சங்கைக்குரிய சிறந்த மாதங்களை அடைந்து மாதங்களில் சிறந்த ரமழான் மாதத்தை அடைய உள்ளோம். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும், அவர்களின் உற்ற தோழர்களும் ரஜப் மாதத்தை அடைந்துவிட்டாலே ரமழான் மாதத்தை எதிர்நோக்கி அதற்குரிய தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்துவிடுவார்களாம்.
அத்தனை சிறப்புள்ள மாதத்தை நோக்கி தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.
இந்த சிறந்த மாதங்களில் அல்லாஹ் ஒவொரு மாதத்திலும், தனி சிறப்புகளை வைத்தான். ரஜப் மாதத்தில் மிஃராஜ் இரவை வைத்தான். அதே போல நாம் இருக்கும் இந்த ஷாபான் மாதத்தில் பராஅத் இரவை வைத்தான், அடுத்து வரும் ரமழானுடைய மாதத்தில் லைலத்துல் கத்ர் இரவை வைத்து சிறப்பாக்கினான்.
சிறந்த 5 இரவுகள் ;
அல்லாஹ்விடத்தில் நம்முடைய தரம் உயரவும், நம்முடைய பாவங்களை மன்னிக்கவும், நமக்காக அதிகம் கிருபைகளை செய்யவும் இரவுகளை தான் தேர்ந்தெடுத்துள்ளான். அதனால் தான் சிறப்புமிக்க இரவுகளை அல்லாஹ் இந்த சிறப்புமிக்க உம்மத்தினர்களுக்கு தந்திருக்கிறான்.
رُوِي عن أبي أُمامة الباهليّ رضي الله عنه: (خمسُ ليالٍ لا تُرَدُّ فيهنَّ الدّعوةُ: أوّلُ ليلةٍ من رجب، وليلةُ النِّصفِ من شعبانَ، وليلةُ الجمعةِ، وليلةُ الفطرِ، وليلةُ النَّحرِ)
ஆனால் நாமோ, அவன் செய்த கிருபைகளையும் கொடுத்த அருள் வளங்களையும் மறந்து, இந்த துன்யாவின் ஆசையில் மூழ்கி இறைவனை மறக்கும் அளவுக்கு நம்முடைய செயல்கள் போய்க்கொண்டிருக்கிறது. (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்).குர்ஆனில் பராஅத் இரவு பற்றி :
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ (3) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (4) أَمْرًا مِّنْ عِندِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ (5) رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (6)
உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம்முடைய கட்டளையின்படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப் படுகின்றன. (நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம்முடைய தூதராக) அனுப்புகின்றோம். (அது) உங்களது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
குர்துபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் விளக்க உரை :
ويقال : ليلة النصف من شعبان ، ولها أربعة أسماء : الليلة المباركة ، وليلة البراءة ، وليلة الصك ، وليلة القدر . ووصفها بالبركة لما ينزل الله فيها على عباده من البركات والخيرات والثواب .
وروى قتادة عن واثلة أن النبي - صلى الله عليه وسلم - قال : أنزلت صحف إبراهيم في أول ليلة من رمضان وأنزلت التوراة لست مضين من رمضان وأنزلت الزبور لاثنتي عشرة من رمضان وأنزل الإنجيل لثمان عشرة خلت من رمضان وأنزل القرآن لأربع وعشرين مضت من رمضان . ثم قيل : أنزل القرآن كله إلى السماء الدنيا في هذه الليلة . ثم أنزل نجما نجما في سائر الأيام على حسب اتفاق الأسباب.
عنه أمّ المؤمنين عائشة رضي الله عنها: (كان رسولُ اللهِ -صلَّى اللهُ عليه وسلَّمَ- يصوم حتّى نقول: لا يُفطِرُ، ويفطرُ حتّى نقولَ: لا يصومُ، وما رأيتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ استكمل صيامَ شهرٍ قطُّ إلا رمضانَ، وما رأيتُه في شهرٍ أكثرَ منه صياماً في شعبانَ)
இவையெல்லாம் இந்த இரவில் தான் நடந்தது :
ஷஃபான் மாதத்திலேயே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அதிகம் நோன்பு வைப்பார்கள்:
عنه أمّ المؤمنين عائشة رضي الله عنها: (كان رسولُ اللهِ -صلَّى اللهُ عليه وسلَّمَ- يصوم حتّى نقول: لا يُفطِرُ، ويفطرُ حتّى نقولَ: لا يصومُ، وما رأيتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّمَ استكمل صيامَ شهرٍ قطُّ إلا رمضانَ، وما رأيتُه في شهرٍ أكثرَ منه صياماً في شعبانَ)
இந்த மாதத்தில் தான் நம்முடைய அமல்கள் அல்லாஹ்விடம் உயர்த்தப்படும் :
روى عنه أبو هريرة -رضي الله عنه- قال: (قلتُ يا رسولَ اللهِ: أراك تصومُ في شهرٍ ما لم أركَ تصومُ في شهرٍ مثلَ ما تصومُ فيه؟ قال: أيُّ شهرٍ؟ قلتُ: شعبانَ، قال: شعبانُ بين رجبَ ورمضانَ، يغفلُ الناسُ عنه، تُرفَعُ فيه أعمالُ العبادِ، فأُحِبُّ أن لا يرفع عملي إلا وأنا صائمٌ)
இரவின் சிறப்பு
அந்த இரவில் இபாதத் செய்வது :
رواه كردوس بن عمرو، حيث قال: (من أحيا ليلتَيِ العيدِ وليلةَ النِّصفِ من شعبانَ، لم يَمُت قلبُهُ يومَ تموتُ فيهِ القلوبُ)
அந்த நாளின் இரவில் அல்லாஹ் தன்னுடைய மன்னிப்பையும், ரிஸ்க்கையும், ஆபிய்யத்தையும் தன்னுடைய அடியார்களுக்கு தர தேடுகிறான் :
عن عليّ بن أبي طالب رضي الله عنه: (إذا كان ليلةُ نِصفِ شعبانَ، فقوموا ليلَها، وصوموا نهارَها، فإنَّ اللَّهَ تعالى ينزلُ فيها لغروبِ الشَّمسِ إلى سماءِ الدُّنيا، فيقولُ: ألا مستغفِرٌ لي فأغفرَ لهُ؟ ألا مسترزِقٌ فأرزقَهُ؟ ألا مبتلًى فأعافيَهُ؟ ألا كذا؟ ألا كذا؟ حتَّى يطلُعَ الفجرُ)
பாவமன்னிப்பு :
رُوِي عن أمِّ المؤمنين عائشة رضي الله عنه : (إذا كان ليلةُ النصفِ من شعبانَ، يغفرُ اللهُ منَ الذّنوبِ أكثرَ منْ عددِ شعرِ غنمِ كَلْبٍ)
இவர்களை தவிர அனைவர்க்கும் பாவமன்னிப்பு உண்டு :
ما رُوِي عن معاذ بن جبل رضي الله عنه: (يطَّلِعُ اللهُ إلى جميعِ خلقِه ليلةَ النِّصفِ من شعبانَ، فيَغفِرُ لجميع خلْقِه إلا لمشركٍ، أو مُشاحِنٍ).[٦]
அந்த இரவில் நாயகம் அவர்களின் இபாதத் :
ما رُوِي عن عائشة -رضي الله عنها- قالت: (قام رسولُ اللهِ -صلَّى اللهُ عليه وسلَّم- من اللَّيلِ يُصلِّي، فأطال السُّجودَ حتَّى ظننتُ أنَّه قد قُبِض، فلمَّا رأيتُ ذلك قُمتُ حتَّى حرَّكتُ إبهامَه فتحرَّك فرجعتُ، فلمَّا رفع إليَّ رأسَه من السُّجودِ وفرغ من صلاتِه، قال: يا عائشةُ -أو يا حُميراءُ- أظننتِ أنَّ النَّبيَّ قد خاس بك؟ قلتُ: لا واللهِ، يا رسولَ اللهِ، ولكنَّني ظننتُ أنَّك قُبِضْتَ لطولِ سجودِك، فقال: أتدرين أيُّ ليلةٍ هذه؟ قلتُ: اللهُ ورسولُه أعلمُ، قال: هذه ليلةُ النِّصفِ من شعبانَ، إنَّ اللهَ -عزَّ وجلَّ- يطَّلِعُ على عبادِه في ليلةِ النِّصفِ من شعبانَ، فيغفِرُ للمُستغفِرين، ويرحمُ المُسترحِمين، ويؤخِّرُ أهلَ الحقدِ كما هُم)
இந்த சிறப்பு மிக்க இரவில் உலக நாடுகளில் பல இடங்களிலும் மிகவும் சிறப்பாக இபாதத்துகள் செய்து நல்ல முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாம் சந்திக்கவிருக்கும் இந்த சிறப்பான இரவில் நல்ல முறையில் இபாதத்துகள் செய்து, அல்லாஹ், ரஸூல் மற்றும் அணைத்து வலிமார்கள் பொருத்தத்துடன் வாழ்ந்து மரணிக்கும் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ் அருள் புரிவானாக !! ஆமீன் !
2 comments:
அருமை
மாஷா அல்லாஹ்
அருமை
Post a Comment