அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 7 March 2019

நட்புறவு பேணுவோம்





Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்


இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரை, எவர் ஒருவரையும் துன்புறுத்த  வழிகொடுப்பதில்லை. அது எந்த மார்க்கத்தை, மதத்தை பின்பற்றும் நபராக இருந்தாலும் சரி.   எதிரியாக இருந்தாலும் சரி. 

பிர்அவ்னிடம் அணுக அல்லாஹ் கூறிய வழிமுறை  : 


இந்த வழிமுறையை தான் அல்லாஹ், தானே கடவுள் என்று வாதிட்ட பிர்அவுனிடமும் கையாள சொன்னான். 

 اِذْهَبَاۤ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى‌ ‌ۖۚ‌‌‌‏ فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰ 

நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்.  (20 : 43-44)


பிர்அவ்ன் உடைய கொடூர செயல் : 


இந்த பிர்அவ்ன் சாதாரணமானவன் அல்ல. மூஸா அலைஹிஸலாம் அவர்கள் பிறக்கும் நிகழ்வை அறிந்து கொண்டு, அந்த ஊரில் பிறந்த, தொன்னூறாயிரம் ஆண் குழந்தைகளை கொன்று குவித்தான்.

وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ۚ وَفِي ذَٰلِكُم بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ 

அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. (2:49)

892 - وقد حدثنا عبد الكريم بن الهيثم, قال: حدثنا إبراهيم بن بشار الرمادي, قال: حدثنا سفيان بن عيينة, قال: حدثنا أبو سعيد, عن عكرمة, عن ابن عباس, قال: قالت الكهنة لفرعون: إنه يولد في هذا العام مولود يذهب بملكك. قال: فجعل فرعون على كل ألف امرأة مائة رجل, وعلى كل مائة عشرة, وعلى كل عشرة رجلا فقال: انظروا كل امرأة حامل في المدينة, فإذا وضعت حملها فانظروا إليه, فإن كان ذكرا فاذبحوه, وإن كان أنثى فخلوا عنها.  

(الأثر: 892 - وهذا كالذي قبله، موقوف، إسناده إلى ابن عباس صحيح. وقد رواه الطبري بهذا الإسناد، في التاريخ أيضًا 1: 225) 



அவர்களுடன் நட்புறவை பேண வலியுறுத்துகிறது. எல்லா சமய சூழ்நிலைகளிலும் பிறருடன் இணங்கி வாழவே வலியுறுத்துகிறது.


அண்ணலாரின் அணுகுமுறை  : 


நம் உயிரினும் மேலான, கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கை நெறியிலும் இதனையே நமக்கு முன்மாதிரியாக ஆகியுள்ளார்கள்.  அதன் சான்றாக, அண்ணலாரின் நுபுவத்திற்கு முன் உண்டான ஆரம்ப காலத்து வாழ்வையே சற்று நோக்கினால் நம்மால் அதனை விளங்கிக்கொள்ள முடியும். 

  வரலாற்று வரிகள் : 

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், குறைஷி குலத்தவருக்கு மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரியவராக காணப்பட்டார்கள். அவர்களில் யாரேனும் வெளியூருக்கோ, பயணத்திற்கோ சென்றால் அவர்களின் பொருட்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் தான் கொடுத்து வந்தார்கள். 

كانت قريش قبل البعثة تثق بمحمد صلى الله عليه وسلم فكانوا يحتفظون بأموالهم وودائعهم عند رسول الله حتى بعد معاداتهم له، بسبب دعوته لهم إلى الإيمان بالله تعالى وترك عبادة الأصنام، وترك صلى الله عليه وسلم علي بن أبي طالب رضي الله عنه في مكة بعد هجرته إلى يثرب ليردّ أمانات الناس التي كانت عنده صلى الله عليه وسلم وعندما ردّها لهم لحق برسول الله صلّى الله عليه و سلّم.



ரோம் நாட்டு அரசரின் ஆச்சர்யம்  : 


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பற்றி கேள்விப்பட்ட ரோம்  நாட்டு அரசரான ஹிர்கல், அண்ணலாரின் செயல்பாடுகளை கேட்டு அறிந்து ஆச்சர்யமுறுகிறார். 

سأل هرقل ملك الروم أبا سفيان قبل إسلامه عمّا يدعو إليه النبي محمّد صلّى الله عليه وسلّم فأجاب أبو سفيان: يأمر بالصلاة، والصدق والعفاف، والوفاء بالعهد، وأداء الأمانة. كان الرسول صلى الله عليه وسلم يوصي الناس بالأمانة، ويقرنها بالإيمان لأهميتها، ووردت آيات كثيرة في القرآن الكريم تحثّ على الأمانة، فهي تعود على الأمّة بالمنفعة والخير في الدنيا والآخرة.

எனவே, நாம் நட்புறவை பேணவேண்டும் என்பதற்கு முன்னாள், மக்களுக்கு மத்தியில் நம்பிக்கை, நாணயம் உள்ளவராக  இருக்க வேண்டும். அதனை கொண்டு தான் இருவருக்கு மதியிலானாலும், இரு நாடுகளுக்கு மத்தியில் ஆனாலும் நட்புறவை பேணமுடியும். 

மக்களுக்கு அண்ணலாரின் மீதிருந்த நம்பிக்கை உறுதி : 


ينما أعادت قريش بناء الكعبة من جديد بعدهدم جدرانها، وعندما وصلوا إلى مكان الحجر الأسود أرادت كلّ قبيلة أن تتشرف بوضعه في مكانه، فوقع بينهم الخصام الذي أوشك أن يتحوّل إلى حرب، فأشار بعضهم أن يقبلوا بتحكيم أوّل رجل يأتي عليهم فكان سيدنا محمّد صلى الله عليه وسلّم فلما رأوه هتفوا، وقالوا: هذا الأمين رضيناه، هذا محمد. فأمر بثوب فأخذ الحجر فوضعه في وسطه وأمر كلّ قبيلة ببعض من رجالها أن يحملوا من الثوب فيرفعوه وأخذه رسول الله صلى الله عليه وسلم فوضعه.


காபதுல்லாஹ் சுவர்  புதுப்பிக்கப்பட்டபோது, குறைஷிகளுக்கு மத்தியில் யார் ஹஜ்ருல் அஸ்வதை அதன் இடத்தில வைப்பது என்பதற்கான போட்டி, போர் தொடுக்கும் அளவுக்கு செல்லவிருக்கும் பொழுது, அனைவரும் காலையில் முதலில் வரும் நபரின் வாக்கை எடுத்து செயல் பட பேசி முடிவு செய்யப்பட்டது. அதுவோ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களாக இருந்த பொழுது, அனைவரும் மாட்டுக்கருத்தில்லாமல், அண்ணலாரின் நீதத்துவதை ஏற்றுக்கொண்டனர்.


அடுத்த வீட்டாருடன் அன்பை காட்ட சொல்லும் இஸ்லாம் : 

அண்டை வீட்டாருக்கு கூட நல்லதே நினைக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை அல்லாஹ் நமக்கு அருள்மறையின் மூலம் கட்டளை இடுகிறான் .

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ 

அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.  (4:36)

அண்டை வீட்டாருக்கு பரிசுகளை வழங்கி  சந்தோஷப்படுத்துவது  என்பது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நமக்கு காட்டித்தந்தது. 


روى البخاري عن عائشة قالت : قلت يا رسول الله ، إن لي جارين فإلى أيهما أهدي ، قال : إلى أقربهما منك بابا .
இப்படி சாதாரணமாகவே நாம் நம்மமுடைய அண்டை வீட்டாருடனும் அண்டை நாடுகளுடனும் நட்புறவை பேணவேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.


ஆனால், இதனை பின்பற்றுவது மாற்றார் சிலரது எண்ணத்திற்கு பயமாகவும் பகையாகவுமாகவே தெரிகிறது.

இதனை இந்த உலக அரசியல் அனைத்தும், அரசர்கள் அனைவரும் பின்பற்று நடந்தாலே, உலகில் எந்த வித போர் பிரச்சனைகளும் இருக்காது என்பது தான் உண்மை.

அல்லாஹ் நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தை முழுவதுமாக பின்பற்று நடந்து, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாழ்வியலை உலகம் அறிந்து அதனை பின்பற்றிட தௌபீக் செய்வானாக. ஆமீன் ! 

No comments: