அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 3 January 2013

இறை சட்டம் என்றும் நிறை சட்டமே


சமீபகாலமாக உலக அரங்கில் பரபரப்பாக பேசப்படும் அனைத்தும் மக்களின் கவனத்தையும் திசைதிருப்பியிருக்கும் செய்திதான் டெல்லி மாணவியின் கொடூர கற்பழிப்பும் பரிதாப சாவும் ஓடும் பஸ்ஸில் கதர கதர கற்பழிக்கப்பட்டு அவளுடைய அபத்தை சிதைத்து தெருவில் தூக்கி எறியப்பட்ட சம்பவம் அனைவரின் கண்களிலும் கண்ணீரை செய்தோடு மட்டுமல்லாமல் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நீத்த்தையும் நியாயத்தையும் தேடச்செய்திருக்கின்றது இதுவரைக்கும் எந்த ஊழல் அரசியலுக்கோ ஆட்யாளருக்கோ எதிராக கூடாத பெருங்கூட்டம் பாலியல் கொடுமையை எதிர்த்து கூடியிருக்கிறிதென்றால் சமுதாய மக்களின் உணர்வுகள் எந்தளவிற்கு காயப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நம்மால் உணரமுடிகிறது இளம்பெண்கள் கற்பழிக்கப்படுவதும் சில்மிஷங்களில் சிக்கித்தவிப்பதும் நேற்று இன்று தொடங்கிய ஒன்றல்ல பலகாலங்கள் கண்டும் காணாமலும் விடப்பட்டிருக்கின்றன சமீபத்திய புள்ளிவரகணக்கின் படி இந்தியாவில் 22நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்தகாரம் செய்யப்படுகிறாள்.

பலாத்காரமும் இந்தியாவின் நிலையும் 

 இந்த ஆண்டு தலைநகர் தில்லியில் மட்டும் 600க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் இதுபோன்ற கொடூரங்களுக்கும் கொடுமைகளுக்கும் பலிகேடாக்கப்படுவது இளம் பெண்கள் மட்டுமல்ல மூன்று வயதைகூட பூர்த்தி செய்யாத குழந்தைகளும் சேர்ந்துதான். ராஜஸ்தானில் வாழும் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பலியான அதிர்ச்சியூட்டும் தகவல் 66சதவீதம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறை வெளியிட்ட நெஞ்சை பதறவைக்கும் தகவல் இந்தியாவில் ஆண்டொன்னறுக்கு 7இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். இப்படி ஏராளமான கொடூர நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் அன்றாடகாட்சிகளாக அரங்கேறி வருகின்ற சூழ்நிலையில் நிகழந்த ஒன்றே டெல்லி மாணவி கற்பழிப்பும் பரிதாப சாவும். பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் சீர்கொட்டிறுக்கும் மேலை நாட்டினரும் கூட இந்தியாவை கற்புபயத்தோடு பார்கின்றது, ஓட்டுமொத்த இந்திய அரசாங்கமும் பாரதத்தின் குடிமக்களும் சரியான சட்டசீர்திருத்தத்தையும் நியாயத்தையும் தேடி அழைகின்றது. காமவெறியால் உந்தப்பட்டு அசூர அரக்கர்களாக திரியும் இவர்களை இனி தலைதூக்காமல் இருக்க என்ன வழி என்று முழு சமூகமும் யோசிக்கின்றது. ஆனால் பாரதநாடு முழுக்க 55ஆண்டுகாலமாக நடைமுறையிலிருந்து வரும் சட்டங்கள் இந்த நவீன நவயுகத்திற்கு சற்றும் பொருந்தாது என்ற தீர்மானத்தில் தீர்க்கமாக இருக்கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்குகின்றோம் என்ற பெயரில் காங்கிரஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது 30ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நாங்கள் சிபாரிசு செய்கிறோம் என்பதே. ஒன்றுக்கும் உதவாத அந்த வெற்றரிக்கையின்படி கற்பழித்தவனை திருத்த சிறைவாசம் அனுப்பினால் அவன் சிறைநாசம் தான் செய்துவருவான். பிக்பாக்கெட்டிற்காக உள்ளே சென்றவர்கள் கொல்லைகாரனாக வெளியே வருகின்றான், கொல்லைகாரனாக செல்பவன் கொலைகாரனாக வருகின்றான், ஈவ்டீஸிங் செய்து கைதாகிறவன் ரேப்பராக மாறுகின்றான். இப்படி சிறைச்சாலையின் பரிணாம வளரிச்சி கட்டுக்கடங்காமல் செல்கின்றபோது எப்படி டில்லி மாணவியின் சாவிற்கு மட்டும் 30ஆண்டு சிறைதண்டனை என்பது சரியான தீர்வாக அமையும்? எனவேதான் ஒரு காலத்தில் இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிறாண்டித்தனமானவை மனிதாபிமானத்தை குழி தோண்டடி புதைப்பவை என்றெல்லாம் வக்கனையாக பேசியவர்களும் கூட இன்றைக்கு மரணதண்டனையே சரியான தீர்வு என்று ஒன்றுபட்டுள்ளனர். பலாத்தகாரம் என்னும் கொடூர வாசலை அடைப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் ஒட்டுமொத்த உலகமும் கேள்விக்குறியாய் நிற்கின்றபோது இஸ்லாம் அதற்கான தீர்வுகளை தீர்க்கமாக வகுத்து தருகின்றது. இஸ்லாம் கடுமையான சட்டங்களை இயற்றி மட்டுமே சட்டவிரோதச் செயல்களை தடுப்பது கிடையாது மாறாக அந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு எதுவெல்லாம் துணையாய் நிற்குமோ அத்தகைய ஓட்டைகளையும், சந்து பொந்துகளையும் தேடி அடைக்கின்றது.

ஆங்கில்த்தில் ஒரு பல மொழி உண்டு       தமிழிலிலும் கூட சொல்லுவார்கள் தலை மேல் வெள்ளம் போன பிறகு ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன?. அத்தகைய நிலை தான் இன்று தொடர்கிறது. தவருக்குண்டான காரணங்களை தடுப்பதை முதன்மை படுத்த வேண்டும். அதை தான் இஸ்லாம் நமக்கு அழகாக போதிக்கின்றது. இதனை புரிந்து கொள்ளாமல் இஸ்லாமிய கோட்பாடுகள் இந்த காலதிற்கு பொருதாதவைகள் என்கின்ற வாதம் சற்றும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல.

பெண்கள் பாதுகாப்போடு வெளியே செல்லுதல்

இது போன்ற தவறுகள் சமூகத்தில் அரங்கேர முதன்மை காரணம் பெண்கள் வெளியில் சுதந்திரம் என்னும் பெயரால் தனியே சுற்றிதிரிவதே ஆகும்.
பெண்கள் வெளியில் பாதுகாப்பு துணை இல்லாமல் செல்வதால்தான் இது போன்ற காம கொடூரர்களின் கையில் பெண்கள் சிக்கி சீரழிவதை நாம் பார்கிறொம். நம் கண்ணுக்கு தெரிந்து ஒன்றுதான் ஆனால் இது போன்று ஒவ்வொரு நாளும் பல இடங்கலில் நடைபெருகின்றது. ஆனால் வாழ்கையை இழந்த அந்த பெண்களின் வாழ்வை போலவே அவர்களின் அந்த செய்தியும் இறந்து போய்விடுகின்றன.
எனவே பெண்கள்  வெளியே செல்லும் போது தனக்கு மஹரமான ஒருவனை அழைத்து பாதுகாப்புடன் செல்லவேண்டும் என கூருகிறது.
 عن أبي سعيد قال
     فصاعدا إلا ومعها أبوها أو أخوها أو زوجها أو ابنها أو ذو محرم منها "
سنن أبي داود (1/  539)


பெண்கள் ஆண்களுக்கு இணையாக நடக்க வேண்டும் என்று நினைப்பதால் வரும் பிரச்சனைகள் இவைகள். பெண்களுக்கென்று சில பொறுப்புகளும் ஆண்களுக்கென்று சில கடமைகளும் உண்டு அதை அவரவர்கள் புரிந்து கொண்டால் இத்தகைய  குழப்பங்கள் வராது.
குறிப்பாக புர்கா விஷயத்தில் தான். ஆண்கள் இருப்பதை போலவே பெண்களும் இருப்போம் என்பது அறிவுடைமையான பேச்சு அல்ல.பத்து வயது சிறுவன் வாங்கிய துணியின் விலை 1000ரூபாய் 15 வயது உள்ளவனுக்கு வாங்கிய துணியின் விலை 500 ரூபாய் என்பதால் 15 வயது உள்ளவன் எனக்கு 10 வயது சிறுவனின் சட்டை வேண்டும் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது. அது போல பெண்களுக்குரிய சலுகைகள் ஆண்களுக்கும் ஆண்களுக்குரிய சலுகைகள் பெண்கலுக்கும் பெரும்பாலும் ஒத்துப்போகாது. அது போலதான் இந்த புர்கா விஷயமும். ஆன்களுக்கும் பெண்களை பார்க கூடாது என்ற கட்டுபாடு உண்டு. ஆனால் பெணகளின் அழகு சில நேரங்கலில் ஆண்களை தவறின் பக்கம் தூண்டும். அதை தீர்த்து கொள்ள ஆண்களிடம் ஆற்றலும் இருக்கிறது என்பதால் பெண்கள் புர்கா அணிய சொல்லி இஸ்லாம் வழியுருத்துகிறது.
قوله تعالى {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ}، فقد قال غير واحد من أهل العلم إن معنى: {يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ}: أنهن يسترن بها جميع وجوههن ولا يظهرمنهن شيء إلا عين واحدة تبصر بها
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : الْعَيْنَانِ تَزْنِيَانِ ، وَاللِّسَانُ يَزْنِي ، وَالْيَدَانِ تَزْنِيَانِ ، وَالرِّجْلانِ تَزْنِيَانِ ، يُحَقِّقُ ذَلِكَ الْفَرْجُ أَوْ يُكَذِّبُهُ ه

பெண்களின் சப்தமும் மற்றவர்களின் உள்ளதை திசைதிருப்பும்.


عن جابر قال : (كنا إذا حججنا مع النبي صلى
الله عليه وسلم فكنا نلبي عن النساء ونرمى عن الصبيان
سنن الترمذي (2/  203)


பெண்களின் நறுமனப் பொருளின் தன்மை நிறம் தெரியலாம் ஆனால் அவர்களின் வாசனை வெளிப்படகூடாது. அவ்வாறு செய்வதாலும் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
 
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (3/  253، بترقيم الشاملة آليا)
يقول : سمعت أبا موسى الأشعري رضي الله عنه يقول : قال رسول الله صلى الله عليه و سلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا ريحها فهي زانية

ஷைதான் பெண்களை வைத்துதான் அதிகம் ஆண்களை வழிகெடுக்கிறான். வழி கெடுக்கும் வழியையும் தூண்டுகிறான்.
حَدَّثَنَا عَلِيُّ بن عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا حَجَّاجُ بن الْمِنْهَالِ، حَدَّثَنَا أَبُو هِلالٍ، عَنْ حُمَيْدِ بن هِلالٍ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ:"إِنَّ الْمَرْأَةَ عَوْرَةٌ، وَإِنَّهَا إِذَا خَرَجَتْ مِنْ بَيْتِهَا اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ فَتَقُولُ: مَا رَآنِي أَحَدٌ إِلا أَعْجَبْتُهُ، وَأَقْرَبُ مَا تَكُونُ إِلَى اللَّهِ إِذَا كَانَتْ فِي قَعْرِ بَيْتِهَا".

عن حذيفة قال قال رسول الله صلى الله عليه و سلم : النظرة سهم من سهام إبليس من تركها خوفا من الله آتاه الله إيمانا يجد حلاوته في قلبه
السنن الكبرى للإمام النسائي (9/  162)
، عن أبي سعيد ، عن النبي - صلى الله عليه وسلم - قال الدنيا خضرة حلوة وإن الله مستخلفكم فيها لينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء .
الأدب المفرد (ص: 17)
عن أبى هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقولما
تكلم مولود من الناس في مهد الا عيسى بن مريم صلى الله عليه وسلم
وصاحب جريج قيل يا نبي الله وما صاحب جريج قال فإن جريجا كان رجلا
راهبا في صومعة له وكان راعى بقر يأوي إلى أسفل صومعته وكانت امرأة
من أهل القرية تختلف إلى الراعى فأتت أمه يوما فقالت يا جريج وهو
يصلى فقال في نفسه وهو يصلى أمي وصلاتي فرأى أن يؤثر صلاته ثم صرخت
به الثانية فقال في نفسه أمي وصلاتي فرأى أن يؤثر صلاته ثم صرخت به
الثالثة فقال أمي وصلاتي فرأى أن يؤثر صلاته فلما لم يجبها قالت لا
أماتك الله يا جريج حتى تنظر في وجه المومسات ثم انصرفت فأتى الملك
بتلك المرأة ولدت فقال ممن قالت من جريج قال أصاحب الصومعة قالت
نعم قال اهدموا صومعته وأتوني به فضربوا صومعته بالفئوس حتى وقعت
فجعلوا يده إلى عنقه بحبل ثم انطلق به فمر به على المومسات فرآهن
فتبسم وهن ينظرن إليه في الناس فقال الملك ما تزعم هذه قال ما تزعم
قال تزعم أن ولدها منك قال أنت تزعمين ؟ قالت نعم قال أين هذا
الصغير قالوا هو ذا في حجرها فأقبل عليه فقال : من أبوك قال راعي
البقر قال الملك أنجعل صومعتك من ذهب قال : لا قال من فضة قال لا
قال فما نجعلها قال ردوها كما كانت قال : فما الذي تبسمت قال أمرا
عرفته أدركتني دعوة أمي ثم أخبرهم باب عرض الاسلام على الام
النصرانية
இஸ்லாமிய தண்டனைகள் கொடூரம் என்று சொல்லி கொண்டிருந்தவர்கள் கூட இன்று இஸ்லாதின் வழிக்கு வந்து விட்டார்கள். நம் தமிழக முதல்வரும் இத்தகைய தவருகளை செய்யும் ஆண்களின் ஆன்மையை இரசாயனத்தை பயன்படுதி நீக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். பல இவர்களை தூக்கிலிட  வேண்டும் என குறிப்பிடுகிறார்கள். இதை இஸ்லாம் கொஞ்சம் குற்ற பரிகாரத்தோடு  தவறுகள் நடக்காமல் இருக்கும் வழியையும் சொல்லிதருகிரது. அது தான் திருமணமானவனாக இருந்தால் கல்லால் அடித்து கொல்வது. இவ்வளவு நாளும் மற்றவர்களுக்கு நடந்தால் அது அனியாயம் என்று சொன்ன மக்கள் இன்று தங்கல் கண்கலுக்கு முன் அந்த கொடூரம் நடக்கும் போது தன்னை சார்ந்தவர்கள் பாதிக்க படுகிறார்கள் என வரும் போது இத்தகைய கொடூரம் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லை பொலும் ஆனால் அல்லாஹ் அனைவர்களின் சூழ்நிலைகளையும் அறிந்தவன் எனவே அவன் இயற்றிய சட்டம் என்றும் சரி என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இறை சட்டம் என்றும் நிறை சட்டமே இதனை இன்றைய சமுதாயம் உண்மைபடுத்தியிருக்கிறது.
قال الله تعالى ولكم في القصاص حياة يااولي الالباب