அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 22 November 2012

ஆஷூரா நாள்


நபி ஆதம் அலை அவர்களுடைய தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்
فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ (37)البقرة وكان ذلك في يوم عاشوراء في يوم جمعة (قرطبي)قيل: إن هذه الكلمات مفسرة بقوله تعالى :قَالا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (تفسير ابن كثير)وسُئِلَ بعضُ السلف عما ينبغي أن يقوله المُذْنِبُ فقال: يقول ما قاله أبواه :ربنا ظلمنا أنفسنا " الآية وقال موسى" رب أنى ظلمت نفسي فاغفر لي" [القصص: 16] وقال يونس " لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين"[ الانبياء 87
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் கரை ஒதுங்கிய நாள்
قال الله تعالي وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءَكِ وَيَا سَمَاءُ أَقْلِعِي وَغِيضَ الْمَاءُ وَقُضِيَ الأمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْدًا لِلْقَوْمِ الظَّالِمِينَ (44)(سورة هود) عن عبد العزيز بن عبد الغفور عن أبيه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: في أول يوم من رجب ركب نوح السفينة فصام هو وجميع من معه، وجرت بهم السفينة ستةَ أشهر، فانتهى ذلك إلى المحرم، فأرّسَت السفينة على الجوديّ يوم عاشوراء، فصام نوح ، وأمر جميع من معه من الوحش والدوابّ فصامُوا شكرًا لله (تفسير الطبري
நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் உடைய சமூகத்தினருக்கு இறங்க வேண்டிய வேதனை விலக்கிக் கொள்ளப்பட்ட தினம்
قال الله تعالي فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آَمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آَمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ (98)سورة يونس
عن ابن مسعود رض وغيره : أنّ قوم يونس كانوا بأرض نينوى من أرض الموصل ، فأرسل الله تعالى إليهم يونس عليه السلام يدعوهم إلى الإيمان فدعاهم فأبوا فقيل له : إنّ العذاب مصبحهم إلى ثلاثة أيام فأخبرهم بذلك فقالوا : إنا لم نجرب عليك كذباً ، فانظروا فإن بات فيكم تلك الليلة فليس بشيء وإن لم يبت فاعلموا أنّ العذاب مصبحكم.فلما كان في جوف تلك الليلة خرج يونس عليه السلام من بين أظهرهم فلما أصبحوا تغشاهم العذاب فكان فوق رؤوسهم قدر ميل. وقال وهب : غامت السماء غيماً عظيماً ، أسود هائلاً يدخن دخاناً عظيماً فهبط حتى غشى مدينتهم واسودّت سطوحهم فلما رأوا ذلك أيقنوا بالهلاك ، فطلبوا يونس بينهم فلم يجدوه وقذف الله تعالى في قلوبهم التوبة فخرجوا إلى الصعيد بأنفسهم ونسائهم وأولادهم ودوابهم ولبسوا المسوح وأظهروا الإيمان والتوبة وأخلصوا النية ، وفرّقوا بين كل والدة وولدها من النساء والدواب فحنّ بعضها إلى بعض ، وعلت أصواتها واختلطت بأصواتهم ، وعجوا وتضرّعوا إلى الله تعالى وقالوا آمنا بما جاء به يونس عليه السلام ، فرحمهم الله تعالى ، واستجاب دعاءهم ، وكشف عنهم العذاب بعد ما أظلهم. وكل ذلك يوم عاشوراء يوم الجمعة (تفسير السراج المنير)
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்வதற்கு தேர்ந்தெடுத்த நேரம்
قَالُوا يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ-قَالَ سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي..(يوسف98)قال طاوس أخر الاستغفار إلى وقت السحر من ليلة الجمعة فوافق ذلك ليلة عاشوراء (قرطبي
நபி மூஸா(அலை)அவர்களின் கைத்தடி ராட்சத பாம்பாக மாறியதும், அதனால் பலர் இஸ்லாத்தை ஏற்றதும் இதே நாளில்
ولقد أريناه آياتنا كلها فكذب وأبى -قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى -فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى (58) قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى (59)( طه) عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ:"الْيَوْمُ الَّذِي أَظْهَرَ اللَّهُ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ وَالسَّحَرَةُ هُوَ يَوْمُ عَاشُورَاءَ (تفسير ابن كثير)
நபி மூஸா (அலை) அவர்களும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்பட்டு, ஃபிர்அவ்னும் அவன் படையும் அழிக்கப்பட்ட தினம்
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ مَا هَذَا قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ فَصَامَهُ مُوسَى قَالَ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ (بخاري)
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் சம்பாஷனை புரிந்த தினம்
قال الله تعالي وَوَاعَدْنَا مُوسَى ثَلاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ(الأعراف)142 يعني : ثلاثين من ذي القعدة وعشر من ذي الحجة . ويقال : ثلاثين من ذي الحجة وعشر من المحرم . والمناجاة في يوم عاشوراء . وكانت المواعدة ثلاثين يوماً وأمر بأن يصوم ثلاثين يوماً ، فلما صام ثلاثين يوماً ، أنكر خلوف فمه فاستاك بعود خرنوب وقيل : بورقة موز ، فقالت له الملائكة : كنا نجد من فيك ريح المسك فأفسدته بالسواك فأمر بأن يصوم عشراً أخر (بحر العلوم للسمرقندي)
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்டதும் இந்த நாளில் தான்
قال الله تعالي وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا (157) بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا (158)( النساء) وقال الضحاك : رفعه في يوم عاشوراء بين صلاتي المغرب والعشاء(بحر العلوم للسمرقندي
.وذلك أن اليهود لما اجتمعوا على قتله هرب منهم ودخل في بيت ، فأمر ملك اليهود رجلاً يدخل البيت يقال له يهوذا ويقال ططيانوس ، فجاء جبريل عليه السلام ورفع عيسى عليه السلام إلى السماء ، فلما دخل الرجل إلى البيت لم يجده ، فألقى الله شبه عيسى عليه ، فلما خرج ظنوا أنه عيسى فقتلوه وصلبوه . ثم قالوا : إن كان هذا عيسى فأين صاحبنا؟ وإن كان هذا صاحبنا فأين عيسى؟ فاختلفوا فيما بينهم ، فأنزل الله تعالى إكذاباً لقولهم فقال : { وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ ولكن شُبّهَ لَهُمْ } بحر العلوم للسمرقندي
ஆஷூரா நாளில் என்ன செய்ய வேண்டும்?
عن ابْن عَبَّاسٍ رضي الله عنه يَقُولُ :مَا عَلِمْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ يَبْتَغِي فَضْلَهُ عَلَى غَيْرِهِ إِلاَّ هَذَا الْيَوْمَ لِيَوْمِ عَاشُورَاءَ أَوْ رَمَضَانَ (احمد)
عن ابْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولا حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مسلم1916
عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من وسَّعَ على عياله وأهلِه يوم عاشوراء وسع الله عليه سائر سنته رواه البيهقي
ஹூசைன் [ரலி] அவர்களின் பெயரால் அனாச்சாரங்கள் செய்யும் ஷியாக்கள் நம்மைச் சார்ந்தவர்களா?
عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ (نسائ) عن عائشة رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَوْ تُؤْمِنُ بِاللَّهِ وَرَسُولِهِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ إِلَّا عَلَى زَوْجِهَا مسلم2737
ஆஷூரா தினத்தில் நடைபெற்ற அற்புத சம்பவங்கள்
நபி ஆதம் அலை அவர்களுடைய தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் கரை ஒதுங்கியதும், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் முதன் முதலாக ஃபிர்அவ்னிடம் தன் முஃஜிஸாவை வெளிப்படுத்தியதும், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் சம்பாஷனை புரிந்ததும், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் காப்பாற்றப் பட்டு, ஃபிர்அவ்னும் அவன் படையும் அழிக்கப்பட்டதும், நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் உடைய சமூகத்தினருக்கு இறங்க வேண்டிய வேதனை விளக்கிக் கொள்ளப்பட்டதும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்ததும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திற்கு உயர்த்தப்பட்டதும் மேலும் நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் பிள்ளைகளுக்கு துஆ செய்வதற்காக தேர்ந்தெடுத்தது இந்த ஆஷூரா தினமாகும்
பனீ இஸ்ராயீல்களுக்கு பெருநாளாக விளங்கிய ஆஷூரா தினம்
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அறிவித்துள்ளார்கள்-
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்த போது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைப்பதைக் கண்டார்கள். இந்த நாளில் நோன்பு வைக்கிறீர்களே இது உங்களுக்கு எத்தகைய நாள்என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கேட்ட போது இந்த தினத்தில் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் கூட்டத்தினரையும் அல்லாஹ் காப்பாற்றி, பிர்அவ்னையும், அவனது கூட்டத்தினரையும் அல்லாஹ் மூழ்கடித்தான். அதற்கு நன்றிக்கடனாக மூஸா அலைஹிஸ்ஸலாம் நோன்பு வைத்தார்கள். எனவே நாங்களும் நோன்பு வைக்கிறோம்என்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படியானால் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பின்பற்றுவதில் உங்களை விட நாங்கள் தான் ஏற்றமானவர்கள்என்று கூறி தானும் நோன்பு வைத்து எங்களையும் நோன்பு வைக்க ஏவினார்கள் நூல் முஸ்லிம் ரமளான் நோன்புக்கு அடுத்த படியாக சிறந்த அந்தஸ்தில் ஆஷூரா நோன்பு
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ரமளானுக்கு அடுத்த படியாக நோன்புகளில் சிறந்தது ஆஷூரா நோன்பாகும். தொழுகைகளில் பஃர்ளுக்கு அடுத்து சிறந்த தொழுகை இரவில் நின்று தொழுவதாகும்[முஸ்லிம்] ஆஷூரா தினத்தில் மட்டும் தனியாக நோன்பு வைக்கலாமா?
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஷூரா தினத்தில் தானும் நோன்பு வைத்து எங்களையும் நோன்பு வைக்க ஏவினார்கள் அப்போது தோழர்கள் யாரஸூலல்லாஹ் இந்த நாளை யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப் படுத்துகிறார்களே என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இனி அடுத்த வருடம் நான் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளிலும் நோன்பு வைப்பேன் என்று கூறினார்கள் நூல் முஸ்லிம்
இப்னுல் ஹூமாம் [ரஹ்] அவர்கள் கூறினார்கள்-ஆஷூரா நாளுக்கு முன்போ அல்லது பின்போ ஒரு நாள் சேர்த்து நோன்பு வைப்பது முஸ்தஹப்பாகும்.
ஆஷூரா தினத்தில் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செலவு செய்வது
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்-எவர் ஆஷூரா தினத்தில் தன் குடும்பத்தினர்களுக்காக தாராளமாக செலவு செய்வாரோ அவருக்கு அந்த வருடம் முழுவதும் அல்லாஹ் செழிப்பை ஏற்படுத்துவான் (பைஹகீ)
ஆஷூரா தினத்தில் நடைபெறும் அனாச்சாரங்கள
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப்பேரர் ஹூஸைன் [ரளி] அவர்கள் இதே தினத்தில் தான் மக்கள் விரோத யஜீதுடைய ஆட்சியை எதிர்த்துப் போராடி கொடூரமாக ஷஹீதாக்கப் பட்டார்கள். இந்த தினத்தில் அந்த சம்பவத்தை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். எனினும் இந்த நாளில் அவர்களின் பெயரைச் சொல்லி ஷியாக்கள்மார்க்க விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கறுப்பு உடை அணிவது, தீ மிதிப்பது, சாட்டையால் அடித்துக்கொள்வது, பிளேடால் நெஞ்சைக் கீறிக்கொள்வது ஆகியவை மார்க்க விரோத செயல்களாகும்.
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்- எவர் துக்கம் அனுசரிப்பவராக கன்னங்களில் அறைந்து கொள்வாரோ, மேலும் சட்டையை கிழித்துக் கொள்வாரோ, மேலும் அறியாமைக்காலத்தின் சாப வார்த்தைகளைக் கொண்டு சபிக்கிறாரோ அத்தகையவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை நூல்-புகாரீ,முஸ்லிம்
ஷியாக்களைப் பின்பற்றி மற்ற முஸ்லிம்களிடமும் பரவியுள்ள மூட நம்பிக்கைகள்
ஹூசைன் ரளி அவர்களுக்காக துக்கம் கொண்டாடுவதாக நினைத்து சில முஸ்லிம்கள் முஹர்ரம் முதல் 10 நாட்கள் அசைவம் உண்ணக்கூடாது என்பதையும், கணவன் மனைவி சேரக்கூடாது என்பதையும் கொள்கையாக கருதுகின்றனர்.
அல்லாஹ் கூறுகிறான்ஈமான் கொண்ட விசுவாசிகளேஅல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கியதை நீங்களாகவே ஹராமாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் விரும்ப மாட்டான். [5-87 ]
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்-
அல்லாஹ்வையும்,மறுமை நாளையும் நம்பக்கூடிய ஒரு பெண் தன் கணவனுக்காக வேண்டியே தவிர வேறு எந்த ஒரு மய்யித்திற்காகவும் மூன்று நாளைக்கு மேல் துக்கம் அனுசரிக்க மாட்டாள். நூல்-முஸ்லிம் 2737
குறிப்பு- இமாம் ஹூசைன் ரளி அவர்கள் கொல்லப்பட்டதால் அந்த நாளை துக்கமான நாளாக கருதுவதை விட பல்வேறு நபிமார்களும் ஈடேற்றம் பெற்ற அந்த நன்னாளில் ஹூசைன் ரளி அவர்களுக்கு ஷஹாதத் எனும் பாக்கியத்தை அல்லாஹ் தந்து அந்த நாளை மேலும் கண்ணியப்படுத்தியுள்ளான் என்று கருதுவது பொருத்தமானதாகும்.

No comments: