அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 1 May 2014

முதியோர்களை நேசிப்போம்



 அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
59:18. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்

அல்லாஹ் மனிதர்களை படைத்து அவர்களின் வாழ்கையை பல பருவங்களாக அமைத்து வைத்திருக்கிறான். அவனுக்கு அதிகமான அருட்கொடைகளை வழங்கி அவைகளை காலையிலும் மாலையிலும் குழந்தைபருவத்திலிருந்து முதுமைவரைக்கும் அனுபவிக்கசெய்திருக்கிறான்.

அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.  
اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ العَلِيمُ القَدِيرُ
30:54. அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக்கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக்கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்

அதாவது மனித படைப்பில் பல நிலைகளை உருவாகிவைத்திருக்கிறான். மனிதனை அல்லாஹ் மண்ணிலிருந்து படைக்கிறான். பிறகு அந்த மன்னை நீர்த்துளியாக ரத்தக்கட்டியாக, சதைகட்டியாக பின்பு அந்த சதைகட்டியை எலும்புகளாக மாற்றி அதில் தசைகளை இணைத்து உயிரையும் கொடுக்கிறான்.

பிறகு தாயின் கருவறையில் இந்த படிநிலைகளை கடந்த பிறகு ஒரு குழந்தையாக மனிதன் பூமிக்கு வருகிறான். குழந்தையாக இருக்கும் பொது அவன் ஒரு பலகீனமான படைப்பு. அவனால் ஒன்றும் செய்ய முடியாது. தன சுய தேவைகளை கூட அவனால் செய்து கொள்ள முடியாது. பிறகு அந்த குழந்தை மெல்ல மெல்ல வளருகிறது. சிறுவன், இளைஞன், வாலிபன் போன்ற பருவங்களை பெறுகிறான். வாளிபானாக வந்த பிறகு உடலால் பலத்தை பெறுகிறான். தன முளுதேவைகளை தன்னால் நிறைவேற்றி கொள்ளும் அளவிற்கு சக்தி பெற்று கொள்கிறான். போதிய அறிவு திறனும் அவனுக்கு கிடைக்கின்றது. பிறகும் அதே மனிதன் கொஞ்சம் காலம் போக போக முதுமை என்ற நிலை அடைந்து மீண்டும் பலகீனமான நிலைக்கு மாறுகிறான். ஒரு கட்டத்தில் முழு கிழட்டுதன்மையால் அவனால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு குழந்தை போன்ற நிலைக்கு மனிதன் மீண்டும் திரும்பிகிறான். அவன் முடிகள் நரைத்துவிடும், எலும்புகள் சோர்ந்துவிடும் , இரத்தங்களில் வேகம் இருக்காது, நோய்களும் அதிகரித்திருக்கும்.

எனவே குழந்தை பருவத்தில் எப்படி ஒரு மனிதனுக்கு  உதவிகள் தேவைப்பட்டதோ அது போல அவன் முதுமை பருவத்திலும் உதவிகளும் பராமரிப்பும் தேவை. முதியோர்களும் ஒரு குழந்தைகள் தான்.


நபி சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
إِنَّ مِنْ إِجْلاَلِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ
முடிகள் நரைத்த முஸ்லிமை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் செயல்களில் ஒரு செயலாகும்.


பெரியோர்களுக்கு மரியாதை செய்வதும் அவர்களுக்கு உதவுவது அவர்களை பராமரிப்பது நபிமார்களின் வழிமுறையாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் ஷுஐபு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு மகள்கள் சொன்ன செய்தியை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
قَالَتَا لا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
28:23,24அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள்.

முதியோர்களை மரியாதை செய்வது அழகிய பண்பு. அதை நம் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் தன வாழ்நாள் முழுக்க கடைபிடித்தார்கள்.

அபூபகர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் மகள் அஸ்மா ரலியல்லாஹ் அன்ஹா கூறுகிறார்கள்:
ஒரு முறை அபுபகர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தந்தை ( அபூ குஹாபா வயது முதிர்ந்தவர்) அவர்களை நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் அழைத்து வந்தார்கள் ( இஸ்லாத்தை எற்றுகொள்வதர்காக) அவர்களை பார்த்த நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் வயது முதிர்ந்த இவர்களை வீட்டிலே விட்டிருந்து வந்திருக்கலாமே நான் வந்து சந்தித்திருப்பெனே ? அதற்கு அபூபக்ர் ரலியல்லாஹ் அன்ஹு அவைகள் யா ரசூலல்லாஹ் நீங்கள் என் தந்தையை வந்து சந்திப்பதை விட என் தந்தை உங்களை சந்திப்பது தான் ஏற்றமானதாக இருக்கும் என கூறினார்கள். அபூ பக்ர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் தந்தையை நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் முன் அமரச்செய்து நெஞ்சில் தடவி இஸ்லாத்தை ஏற்றுகொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அபூ பக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை அபூ குஹாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்கள்.

நபிமார்களிடம் இருந்த இந்த குணம் சஹாபாகளிடமும் பிரதிபலித்தது.

அபூ சலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள். (ஒரு முறை) இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (வயது முதிர்ந்த) ஜைத் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஜீனியை (குதிரைக்கு மேல் விரிக்கும் விரிப்பு) எடுத்தார்கள். அதற்கு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்   (அதை செய்ய வேண்டாம்) விலகுங்கள் என்று சொன்னதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் இவ்வாறுதான் எங்களின் பெரியோர்களுக்கும், அறிஞர்களுக்கும் செய்வோம்.

அல்லாஹ்வின் அடியார்களே! வயது முதிர்ந்தவர்களை மரியாதை செய்வதும் அவர்களுக்கும் உதவிகள் செய்வதும் உயர்ந்த குணம்.

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். (ஒரு நாள் ) ஒரு வயது முதிர்ந்தவர் பெருமானார் சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்களை சந்திக்க வந்தார்கள். ஆனால் கூட்டத்தார்கள் அவருக்கு வழி விடாமல் பிற்படுத்தினார்கள். அப்போது நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் சொன்னார்கள் யார் சிறியோர்களுக்கு இரக்கமும் பெரியோர்களுக்கு மரியாதையும் செய்யவில்லையோ அவர்கள் நம்மை சார்ந்தவர்கள் அல்ல. எனவே வயது முதிர்ந்தவர்களுக்கு கண்ணியமும் நம்மால் முடிந்த உதவிகளையும், உபகாரங்களையும் செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் சொன்னார்கள் ஒரு இளைஞன் ஒரு முதியவரை அவரின் வயதிற்காக கண்ணியம் செய்தால் அல்லாஹ் அந்த இளைஞனுக்கு அவர் வயதில் கண்ணியம் செய்யும் வேறு ஒரு நபரை ஏற்படுத்துகிறான்

பெற்றோகளை கவனிப்பதும் அவர்களுக்கு உதவுவதும்  வயது முதிர்ந்தவர்களுக்கு உதவி செய்வதும் ஒன்றாகும்.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُوا إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاهُمَا فَلاَ تَقُل لَّهُمَا أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيماً* وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيراً
17:23,24. (நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!

இந்த வசனத்தில் அல்லாஹ் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதை குறிப்பிடும் பொது குறிப்பாக முதுமை காலத்தை குறிப்பிடுகிறான். காரணம் முதுமை காலத்தில் தான் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் உதவிகள் தேவைபைடுகின்றன.  எனவே பெற்றோர்களுக்கு குறிப்பாக வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வலயுருத்தி இங்கு சொல்லிக்காட்டுகிறான்.

பெரியோர்களை கவனிப்பது அவர்களுக்கு உதவுவது என்பது பல அம்சம். உதாரணமாக அவர்களின் நிலைகளை விசாரிப்பது, அவர்களுடன் பேசுவது, அவர்களிடமிருக்கும் அனுபவங்களை பெறுவது, அவர்களிடம் கதைகளை, அவர்கள் காலத்து தகவல்களை ஆவலுடன் கேட்பது போன்ற அம்சங்கள் உள்ளன.  பெரியோர்களால் செய்ய முடிந்த காரியத்தை நாம் துணை நின்று செய்வது அவர்களுக்கு பணிவிடைகள் செய்வதற்காக ஆட்களை நியமிப்பது போன்ற காரியங்கள் அவர்களுக்கு நல்ல ஆறுதல் அளிக்கும்.

முதுமையில் வயதானவர்கள் தங்களின் நிலைகளை பற்றியும் அனுபவங்களை பற்றியும் அடுத்தவர்களுடன் பரிமாறி கொள்ள விரும்புவார்கள். அவர்கள் மீது மற்றவர்கள் அன்பாக நடந்து கொள்வதை எதிர்பார்பார்கள். சிறு சங்கடங்களும் அவர்களின் உள்ளத்தை ஆழமாக காயப்படுத்தும். எனவே அவர்களை மிகுந்த அக்கறையோடும் அன்போடும் கவனிப்பது நம்மின் மீது ககமையாகும்.

முதியோகள் விஷயத்தில் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம் அவர்களுக்கு தேவையான பணத்தை செலவுகளுக்கு வழங்குவது. அவர்களை வயதான காலத்தில் சம்பாதிக்கு அனுமதிக்க கூடாது. நாம் குழந்தையாக இருக்கும் போது நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவர்கள் சம்பாதித்தார்கள் நமக்கும் வழங்கினார்கள். அதே போல அல்லது அதை விட அதிக அக்கரையுடம் நாமும் அவர்களின் செலவீனங்களுக்கு போதுமான பணத்தை கொடுக்க வேண்டும்.

முதியோர்கள் விஷயத்தில் கவனம் இல்லாமல் இருக்கும் மற்றொரு விஷயம் அவர்களின் எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் நாம் இடம் கொடுப்பதில்லை. முடியோர்களோடு இருக்கும்போது அவர்களுக்கு தோதுவான சூழல்களை அமைத்து தரவேண்டும். சில நேரங்களில் அவர்களுக்கு காற்றோட்டம் தேவை படலாம் அல்லது குளிர் சாதனங்கள் இயங்காமல் இருப்பதை விரும்பலாம். நம் வசதிக்காக அவர்களின் உடல் நலம் பாதிக்கும் வகையில் நாம் நடந்து கொள்ள கூடாது. அவர்களின் உடல் ஆரோக்கியத்தை நாம் கருத்தில் கொண்டு நாம் நடந்து கொள்ள வேண்டும். தேவையான சிகிச்சைகளை தேவையான நேரத்தில் செய்ய வேண்டும்.

குழந்தையாக இருக்கும்போது நமக்கு என்ன தேவை என்று நம்மிடம் கேட்காமலே நமக்கு தேவையானதை புரிந்து கொண்டு செய்தவர்களை நாம் அவர்கள் குழந்தையாக மாறும்போது புறந்தள்ளி விடுவது ஏன் ? அவர்களை உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடப்புது ஏன்? முதியோர்களும் வயதான குழந்தைகளே!

No comments: