அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 13 March 2014

நம்முடைய வரலாறுகளை மறக்க வேண்டாம்- ஓர் வரலாற்று உண்மை.


உலகில் வாழும் எந்த கூட்டமும் நாடும் தங்களின் அடையாளங்களையோ அல்லது வரலாறுகளையோ மறக்க விரும்புவதில்லை. காரணம், வரலாறுகளை மற்றும் அடையாளங்களை மறைத்த அல்லது மறந்த மக்கள் உலகில் நிலைத்தது இல்லை. இருட்டடிப்புகளும் இடைச்சருகல்களும் சிலர்களின் வரலாறுகளை கூட கொச்சைபடுத்தி விடலாம்.
சுதந்திரம் பெறுவதற்காக நம் முஸ்லிம் முன்னோர்கள் போராடிய போராதங்கள் இன்றைக்கு மறைக்கப்பட்டு அல்லது திரிக்கப்பட்டு மக்களுக்கு மத்தியில் பரவில் இருப்பதை நாம் பார்க்கிறோம். வரலாறுகள் நம்முடைய பொக்கிஷங்கள். அவைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் அவைகளை அடுத்தவர்கள் கொள்ளையடித்து செண்டுவிடுவார்கள். பின்னால் வரும் தலைமுறைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் என்னவென்று தெரியாமல் போய்விடும்.
அதேபோல் வரலாறுகளை அவ்வப்பொழுது மக்களுக்கு நியாபகப்படுத்த வேண்டும்.
இஸ்லாமிய வரலாறுகளும் அப்படிதான். பல தியாகங்களுக்கு பிறகு உண்டானது தான் இந்த மார்க்கம். பல சஹாபாக்களின் ரத்த வரலாறுகளுக்கு பின் தான் இந்த சாந்த மார்க்கம் நம் கையில் வந்திருக்கிறது. ரத்த வரலாறு என்று சொல்லும் போது போர் செய்து உயிர் நீத்தார்கள் என்பது மட்டும் பொருள் அல்ல. போர் செய்யலாமலே அவர்கள் இரத்தம் சிந்தி இருக்கிறார்கள். அதற்கு சமூகத்தில் சித்திரவதை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

 தெருக்களில் நடக்கும் சண்டைகளை பார்வையிட்டு, அதில் தேவையில்லாமல் தலையிட்டால் நாளைக்கு நமக்கும் நம் குடும்பத்திற்கும் பிரச்சனை எதற்கு என பயந்து பொய் ஒதுங்கும் நம் மக்களுக்கு தன குடும்பத்தை பற்றி கூட கவலை படாமல் சஹாபாக்கள் இஸ்லாத்திற்காக போர் செய்தார்கள் என்பதை நாம் நினைவூட்ட கடமை பட்டிருக்கிறோம். அவர்களின் தீவிர வாதத்தின் பக்கம் தூண்டுவதற்காக இல்லை. நம்முடைய உண்மையான வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காக இஸ்லாத்தின் துவக்கத்தை புரிந்துகொல்வதர்க்காக.இஸ்லாம் பல தியாகங்கள் , அற்பணிப்புகளுக்கு மத்தியில் உண்டானது. இஸ்லாம்பல இரத்த வரலாறுகளை கண்டிருக்கிறது. தானாக முன் வந்து யாரையும்எதிர்த்தது கிடையாது. தான் செல்லுகின்ற பாதையில் அதன் வளர்ச்சியைகெடுக்கிற விதத்தில் எடுக்கிற முயற்சிகளுக்கு தக்கவாறு பதில் கொடுக்கும். அந்தபதில்களில் சில நேரங்களில் இரத்தத்தையும் சிந்தும் அல்லது சிந்தவைக்கும்.யாரையும் சீண்டவேண்டாம் என்று நினைக்கிற இஸ்லாம் தன்னை வரம்பு மீறிசீண்டி அழிக்க துடிப்பவரை சற்று சுரண்டி பார்த்திருக்கிறது.அதனால்இஸ்லாத்தின் வரலாற்றில் சில இரத்த கறைகள் படிந்துள்ளது. ஆனால்இரத்தத்தாலே உருவானது அல்ல.தன் சுய பாதுகாப்பிற்கு ஒரு எறும்பு செய்கிறதுரும்பு செயல்களை இஸ்லாத்தின் போர்களுக்கு நாம் உதாரணம் கூறலாம்.காரணம் அடுத்த மதத்தின் கடவுள்களை கூட திட்டவேண்டாம் என்று கூறிமதக்களவரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான். என்மார்க்கம் எனக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு என மற்ற மதங்களோடுபினக்குகள் ஏற்படுத்தா வண்ணம் வாழச்சொன்ன இஸ்லாம் என்பது குர்ஆனின்சான்று. அவ்வாறு இஸ்லாத்திற்காக போராடி தன் உயிரையும் போருளையும்இழந்த தியாகிகளின் வரலாறுகளையும் சம்பவத்தையும் நினைத்துபார்க்கவேண்டும்.
மனித சமுதாயத்திற்கு படிப்பினை புகட்டும் விதமாக இஸ்லாமிய வரலாற்றில் ஆங்காங்கே பல நிகழ்ச்சிகளும், வரலாற்றுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அதனை நினைவுகூர்ந்து படிப்பினை பெற்றுக் கொள்ளவும், தேவைப்பட்டால் நம்மில் திருத்தங்களை செய்துகொள்ளவும்,திருந்தி வாழவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்த அடிப்படையில் அனைவராலும் நினைவு கூறப்படவேண்டிய முஅத்தா என்னும் மிகப்பெரும் போர்  ஜமாஅத்துல் அவ்வலான இம்மாதத்தில்தான் நடைபெற்றது என்பதை நாம் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாமிய வரலாற்றில் அரங்கேறிய முதல் பெரும்போர் பத்ருப்போர். அது போல பெருமானார் ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெருமானார் கலக்காமல் நிகழ்ந்த மிகப்பெரும் போர் அது முஅத்தாவைத் தவிர வேறில்லை. ஹிஜ்ரி 8ஆம் ஆண்டில் ஜமாஅத்துல் அவ்வல் பிறை 6 அன்று இப்போர் துவங்கியது.
كانت هذه الغزوة في جمادي الاولى سنة ثمان وكان سببه أن رسول الله صلى الله عليه وسلم بعث الحارث بن عمير الأزدي بكتاب إلى هرقل عظيم الروم بالشام أي فلما نزل بمؤتة تعرض له شرحبيل بن عمرو الغساني أي وهو من امراء قيصر على الشام فقال أين تريد لعلك من رسل محمد قال نعم فأوثقه ربطا ثم قدمه فضرب عنقه ولم يقتل لرسول الله صلى الله عليه وسلم رسول غيره فلما بلغ رسول الله صلى الله عليه وسلم ذلك اشتد الامر عليه فجهز جمعا من اصحابه وعدتهم ثلاثة ألاف وبعثهم إلىمقاتلة ملك الروم وأمر عليهم زيد بن حارثة وقال إن أصيب زيد فجعفر بن أبي طالب على الناس وإن أصيب جعفر فعبد الله بن رواحة على الناس  قال وفي رواية فإن أصيب ابن رواحة فليرتض المسلمون برجل منهم فليجعلوه عليهم وقد حضر ذلك المجلس رجل من يهود فقال يا أبا القاسم إن كنت نبيا يصاب جميع من ذكرت لأن الأنبياء عليهم الصلاة والسلام من بني اسرائيل كان الواحد منهم إذا استعمل رجلا على القوم وقال إن أصيب فلان لا بد أن يصاب أي ولوعد مائة اصيبوا جميعا ثم صار يقول لزيد اعهد فلن ترجع إلى محمد أبدا إن كان نبيا وزيد يقول اشهد أنه نبي وعقد صلى الله عليه وسلم لواء أبيض ودفعه لزيد بن حارثة رضي الله تعالى عنه وأوصاهم أن يأتوا مقتل الحارث بن عمير ويدعوا من هناك إلى الإسلام فإن أجابوا وإلا استعانوا عليهم بالله تبارك وتعالى وقاتلوهم
பெருமானார் ஸல் அவர்கள் ஒரு கடிதத்தை ஹாரிஸ் இப்னு உமைர் என்னும் ஒரு ஸஹாபியிடம் கொடுத்து ரோமாப்புரியின்  மன்னரான ஹிர்கலிடம் கொண்டுபோய் சேர்க்குமாரு கட்டளையிடுகிறார்கள். பெருமானாரின் கட்டளைக்கிணங்க கடிதத்தை கொண்டு செல்கிறார்கள். முஅத்தா என்னும் இடத்தில் ஷூர்ஹபீல் என்னும் ஒரு தலைவனால் தடுத்து நிறுத்தப்பட்டு நிராயிதபானியாக தன்னந்தனியாக வந்திருக்கக்கூடிய ஒரு தூதுவரை சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு கோலைத்தனமாக கொல்லுகிறார்கள். அந்த இடத்தில் ஹாரிஸின் உடல் சல்லடையாக்கப்படுகிறது. இப்படி வலுக்கட்டாயமாக காபிர்களால் இழுத்துவரப்பட்டு போர்களத்தில் வந்து எதிரியை சந்திக்கநேரிட்டதுதான் முஅத்தாவே தவிர பெருமானாராக சுயமாக ஒரு நாட்டை துண்டாக்கவேண்டுமென்றோ, கூறுபோடவேண்டுமென்ற எண்ணத்திலோ முஸ்லிம்களால் வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட போர் முஅத்தா போர் அல்ல என்பதை உங்களின் மேலான கவனித்து கொண்டுவருகின்றேன்.
3000என்ற குறைவான எண்ணிக்கையைத் தாங்கிய முஸ்லிம் படை சுமார்1லட்சம் நபர்களை உள்ளடக்கிய ரோம்நாட்டு படையை சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது. ஆள்பலத்தாலும் வாள்பலத்தாலும் குறைவாக முஸ்லிம்கள் இருந்தாலும் அல்லாஹ்வின் மீது கொண்ட உறுதி, நம்பிக்கை மிகைத்திருந்ததால் ஆட்களையும் வாள்களையும் கண்டு போரைவிட்டும் பின்வாங்கிச் செல்லாமல் எதிர்த்து இறைநம்பிக்கையோடு போரிட்டனர் அல்லாஹ் அவர்களுக்கு பலசோதனைகளுக்குப் பிறகு வெற்றியைத் தேடித்தந்தான் என்பது வரலாறு.
 பெருமானார் ஸல் போருக்கு அனுப்பிவைக்குமுன் கூறினார்கள் ஜைது கொல்லப்பட்டால் போரை ஜஹ்பர் தலைமையேற்று நடத்துவார் ஜஹ்பர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமையேற்று போரை நடத்திச் செல்வார் அவரும் கொல்லப்பட்டால் முஸ்லிம்கள் அவர்களுக்கு மத்தியில் ஒரு மனிதனை தேர்ந்தெடுக்கட்டும் என்று கூறியபோது அக்கூட்டத்தில் இருந்த யூத மதத்தைச் சார்ந்த ஒருவர் கூறினார் அபுல் காஸிமே நீ உண்மையான நபியாக இருந்தால் நீர் குறிப்பிட்ட அனைவரும் மரணிப்பார்கள். நிச்சையமாக பனுஇஸ்ராயிலை சேர்ந்த நபிமார்கள்(போருக்குச் செல்லுகிற போது) இன்னார் இறந்தால் இன்னார் தலைமையேர்கட்டும் என்பார்கள் இப்படியே அவர்கள் 100நபர்களை குறிபிட்டாலும் அதில் ஒருவரும் மிஞ்சமாட்டார்கள் அனைவரும் போரிலே மரணிப்பார்கள் என்று கூறிவிட்டு ஜைது அவர்களிடத்தில் முஹம்மது உண்மையான நபியாக இருந்தால் ஒரு போதும் நீ திரும்பமாட்டாய் என்று அவர் கூறியதுதான் தாமதம் ஜைது ரலி அவர்கள் கூறுவார்கள் பெருமானார் நிச்சயமாக பெருமானார் உண்மையான நபி என்று நான் சாட்சிக்கூறுகின்றேன்.عن ابن عباس قال : بعث رسول الله صلى الله عليه و سلم عبد الله بن رواحة في سرية فوافق ذلك يوم الجمعة قال : فقدم أصحابه و قال : أتخلف فأصلي مع رسول الله صلى الله عليه و سلم الجمعة ثم ألحقهم قال : فلما صلى رسول الله صلى الله عليه و سلم رآه فقال : ما منعك أن تغدو مع أصحابك ؟ فقال : أردت أن أصلي معك الجمعة ثم ألحقهم فقال رسول الله صلى الله عليه و سلم : لو أنفقت ما في الأرض جميعا ما أدركت غدوتهم
போருக்கு படைகள் கிளம்பியது ஆனால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாகிளம்பவில்லை காரணம் அன்று வெள்ளிக்கிழமை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுடன் சேர்ந்து தொழ வேண்டும் என நாடி தங்கிவிட்டார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் இப்னு ரவாஹா போருக்குபொகாததை பார்த்து காரணம் கேட்டார்கள் . அதற்கு அப்துல்லாஹ் இப்னுரவாஹா உங்களுடன் சேர்ந்து ஜும்மா தொழுதுவிட்டு செல்லலாம் எனநினைதேன். நாளை அவர்களுடன் போய் சேர்ந்து விடுவேன் என சொன்னபோதுநாயகம் சொன்னார்கள். (என் வாக்கிர்கு காட்டுப்பட்டு ) போருக்கு சென்றஅவர்கள் அடைந்த நன்மையை நீங்கள் பூமியில் உள்ள அனைத்தையும் செலவுசெய்தாலும் பெற்று கொள்ள மாட்டீர்கள்.
أوصيكم بتقوى الله وبمن معكم من المسلمين خيرا اغزوا باسم الله فقاتلوا عدو الله وعدوكم بالشام وستجدون فيها رجالا في الصوامع معتزلين فلا تتعرضوا لهم ولا تقتلوا امرأة ولا صغيرا ولا بصيرا فانيا ولا تقطعوا شجرة ولا تهدموا بناءபோருக்கு செல்லுகிற படைவீரர்களுக்கு பெருமானார் உபதேசம் செய்கிறார்கள். "அல்லாஹ்விர்கு பயந்து கொள்ளுங்கள், உங்களுடன் இருக்கும் முஸ்லிம்களுக்குநலவை நாடுங்கள், அல்லாஹ்வின் பேருக்காக போரிடுங்கள், அல்லாஹ்வின்எதிரிகளையும் ஷாமில் உள்ள எதிரிகளிடமும் போரிடுங்கள், நீங்கள் செல்லுகிறவழியில் கோயில்களில் துறவிகளை காண்பீர்கள் அவர்களுக்கு இடியூறு தரவேண்டாம், பெண்களை சிறுவர்களை வயதானவர்களை கொல்லாதீர்கள்,மரங்களை வெட்டதீர்கள், வீடுகளை இடிக்காதீர்கள்"
 இது வரைக்கும் போருக்கு அனுப்புகிற படைகளுக்கு இது போன்ற பூக்கள்போன்ற வரிகள் சொல்லாப்பட்டிருக்காது. இது தான் உண்மையான மனிததன்மை. தன்னை எதிர்பவனை தவிர மற்றவர்களை எதிர்க்காமளும் அவர்கள் நம்எதிரியை சார்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லுகிரபன்பையும் குணத்தையும் இந்த மார்க்கம் மட்டுமே மொத்தமாக குத்தகைஎடுதிருக்கிறதுأن هرقل ملك الروم في مائة ألف من الروم وانضم اليه من قبائل العرب أي المتنصرة أي من بني بكر ولخم وجذام مائة ألف وفي رواية كانوا مائتي ألف من الروم وخمسين ألفا من العرب ومعهم من الخيول والسلاح ما ليس مع المسلمين وكان المسلمون ثلاثة آلاف كما مر فلما بلغهم ذلك أقاموا في ذلك المحل ليلتين ينظرون في أمرهم أهل يبعثون لرسول الله صلى الله عليه وسلم يخبرونه بعدد عدوهم فإما أن يمدهم برجال أو يأمرهم بأمر فيمضوا اليه فشجعهم عبد الله بن رواحة وقال لهم يا قوم والله إن الذي تكرهون للذي خرجتم له خرجتم تطلبون الشهادة ونحن ما نقاتل الناس بعدد ولا قوة ولا كثرة ما نقاتلهم إلا بهذا الدين الذي أكرمنا الله تعالى به فإنما هي إحدى الحسنين إما ظهور وإما شهادة أي فقال الناس صدق والله ابن رواحة فمضوا للقتال فلقيتهم جموع هرقل ملك الروم من الروم والعرب فانحاز المسلمون إلى مؤتة فالتقى الجمعان عندها واقتتلوا فقاتل زيد بن حارثة رضي الله تعالى عنه ومعه راية رسول الله صلى الله عليه وسلم أي لواؤه حتى قتل رضي الله تعالى عنه فأخذ الراية جعفر رضي الله تعالى عنه وقاتل على فرس أشقر ثم نزل عنه وعقره أي وهو أول رجل من المسلمين عقر فرسه وأول فرس عقر في سبيل الله عقره خوفا اين يأخذه الكفار فيقاتلوا عليه المسلمين ومن ثم لم ينكر عليه احد من الصحابة وبه استدل من جوز قتل الحيوان خشية أن ينتفع به الكفار وتقاتل عليه المسلمين ثم قاتل رضي الله تعالى عنه فقطعت يمينه فأخذ الراية بيساره فقطعت يساره فاحتضن الراية فأخذ الراية وقاتل حتى قتل رضي الله تعالى عنه فاخذها عبد الله بن رواحة رضي الله تعالى عنه وتقدم بها وهو على فرسه وجعل يتردد في النزول عن فرسه ثم نزل وقاتل حتى قتل أي وحينئذ اختلط المسلمون والمشركون وأراد بعض المسلمين الانهزام فجعل عقبة بن عامر رضي الله تعالى عنه يقول يا قوم يقتل الإنسان مقبلا أحسن من أن يقتل مدبرا فأخذ الراية ثابت بن أرقم رضي الله تعالى عنه وقال يا معشر المسلمين اصطلحوا على رجل منكم فقالوا أنت فقال ما أنا بفاعل فاصطلح الناس على خالد بن الوليد رضي الله تعالى عنه أي ويقال إن ثابت بن ارقم دفعها إلى خالد رضي الله تعالى عنه وقال أنت أعلم بالقتال مني أي فقال له خالد انت احق به مني لأنك ممن شهد بدرا ثم أخذها خالد رضي الله تعالى عنه ومانع القوم وثبت ثم انحاز كل من الفريقين عن الآخر من غير هزيمة على أحدهما قال وفي رواية قاتلوا المشركين حتى هزموهم فعند ابن سعد أن خالدا رضي الله تعالى عنه لما أخذ اللواء حمل على القوم فهزمهم الله أسوأ هزيمة حتى وضع المسلمون أسيافهم حيث شاءوا واظهر الله المسلمين
ஹிர்கலின் படையும் தயாராக பல புதிய தொழில்நுட்ப ஆயுதங்களுடன்1இலட்ச படை வீரர்களுடன் பல்கா என்ற பகுதியில் களம் இறங்கிருந்தார்கள்.முஸ்லிம் ரோம் நாட்டு படையை பார்த்து முஅத்தா என்ற பகுதியில்களமிறங்கினார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு சலசலப்பு.காரணம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 3ஆயிரம். ஆனால் எதிரிகள் 1இலட்சம்.என்ன செய்வது என்று தெரியவில்லை. சிலர்கள் போரிடலாம் என்றாலும்பெரும்பாலானவர்கள் ரசூலுல்லுல்லாஹ்விர்கு கடிதம் அனுப்பலாம்நிலமையை புரிந்து கொண்டு உதவி படைகளை அனுப்பலாம் அல்லதுவேறு ஏதாவது ஆலோசனை சொல்லுவார்கள் என்றார்கள். இப்படிமுஸ்லிம்களுக்கு மத்தியில் சில கோழைதனங்களை பார்த்த அப்துல்லாஹ்இப்னு ரவாஹா அவர்கள் எழுந்து வீர உரை ஆற்றுகிறார்கள்.
கூட்டத்தார்களே! நாம் எதை எதிர்பாத்து(ஷஹாதத்தை) போருக்குவெளியேறினோமோ அதை நீங்கள் வெருக்கிறீர்களா?. நாம்எணணிக்கைக்காகவோ , பலத்தை பார்த்தோ , அதிக ஆயுதங்களை பார்த்தோநாம் போரிடவில்லை. நம்மை அல்லாஹ் எந்த மார்கத்தை வைத்துகன்னியப்படுத்தினானோ அந்த மார்கத்திர்காக நாம் போரிடுகிறோம் எனவேஎதிரிகளின் எண்ணிக்கை நமக்கு ஒரு பெரும் பொருட்டு அல்ல. இந்தஉரையை கேட்ட மக்கள் துடிப்பு அடைந்த்து போருக்குத் தயாரானார்கள்.ஆனால் எதிரிகளிடமிருந்து ஏலனப்பார்வை மட்டுமே இருந்தது. காரணம்இவ்வளவு பெரிய படை. இது வரை முஸ்லிம்கள் இவ்வளவு பெரியஎண்ணிக்கையும் பலமும் உள்ள படையை சந்திதது இல்லை. எனவே இன்றுமுஸ்லிம்கள் கூண்டோடு அழிந்துவிடுவார்கள் என்ற அவர்களின்மனக்கணக்கு. ஆனால் முஸ்லிம்களுக்கு அகிலத்தை படைத்த அல்லாஹ்வின்உதவி இருப்பதை மறந்தார்கள்.
போர் ஆரம்பமானது. நாயகம் சொன்னதை போல ஜைது ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் மரணிக்கிறார்கள். பின்பு போர் கொடியை அடுத்து ஜஃபர்இப்னு அபிதாலிப் அவர்கள் ஏந்துகிறார்கள். அவர்களும் வீரமாக போரிடபின்பு அவர்களின் வலது கை வெட்டப்பட இடது கையில் கொடி பிடித்துபோரிட அதுவும் துண்டிக்கப்படுகிறது. பின் கொடியை அனைத்து கொண்டுபோரிடுகிறார்கள்.அவர்களும் கொல்லப்படுகிறார்கள். பின் கொடியைஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா அவர்கள் ஏந்துகிறார்கள். அவர்களும் வீரமாகபோரிடுகிறார்கள். அவர்களும் கொலாப்படுகிறார்கள். பிறகு முஸ்லிம்களின்கொடியை ஏந்துபவர்கள் யார் என்று குழப்பம் ஏற்படுகிரது நாயகம்சொன்னார்கள் "அப்துல்லாஹ் இப்னு ரவாஹா கொல்லப்பாட்டால்முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு நபரை தெர்ந்தெடுத்து தலைவராக நியமிக்கவேண்டும். ஹாலிதுப்னு வல்லீதை தலைவராக நியமிக்கிறார்கள். அவர்களின்திறமையான போரின் போக்கும் போரை வெற்றி பாதைக்குஅழைத்துசென்றது. முன் வரிசையில் போர் செய்பவர்களை மறுநாள் பின்வரிசைக்கு வரச்செய்து பின் வரிசையில் உள்ளவர்களை முன் வரிசைக்குவரச்செய்தார்கள். இப்போது படையின் முன் வரிசியில் புதிய வீரர்கள். இதைபார்த்த எதிரிகள் முஸ்லிம்களுக்கு உதவி படை வந்து விட்டது போல எனநினைத்து பின் வாங்க முற்பட்டார்கள். இது போன்ற யுத்திகளை பலவும்ஹாலிதுப்னு வலீது கையாண்டு இஸ்லாமியைர்களை வெற்றிப்பாதைக்குஅழைத்துச் சென்றார்கள்.
முஅத்தா கற்றுத்தரும் பாடம்
 இறைநம்பிக்கையும் மார்க்கத்தின் மீது கொண்ட பற்றும்
எண்ணிக்கையாலும் ஆயுதங்களாலும் குறைவாக இருந்த ஒரு சிறும்படை எல்லா விஷயத்திலும் மிகைத்திருந்த ரோமப்படைவீரர்களை எதிர்கொண்டார்கள் என்றால் அது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீது கொண்ட இறைநம்பிக்கையினையே காட்டுகின்றது. நாம் போருக்குச் சென்றால் நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையெல்லாம் தாண்டி நாம் போரிலிருந்து திரும்புவதற்கு முகாந்திரமோ வேறுவழிகளோ இல்லை என்று பட்டவர்த்தனமாக தெரிந்து வைத்திருந்த சில சஹாபாக்களும் கூட தயக்கமின்றி போரில் கலந்து தங்களது உயிரை அல்லாஹுக்காக இறையாக்கியதற்கு காரணம் மார்க்கத்தின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவாவும் தான். புறப்படுவதற்கு முன் ஒரு யூதர் பனு இஸ்ரவேலர்களின் நபிமார்களைப் பற்றி கூறி பின்பு ஜைது ரலி அவர்களை நோக்கி முஹம்மது உண்மையான நபியானால் நீ திரும்பமாட்டாய் என்ற யூதனின் வார்த்தைக்கு ஜைத் ரலி அவர்கள் திருப்பி கொடுத்த பதில் சஹாபாக்களின் மார்க்கப்பற்றையும் தீனை நிலை நிறுத்தவேண்டும் என்ற உறுதியும் அவர்களில் மிகைத்திருந்தது என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
மற்ற நபர்களது அறிவைப் போன்றோ ஞானத்தைப் போன்றோ பெருமானாரின் அறிவும் ஞானமும் கிடையாது என்பதற்கு முஅத்தை ஒரு சான்று. போருக்கு செல்வதற்கு முன் யார் கொல்லப்படுவார் என்பதை அறிவித்தார்கள். போர் நடக்கிற போது அங்கு அரங்கேருங்கின்ற காட்சிகளை ஒனறுவிடாமல் கூறுகின்றார்கள் என்ற செய்திகளெல்லாம் பெருமானாரின் பார்வை நம்மை போன்றது அல்ல பெருமானாரின் ஞானம் நம்மைப் போன்றதல்ல என்பதற்குச் வலுவான சான்றுகளாகும். வரலாற்றுப் பார்வையில் வேண்டுமானால் அரங்கேறிய நிகழ்ச்சி ஒரு நிகழ்வாக மட்டும் இருக்கலாம். ஆனால் முஅத்தா சொல்லித்தரும் பாடங்களும், தத்துவங்களும் ஏராளம் ஏராளம். கடந்தகால வரலாற்றை அறிந்து வைத்திருப்பது ஒரு வளரும் சமுதாயத்துக்கு அடையாளம் என்கின்ற அடிப்படையிலாவது இஸ்லாமிய வரலாறுகளை அறியவும் தெரியவும் நாம் முற்படவேண்டும்.
 كم من فئة قليلة غلبت فئة كثيرة باذن الله 
ஓர் தனி மனிதனின் நியாத்ததிகாக ஏற்பட்ட இரத்த வரலாறு


No comments: