அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 8 November 2012

வாருங்கள் ஹாஜிகளை சங்கை செய்வோம்


அல்லாஹ்வின் வீட்டை தரிசித்துவிட்டு தங்களது தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் புனித ஹாஜிகளின் விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி நாம் யோசித்துப் பார்பதற்கு இந்த ஜும்ஆவில் கடமைப்பட்டுள்ளோம். 

1.கண்ணியப்படுத்த வேண்டும்

தாயகம் திரும்புகின்ற ஹாஜிகளை அந்தந்த முஹல்லாவாசிகள் கட்டாயம் அவர்களை கண்ணியப்படுத்துதலும் சங்கைசெய்தலும் வேண்டும். காரணம் அவர்கள் அல்லாஹ்வுடைய நேசர்கள், அன்று பிறந்த பாலகர்களை போன்றோர்கள், அப்பலுக்கற்றவர்கள், பாவத்தைவிட்டும் பரிசுத்தமானவர்கள், நபியவர்களின் வார்தைப்படி போர்செய்வதைக்காட்டிலும் ஹஜ் செய்வது சிறந்தது என்ற சிறப்பினை அடையப்பெற்றவர், எல்லாவற்றிகும் மேலாக அல்லாஹ்வின் இல்லத்தையும் நபியவர்களின் ரவ்லாவையும் தரிசித்து வந்தவர் ஹாஜிமார்கள் என்பதை நாம் நினைவு கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

ஹாஜிகளின் அந்தஸ்தை விளங்கிய அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ قَالَ حَدَّثَتْنَا عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلَا نَغْزُو وَنُجَاهِدُ مَعَكُمْ فَقَالَ لَكِنَّ أَحْسَنَ الْجِهَادِ وَأَجْمَلَهُ الْحَجُّ حَجٌّ مَبْرُورٌ فَقَالَتْ عَائِشَةُ فَلَا أَدَعُ الْحَجَّ بَعْدَ إِذْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

) صحيح البخاري(       ஆதாரம்
நபிகள் பெருமான் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் நாங்கள் உங்களோடு போர் செய்யலாமா என்று அனுமதி கேட்டபோது பெருமானார் உரைத்த பதில் போர்களில் சிறந்ததும் அழகானதும் ஹஜ் செய்வதாகவே இருக்கும் என்றார்கள். இதை கேட்டவுடன் அம்மையார் அவர்கள் கூறியது இந்த விஷயத்தை நபியவர்களிடமிருந்து கேட்டதற்கு பின் ஹஜ் செய்வதை விடமாட்டேன் என்றார்கள். அம்மையாரின் நாவிலிருந்து வெளியான வார்தை ஹாஜிகளின் பெருமைகளை நமக்கு நன்றாகவே உணர்துகின்றது. வரலாற்று ஆய்வாலர்கள் இப்படி ஓர் விஷயத்தை குறிப்பிடிகின்றார்கள் மிஃராஜிலே மூஸா (அலை) அவர்கள் பெருமானாரை தொழுகையை குறைக்கும்படி மீண்டும் மீண்டும் ஏன் அனுப்பினார்கள் நினைத்திருந்தால் ஒரே முறையில் இத்தனை ரக்ஆத்களாக குறைத்து வாருங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்விற்கு பதில் கூறுகின்றனர் அல்லாஹ்வை தரிசித்து வந்த நபியவர்களின் கண்களை தானும் தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார்கள் எனவே தான் மீண்டும் மீண்டும் அனுப்பினார்கள் என்ற நுட்பமான செய்தியிலிருந்து நமக்கு கிடைக்கின்ற தகவல் ஹாஜிமார்கள் அல்லாஹ்வின் புனித இல்லத்தை தரிசித்து வந்துள்ளனர் எனவே புனிதம் நிறைந்த அந்தக கண்களைக்காண வேண்டுமே என்கின்ற ஆவலில் அவர்களை சந்தித்து கண்ணியப்படுத்துதல் வேண்டும்.
எனவே தான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
عن عبد الله بن عمر رحمه الله قال : قال رسول الله صلى الله عليه و سلم :
 إذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره أن يستغفر لك قبل أن يدخل بيته فإنه مغفور له
)رواه احمد(
நீங்கள் ஹாஜிமார்களை சந்தித்தால் அவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் மேலும் அவர்களை முஸாஃபஹா செய்யுங்கள் மேலும் அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதற்கு முன்னால் உங்களுக்காக பாவமன்னிப்பு கேட்டகுமாரு கூறுங்கள் ஏனெனில் அவர்களுக்காக (பாவங்கள்)மன்னிக்கப்படுகின்றன என்கின்ற ஹதீஸின் மூலமாக நமக்கு கிடைக்கின்ற தகவல் பகட்டு, பிடிவாதம், ஆணவம், குரோதம், துவேஷம் என எது இருந்தாலும் அதனை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு அவர்களின் நன்மதிப்பையும், துஆவையும் பெற முயற்சித்தல் வேண்டும் என்பதனையே எடுத்துரைக்கின்றது. ஹாஜிகளை சந்தித்தல் அவர்களிடம் நமக்காக பாவமன்னிப்பு கேட்குமாறு கூறுவது என எல்லா விஷயங்களும் வருகின்ற ஹாஜிமார்களிடத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறையை போதிக்கின்றது.

ஜம்ஜம் நீருக்கு முக்கியத்துவம் தருதல்

எப்படி ஹாஜிகளை கண்ணியப்படுத்தவேணடுமோ அதேபோன்று அவர்கள் சுமந்து வரும் ஜம்ஜம் நீரையும் பேரித்தம் பழத்தையும் அலட்சியப்படுத்தாமல் அதன் மகிமை உணர்ந்து பருகுதல் அவசியமாகும். ஹாஜிகளின் வருகை என்றதும் நம் நினைவுக்கு வருவது ஜம்ஜம் நீரும், பேரித்தம் பழமும் தான். இவ்விரண்டும் இறக்குமதி செய்யப்பட்டு உலகம் முலுக்க கிடைத்தாலும் கூட இதனை முஸ்லிம்களின் பிரத்யேக உணவு என்றும் கூறலாம். இன்றைக்கும் இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் ஆரோக்யத்தையும், நோய் நிவாரணத்தையும் கண்டு விஞ்ஞானம் மலைத்துப்போய் நிற்கின்றது. எவ்வளவு பெரிய நவீனகருவிகளைக் கொண்டுவந்து ஆளத்தைத்தோண்டி தண்ணீரை இறைத்தாலும் அதனை வற்றச்செய்வதில் நவீனகருவிகளும், ஆற்றல் படைத்த விஞ்ஞானிகளும் தோற்றுப்போகின்றனர் என்பதை நாம் அறிவோம். இடையிடையே ஜம்ஜமைப்பற்றி அவதூறுகளை கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் அவையெல்லாம் முறியடிக்கப்பட்டன. இத்தகு ஜம்ஜம் கிணற்றின் ஆழம் ஐந்து அடியே ஆகும், 18 அடி அகலமும், 14 அடி நீளமும் கொண்டது. இப்ராஹிம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயிலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவன் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குழந்தை இஸ்மாயில் தண்ணீரின்றி தவித்தபோது தன்னுடைய காலால் அடித்த இடத்திலேயே ஜம்ஜம் தண்ணீர் ஊற்றெடுத்து ஓடியது என்பதை நாம் அறிவோம். இத்தகு பாக்கியம் நிறைந்த நீரை பருகும் போது அவர்களின் நினைவை நம் மனதில் ஓடவிடுவது கட்டாயம் ஆகும்.



பேரித்தம் பழத்திற்கு முக்கியத்துவம் தருதல்

அதே போன்று ஹாஜிகள் எடுத்துவரும் பேரித்தம் பழங்களை அதன் மகிமையை உணர்ந்து உண்ண வேண்டும். இன்றைக்கு உள்ள எல்லா நோய்களுக்கும் பேரித்தம் பழம் மருந்தாக உள்ளது. புற்றுநோயுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது ஏனெனில் இதில் மெக்னீசியம் சத்து உள்ளது.இரத்த சோகைக்கு பேரித்தம் பழம் மருந்தாகும் ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிக சதவீதம் உள்ளது.எலும்பு மற்றும் பற்களை வலுவாக்க உதவுகின்றது ஏனெனில் இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியச் சத்துக்கள் அதிகமாக உள்ளன.கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது காரணம் இதில் வைட்டமின் அதிக அளவில் உள்ளது. இப்படி ஏராளமான நோய் கொல்லிகளுக்கெல்லாம் பேரித்தம் பழம் மருந்தாக திகழ்வதினால் பெருமானார் (ஸல்) அவர்கள் பேரித்தம் பழத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி ஏராளமான இடங்களில் பேசியுள்ளார்கள்

عن عائشة رضي الله عنها ت قالت قال رسول الله صلى الله عليه وسلم : " إنَّ في عجوة العالية شفاءً" .الحديث
 رواه مسلم (14/3) و أحمد (6/152)
நிச்சையமாக அஜ்வதுல் ஆலியாவிலே (நோய்களுக்கு) நிவாரணம் இருக்கின்றது என்பதாக பெருமானார் கூறினார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ طَحْلاَءَ عَنْ أَبِى الرِّجَالِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا عَائِشَةُ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ يَا عَائِشَةُ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ أَوْ جَاعَ أَهْلُهُ ». قَالَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا.
أخرجه أبو داود (3/362 ، رقم 3831) ، والترمذى (4/264 ، رقم 1815) وقال : حسن غريب . وابن ماجه (2/1104 ، رقم 3327) ، والطبرانى (24/299 ، رقم 758) . وأخرجه أيضا : أحمد (6/188 ، رقم 25590) ، ومسلم (3/1618 ، رقم 2046) ، وابن حبان (12/5 ، رقم 5206(
ஆயிஷாவே எந்த வீட்டில் பேரித்தம் பழம் இல்லையோ அந்த வீட்டில் வசிப்பவர்கள் பசியோடு இருப்பார்கள் என பெருமானார் (ஸல்) கூறியுள்ளார்கள். வீடுகளில் பேரித்தம் பழம் இருக்க வேண்டியதை வலியுருத்தி நபிகளார் மொழிந்த இந்த ஹதீஸின் பிண்னணியை விஞ்ஞான ரீதியில் அலசிப்பார்த்தால் பேரித்தம் பழத்தின் அருமை புரியும். இன்றைய விஞ்ஞானிகள் மனிதன் உணவின்றி இறப்பதற்கு காரணத்தை கூறும்போது அவன் உடலில் தேவையான கலோரி இல்லாமையே அதற்க்கு காரணம் என்கின்றனர். அதே சமயம் மூன்று நாட்களுக்குத் தேவையான கலோரி ஒரே ஒரு பேரித்தம் பழத்தில் உள்ளது என்கின்ற பிரம்மிப்பூட்டும் விஷயத்தையும் சேர்த்தே தருகின்றனர். நாம் சொல்ல வருகின்ற செய்தி இது தான் ஒருவன் உணவில்லாமல் இறந்துபோகிறான் என்றால் அவன் பசியால் இறந்தான் என்பது அர்த்தமல்ல அவன் உடலில் தேவையான கலோரி இல்லாமையால் இறந்தான் என்பதே பொருள். அப்ப, அவனிடம் உணவில்லாவிட்டாலும் ஒரே ஒரு பேரித்தம் பழம் இருந்தால் போதும் அவன் இறப்பதையும் கூட தடுத்துவிடலாம். எனவே தான் பெருமானார் அவர்கள் ஒவ்வொரு வீட்டிலேயும் பேரித்தம் பழம் இருக்க வேண்டியதின் அவசியத்தையும் அதனை உண்பதை வலியுறித்தியும் நிறைய இடங்களில் பேசியுள்ளார்கள்.
பேரித்தம் பழம் கொடிய நோய்கொல்லிகளுக்கு மருந்தாக மட்டும் இல்லை ஓர் முஃமினுக்கு உதாரணமாகவும் திகழ்கின்றது
حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِىُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِى الْخَلِيلِ الضُّبَعِىِّ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمًا لأَصْحَابِهِ « أَخْبِرُونِى عَنْ شَجَرَةٍ مَثَلُهَا مَثَلُ الْمُؤْمِنِ ». فَجَعَلَ الْقَوْمُ يَذْكُرُونَ شَجَرًا مِنْ شَجَرِ الْبَوَادِى. قَالَ ابْنُ عُمَرَ وَأُلْقِىَ فِى نَفْسِى أَوْ رُوعِىَ أَنَّهَا النَّخْلَةُ فَجَعَلْتُ أُرِيدُ أَنْ أَقُولَهَا فَإِذَا أَسْنَانُ الْقَوْمِ فَأَهَابُ أَنْ أَتَكَلَّمَ فَلَمَّا سَكَتُوا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « هِىَ النَّخْلَةُ »( رواه المسلم)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமயம் ஸஹபாக்களிடம் கேட்டார்கள் எனக்கு ஒரு மரத்தை பற்றி கூறுங்கள் அந்த மரம் முஃமினுக்கு உதாரணமாக இருக்கும் என்று கூறினார்கள். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு மரத்தின் பெயர்களையும் கூறினர். அப்போழுது என் மனதில் அது பேரித்தம் பழமரம் என்று தோன்றியது என்னைவிட அந்தக் கூட்டத்திலே வயதில் பெரியவர்கள் இருந்தமையால் நான் மௌனமாக இருந்துவிட்டேன். எல்லோரும் அமைதியான போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது பேரித்தம் பழமரம் என்று கூறினார்கள்.
இங்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒர் முஃமினுக்கு உதாரணமாக பேரித்தம் பழத்தை குறிப்பிட்டிருந்தார்கள். நம்முடைய வாழ்கை பேரித்தம் பழம் போன்று இருக்க வேண்டும் அது எப்படி பிறரின் நோய்களுக்கு மருந்தாக அமைகின்றதோ அதே போன்று ஒரு முஃமின் மற்றவர்களின் இடர்களை நீக்குபவனாகவும், பிறரின் சுமைகளைச் சுமக்கும் சுமைத்தாங்கியாகவும் இருத்தல் வேண்டும்.
பேரித்தம் பழம் தான் அழிந்தாலும் பிறருக்கு பயன் தருகின்றது அதே போன்று ஒரு முஃமின் தனக்கு பிறர் துன்பங்களைக் கொடுத்தாலும் அவர்களுக்கு நல்லதையே செயதல் வேண்டும். அவ்வாரே நபிகளாரும் வாழ்ந்துக் காட்டினர். பேரித்தம் பழம் தருகின்ற இந்த வாழ்வியல் தத்துவம் அதனை நாம் உண்ணும்போது நம் மனதில் ஓடவேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகு வாழ்க்கையை நமக்கு வழங்கிடுவானாக ஆமீன்.





2 comments:

Sathak Maslahi said...

உங்கள் வலைப்பதிவு அமைப்பு அருமை.
பதிவுகளோ அதை விட அருமை

Anonymous said...

Masha allah