அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Monday 4 December 2017

அன்புடன் அரவணைப்போம் - அண்ணல் நபி ﷺ வழியில்



Like Us  : பிலாலியா உலமா பேரவை - முகநூல் பக்கம்

அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமான இஸ்லாம் எல்லா செயல்களிலும் அன்பையும் அரவணைப்பையும் கற்றுத்தருகிறது. 

اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்.  3:19.

அது எந்த தரப்பினராக இருந்தாலும் சரி, எந்த சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி. அனைவரிடத்திலும் அன்புடன் நடக்குமாறு கற்றுத்தருகிறது. 

குர்ஆனாகவே வாழ்ந்து காட்டிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும், அதைத் தான் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். பிற சமயத்து மக்களாக இருந்தாலும், இஸ்லாமிய மார்கத்தினராக இருந்தாலும் அன்புடன் ஒன்றிவாழ்வதை தான் கற்றுத்தருகிறது. 

அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொள்வது, அனாதைகள், ஏழைகள், சிறைவாசிகள் போன்றோருக்கு உதவி செய்வது, இவற்றை தான் நம் மார்க்கம் கற்றுக்கொடுக்கிறது. நம்முடைய வாழ்வை நல்ல முறையில் பிற மக்களுடன் ஒன்றி வாழ கற்றுத்தருகிறது. 

பிற மக்களுக்கு உணவு வழங்குவது : 


وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏ 

அன்றி, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். (76 : 08)

ثنا عبيد بن غنام، ثنا أبو بكر بن أبي شيبة، ثنا يعلى بن عبيد، عن الحجاج بن دينار، عن محمد بن ذكوان، عن شهر بن حوشب، عن عمرو بن عبسة السلمي قال: أتيت النبي صلى الله عليه وسلم فقلت: ما الإسلام؟ قال: «إطعام الطعام، ولين الكلام»، قلت: فما الإيمان؟ قال: «الصبر والسماحة»

உங்களில் சிறந்தவர் பிறருக்கு உணவளிப்பவரே ! 

- ثنا عبد الله بن أحمد بن حنبل، ثنا مصعب بن عبد الله الزبيري، ثنا أبي، عن زيد بن أسلم، عن أبيه، عن صهيب بن سنان قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «خياركم من أطعم الطعام».

மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த சமயத்தில் முதன்முதலில் நாயகம் ஸல்லல்லாஹி அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்களுக்கு சொல்லி தந்த செய்ய வலியுறுத்திய,  செய்திகளில் ஒன்று :


ن عبد الله بن سلام قال: لما قدم النبي صلى الله عليه وسلم المدينة انجفل الناس قبله فكنت فيمن خرج فلما نظرت إليه عرفت أن وجهه ليس بوجه كذاب، فكان أول ما سمعته يقول: «أطعموا الطعام، وأفشوا السلام، وصلوا الأرحام، وصلوا والناس نيام، تدخلوا الجنة بسلام»

மாற்று  மதத்தினரையும் மதிக்க கற்றுத்தரும் இஸ்லாம் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “ஒப்பந்தக்காரர் (இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிம் அல்லாத குடிமகன்) ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்துவிட்டாலோ, அவன் உரிமையைப் பறித்துவிட்டாலோ, அவன் சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்திவிட்டாலோ, அவனுடைய பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ, மறுமை நாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் சார்பில் நானே வாதிடுவேன்.” (நூல்: அபூதாவூத்) 

“ஒப்பந்தத்தில் உள்ள ஒருவரை (முஸ்லிமல்லாத குடிமகனை) யராவது கொலை செய்தால் அவர் சுவனத்தின் நறுமணத்தைக் கூட நுகμமாட்டார்.” (நூல் புகாரி, அபூதாவூத்) 

“அவர்கள் (இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிமல்லாத குடிமக்கள்) நம் அடைக்கலத்தில் உள்ளவர்கள். எனவே அவர்களின் உயிர் நம் உயிர் போன்றது. அவர்களின் சொத்தும் நம் சொத்து போன்றது.” (நபித்தோழர் கலீஃபா அலீ (ரலி) நூல் : அபூதாவூத்) 

ஏழைகளின் மீது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொண்ட பிரியம் : 



سنن الترمذي (2352) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا وَأَمِتْنِي مِسْكِينًا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ يَوْمَ الْقِيَامَةِ ). فَقَالَتْ عَائِشَةُ : لِمَ يَا رَسُولَ اللَّهِ ؟
قَالَ : ( إِنَّهُمْ يَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِأَرْبَعِينَ خَرِيفًا ، يَا عَائِشَةُ لَا تَرُدِّي الْمِسْكِينَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ ، يَا عَائِشَةُ أَحِبِّي الْمَسَاكِينَ وَقَرِّبِيهِمْ ، فَإِنَّ اللَّهَ يُقَرِّبُكِ يَوْمَ الْقِيَامَةِ ) .

فهذا يدل على أن المراد بالمسكنة هنا : قلة المال .
قال الحافظ ابن رجب : " وقد يطلق اسم المسكين ويراد به من استكان قلبه لله عز وجل ، وانكسر له ، وتواضع لجلاله وكبريائه وعظمته وخشيته ومحبته ومهابته ،

 وعلى هذا المعنى حمل بعضهم الحديث المروي عن النبي صلى الله عليه وسلم أنه قال: ( اللهم أحييني مسكيناً، وأمتني مسكيناً، واحشرني في زمرة المساكين )... وفي حمله على ذلك نظر ؛ لأن في تمام حديثه ما يدل على أن المراد به المساكين من المال ، لأنه ذكر سبقهم الأغنياء إلى الجنة

இஸ்லாம் கற்று தரும் சமூக நல்லிணக்கம் : 

சமூக நல்லிணக்கத்தை வெறும் தத்துவமாகப் போதிப்பதோடு இஸ்லாம் நின்றுவிடவில்லை. அதனைச் செயல் படுத்தியும் காட்டியது. 

பெருமானார் ஆட்சிபுரிந்த மதீனாவில் யூதர்களும் சிலைகளை வணங்கியவர்களும் இருந்தார்கள். மதீனாவின் அருகே நஜ்ரான் தேசத்தில் கிறிஸ்தவர்கள் இருந்தனர். பெருமானாரது ஆட்சிக்காலத்தில் எல்லா மதத்தவர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன. இஸ்லாத்தை அழிக்க, இஸ்லாமிய ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனையோர் எல்லா உரிமைகளையும் பெற்று மதச் சுதந்திரத்துடன் வாழ்ந்தனர். 

மதீனாவில் நபிகள் நாயகம் உருவாக்கிய அரசியல் சாசனத்தில் இடம் பெற்ற சில விதிகளைப் பாருங்கள்: 

1. உடன்படிக்கை செய்துகொண்ட யூதர்கள் எமது ஆதரவுக்குரியவர்கள். அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவர்களுக்கு அநீதி இழைக்கமாட்டோம். அவர்களது எதிரிகளுக்கும் உதவ மாட்டோம். 

2. யூதர்கள் அவர்களின் சமயத்தின்படி நடப்பார்கள். முஸ்லிம்கள் அவர்களது சமயத்தின்படி நடப்பார்கள். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்) 

கி. பி. 630-இல் நஜ்ரான் நாட்டுக் கிறிஸ்தவர்களுடன் நபிகள் நாயகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் சில பகுதிகள் வருமாறு: 

நஜ்ரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் குடிமக்களின் உயிர், நிலம், உடைமைகள், வணிகம், மதம், வணங்கப்படும் சிலைகள் ஆகிய அனைத்தும் இறைவன் மற்றும் இறைத்தூதரின் பாதுகாப்பில் உள்ளன. 

அவர்களின் தற்போதைய நிலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது. அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட மாட்டாது. எந்த பிஷப்பும் பிஷப் அந்தஸ்திலிருந்தும், எந்தத் துறவியும் துறவு நிலையில் இருந்தும், தேவாலயங்களில் பொறுப்பிலுள்ளவர்கள் எந்தப் பொறுப்புகளிலிருந்தும் அகற்றப்படமாட்டார்கள். அவர்கள் அக்கிரமம் செய்ய லாகாது; அவர்கள் மீதும் அக்கிரமம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. 

பெருமானாரின் இந்த வாக்குறுதி உண்மையில் நிறைவேற்றப் பட்டது என்பதற்குச் சான்று பகர்கின்றார் வரலாற்று ஆசிரியர் கிப்பன். 

To his Christian subjects Muhammad readily granted the security of their persons, their freedom, their trade, their property, their goods and the tolerance of their worship. 

“முஹம்மது, தமது ஆட்சிக்கு உட்பட்டிருந்த கிறிஸ்தவ குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளித்தார். வணிக உரிமை, சொத்து உரிமை, வழிபாட்டுரிமை ஆகியவற்றை வழங்கினார். 

(The History of the Decline and fall of the Roman Empire p.p. 269 & 270 ) 

இதுபோலவே நபிகள் நாயகத்தின் தோழர்களான கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்திலும் இதே அணுகுமுறைகளே பின்பற்றப்பட்டன. அவர்களின் தேவாலயங்களோ வழிபாட்டுத் தலங்களோ இடிக்கப்படவில்லை. கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை. 

ஏழைகளுடனும், அனாதைகளுடனும் ஒன்றி உதவி செய்து  வாழ்வதற்கான மார்க்கம் கற்றுத்தரும் 7உபதேசங்கள்  :


المجتمع المحيط بنا مليء بالمحتاجين من الفقراء والمساكين ، وهم بحاجة الى الاهتمام بهم والعطف عليهم كما أمرنا الإسلام ،فالفقر ليس عيبا، ولا يعني أن ولد الإنسان فقيرا أن يهان .. خاصة أن الفقير ليس فقير المال والهندام بل فقير الدين والعقل، والرسول صلي الله علي وسلم وصانا بالإحسان في التعامل مع الفقراء والمحتاجين.

تعالوا بنا لنرى كيف كان عليه الصلاة والسلام يتعامل معهم وكيف أمر بذلك .

النصيحة الأولى :  صاحبوا الفقراء واجلسوا معهم :
فلا نعتبرهم فئة مهمشة نزدريهم بل على العكس من ذلك ينبغي أن يلقوا منا كل احترام وتقدير ، فقد قال صلى الله عليه وسلم : (أحبوا الفقراء وجالسوهم). رواه الحاكم . وقد قال صلى الله عليه وسلم : (أبغوني في الضعفاء فإنما ترزقون وتنصرون بضعفائكم)رواه الحاكم وأبو داوود والترمذي واحمد(صح).

النصيحة الثانية : لا تهزأ ولا تسخر من فقير ولا تزدريه فلعلك تكون في لحظة ما مثله أو على الأقل يمر بك موقف تحس فيه أنك واحد من الفقراء لذلك قال تعالى ( فأما اليتيم فلا تقهر   وأما السائل فلا تنهر ) .

قال عليه الصلاة والسلام : : «ألا أخبركم بخير عباد الله، الضعيف المستضعف ذو الطمرين، لا يؤبه له، لو أقسم على الله لأبرَّه .
النصيحة الثالثة : ساعد الفقراء والمساكين والمحتاجين بقدر ما تستطيع بمال أو بأن تحث الناس رعلى مساعدتهم أو بتبني مشاكلهم وهمومهم وغمومهم ، لذلك كان عليه الصلاة والسلام وطالما رآه الناس يسير مع المسكين، أو مع العبد، أو مع الأرملة، أو مع أيٍّ من الضعفاء.. يسمع منهم، ويخفف عنهم، ويقضي حوائجهم.

 فقد حدَّث بعض أصحابه قال: «كان رسول الله (صلى الله عليه وسلم) لا يأنف ولا يستكبر أن يمشي مع الأرملة والمسكين والعبد، حتى يقضي له حاجته» .

النصيحة الرابعة : أيها الأقوياء رفقاً بالضعفاء  : كان (صلى الله عليه وسلم) يوصي الأقوياء من الناس بالضعفاء منهم. فقد روي عنه أنه قال لعمر بن الخطاب: «يا عمر، إنك رجل قوي، فلا تُؤذِ الضعيف»، وكان يراعي ذلك هو بنفسه،

 فقد حدَّث بعض أصحابه قال: «كان رسول الله (صلى الله عليه وسلم) يتخلف في المسير، فيُزجي الضعفاء، ويُردف، ويدعو لهم». بل هو كان يبحث عن الضعفاء ليضمهم إليه ويقربهم منه، ويرغِّب الناس بذلك حتى تعمَّ الرحمة بهم. فقد روي عنه أنه قال: «ابغوني الضعيف، فإنكم إنما تُرزقون وتنصرون بضعفائكم».

ولهذا كان (صلى الله عليه وسلم) دائم المشاركة للضعفاء في مناسباتهم.. ليعطي القدوة للناس من نفسه. حدّث بعض أصحابه قال: «كان رسول الله (صلى الله عليه وسلم) يأتي ضعفاء المسلمين، ويزورهم، ويعود مرضاهم، ويشهد جنائزهم».

وأردفت: ولم تقتصر وَصاته (صلى الله عليه وسلم) برحمة الضعفاء على الصعيد الفردي فقط، بل هو أراد أن تعمَّ الرحمة بهم جميع الأمة عندما قال: «لا قُدِّست أمّة لا يعطى الضعيفُ فيها حقه غير مُتَعْتَع».

النصيحة الخامسة : إذا كان عندكم وليمة فادعوا إليها الفقراء فهم الأحق ولا تكن وليمتكم (شر الطعام) وهي الوليمة التي يدعى إليها الأغنياء ويترك الفقراء وقد قال صلى الله عليه وسلم : (شر الطعام طعام الوليمة يدعى إليها الأغنياء ويترك الفقراء). رواه البخاري
وجرب في حياتك أن تجد فقير فتأخذه معك ألى المطعم وتتناول معه وجبة غداء مثلا ستجد مقدار السعادة النفسية التي ترفل بها .

لنصيحة السادسة :  اسعوا على الأرملة والمسكين وانفقوا عليهم وأعطوهم مايحتاجون وابشرو بالأجر والثواب عند الله وتأملا هذا الحديث في ذلك فقد قال صلى الله عليه وسلم : (الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل والصائم النهار). رواه البخاري

النصيحة السابعة : إياكم أن تحسسوهم بالدونية فتمنون عليهم فقد قال تعالى :  (قولٌ معروف ومغفرة خير من صدقة يتبعها أذى).


அனாதை குழந்தைக்கு  ஆதரவு தந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் :


خرج الرسول يوما لاداء صلاة العيد فرأى اطفالا يلعبون ويمرحون ولكنه رأى بينهم طفلا يبكي وعليه ثوب ممزق فاقترب منه وقال (( مالكَ تبكي ولاتلعب مع الصبيان))؟؟
فاجابه الصبي : ايها الرجل دعني وشأني ، لقد قتل ابي في إحدى الحروب وتزوجت امي فأكلوا مالي واخرجوني من بيتي فليس عندي مأكل ولامشرب ولاملبس ولابيت آوي إليه !! فعندما رايت الصبيان يلعبون بسرور تجدد حزني فبكيت على مصيبتي .
فأخذ الرسول بيد الصبي وقال له : (( اما ترضى ان اكون لك ابا وفاطمة اختا وعلي عما والحسن والحسين اخوين ؟؟؟))
فعرف الصبي الرسول وقال : كيف لا ارضى بذلك يارسول الله !!
فاخذه الرسول (صلى الله عليه وسلم) الى بيته وكساه ثوبا جديدا واطعمه وبعث في قلبه السرور . فركض الصبي الى الزقاق ليلعب مع الصبيان . فقال له الصبية : لقد كنت تبكي فما الذي جعلك ان تكون فرحا ومسرورا ؟؟؟
فقال اليتيم : كنت جائعا فشبعت وكنت عاريا فكُسيت وكنت يتيما فأصبح رسول لله ابي وفاطمة الزهراء اختي وعلي عمي والحسن والحسين اخوتي .

هذه القصة حذر منها حسن  مشهور في كتابه  كتب حذر منها العلماء , / 2 /212
و الشقيري في السنن و المبتدعات 
و هي تنسب إلى كتاب التحفة المرضية

وأصل القصة ما ثبت من حديث بشر بن عقربة ، أنه قال  استشهد أبي مع النبي صلى الله عليه وسلم في بعض غزواته ، فمر بي النبي صلى الله عليه وسلم وأنا أبكي ، فقال لي : « اسكت ، أما ترضى أن أكون أنا أبوك وعائشة أمك ؟ » ، قلت : بلى ، بأبي أنت وأمي يا رسول الله صلى الله عليه وسلم )) 

رواه البخاري في  التاريخ الكبير (1/ 395 ) وصححه الالباني رحمه الله في الصحيحة (9/ 29) لكن قام القصاص والوعاظ بتزيينه بالرواية الخيالية المكذوبة 

மாற்று மத மக்களிடமும் பிரியத்துடன் வாழ்ந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  :


معاملة النبي صلى الله عليه وسلّم لغير المسلمين أعطى الإسلام حريّة الدين لغير المسلمين، ولم يجبرهم على الدخول في الإسلام، وأعطاهم خياراتٍ في حال رغبوا العيش في الدولة ، ونظّم علاقاتِ المسلمين معهم من جميع الجهات، وأعطاهم الحريّة في ممارسة شعائرهم الدينيّة دونَ المساس بالإسلام والمسلمين، وأعطاهم الحماية لدور عبادتهم، فقد كان النبيّ ينهى أصحابه عن التعرّض لأصحاب الصوامع أو صوامعهم، كما كان يوصي قادة الجيوش في الحرب بعدم إلحاق الأذى بمن يتعبّدون في صوامعِهم. اتصفت معاملة النبيّ لغيرِ المسلمين بالعدل، فضمنَ لهم حقوقَهم ومنع جور أيّ مسلمٍ عليهم، وكان يحكمُ لغير المسلم على المسلم إذا كان صاحب حقٍ، وقد شدّد على احترام المعاهدات التي تُعقد، وجاءت الأحاديث الكثيرة التي تدلّ على عقوبة مَن يغدر بمواثيقه، وأمر برعاية أهل الذمّة الذين يعيشون داخل الدولة الإسلاميّة وسدّ حاجاتهم، وتكفُّل محتاجِهم وأعطاهم حريّة العمل والكسب. من الأمثلة على حُسن تعامل الناس من غير المسلمين أنّه مرّ يوماً بجانب أسيرٍ فناداه: يا محمّد يا محمّد فجاءه النبيّ وخاطبه: ما شأنُك، فأجابه الأسير بأنّه جائعٌ يريدُ الطعام، وبأنّه عطشان يريدُ الماء، فأمر النبيّ الصحابة بسقايته وإطعامِه. ومن صور إكرام الرسول أيضاً للميّتين من غير المسلمين بأنّه مرّت به جنازة يهوديّ، فقام لها فقيل له إنّها ليهوديّ، فقال -صلّى الله عليه وسلّم-:أليستْ نفْساً.


இப்படி அண்ணல் நபி ஸல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று வாழும், மற்றும் பிற மதத்தை சார்ந்த மக்களுடனும் பிரியத்துடன் வாழ்வதை தான் வாழ்ந்து காண்பித்து நம்மையும் செய்ய வலியுறுத்தினார்கள். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து வாழ்ந்தார்கள் அண்ணல் கோமான் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். 

இதுவே நாம் அனைவருடனும்  ஒன்றி வாழ வழிவகுக்கும். அல்லாஹ் நம்முடைய வாழ்வை அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களுடனும் சேர்ந்து, பிரியத்துடன் அவர்களுக்கு உதவி செய்து வாழக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக!! ஆமீன் ! 

No comments: