அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 9 January 2014

அகிலத்தின் அருட்கொடை



நபிகள் நாயகத்தைப் அல்லாஹ் திருக்குர்ஆனில் அறிமுகம் செய்கிறபோது
உம்மை அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பினோம் என்பதாக குறிப்பிடுவான்.
நாயகம் ஓர் அருட்கொடை என்பதில் சந்தேகம் இல்லை. அனால் யாருக்கெல்லாம் அருட்கொடை, என்றிலிருந்து அருட்கொடை, எந்தளவு அருட்கொடை.
திருக்குர்ஆனில் இப்படியொரு வசனம்
நீங்கள் அல்லாஹ்வின் நிஃமத்தை எண்ணிப்பார்த்தால் உங்களால் மட்டுப்படுத்திவிடமுடியாது.
அல்லாஹ் நம்மீது பொழிந்துள்ள அருளிற்கு ஓர் வரையறையை எப்படி நிர்ணயம் செய்ய முடியாதோ அதுபோன்றுதான் பெருமானார் நம் மீது சொறிந்துள்ள அருளிற்கு ஓர் எல்லையை நிர்ணயிக்கமுடியாது.
நாயகத்தின் அருளுக்கான வாசல் விசாலமானது. அதனை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிடவோ, ஓர் அளவிற்குள் அடக்கிடவோ முடியாது. பெருமானாரின் அருளுக்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இனம், மொழி, ஜாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. மாநபியின் அருளை பாரம்பரிய பணக்காரனும் அனுபவிப்பான் பரம ஏழையும் அனுபவிப்பான். ஒரு வர்கத்தினருக்கு மட்டும் குறிப்பானதல்ல. ஏன் மனிதனை தாண்டி ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள், கற்கள், செடிகள் என எல்லாவற்றையும் நாயகத்தின் அருள் அடையவளைய இருந்தது என்றால் அது மிகையான வார்த்தைகள் அல்ல.
எல்லோரும் பிறந்து ஆளான பின்புதான் அவரிடமிருந்து நம்மால் பயனை அனுபவிக்க முடியும், அவரிமிருந்துள்ள அருளை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் அனால் நாயகம் பிறந்த பின் அல்ல அல்லாஹ்வின் ஞானத்தில் இருந்தபோதே பெருமானாரின் அருளை இவ்வுலகம் அனுபவிக்க தொடங்கிவிட்டது.
பிறப்பதற்கு முன் அகிலத்தாருக்கு அருட்கொடை
عن ابن عباس رضي الله عنهما قال : أوحى الله إلى عيسى عليه السلام : يا عيسى آمن بمحمد و أمر من أدركه من أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم و لولا محمد ما خلقت الجنة و لا النار و لقد خلقت العرش على الماء فاضطرب فكتبت عليه لا إله إلا الله محمد رسول الله فسكن


பிறக்கும்போது தாயிற்கு அருட்கொடை
قد ورد في الكتاب "المولد وانتقال النور"
قال بقي رسول الله صلي الله عليه وسلم في بطن امه سيدة بني زهرة من كلاب تسعة اشهر كملا ولاتشكو وجعا ولامغضا ولاريحا ولاما يعرض الذوات الحمل من النساء وكانت تقول: والله ما رايت من حمل قط هو اخف منه ولااعظم بركة منه.
பிறந்த பின் வளர்ப்புத்தாயிற்கு அருட்கொடை
وكانت تقول: ما رأيته يبكي جوعاً ولا عطشاً قط

)التحفة اللطيفة في تاريخ المدينة الشريفة(

ஹலீமா அம்மையாரின் கரத்தில் பெருமானார் சென்றடைவதற்கு முன்பாக அண்ணலாருக்கு செவிலித்தாயாகவும் அதே சமயத்தில் வளர்ப்புத்தாயாகவும் இருந்த சுவைபா அம்மையார் மாநபியின் குழந்தைப் பருவத்தைப் பற்றி விவரிக்கும் வரிகளே இவைகள். ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின்பு குறிப்பிட்ட பருவ வயதினை அக்குழந்தை அடையும் வரை தாய்மார்கள் படுகின்றபாட்டை நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. ஆனால் பெருமானார் குழந்தையாக இருந்தபோது கூட பிறருக்கு இடையூறு அழிக்காமல் இருந்துள்ளார்கள் என்பதை பார்க்கும்போது அண்ணலாரின் அருட்கொடையின் விசாலத் தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஹலீமா அம்மையாருக்கு அருட்கொடை
وفي السبعيات للهمذاني أن أحد ثديي حليمة كان لا يدر اللبن منه فلما وضعته في فم رسول الله صلى الله عليه وسلم در اللبن منه قالت وشرب معه أخوه حتى روى ثم نام وما كنا ننام معه قبل ذلك أي فعدم نومه من الجوع فقام زوجي إلى شارفنا تلك فإذا هي حافل أي ممتلئة الضرع من اللبن فحلب منها ما شرب وشربت حتى انتهينا ريا وشبعا فبتنا بخير ليلة يقول صاحبي حين أصبحنا تعلمي والله يا حليمة لقد أخذت نسمة مباركة قلت والله إني لأرجو ذلك ثم خرجنا وركبت أتاني وحملته صلى الله عليه وسلم معي عليها فوالله لقطعت بالركب أي صيرته خلفها ما يقدر عليها أي على مرافقتها ومصاحبتها شيء من حمرهن حتى أن صواحبي يقلن لي يا بنت أبي ذؤيب ويحك اربعي أي اعطفى علينا بالرفق وعدم الشدة في السر أليس هذا أتانك التي كنت خرجت عليها تخفضك طورا وترفعك أخرى فأقول لهن بلى والله إنها لهى فيقلن والله إن لها لشأنا أي وقالت حليمة فكنت أسمع أتاني تنطق ونقول والله إن لي لشأنا ثم شأنا شأني بعثني الله بعد موتي ورد لي سمني بعد هزالي ويحكن يا نساء بني سعد إنكن لفي غفلة وهل تدرين من على ظهري على ظهري خير النبيين وسيد المرسلين وخير الأولين والآخرين وحبيب رب العالمين ذكره في النطق المفهوم
 وذكرت أنها لما أرادت فراق مكة رأت تلك الأتان سجدت أي خفضت رأسها نحو الكعبة ثلاث سجدات ورفعت رأسها إلى السماء ثم مشت قالت ثم قدمنا منازل بني سعد ولا أعلم أرضا من أراضي الله أجدب منها فكانت غنمى تروح على حين قدمنا به شباعا لبنا أي غزيرات اللبن فنحلب ونشرب ولفظ فنحلب ما شئنا والله ما يحلب إنسان قطرة لبن ولا يجدها في ضرع حتى كان الحاضر أي المقيم في المنازل من قومنا يقول لرعاتهم ويلكم اسرحوا حيث يسرح راعي بنت أبي ذؤيب يعنونني فتروح أغنامهم جياعا ما تبض بقطرة لبن وتروح غنمي شباعا لبنا فلم نزل نعرف من الله تعالى الزيادة والخير حتى مضت سنتاه وفصلته وكان يشب شبا لا يشبه الغلمان فلم يقطع سنتيه حتى كان غلاما جفرا أي غليظا شديدا
(السيرة الحلبية)

பனு சஹத் கூட்டத்தினர் அடைந்த அருட்கொடைகள்
وعن حليمة رضي الله عنها لما دخلت به صلى الله عليه وسلم إلى منزلي لم يبق منزل من منازل بني سعد إلا شممنا منه ريح المسك وألقيت محبته صلى الله عليه سلم أي وإعتقاد بركته في قلوب الناس حتى إن أحدهم كان إذا نزل به أذى في جسده أخذ كفه صلى الله عليه وسلم فيضعها على موضع الأذى فيبرأ بإذن الله تعالى سريعا وكذلك إذا اعتل لهم بعير أو شاة انتهى
(السيرة الحلبية)








No comments: