அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 2 March 2017

நீரின்றி அமையாது உலகு



'நீர்என்பது இயற்கையின் அரிய பொக்கிஷமாய் இப்பூமிக்கு இறைவன் தருகிற அல்ல அல்லஇறைவனால் மட்டுமே வழங்க முடிகிற மதுரமானஅமிர்தமாகும்.
நமதூர் ஏரி,குளம்குட்டைஆறுகிணறுஅருவி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு எங்கிருந்து நீர்பாய்ந்து வருகிறதுஅதன் ஆரம்ப ஊற்று எங்கிருக்கிறதுநாம் குடிக்கும் தூய்மையான தண்ணீர் நமக்கு எப்படி கிடைக்கிறதுஎன என்றாவதுநாம் சிந்திந்துப் பார்த்திருப்போமா‚ இல்லை.
இக்கேள்வியை நான் கேட்கவில்லை. இறைவன் 'நீர் எங்கிருந்து என்பதை மனிதர்கள் சிந்தித்துப் பார்க்கமாட்டார்களா‚' என நம்மைப் பார்த்துக் கேட்கிறான்.
{أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ (68)} [الواقعة: 68]
ஒருவேளை இறைவன் சொல்வதைப் போல் நாம் தீவிரமாக ஆராய்ந்திருப்போம் எனில் 'தண்ணீர்' - அது இறைவனிடமிருந்து வருகிற அளப்பெரிய அருட்கொடையாகும் என்ற பதிலே இவ்வுலகிற்கு கிட்டியிருக்கும்.
பிரபல்யமாய் நாம் அறிந்து வைத்திருக்கிற  நெகிழ்வான சரித்திரம் இது.
لما فتحت مصر أتى أهلها عمرو بن العاص حين دخل يوم من أشهر العجم، فقالوا: يا أيها الأمير إن لنيلنا هذا سنة لا يجري إلا بها، قال: وما ذاك؟ قالوا: إذا كان إحدى عشرة ليلة تخلو من هذا الشهر عمدنا إلى جارية بكر بين أبويها فأرضينا أبويها وجعلنا عليها من الثياب والحلي أفضل ما يكون ثم ألقيناها في هذا النيل، فقال لهم عمرو: إن هذا لا يكون أبدًا في الإسلام، وإن الإسلام يهدم ما كان قبله، فأقاموا والنيل لا يجري قليلاً ولا كثيرًا، حتى هموا بالجلاء، فلما رأى ذلك عمرو كتب إلى عمر بن الخطاب بذلك، فكتب له أن: قد أصبت بالذي قلت، وإن الإسلام يهدم ما كان قبله، وبعث بطاقة في داخل كتابه، وكتب إلى عمرو: إني قد بعثت إليك ببطاقة في داخل كتابي فألقها في النيل، فلما قدم كتاب عمر إلى عمرو بن العاص أخذ البطاقة ففتحها، فإذا فيها: من عبد الله عمر بن الخطاب أمير المؤمنين إلى نيل مصر: أما بعد، فإن كنت تجري من قبلك فلا تجرِ، وإن كان الله يجريك فأسأل الله الواحد القهار أن يجريك، فألقى البطاقة في النيل قبل الصليب بيوم، فأصبحوا وقد أجراه الله تعالى ستة عشر ذراعًا في ليلة واحدة، فقطع الله تلك السنّة عن أهل مصر إلى اليوم
[تاريخ الخلفاء ص: 103]

 இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது எகிப்தின் ஆளுநராக இருந்த அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்களிடம் எகிப்திய மக்கள் நைல் நதி வற்றிப் போய் விட்டதுஅதில் மீண்டும் தண்ணீர் ஓடவேண்டுமென்றால் இது மாதிரியான சடங்கு சம்பிரதாயத்தைச் செய்வது வழக்கம் என ஒருவித மூடப்பழக்கத்தை மேற்கொள்வதற்கு அனுமதி கேட்கிறார்கள். ஆளுநர் அவர்கள் அனுமதி தர மறுத்ததோடு,உடனே ஜனாதிபதி உமர் அவர்களுக்கு நைல்நதிப் பிரச்னைக் குறித்து கடிதம் ஒன்றை எழுதுகிறார்கள்.
அம்ரு இப்னு ஆஸே நல்ல காரியம் செய்தீர். உங்களுக்கு இத்தோடு ஒரு சிறிய கடிதம் ஒன்று எழுதியிருக்கிறேன். அதை நைல் நதியில் அஞ்சல் செய்துவிடுங்கள் என ஜனாதிபதியிடமிருந்து பதில் வருகிறது.
அமீருல் முமினீனான உமர் நைல் நதிக்கு எழுதிக் கொள்வது என்னவென்றால்,(உமருக்கு நைலின் சலசல.. மொழி எப்படித் தெரிந்ததோ‚ நைல் நதிக்கு ஜனாதிபதியின் உத்தரவு எப்படி விளங்கியதோ‚ வியப்பே நமக்கு மேலோங்கி நிற்கிறது இங்கு)  நைலே‚ நீ மட்டும் சுயமாக ஓடுவதாக இருந்தால் இத்தோடு உன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்.
மாறாக சர்வ வல்லமைப் படைத்த அல்லாஹ் தான் உன்னை ஓடச் செய்கிறான் என்றால்இறைவா‚ இந்த நைல் நதியை ஓடச் செய்வாயாக என இறைவனிடம் நாங்கள் பிரார்த்திக்கிறோம் என உமரால் எழுதப்பட்ட அத்துண்டுச் சீட்டை ஆளுநர்  அம்ரு இப்னு ஆஸ் நைல் நதியில் போடுகிறார்கள்.
ஆச்சரியம்..சனிக்கிழமை ஓரே இரவில் பதினாறு முழம் தண்ணீர் ஓடத் துவங்குகிறது. அன்று துவங்கிய சகாப்தம் இன்று வரை வற்றாத ஜீவநதியாக6853 கி.மீ பரப்பளவைத் தாங்கிய உலகின் மிக நீளமான நதி என வரலாற்றில் நைல்நதி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.
இறைவனை தவிர வேறு யாராலும் நீரின் ஒருதுளியைக் கூடத் தரவோஉற்பத்தி செய்திடவோ முடியாது. நீரின் வளமும் அதன் ஆதாரமும் முழுக்க முழுக்க சர்வ வல்லமை கொண்டஇறைவனின் கட்டுப்பாட்டின் பேரில் தான்இயங்குகிறது என்பதில் அணுவத்தனையும் மாற்றமில்லை என்கிறது இஸ்லாம்.
காரணம்உள்ளங்கைக்குள் உலகம் என்ற ரீதியில் அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியால் சிறிய அணுவில் தொடங்கி அண்டங்கள் வரை நமக்கு அத்துனையும் அத்துப்படி இன்று. 'ஒரு டெஸ்ட் டியூப் பேபியைப் போல',அறிவியலால் நமக்கும் நம் விவசாயத்திற்கும் தேவையான நிறைவான தண்ணீரை உற்பத்தி செய்து வழங்கிட முடியுமாஎன்றால் 'முடியாதுஎன்பதே இன்றைய நவீன அறிவியலின் முடிவாகும்.
. இரண்டு ஹைட்ரஜன் அணுஒரு ஆக்ஸிஜன் அணு என தண்ணீரின் (H2O)வேதியியல் மூலக்கூறுகளை இணைப்பதின் மூலம் சுயமாக நமக்குத் தேவையான தண்ணீரை நாமே உற்பத்தி செய்திட முடியுமாஎன்றால் நிச்சயம்;அதுவும் சாத்தியம் கிடையாதுஎன்கிறார்கள் விஞ்ஞானிகள்.
أَوَلَمْ يَرَوْا أَنَّا نَسُوقُ الْمَاءَ إِلَى الْأَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهِ زَرْعًا تَأْكُلُ مِنْهُ أَنْعَامُهُمْ وَأَنْفُسُهُمْ أَفَلَا يُبْصِرُونَ  -السجدة: 27
'வறண்ட பூமியின் பக்கம் நிச்சயமாக நாம் தண்ணீரை இழுத்து வந்துபிறகு அதனைக் கொண்டு (விவசாயப்) பயிரை நாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்து அவர்களுடைய கால்நடைகளும்அவர்களும் உண்ணுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கவில்லையாஎனவே அவர்கள் (இதனை மனிதர்கள் சிந்திந்து) பார்க்கமாட்டார்களா?'என்கிறது குர்ஆன் (32:27).
மழை தருகிற மேகங்களை இறைவனே இழுத்து வந்துவிரும்பிய ஊர்களுக்கு தன் அருளாக மழைப் பொழியச் செய்கிறான் என்பதே குர்ஆனின் முத்தாய்ப்பான செய்தியாகும்.
பருவநிலைபுவி வெப்பமயமாகுதல் என இயற்கை நம்மீது தொடுத்திருக்கிற யுத்ததின் விளைவால்,பருவ மழையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் விவசாயம் தொடங்கி உலக வர்த்தகம் மற்றும் ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வரைஅனைத்திலும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது இன்று.
இப்படி உலகளவில் ஏற்பட்டிருக்கின்ற தண்ணீர் தட்டுப்பாடு நம் நினைப்பதைப் போல இயற்கையின் கோளாறால் அல்ல. மாற்றமாக இறைவன் தன் அடியார்களுக்கு தருகிறவெகுவாக உணர்ந்து கொள்ள முடியாத தண்டனைகளில் ஒன்றாகும் என்கிறது இஸ்லாம்.
உங்களின் பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பை கேளுங்கள். இறைவன் மன்னிப்பை வழங்கி தொடர்படியான மழைப் பொழிவைத் தருவான் என நபி நூஹ் (அலை) தன் சமூகத்திற்கு உபதேசிக்கிறார்கள்.மழை வேண்டி பிரார்த்திருக்கிற ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களும் இறைவனிடம் அதிகமாக பாவமன்னிப்பைக் கேட்டார்கள் என்பது வரலாறு.
வெறும் சூரிய உஷ்ணத்தின் காரணமாக தண்ணீர் திரவ நிலையிலிருந்து நீராவியாக மாறிகாற்றில் கலந்து மேல் சென்று மேகங்களாக உருவெடுத்துப் பின்புதூய்மையான மழைத் துளிகளாகப் பொழிகிறது. அத்தோடு நின்றுவிடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவியாகி.... என  இப்படி நீர் சுழற்சியினால் தான் மழையை நாம் பெறுகிறோம் என்பது அறிவியலாகும்.
மாறாகசாரலென நம்மையும் நம் மண்ணையும் குளிர்ப்பிக்கின்ற ஒவ்வொரு சிறு துளிகளும் நம்மின் மீது விழுகிற இறைவனின் அருள்மழையைத் தவிர வேறில்லை என்பது ஆன்மிகமாகும்.
சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதற்கு தேவைப்படுகிறது. அதுவே 1 கிலோ தானிய விளைச்சலுக்கு 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
பூமிப்பரப்பில் 70.7மூ சதவீதம் கடல் நீரால் சூழப்பட்டு இருந்தாலும் உலகில் கிடைக்கிற ஒட்டுமொத்த தண்ணீரில் 97மூசதவீதம் உப்புக் கரிக்கின்ற கடல் நீராகும்.
மீதமிருக்கிற 29.3மூ சதவீதம் மட்டுமான நிலப்பரப்பில் தான் நமக்கு தேவையான தண்ணீரை நாம் பெற்றாக வேண்டும். அதில் 1.6மூ நிலத்தடி நீராகும். 0.001மூவளிமண்டலத்தின் வாயுவு வடிவ நீராகும். 0.06மூ சதவீதம் குளம்குட்டைமற்றும் ஆற்று நீராகும். இன்னும் கொஞ்சம் பனிக்கட்டி உறைதலின் வழியாகவும் கிடைக்கிறது.
மிகச் சொற்பமாக கிடைக்கிற தூய்மையான தண்ணீரும் கூட இன்று...? 1950 ஆண்டில் 5694 கன மீட்டராக இருந்த தனிநபர் தண்ணீர் இருப்பு 2010 ஆம் ஆண்டில் 1074 கனமீட்டராக குறைந்து விட்டது.
குர்ஆனின் 67 அத்தியாயத்தில் உங்களுடைய தண்ணீர் பூமியில் உறிஞ்சப்பட்டு விட்டால்பிறகு பொங்கும் நீரூற்றை உங்களுக்கு கொண்டு வருபவன் யார்என்பதாக இறைவன் சவால் விட்டுச் சொல்கிறான்.
இந்த இறை வசனத்தை சற்றுக் கவனமாய் உள்ளார்ந்து உற்று நோக்கி வாசித்தோம் என்றால் நிச்சயம் நாம் தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்த பழகிக் கொள்வோம். வெகு விரைவில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தையும் தொடங்கிவிடுவோம்.
ஒருவேளை தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டப் பின்பும் அதைப் பற்றி கவலைப்படாமல் நாம் இருப்பதின் விளைவு என்ன தெரியுமா?  சுவாரஸ்யமான குழாயடி சண்டைகள் தொடங்கிமுல்லைப் பெரியாறுகாவிரிப் பிரச்னை என தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போரே மூண்டுவிடலாம்.
{وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ (30)} [الأنبياء: 30]
உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் தண்ணீரிலிருந்து ஆக்கினோம் என சொல்கிறான் இறைவன் (குர்ஆன் 21: 30). ஆக நீரின்று அமையாது உலகு என்பதே இறைவனின் படைப்பியல் கோட்பாடகும்.
தூய்மையான நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு மிச்சப்படுத்தி வைத்திருக்கின்ற தண்ணீரை தாகித்தவர்களுக்கு கொடுப்பது என்பது புண்ணியமாகும். ஹஜ்ஜிற்கு வருகிற மக்களுக்கு ஜம்ஜம் தண்ணீரைக் விணியோகிப்பது என்பது பொருமானாரின் வருகைக்கு முன்பிலிருந்தே அன்றைய அரபுலகின் அறப்பணியாகவும்பாக்கியம் நிறைந்த சேவையாகவும் செய்யப்பட்டு வந்துள்ளது.
 உண்மை தான். எந்த ஒரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் மற்றொருமுஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் 'சுவர்க்கத்திலிருந்து புனித நீரைத் தருவான்.என்றார்கள் நாயகம்.
நீரிலிருந்து பிறந்தவனே‚ நீ ஏன் நீராக இல்லைநீ மட்டும் நீராக இருந்தால்......
நீரைப் போல் எங்கே சுற்றி அலைந்தாலும்,  உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய் கொள்வாயாக‚ என்ற கவிக்கோவின் ஆலாபனைகளை நாம் வாழ்வின்இலட்சியமாக்குவோம்.
இறைவா‚ மறுமை நாளில் பெருமானாரின் ஹவ்லுல் கவ்தர் எனும் நீர் தடாகத்திலிருந்து நீர் அருந்தும் அரும் பெரும் பாக்கியத்தை எங்களுக்கும் தருவாயாக‚ என இறைவனைப் பிரார்த்திப்போமாக. ஆமீன்.



























No comments: