அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 4 May 2017

தொழிலாளர் நலம் பேணுவோம்


 மே தின வரலாறு

ஆண்டுதோறும் மே1 உழைப்பாளிகளின் தினமாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகின்றது.  இதன் வரலாற்றுப் பின்னணியை திரும்பிப் பார்க்கிறபோது நமக்கு கிடைக்கின்ற தகவல் உழைப்பாளிகளின் உரிமையை மீட்டெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றிக் கனிகளே இன்றைக்கு மேதினமாக அனுஷ்டிக்கப்பட்டும்கொண்டாடப்பட்டும் வருகின்றன. க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத்துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணி யாற்றிய தச்சுத் தொழிலா ளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும்பென்சில் வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும்இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத் தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்ட மைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.தொழில் நகரங்களான நியூயார்க்சிகாகோபிலடெல்பியாமில்விக்கிசின்சினாட்டிபால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழி லாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர் கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழி லாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத் தினால்அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வே லை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கிய து. மிச்சி கனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும்சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர். இப்போராட்டமே பிற்காலத்தில் மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
அன்று உழைப்பாகளின் உரிமைகளில் ஒன்றான அளவான வேலை நேரத்தை வரைமுறைப்படுத்தியதை நினைவுகூறும் பொருட்டு ஆண்டுதோறும் மே தினத்தை கொண்டாடுபவர்கள்இன்றைக்கு உழைப்பாளிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்அவர்களின் உரிமைகளுக்கும்உணர்வுகளுக்கும் எந்தளவிற்கு மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுகிறது என்பதைக் குறித்து யோசிக்க கடமைப்பட்டுள்ளனர். வாடிக்கையார்களுக்கு மத்தியில் உழைப்பாளர்கள் உதாசினப்படுத்தப்படுவதும்தன் சொந்த வேலைக்கான கைப்பாவையாக பயன்படுத்தப்படுவதும்,  சம்பளத்தை கொடுக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக நாம் இழுக்கின்ற இழுப்புகளுக்கெல்லாம் வலைந்தும் நெழிந்தும் கொடுக்கிற தலையாட்டி பொம்மைகளைப் போன்று நடத்தப்படுவதும் இன்றைக்கு வாடிக்கையாகிவிட்டன.  தொழிலாளிகளுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதில் அக்கறையும் ஆர்வத்தையும் செலுத்துகின்ற அரசாங்கம் தொழிலாளர்களின் உணர்வுகளை பேணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பரிபூரணமான தீர்வை தருகின்ற சட்டங்களோ தீர்மாணங்களோ இயற்றப்படவில்லை. இன்றைக்கு ஏ.சி ரூமில் 40ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறக்கூடிய உயர் தொழிலாளி செய்யக்கூடிய வேலையிலும் நிம்மதி இல்லை பிளாட்பார்மில் சாதாரண 100க்கும் 200க்கும் பொழப்பை நடத்துகிற தொழிலாளியின் வாழ்விலும் வேலையிலும் நிம்மதி கிடையாது. காரணம் சிறிய இடம் முதல் பெரிய இடம் வரையுள்ள முதலாளிகளின் தவறான புரிதல்கள்மூன்றாம் பட்ச மனிதர்களாக ஊழியர்களை  உற்றுநோக்குகிற விதம்தான் பெரியவன் அவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுநம்பிக்கையின்மை ஆகியவைகளே ஆகும். தன் நிறுவனத்திற்காக எவ்வளவு உழைத்தாழும் எங்கே அவன் முன்னேறிவிடுவானோ என்ற பயத்தில் அவனுடைய வளர்ச்சியை தடுக்கும் தடைகற்கலாகவே இன்றைய முதலாளிகள் செயல்படுகிறார்கள். வீட்டிலிருக்கும் பிரச்சனைகளின் பாரத்தை  இறக்குமதி செய்யப்படும் இடங்களாகவே இன்றைய ஊழியர்கள் உபயோகப்படுத்தப்படுகிறார்கள். பொறிந்து தள்ளுவதுஎரிந்து விழுவதுதன் கோபக்கனைகளை கக்குவது என முதலாளிகளின் அட்டகாசங்கள் எல்லையில்லாமல் நீழுகின்றன.
உழைப்பாளிகளின் நலனான சம்பளத்தைத் தாண்டிய உணர்வுகளை எப்படி மதிக்க வேண்டும்எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இஸ்லாம் அழகாய் எடுத்தியம்புகிறது. தொழிலாளியிடத்திலே கோபப்படாதேகடுகடுக்காதேகசப்பான வார்த்தைகளால் அவன் மனதை காயப்படுத்தாதேகட்டி அரவனைத்து வாழக் கற்றுக்கொள்அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமத்தி அவனை கஷ்டப்படுத்தாதே என்று உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களைவாழ்வியல் கோட்பாடுகளை இஸ்லாம் அழகாய் வகுத்துத் தந்துள்ளது. உழைப்பாளியின் வியர்வை உளர்வதற்கு முன்னால் அவனுடைய கூலியை கொடுத்துவிடு என்று பெருமானார் ஸல் அவர்கள் கூறிய வார்த்தைகள்  உழைக்கும் மக்களுக்குச் சேர வேண்டிய கூலியை தாமதப்படுத்தக்கூடாது என்பது மட்டுமல்ல அவர்களது கூலியை கொள்ளையடித்து விடவும் கூடாது என்கின்ற கருத்தையும் அடக்கியுள்ளது.


இஸ்லாம் உழைப்பாளர்களுக்கு வழங்கும் உரிமைகள்
சேரவேண்டிய கூலியை உரிய நேரத்தில் தாமதிக்காமல் கொடுத்துவிடு
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِىُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ سَعِيدِ بْنِ عَطِيَّةَ السُّلَمِىُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَعْطُوا الأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ ».
{ ابن ماجة}
உழைப்பாளியின் வியர்வை உளர்வதற்கு முன்பு அவனது கூலியை கொடுத்துவிடவும்.


ஏமாற்றப்பட்ட உழைப்பாளிக்காக நாளை நான் வாதிடுவேன்.

حَدَّثَنِى بِشْرُ بْنُ مَرْحُومٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِى سَعِيدٍ عَنْ أَبِى هُرَيْرَةَ - رضى الله عنه - عَنِ النَّبِىِّ - صلى الله عليه وسلم - قَالَ « قَالَ اللَّهُ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ ، رَجُلٌ أَعْطَى بِى ثُمَّ غَدَرَ ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ ، وَلَمْ يُعْطِ أَجْرَهُ »

{صحيح البخاري}

பெருமானார் ஸல் அவர்கள் நாளை நான் மூன்று நபர்களுக்காக வாதாடுபவனாக இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுவிட்டு அதில் ஒனறாக வேலை செய்ய ஒரு தொழிலாளியை நியமித்து அவனிடமிருந்து வேலையை பெற்றுக்கொண்டு பிறகு அவனுடைய கூலியை அவனுக்கு தராதவன்” என்பதையும் குறிப்பிடுவார்கள்.


மிதமிஞ்சிய வேலையை அவன் மீது நீ சுமத்தாட்டாதே



وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بُكَيْرَ بْنَ الأَشَجِّ حَدَّثَهُ عَنِ الْعَجْلاَنِ مَوْلَى فَاطِمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « لِلْمَمْلُوكِ طَعَامُهُ وَكِسْوَتُهُ وَلاَ يُكَلَّفُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا يُطِيقُ ».



{صحيح مسلم}

அவன் சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளிலிருந்து (அவன் மீது) சுமத்தாட்டப்படாது.

أعوذ بالله من الشيطان الرجيم {قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ القَوِيُّ الأَمِينُ * قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللهُ مِنَ الصَّالِحِينَ * قَالَ ذَلِكَ بَيْنِي وَبَيْنَكَ أَيَّمَا الأَجَلَيْنِ قَضَيْتُ فَلا عُدْوَانَ عَلَيَّ وَاللهُ عَلَى مَا نَقُولُ وَكِيلٌ} [القصص: 26 – 28]..

தன் இரு மகள்களுக்கு மூஸா அலை உதவி செய்த காரணத்தினால் நாடுபெயர்ந்து ஓர் நாடோடியாக வந்த மூஸா அலை அவர்களை தன்னிடத்தில் வேலைக்கு சேர்க்கின்றபோது ஷுஐப் அலை அவர்கள் மூஸா அலை அவர்களை பார்த்து கூறிய வார்த்தை நீங்கள் நாடினால் என்னிடத்தில் பத்தான்டோ அல்லது எட்டண்டோ வேலை செய்யலாம். அது உங்களது வருப்பம். உங்களை சிரமத்தில் ஆக்குவதை நான் விரும்பவில்லை என்று ஷுஐப் அலை கூறிய வார்த்தைகளை இன்றைக்கிருக்கின்ற முதலாளிகள் யோசிக்கவேண்டும். தொழிலாளியின் மீது அளவுக்கு அதிகமான, சக்திக்கு அப்பாற்பட்ட வேலை மூட்டைகளை சுமத்தி , அட்டையாய் உழைப்பாளிகளின் இரத்தத்தை உரிஞ்சு தள்ளுகின்ற முதலாளிகளே இன்று அதிகம்.



தொழிலாளர்களிடத்தில் மென்மையோடு நடந்து கொள்ளுதல்

பத்து ஆண்டுகாலம் பணி செய்த பாலகன் அனஸிடத்தில் ஏன் செய்தாய் எதற்கு செய்தாய் என்று கேள்விக்கனைகளை தொடுக்காத  காருண்ய நபி

أخبرنا عبد الله بن إبراهيم بن محمد بن عبد الله بن حماد أبو إبراهيم الطهراني من طهران أصبهان إجازة قال أبنا أبو العباس أحمد بن عمر بن القاسم الطهراني قراءة عليه وأنا حاضر ح وأخبرنا أبو الخير شعبة بن أبي شكر قال ثنا أبو منصور محمد بن أحمد القاضي قالا أبنا أبو إسحاق إبراهيم بن عبد الله بن خورشيذ قوله ثنا القاضي الحسين بن إسماعيل المحاملي ثنا أبو الأشعث ثنا حماد بن زيد عن ثابت البناني عن أنس قال ما مسست بيدي ديباجا ولا حريرا ولا شيئا كان ألين من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت رائحة قط أطيب من ريح رسول الله صلى الله عليه وسلم ولقد خدمت رسول الله صلى الله عليه وسلم عشر سنين فوالله ما قال لي أف قط ولا قال لشيء فعلته لم فعلت كذا ولا لشيء لم أفعله ألا فعلت كذا . هذا حديث صحيح .



{معجم ابن عساكر}
வாய்க்கு வந்தபடி திட்டிய அபுதர் ரலி அவர்களை கண்டித்த பெருமானார்.

حديث أَبِي ذَرٍّ عَنِ الْمَعْرُورِ، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ، وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ، فَسَأَلْتُهُ عَنْ ذلِكَ، فَقَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلاً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم: يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ

{صحيح البخاري}

அபுதர் ரலி அவர்கள் ஒரு மனிதனை தகாத வார்த்தைகளால் திட்டிவிடுகிறார்கள். பிறகு பெருமானார் ஸல் அவர்கள் அபுதரே அவருடைய அம்மாவை வைத்து அவரை நீ திட்டிவிட்டாயா. உன்னிடத்தில் அய்யாமுல் ஜாஹிலிய்யாவின் பழக்கம் இருக்கிறது என்று பெருமானார் எச்சரித்து விட்டு உங்களுடைய பணியாளர்கள் உங்களது சகோதரர்களாக இருக்கிறார்கள் அல்லாஹ் அவர்களை உங்களது கட்டுப்பாட்டின் கீழே ஆக்கியுள்ளான் எனவே  எவருடைய சகோதரர் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றாரோ அவர் சாப்பிடுகின்ற உணவை அவருக்கு கொடுக்கட்டும், அவர் உடுத்துகின்ற ஆடையை அவருக்கு வழங்கட்டும் இன்னும் அவரால் இயலாத காரியத்தை அவர் மீது சுமத்த வேண்டாம் என்று கூறுவார்கள்.

இங்கு பெருமானார் ஸல் அவர்கள் சகோதர்ர்களை பணியாளர்களுக்கு ஒப்பிட்டுவிட்டு பிறகு பணியாளர்களுக்கு ஒரு முதலாளி எந்த உரிமைகளை தவறாமல் வழங்கவேண்டுமோ அதே உரிமையை உன் சகோதரனுக்கும் வழங்கு என்று சூசகமாக உணர்த்திக்காட்டுகிறார்கள்.

வரம்புமீறி பணியாளர்களை அடிக்காதீர்.

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِىِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ قَالَ كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِى فَسَمِعْتُ مِنْ خَلْفِى صَوْتًا « اعْلَمْ أَبَا مَسْعُودٍ لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ ». فَالْتَفَتُّ فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هُوَ حُرٌّ لِوَجْهِ اللَّهِ. فَقَالَ « أَمَا لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَحَتْكَ النَّارُ أَوْ لَمَسَّتْكَ النَّارُ ».

{صحيح مسلم}

மன்னிக்கும் உள்ளம் வேண்டும்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِىُّ وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ - وَهَذَا حَدِيثُ الْهَمْدَانِىِّ وَهُوَ أَتَمُّ - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ الْخَوْلاَنِىُّ عَنِ الْعَبَّاسِ بْنِ جُلَيْدٍ الْحَجْرِىِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَمْ نَعْفُو عَنِ الْخَادِمِ فَصَمَتَ ثُمَّ أَعَادَ عَلَيْهِ الْكَلاَمَ فَصَمَتَ فَلَمَّا كَانَ فِى الثَّالِثَةِ قَالَ « اعْفُوا عَنْهُ فِى كُلِّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً »

{سنن ابي داؤد}

பெருமானாரிடத்தில் ஒர நபர் வந்து பணியாளர்களை ஒரு பொழுதுக்கு எவ்வளவு மன்னிக்கவேண்டும் என்று கேட்டார். பெருமானார் மௌனமாக இருந்தார்கள். மீண்டும் கேட்டார். மீண்டும் மௌனமாக இருந்தார்கள். மூன்றாவது முறையாக கேட்டபோது  ஒரு பொழுதுக்கு எழுவது முறை மன்னித்துவிடுமாறு கூறினார்கள்.

பெருமானார் கேட்டவுடன் பதில் கூறாமல் மௌனம் சாதித்ததிலிருந்தும் பிறகு எழுபது முறை என்று கூறியதிலிருந்தும் நாம் விளங்கவேண்டிய செய்தி பணியாளர்கள் தவறு செய்தால் திருத்தலாமே தவிற திட்டுவது, கடுகடுப்பது, கோபத்தை கக்குவது போன்ற செயல்பாடுகளில் இறங்குவது இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு எதிரானதும் பெருமானாரின் சுன்னத்திற்கு முரனானதும் கூட. பசியின் கோரத்தால், வருமையின் வாட்டத்தால் வேறு வழியில்லாமல் கடைகளுக்கு வருகின்ற சிறுவர்களை கசக்கி புளிவதோடு நிற்காமல் வசைபாடுவது, அடித்து நொறுக்குவது, சிறுந்தவறுகளும் மலை போன்று பார்க்கப்படுவது உழைப்பாளிகளை தெருநாயை விடக் கேவலமாக நடத்துவதற்குச் சமம் என்பது மட்டுமல்ல மனித நேயமற்ற, ஈவு இறக்கமற்ற செயல்களுல் கட்டுபட்டுதும் ஆகும். பெருமானாரிடத்தில் சிறுவராக வேலை செய்த அனஸ் ரலி அவர்களை பெருமானார் நடத்திய விதம், அனுகிய முறை, பழகிய பழக்கம் இன்றைக்கு உலகத்தில் நம்பர் ஒன் வியாபாரியாக இருக்கக்கூடியவர்களுக்கும் பாடம் கற்பிக்கின்றது. இஸ்லாம் உழைத்து வாழச் சொல்கிறது, உழைப்பவனை கண்ணியப்படுத்துகிறது, உழைப்பாளிகளின் உரிமையை காக்குகிறது. இந்த அகிலமும் உழைப்பாளின் உரிமைகளை காக்கவும் சிறக்கவும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

No comments: