நம்முடைய மார்க்கத்தின் வழிகாட்டுதலின் படியும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு வாழ்ந்து காட்டிய வழியும், எந்த நேரத்திலும் பிறருடைய உள்ளத்தை கஷ்டப்படுத்திவிட கூடாது என்பது தான்.
எனவே நம்முடைய வார்த்தைகள் மிகவும் பக்குவமானதாகவும், நீதமானதாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் அல்லாஹ்வும் தனது அருள்மறையில் :
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ
(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். (33:70)
என்று கூறி நம்மை எச்சரிக்கிறான்.
நம்முடைய வார்த்தைகளால் மட்டுமல்ல, சிறு செயலும் கூட பிறரின் பார்வையில் அவருடைய உள்ளதை பாதிப்பதாக இருந்து விட கூடாது என்பதில் நமக்கு வழிகாட்டிய நம் மார்க்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது. அதனால் தான் ஒரு சகோதரனை பார்த்து நாம் புன்னகைக்கும் சிறு புன்னகையும் நமக்கு தர்மம் செய்த கூலியை பெற்று தரும் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நவின்றார்கள் :
قال رسول الله صلى الله عليه وسلم :« تبسمك في وجه أخيك صدقة».
ஏனென்றால் நாம் செய்யும் இந்த ஒரு செயலே, நாம் சந்திக்கும் அந்த நபரின் மீது நமக்கு எந்த விருப்பு வெறுப்பும் இல்லை, அவரின் மேல் நாம் முழு திருப்தியுடன் தான் இருக்கின்றோம் என்பதை அவருக்கு உணர்த்தி விடுகிறது.
அதற்கான சான்றாக, அல்லாஹ் தனது அருள்மறையில் சொல்லித்தரும், ஹஸ்ரத் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்று சம்பவமே நம் கண் முன்னாள் நிற்கின்றது.
حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْۚ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ
அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது.
அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார். (27:18 - 19)
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களுடைய வாழ்வின் பல்வேறு பகுதிகளில் மக்களிடத்தில் புன்னகையுடன் அணுகிய தருணங்களை அவர்களின் வாழ்க்கை சுவடுகள் நமக்கு தெளிவாக்குகிறது.
فعن عبد الله بن الحارث رضي الله عنه قال: ما رأيت أحدا كان أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم.
அண்ணல் நபி புன்னகைத்த சில தருணங்கள் :
فعن أنس بن مالك رضي الله عنه قال: بينما رسول الله صلى الله عليه وسلم ذات يوم بين أظهرنا إذ أغفى إغفاءة ثم رفع رأسه متبسما، فقلنا: ما أضحكك يا رسول الله؟ قال:« أنزلت علي آنفا سورة». فقرأ :( بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر* فصل لربك وانحر* إن شانئك هو الأبتر) ثم قال:« أتدرون ما الكوثر؟». فقلنا: الله ورسوله أعلم. قال:« فإنه نهر وعدنيه ربي عز وجل».
அண்ணலார் புன்னகைத்த அந்த தருணம் :
عن صهيب رضي الله عنه قال : قدمت على النبي صلى الله عليه وسلم وبين يديه خبز وتمر فقال النبي صلى الله عليه وسلم ادن فكل ، فأخذت آكل من التمر فقال النبي صلى الله عليه وسلم تأكل تمرا وبك رمد قال : فقلت إني أمضغ من ناحية أخرى فتبسم رسول الله صلى الله عليه وسلم " [ رواه ابن ماجة ]
அண்ணலாரும் ஒரு கிராமத்து மனிதரும் :
عن أنس بن مالك رضي الله عنه ، قال كنت أمشي مع رسول الله صلى الله عليه وسلم وعليه رداء نجراني غليظ الحاشية فأدركه أعرابي فجذبه جذبة شديدة ، قال أنس : فنظرت إلى صفحة عاتق النبي صلى الله عليه وسلم قد أثرت به حاشية الرداء من شدة جذبته ، ثم قال : مر لي من مال الله الذي عندك ، فالتفت فضحك ثم أمر له بعطاء " [ رواه البخاري
தோழரின் எண்ணமும் அண்ணலின் புன்னகையும் :
يقول فضالة بن عمير الليثي : قدمت على النبي صلى الله عليه وسلم عام الفتح وهو يطوف بالكعبة ، وكنت أريد قتله ، فلما اقتربت من الرسول صلى الله عليه وسلم قال لي : أفضالة ؟ قلت : نعم فضالة يا رسول الله ، قال : ماذا كنت تحدث نفسك ؟ قلت : لا شيء ، كنت أذكر الله ، قال : فضحك النبي صلى الله عليه وسلم ثم قال لي : استغفر الله ، ثم وضع يده على صدري ، فوالله ما رفعها حتى ما من خلق الله شيء أحب إليّ منه " [ الإصابة في معرفة الصحابة لابن رجب 8 / 6998 ]
தோழரின் கோரிகையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் புன்னகையும் :
عن أنس رضي الله عنه قال : أصاب أهل المدينة قحط على عهد رسول الله صلى الله عليه وسلم فبينما هو يخطبنا يوم جمعة إذ قام رجل فقال يا رسول الله هلك الكراع هلك الشاء فادع الله أن يسقينا فمد يديه ودعا ، قال أنس : وإن السماء لمثل الزجاجة فهاجت ريح ثم أنشأت سحابة ثم اجتمعت ثم أرسلت السماء عزاليها فخرجنا نخوض الماء حتى أتينا منازلنا فلم يزل المطر إلى الجمعة الأخرى فقام إليه ذلك الرجل أو غيره فقال يا رسول الله تهدمت البيوت فادع الله أن يحبسه فتبسم رسول الله صلى الله عليه وسلم ثم قال حوالينا ولا علينا ، فنظرت إلى السحاب يتصدع حول المدينة كأنه إكليل [ رواه أبو داود ]
அண்ணலின் துஆவும் அவர்களின் புன்னகையும் :
وعن سعد بن أبي وقاص رضي الله عنه قال : كان رجل من المشركين قد أحرق المسلمين ـ في غزوة أحد ـ فقال لي النبي صلى الله عليه وسلم " أرم فداك أبي وأمي ، قال : فنزعت له بسهم له نصل ، فأصبت جنبه فسقط وانكشفت عورته ، فضحك النبي صلى الله عليه وسلم [ رواه الطبراني في الكبير ] .
தங்களுடைய வாழ்வின் கடைசீ தருணத்திலும் கண்மணி நாயகம் ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் புன்னகைத்த முகத்துடனே தான் இருந்தார்கள்.
عن أنس بن مالك رضي الله عنه : أن المسلمين بينا هم في صلاة الفجر من يوم الاثنين وأبو بكر يصلي لهم لم يفجأهم إلا رسول الله صلى الله عليه وسلم قد كشف ستر حجرة عائشة فنظر إليهم وهم في صفوف الصلاة ثم تبسم يضحك " [ رواه البخاري ] .
மனிதன் எதற்காக புன்னகைக்கிறான் ?
فلماذا يبتسم الإنسان يا عباد الله؟: يبتسم الإنسان إذا كان مستبشرا متفائلا، راغبا في تحقيق النجاح والارتقاء، ويريد نقل مشاعره للآخرين، ولذلك كان رسول الله صلى الله عليه وسلم من أحسن الناس ثغرا. أي فما مبتسما.
புன்னகைப்பதின் பலன்கள் :
தர்மம் செய்த நன்மை :
أنها باب من أبواب الخير والصدقة " وتبسمك في وجه أخيك لك صدقة " [ رواه الترمذي ]
அனைவரின் பிரியத்தை பெறலாம் :
أنها سبب في كسب مودة الناس ومحبتهم وزرع الابتسامة على وجوههم " لن تسعوا الناس بأموالكم ، فليسعهم منكم بسط الوجه " [ رواه الحاكم ] .
மனதிற்கான அமைதி பெறலாம் :
فيها ترويح للنفس وإجمام للروح ودواء للهموم وذهاب للغموم " وأحب الأعمال إلى الله سرور تدخله على مسلم أو تكشف عنه كربة " [ رواه الطبراني في الكبير ]
சமுதாயத்தில் அமைதி நிலவும் :
تبعث على الاطمئنان بين المسلمين ، وتصفي القلوب من الغل والحسد وتجدد في النفس النشاط ، يقول علي بن أبي طالب رضي الله عنه " إن هذه القلوب تمل كمل تملّ الأبدان ، فابتغوا لها طرف الحكمة " .
இவை அனைத்தையும் காட்டிலும் ஈருலக சர்தார் கண்மணி இரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பின்பற்றி வாழ்ந்து அவர்களின் சுன்னத்தை ஹயாத்தாக்கிய கூலி நம் அனைவருக்கும் மறுமையில் கிடைக்கும்.
அல்லாஹு தஆலா அண்ணலாரை பின்பற்றி வாழ்ந்து, அவர்களின் வழியிலேயே மரணிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக ! ஆமீன் !
2 comments:
Masha allah
Masha Allah
Post a Comment