அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 27 October 2016

சுவனப் பொக்கிஷங்கள் எட்டு

நாம் வாழும் இந்த உலகின் வாழ்க்கையில் செய்யும் நன்மைகளை விட பாவங்கள் மிகைத்தே இருக்கின்றன.
நம் மீது கருணை கொண்ட இறைவன் நாம் குறைவான அமல்களை செய்தாலும் அதற்காக அதிகமான நற்கூலியை பெறுவதற்காக பல வாய்ப்புகளை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலமாக வழங்கி இருக்கின்றான்.
அந்த வாய்ப்புகளை பயன் படுத்தி நன்மைகளை பெறுபவர்களே மறுமையில் உயர் படித்தரங்களை அடைகின்றனர்.

அதிலும் குறிப்பாக எட்டு விஷயங்கள் மற்ற அமல்களை விட நாம் மிகவும் இலகுவாக நன்மைகளை அள்ளிக்கொள்ள வாய்ப்பாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.
அவற்றில் :



الكنز الأول
عن عبادة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :" من استغفر للمؤمنين والمؤمنات ، كتب الله له بكل مؤمن ومؤمنة حسنة "

முதல் பொக்கிஷம் :  பாவ மன்னிப்பு 

உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்  : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லலாம் அவர்கள் நவின்றார்கள் : யார் ஒருவர் முஃமினான ஆண் மற்றும் பெண்களுக்காக பாவமன்னிப்பு கோருகின்றாரோ அவருக்கு அல்லாஹு தஆலா ஒவ்வொரு முஃமினான ஆண் மற்றும் பெண்ணுக்கு பகரமான நன்மைகளை அவருக்கு எழுதி விடுகின்றான்.


பாவ ம் மன்னிப்பு என்பது நாம் தினமும் தவறாமல் இறைவனிடத்தில் கேட்க வேண்டிய ஒன்று. 
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் தனது வாழ்நாளில் தவறாமல் செய்த ஒன்று.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லலாம் அவர்கள் ஒரு நாளைக்கு 70 முறை பாவமன்னிப்பு கோரினார்கள் என்று ஹதீஸ்களை வரும் விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே.

இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோருவதென்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் அதை நமக்காக மட்டுமில்லாமல் மற்ற எல்லா முஃமின்களுக்காகவும் செய்யும் பொது அதனுடைய பலனையும் நம்மால் அனுபவிக்க முடிகிறது. 

الكنز الثاني 
عن ابن مسعود رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :" من قرأ حرفاً من كتاب الله فله به حسنة ، والحسنة بعشرأمثالها ، لا أقول : ( آلم ) حرف ، ولكن : ألف حرف ولام حرف وميم حرف "


இரண்டாம் பொக்கிஷம் : குர் ஆன் ஓதுதல் 

அருள்மறை குர் ஆன் இறைவன் நமக்கு தந்த பெரும் பேறு. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அற்புதங்களில் கியாமத் நாள் வரை நிலைத்து இருக்கும் ஓர் அற்புதம்.

இறைவனிடம் பேச விரும்புவோர் அருள்மறையை ஓதட்டும் என்று நமக்கு சொல்லி தந்திருக்கிறார்கள். 
இன்னும் நம்முடைய மன நோய்க்கு மருந்தாக விளங்குகிறது அருள்மறை திரு குர் ஆன்.

அதை ஓதுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மை, ஒன்றுக்கு பத்தாக கிடைக்கிறது.

இப்னு மசஊத் றளியல்ல்ஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ சலலம் அவர்கள் கூறினார்கள் : யார் ஒருவர் அல்லஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. ஒரு நன்மை என்பது 10 நன்மைகளுக்கு பகரமானது. ஆனாலும் அலிஃ லாம் மீம் என்பது ஒரு எழுத்து அல்ல. அலிஃ என்பது ஒரு எழுத்து லாம் என்பது ஒரு எழுத்து மீம் என்பது ஒரு எழுத்து. 
 

இந்த ஹதீஸின் படி நாம் அலிஃ லாம் மீம் என்று சொல்லும்பொழுது நமக்கு கிடைப்பது 3 நன்மை அல்ல. மாறாக 30 நன்மைகள் கிடைக்கின்றது. 

 أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :" كلمتان خفيفتان على اللسان ، ثقيلتان في الميزان ، حبيبتان إلى الرحمن : سبحان الله وبحمده ، سبحان الله العظيم "

மூன்றாம் பொக்கிஷம் : இரண்டு வார்த்தைகள் 

நாம் அல்லாஹு தஆலா வை பல நாமங்களை கொண்டு துதிப்பதுண்டு. பல நாமங்களை கொண்டு நாம் அவனை புகழ்வதுண்டு. ஆனாலும், அவற்றில் குறிப்பாக 2 வார்த்தைகளை நமக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் : அவற்றை நாம் சொல்வதும் அதை கொண்டு இறைவனை புகழ்வதும் இலகுவானதாக இருக்கலாம். ஆனால் அவற்றின் மூலம் நாம் பெரும் நன்மைகள் எண்ணிலடங்காதது.

அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 2 வார்த்தைகள் நமது நாவிற்கு லேசானது, மீஜான் தராஸிற்கு கனமானது. அருளாளன் அல்லாஹ்விற்ற்க்கு விருப்பமானது. அது தான்  سبحان الله وبحمده ، سبحان الله العظيم "

இந்த வாரத்தில் இந்த நன்மைகளை அள்ளிக்கொண்டு மீதமுள்ள மற்ற பொக்கிஷங்களை வரும் நாட்களில் அறிந்து கொள்வோம். இன்ஷாஅல்லாஹ் 

No comments: