அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 2 January 2020

இன்னல்கள் நீங்க இறை மன்னிப்பு தேடுவோம்






கால சூழ்நிலைகளும், நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களும் இஸ்லாமிய மக்களின் மிக பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது.  அதனை யாராலும் மறுக்க முடியாது.  ஆனால், எதனை அரக்கர்கள் வந்தாலும் இஸ்லாமிய மார்க்கத்தை அசைக்கவும் முடியாது, உண்மையான ஈமானுடைய சமூகத்தை  மாற்றவும் முடியாது. இதனையே அல்லாஹ் தன அருள் மறையில் : 

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந் நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்.   (61:8)


حكاه ابن عيسى . وسبب نزول هذه الآية ما حكاه عطاء عن ابن عباس : أن النبي صلى الله عليه وسلم أبطأ عليه الوحي أربعين يوما ; فقال كعب بن الأشرف : يا معشر اليهود ، أبشروا ! فقد أطفأ الله نور محمد فيما كان ينزل عليه ، وما كان ليتم أمره ; فحزن رسول الله صلى الله عليه وسلم ; فأنزل الله تعالى هذه الآية واتصل الوحي بعدها 


தற்போதய காலத்தில் நாம் நம்முடைய மார்க்கத்தின் பாதையை விட்டும் தடுமாறுவதை நம்மாலேயே உணர்ந்துகொள்ள முடியும். எத்தனையோ நல்லமல்கள் நம்மை விட்டும் மறைந்து வருகின்றது.

வீட்டில் விருந்தினர்களை உபசரிப்பது, எளியவர்களுக்கும் சேர்த்து உணவு சமைத்து கொடுப்பது, தேவை உடையவர்களுக்கு உதவுவது, அண்டை வீட்டாருடன் ஒன்றி வாழ்வது இப்படி எத்தனை எத்தனை நல்லமல்களை நாம் மறந்து நம்முடைய வாழ்வை தொடரருகின்றோம் ...

இன்னும் எதனை தீய அமல்கள் நம்மை அறியாமலேயே நம்முடைய வாழ்வில் கலந்து விட்டது. தொடர்ந்து கைபேசியிலேயே நேரத்தை கழிப்பது, நேரம் தவறிய தொழுகை, பெரியவர்களை மதிக்காமல் இருப்பது, தாய் தந்தையரை நோவினை செய்வது, இன்னும் எத்தனை எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

இதெல்லாம் ஒரு தவறா என்று நமக்கு நினைப்பு வரலாம், ஆனால் இது போன்ற ஒரு சிறு தவறுக்காக, அதுவும் ஒரு நபருடைய தவறுக்காக தான் அன்றைய   காலத்தில்  கூட்டத்தினருகே மழை வராமல் போனது என்பதை நாம் மறக்காமல் இருக்க வேண்டும்.


நம்மில் மாற்றம் வேண்டும் :


எத்தனை நாட்களுக்கு பிறரையே குறை கூறிக்கொண்டு காலத்தை கடத்த முடியும். சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நம்மில் எதனை எதனை தவறுகள், எத்தனை குறைகள் என்று. அதனை முழுவதுமாய் சரி செய்து முற்றிலும் இறைவனிடத்தில் தஞ்சமடைய வேண்டும். 


لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ 

(மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கின்றார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் யாதொரு வகுப்பாரையும் வேதனை செய்ய நாடினால், அதனைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனையன்றி வேறு யாரும் இல்லை


அன்று பத்ர் போரில் இஸ்லாமியர்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தவர்களாக எதிரிகள் கூட்டம் இருந்த பொழுதும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு காட்டி தந்த சக்தி வாய்ந்த ஆயுதம் ஸஜ்தா.

அந்த சக்தி வாய்ந்த ஆயுதத்தை நாம் கையில் எடுத்தால், நிச்சயம் வெற்றியை அல்லாஹ் நமக்கு கொடுப்பான்.

لما رأى الرسول -صلى الله عليه وسلم- عدد المشركين القادمين لملاقاة المسلمين خشي على أصحابه، فاستقبل القبلة وجلس في عريش كان قد نصب له في بدر ورفع يديه يناجي وبنادي ربه -عزّ وجلّ- فكان من دعاء النبي يوم بدر: "اللَّهُمَّ أَنْجِزْ لي ما وَعَدْتَنِي، اللَّهُمَّ آتِ ما وَعَدْتَنِي، اللَّهُمَّ إنْ تُهْلِكْ هذِه العِصَابَةَ مِن أَهْلِ الإسْلَامِ لا تُعْبَدْ في الأرْضِ، فَما زَالَ يَهْتِفُ برَبِّهِ، مَادًّا يَدَيْهِ مُسْتَقْبِلَ القِبْلَةِ، حتَّى سَقَطَ رِدَاؤُهُ عن مَنْكِبَيْهِ، فأتَاهُ أَبُو بَكْرٍ فأخَذَ رِدَاءَهُ، فألْقَاهُ علَى مَنْكِبَيْهِ، ثُمَّ التَزَمَهُ مِن وَرَائِهِ، وَقالَ: يا نَبِيَّ اللهِ، كَفَاكَ مُنَاشَدَتُكَ رَبَّكَ، فإنَّه سَيُنْجِزُ لكَ ما وَعَدَكَ، فأنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بأَلْفٍ مِنَ المَلَائِكَةِ مُرْدِفِينَ}[٥] فأمَدَّهُ اللَّهُ بالمَلَائِكَةِ".[٦] وما زال -صلى الله عليه وسلم- على تلك الحال حتى هرب المشركون ونصر الله تعالى عباده المؤمنون.[٧]


நிச்சயம் இது தான் நம்முடைய சிறந்த ஆயுதம். காலத்தில் இறங்கி போர் செய்வோம். ஆனால் மறுநிலையில், இறை சந்நிதியில் இறைஞ்சுவோம். அல்லாஹ் நமக்கே வெற்றியை கொடுப்பான்.

 ان شاء الله


No comments: