அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 27 March 2014

நகைச்சுவை..............?

இன்றைய உலகத்தில் மக்கள் நகைச்சுவையான சூழலுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள். நகைச்சுவை தற்போது பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது என்பதில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அடுத்தவரின் குறைகளை சொல்வதிலிருந்து அடுத்தவரின் உள்ளதை காயப்படுத்துவது வரை நகைச்சுவை என்ற கருத்தில் இன்று பரவி வருகிறது.
நகைச்சுவையான சூழலுக்கு அல்லாஹ்வும் அவன் தூதுவரும் எதிரி இல்லை. எல்லா நேரத்திலும் அழுது கொண்டே இருக்க வேண்டும் மறுமையை நினைத்து கவலைபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் வரம்பு மீறுவதையும் அதன் வலயத்தை விட்டும் வெளியேருவதையும் இஸ்லாம் விளக்குகிறது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
{فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا (82) } [التوبة: 82، 83]
குறைவாக சிரியுங்கள் அதிகமாக அழுங்கள்.
சிரிப்பை குறித்தி குரானில் சொல்லப்பட்ட செய்தி. சிரிப்பதை இஸ்லாம் அனுமதி என்று சொல்லி அதன் அளவை குறிப்பிடுகிறது. அதிகமான் சிறிப்பு மனிதனின் உள்ளத்தில் ஒரு வகையான போடுபோக்கையும் பொறுப்பில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.
இதேபோல் அல்லாஹ்வின் தூதர் சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தங்களின் வாழ்நாளில் நகைச்சுவையான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிரார்கள். சிரித்தும் இருக்கிறார்கள்.
عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ: قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ، أَوِ الْغَدَاةَ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ»
[صحيح مسلم 1/ 463]
சிமாக் இப்னு ஹர்பு அவர்கள் ஜாபிர் இப்னு சம்ரா அவர்களிடம் கேட்கிறார்கள். “ நீங்கள் அல்லாஹ்வின் தூதரின் சபையில் அதிகம் அமர்ந்து இருக்கிறீர்களா.” அதர் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆம் அதிகம் இருந்திருக்கிறேன். காலையில் பஜ்ரு தொழுத பிறகு சூரியன் உதிக்கும் வரை அமர்திருப்பார்கள். சூரியன் உதித்த பிறகு எழுவார்கள். பின் சஹாபாக்கள் மடமைகால  நிகழ்வுகளை பேசி சிரிப்பார்கள். நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் புன்னைகைப்பார்கள்.
عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، احْمِلْنِي، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ» قَالَ: وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ»
[سنن أبي داود 4/ 300]
அனஸ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதர் நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் வந்து தனுக்கு ஒரு வாகம் வேண்டும் என்று கேட்டார். அதர் நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு ஒட்டகத்தின் குட்டியை தருகிறேன் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ஒட்டகத்தின் குட்டியை வைத்து நான் என்ன செய்வது என கேட்க அதற்கு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எல்லா ஒட்டகம் ஒரு ஒட்டகத்தின் குட்டி என்று அவருக்கு கூறினார்கள்.
இவ்வாறு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நகைச்சுவையாக பேசி இருக்கிறார்கள் அதற்குரிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரின் உணர்வுகளை புண்படுத்துவதை இஸ்லாம் தடுக்கிறது.
ஒரு முறை ஆயிஷா ரலியள்ளஹு அன்ஹா அவர்கள் சபிய்யாஹ் ரலியள்ளஹு அன்ஹ அவர்களை பற்றி பேசும்போது அவர்கள் குட்டியாக இருப்பதை கையால் சுட்டி காட்டி சொன்னார்கள். அதற்கு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்.
[سنن الترمذي ت شاكر 4/ 660]
«لَقَدْ مَزَجْتِ بِكَلِمَةٍ لَوْ مَزَجْتِ بِهَا مَاءَ البَحْرِ لَمُزِجَ»
ஒரு வார்த்தையை உங்கள் பேச்சில் கலந்துள்ளீர்கள். அதை கடலில் கரைத்தால் கடல் முழுக்க கரைந்துவிடும்.
அடுத்தவர்களின் உடல் அமைப்பை குறிப்பிட்டு சொல்லப்படும் நகைச்சுவையோ அல்லது விமர்சனங்களோ மார்கத்தில் கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது.
ஆனால் சில மக்கள் நகைச்சுவை என்ற பெயரில் பொய்களை கலந்து விடுகிற சூழலும் உள்ளது. சிரிப்புணர்வு வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் பொய்யும் பொய்களே. அதை அடுத்தவரின் நலனுக்காக சொல்கிறோம் என்று நியாயப்படுத்த முடியாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُدَاعِبُنَا، قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»
[سنن الترمذي ت شاكر 4/ 357]
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்களிடம் சஹாபாக்கள் கேடகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே நீங்களும் எங்களிடம் நகைச்சுவையாக பேசுகிறீர்களே.  அதற்கு நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள். நிச்சயம் நான் உண்மையை தவிர வேறு எதை சொல்லமாட்டேன் என்று சொன்னார்கள்.
எனவே நகைச்சுவையிலும் உண்மை மட்டும் தான் இருக்க வேண்டும்.
சிலர் விளயாடிர்க்காக செய்கிறோம் என்று சொல்லி அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுதுவதை பார்க்கிறோம். அதாவது சில விஷயங்களை அல்லது சில சந்தோஷங்களை திரில்லாக சொன்னால் தான் நன்றாக இருக்கும் என்ற பெயரில் கொஞ்ச நேரம் அந்த விஷயம் தொடர்பான நபர்களை அலையவிடுவதும் தேடவிடுவதும் அவர்கள் வருந்தும் படி ஏதேனும் செயல் செய்வதும் மக்களிடம் காணப்படுகிறது. அதாவது கொஞ்சம் நேரம் துக்கத்தை அனுபவித்து பிறகு சந்தோசம் வந்தால் அது மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்ற பெயரில் இப்படி செய்யப்படுகிறது. ஆனால் அதனால் அடுத்தவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும் எனில் அது கண்டிக்கப்பட வேண்டும்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَأْخُذْ أَحَدُكُمْ عَصَا أَخِيهِ لَاعِبًا أَوْ جَادًّا، فَمَنْ أَخَذَ عَصَا أَخِيهِ فَلْيَرُدَّهَا إِلَيْهِ»
[سنن الترمذي ت شاكر 4/ 462]
நபி சல்லால்லாஹு அலைஹி வ சல்லம் அவர்கள் சொல்கிறார்கள். உங்களில் ஒருவரின் தடியை அடுத்தவர் விளையாட்டிற்காக எடுக்க வேண்டாம். உங்கள் சகோதரரின் தடியை அடுத்தவர் எடுத்தாலும் அதை திருப்பி தந்து விடட்டும்.
كَانُوا مَعَ رَسُولِ اللَّهِ فِي مَسِيرٍ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى نَبْلٍ مَعَهُ فَأَخَذَهَا، فَلَمَّا اسْتَيْقَظَ الرَّجُلُ فَزِعًا فَضَحِكَ الْقَوْمُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يُضْحِكُكُمْ؟» قَالُوا: لَا، إِلَّا أَنَّا نَأْخُذُ نَبْلَ هَذَا فَفَزِعَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا»
[مسند ابن أبي شيبة 2/ 427]
நபி சல்லால்லாஹு அளிஹி வ ஸல்லம் அவர்களுடம் ஒரு முறை சஹாபாக்கள் சென்றார்கள். அப்போது சஹாபாக்கள் ஒரு தோழரின் அம்புகளை எடுத்து ஒளித்துவைத்தார்கள். அந்த தோழர் எழுந்து பார்த்தவுடம் தன் அம்புகளை காணவில்லை. அவர் திடுக்கம் அடைந்தார். இதை பார்த்து மற்ற தோழர்கள் சிரித்தார்கள். இதை பாரத்தை நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நடந்ததை கேட்க சஹாபாக்கள் விளக்கினார்கள். அதற்கு நபி சல்லால்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை திடுக்கிட செய்வதற்கு அனுமதி இல்லை. என்றார்கள்.
அதே போல கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து விளயாதிர்காக என்ற பெயரில் விளையாடுவதும் தவறு.
: «مَنْ أَشَارَ إِلَى أَخِيهِ بِحَدِيدَةٍ، فَإِنَّ الْمَلَائِكَةَ تَلْعَنُهُ، حَتَّى يَدَعَهُ وَإِنْ كَانَ أَخَاهُ لِأَبِيهِ وَأُمِّهِ»

[صحيح مسلم 4/ 2020]
 யார் ஒருவர் தன சகோதரிடம் ஒரு கம்பியை செயக்கியனை காட்டி (விளயாடுகிராரோ) மலைக்குமார்கள் அவர் அந்த செயலை விடும் வரை சபிக்கிறார்கள்.
قَالَ: «لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي، لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ»
[صحيح البخاري 9/ 49]
உங்களில் ஒருவரும் தன சகோதரிடம் ஆயுதங்களை வைத்து செய்கினை காட்டி (விளையாட) வேண்டாம். ஏனெனில் அவருக்கு தெரியாது ஷைத்தான் அவர் கையில் இருந்து அந்த ஆயுதத்தை விழ செய்து (அதனால் அவரின் சகோதரருக்கு காயம் ஏற்பட்டு ) அவர் நரகிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே நகைச்சுவை வாழ்கையில் வேண்டும் ஆனால் அது அடுத்தவரின் உணர்வுகளை உருவ அமைப்புகளை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்


2 comments:

Unknown said...

جزاك الله خيرا لترسل رقم الحديث مع الدلائل

Unknown said...

جزاك الله خيرا لترسل رقم الحديث مع الدلائل