبن خالع" أخرجه أحمد وابو دود .    
    
.وعن عقبة بن عامر رضي الله عنه قال: قال رسول
 الله صلى الله عليه وسلم: "حَسْبُ الرجل أن يكون فاحشًا بذيًّا بخيلًا جبانًا "أخرجه أحمد.
  
 கோழைத்தனம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று.
நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கையோடு  நம்ரூதை  தனியாகத்தான் எதிர்த்து நின்றார்கள்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிர்அவ்னை தனியாகத்தான் எதிர்த்து நின்றார்கள்
பத்ரு போர்க்களத்தில் சஹாபாக்கள் உடல் பலமும் இல்லாமல் ஆயுத பலமும் இல்லாமல் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து தைரியமாக எதிர்த்து நின்றார்கள்
  வரலாற்றை எடுத்துப் பாருங்கள் இந்த உலகத்தில் முஸ்லிம்களாக முஃமின்களாக வாழ்ந்தவர்கள் யாரும் கோழையாக இருந்ததில்லை
அபூஜஹ்ல் கொன்றது யார் ?வரலாற்றைப் பாருங்கள் இரு சிறு வயது உடைய 
சஹாபாக்கள்
.
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليهم وسلم.  الْمُؤْمِنُ الْقَوِىُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِى كُلٍّ خَيْرٌ.                                           

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 5178

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الْمَدَنِيِّ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்” என்று கூறினார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 2766

கோழைத்தனத்தை இஸ்லாம் எந்த அளவு பழிக்கின்றது என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
அல்லாஹ்வுடைய மாபெரும் அருள் இன்றைக்கே நம் இஸ்லாமிய சமூகத்தவர்கள் ஈமானிய தைரியத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்!
இத்தனை காலங்களாக கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டு கிடந்த இஸ்லாமிய சமூகம் இன்றைக்கு ஒன்றாக சேர்ந்து இஸ்லாமிய மார்க்கத்திற்காக இஸ்லாமிய மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த CAA மற்றும் NRC குடி உரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இதில் முஸ்லிம்களின் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விட்டது ஒட்டுமொத்தமாக நம்முடைய எண்ணிக்கையின் பலம் அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்!

உலக முஸ்லிம்கள்  நெருக்கடி நிலவரத்துக்கு வரலாற்றில் இருந்து ஓரு பாடம்*

சமகாலத்தில் உலக முஸ்லிம்களுக்கு எங்கு பார்த்தாலும் நெருக்கடிக்கு மேல்  நெருக்கடி .இதில் இலங்கை முஸ்லீம்களும் விதிவிலக்கு இல்லை .
முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை வாந்தியாக எடுத்து ஆட்சி பீடம் ஏறிய கொடுங்கோலர்கள் அதிகரித்து விட்டனர் .அமெரிக்காவில் டிரம்ப்.. இந்தியாவில் மோடி. என்று தொடர்கிறது பட்டியல் ..

சமகால  முஸ்லீம்களின் நிலை  தாத்தார்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த பக்தாத் போன்ற நிலையை ஒத்துள்ளது .இந்த சம்பவத்தில் நல்லதொரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்

மொங்கோலியர்களின் ஆக்கிரமிப்பால் முஸ்லீம் உலகம்  சிதைந்து சின்னா பின்னமாகிப்போய் இருந்த காலம் அது .

தாத்தார்  குலாகு கானின் புதல்வி (இளவரசி ) பாக்தாத்தில் வலம் வந்து கொண்டிருந்த வேளை மக்கள் கூட்டம் ஒன்றை காண்கிறார்.

மக்கள் கூட்டத்துக்கு காரணம் எது என அவர் விசாரித்துப்பார்த்தத்தில் மார்க்க அறிஞர் (ஆலிம் )ஒருவருக்கு முன்னால் மக்கள் கூட்டம் கூடியிருப்பதாக கூறப்படுகிறது .

அந்த ஆலிமை அழைத்து வருமாறு கட்டளை இடுகிறார் இளவரசி .
ஆலிமிடம் கேள்வி கேட்கத்தொடங்குகிறார் அந்த இளவரசி.

இளவரசி- இறைவன் மேல் நம்பிக்கை கொள்கிறீர்களா?

ஆலிம் - ஆம் நிச்சயமாக .

இளவரசி -தான் நாடியவர்களுக்கு ஆட்சியை இறைவன்  வழங்குவதாக உங்களது மார்க்கம்   கூறி இருக்கின்றது  தானே ..?

ஆலிம்-நிச்சயமாக அதை நம்புகிறோம் .

இளவரசி- அவ்வாறு என்றால் இறைவன், எங்களிடம்  உங்களை தோல்வியடைய செய்து உங்கள்  மீது எங்களை ஆட்சி புரிய  வைத்துள்ளான் என்பது உண்மையா?

ஆலிம்-நிச்சயமாக இறைவன் அவ்வாறு செய்துள்ளான்

இளவரசி- அவ்வாறானால் இறைவன் உங்களை விட எங்களை நேசிக்கிறான் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

ஆலிம்-இல்லை ஏற்க முடியாது

இளவரசி-எப்படி..... ?

ஆலிம்- இடையனை (ஆடு மாடு மேய்ப்பாளன்) பார்த்துள்ளீர்களா ?

இளவரசி-ஆம்..

ஆலிம் - தனது மந்தைகள் தவறிச்சென்று விடாமல் இருப்பதற்காக அவன் நாய் ஒன்றை வைத்திருப்பதை பார்த்திருக்கிறீர்களா ?

இளவரசி-ஆம் அவர்கள் இவ்வாறு நாய்களை வைத்திருப்பார்கள்

ஆலிம் -தான் சொல்வதை கேட்காமல் மந்தைகள் கூட்டத்தை விட்டு வெளியே செல்லும் போது இடையன் என்ன செய்வான்... ?

இளவரசி- தன்னிடம் உள்ள நாயை அவிழ்த்து தனது கட்டளைக்கு கட்டுப்படிய வைக் குமாறும் மந்தைகளை மீள கூட்டத்துக்கு அழைத்து வருமாறும் அனுப்புவான்

ஆலிம்-எது வரை அந்த நாய் மந்தைகளை விரட்டும் ?

இளவரசி-மந்தை கூட்டத்துக்கு வரும் வரைக்கும் இடையனின் கட்டளைக்கு கட்டுப்படும் வரை ..

ஆலிம்-தத்தார்களாகிய நீங்கள் நாய்கள் போன்று  அல்லாஹ்வினால் எங்கள் மீது அவிழ்த்து விடப்பட்டுள்ளீர்கள்
அல்லாஹ்விடம் மீண்டு அவனது  கட்டளைகளைக்கு அடிபணியும் வரைக்கும்
நீங்கள் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவீர்கள் .அல்லாஹ்விடம் நாம் திரும்பி அவனது கட்டளைகளுக்கு அடிபணியும் போது விரைவில் உங்கள் நாட்கள் எண்ணப்படும் .

மேற்படி சம்பவம் நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் உம்மத்துக்கு  ஒரு நல்லதொரு எடுத்துக்காட்டும் பாடமும் ஆகும் .

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே .. இஸ்லாம் என்ற கொடியின்  கீழ் ஒரே உம்மாவின் இணையுங்கள் .பிரிந்து  விடாதீர்கள் பிரித்து விடுவீர்களேயானால் அல்லாஹ் மேலும் பல கொடுங்கோலர்களை அனுப்ப்புவான்  அவர்கள் உங்களை  உலகம் முழுவதும் அவமானப்படுத்தி துன்பப்படுத்துவார்கள்* .

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் நமக்கு எண்ணிக்கை முக்கியமா? தரம் முக்கியமா? என்றால் தரம்தான் முக்கியம் நமக்கு வெற்றி கொடுப்பவன் அல்லாஹ் தான் .
அல்லாஹுத்தஆலா நம்முடைய எண்ணிக்கையை பார்க்க மாட்டான் ஈமானிய தரத்தைத் தான் பார்ப்பான் நாம் ஒவ்வொருவருக்கும் ஈமானில் தரம் வேண்டும்.
ஸ்பெயின் நாடு இஸ்லாமிய ஆட்சியை விட்டும் பரி போனதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் அந்த மக்களிடத்தில் எண்ணிக்கை இருந்தது ஆனால் ஈமானில் தரமில்லை அதனால் அல்லாஹுதஆலா அந்த நாட்டை அவர்களிடமிருந்து கைப்பற்ற வைத்தான்.
நாம் எந்த அளவிற்கு ஒன்று சேர்ந்து போராடுகிறோமோ அதைவிட மிக முக்கியம் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள ஈமானும் அவன் நம்மை பார்க்கிறான் என்ற தக்வாவும் மிக முக்கியம்.
வெற்றியாளர்களை பற்றி அல்லாஹ் சொல்வான்

وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ                                                   

அல்லாஹ்விற்கும் அவனது தூதர்(ஸல்) அவர்களையும் பின்பற்றி அல்லா ரசூலுக்கு பயந்து வாழ்ந்து வெற்றியாளர்கள் என்ற பட்டியலில் நமது பெயரையும் சேர்க்கும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!!







No comments: