அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday 17 October 2013

மதீனாவின் சிறப்புகள்

மதீனாவிற்கு பெருமானார் செய்த துஆ

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ: كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اللهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا، اللهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ، وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ لِمَكَّةَ، وَمِثْلِهِ مَعَهُ» ، قَالَ: ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ

صحيح مسلم

ஹிஜ்ரத் செய்த மக்களுக்கு மதீனாவில்  காய்ச்சல் பரவியபோது பெருமானார் மதீனாவின் மூலம் நன்மை ஏற்படவேண்டும் யாருக்கும் துன்பம் ஏற்பட கூடாதென மதீனாவின் பிரியம் தங்களுக்கு வேண்டும் என துஆ செய்தார்கள். ஒரு இடத்தின் பிரியத்தை வேண்டும் என பெருமானார் கேட்டார்களானால் அதன் மதிப்பும் மகத்துவமும் நம்மால் உணர முடிகிறது.

قَالَ: «اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ، أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا، وَانْقُلْ حُمَّاهَا فَاجْعَلْهَا بِالْجُحْفَةِ»

البخاري

ஹைபர் போருக்கு பெருமானாருடன் அனஸ் ரலியல்லாஹீ அன்ஹீ அவர்கள் சென்றார்கள். திரும்பி வரும்போது உஹது மலைக்கருகில் வந்தார்கள். அப்போது உஹது நம்மை பிரியப்படுகிறது நாம் உஹதை பிரியப்படுகிறோம் என்றார்கள். பிறகு பெருமானார் தங்கள் கையால் மதீனாவை சுட்டிக்காட்டி நபி இப்ராஹிம் அலைஹி ஸலாம் அவர்கள் மக்காவை போர் நடைபெறாத மரங்கள் வெட்டப்படாத வேட்டையாடப்படாத கண்ணியமான இடமாக மாற்றியதைப்போல இந்த இடத்தையும் ஆக்குவாயாக என துஆ செய்தார்கள் மதீனாவின் விவசாயத்திற்கும் துஅசெய்தார்கள்.

أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلَى خَيْبَرَ أَخْدُمُهُ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَاجِعًا وَبَدَا لَهُ أُحُدٌ، قَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ» ثُمَّ أَشَارَ بِيَدِهِ إِلَى المَدِينَةِ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لاَبَتَيْهَا، كَتَحْرِيمِ إِبْرَاهِيمَ مَكَّةَ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا»

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அவர்கள் மீது தவறான அவதூறு சொல்லப்பட்டு ஆட்சியை விட்டும் விலக்கியபோது மதீனாவைப் பிரந்து செல்லும்போது  தன் அடிமையிடம்  தன் பிரிதலின் வருத்தத்தை தெரிவித்தார்கள். காரணம் அது பெருமானார் கால் பதித்த இடம் அல்லவா!

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ حِينَ خَرَجَ مِنَ الْمَدِينَةِ الْتَفَتَ إِلَيْهَا فَبَكَى ثُمَّ قَالَ يَا مُزَاحِمُ أَتَخْشَى أَنْ نَكُونَ مِمَّنْ نَفَتِ الْمَدِينَةُ

மதீனாவின் ஒவ்வொரு ஓட்டையிலும் இரண்டு மலக்குகள் இருந்து பாதுகாக்கிறார். அதற்கு தீங்கு செய்ய நினைப்பவர்களை அல்லாஹ் தண்ணீரில் உப்பை கரைப்பதை போல அவர்களை கரைத்து விடுகிறான. மதீனாவில் தஜ்ஜாலும் பிளேக் போன்ற நோய்களும் ஏற்படாது

إِنَّ الْمَدِينَةَ مُشَبَّكَةٌ بِالْمَلائِكَةِ، عَلَى كُلِّ نَقْبٍ مِنْهَا مَلَكَانِ يَحْرُسَانِهَا، لَا يَدْخُلُهَا الطَّاعُونُ وَلا الدَّجَّالُ، مَنْ أَرَادَهَا بِسُوءٍ أَذَابَهُ اللهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ '  - مسند احمد

மதீனா மக்காவை காட்டிலும் சிறந்தது

يَقُولُ: «الْمَدِينَةُ أَفْضَلُ مِنْ مَكَّةَ» - معجم بن المقرئ

மதீனாவில் ஈமான் நுழையும் எப்படி பாம்பு தன் பொந்திற்குள் நுழைகிறதோ அது போல.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الإِيمَانَ لَيَأْرِزُ إِلَى المَدِينَةِ كَمَا تَأْرِزُ الحَيَّةُ إِلَى جُحْرِهَا» - البخاري

எல்லா ஊhகளை காட்டிலும் மதீனா சிறந்தது. துரும்பில் இருக்கும் கசடை நெருப்பு நீக்குவதை போல மதீனா மக்களின் கசடை நீக்குகிறது

سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمِرْتُ بِقَرْيَةٍ تَأْكُلُ القُرَى، يَقُولُونَ يَثْرِبُ، وَهِيَ المَدِينَةُ، تَنْفِي النَّاسَ كَمَا يَنْفِي الكِيرُ خَبَثَ الحَدِيدِ» - البخاري

மதீனாவிற்கு யார் யத்ரிப் என்று பெயர் சொல்கிறாரோ அவர் மூன்று முறை அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு தேடத்தும். மதீனாவின் பெயர் தாபா என பெருமானார் குறிப்பிடுகிறார்கள். காரணம் மதீனாவிற்கு ஆரம்பத்தில் யத்ரிப் என்ற பெயர் தான் இருந்தது. ஆனால் பெருமானார் வந்த பிறகு மதீனா என மாறியது.

عَنِ الْبَرَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' مَنْ سَمَّى الْمَدِينَةَ يَثْرِبَ، فَلْيَسْتَغْفِرِ اللهَ عَزَّ وَجَلَّ، هِيَ طَابَةُ هِيَ طَابَةُ ' – أحمد

மதீனாவிற்கு வரும் அநீதியை  கண்டு பொருமையாக இல்லாமல் இருப்பவருக்கு பெருமானார் மறுமையில் பரிந்துரைசெய்பவர்களாக சாட்சிசொல்பவராக வருகிறார்கள்.

قال:، ولاَ يصبر على لأوائها وشدتها أحد - يعني المدينة - إلاَّ كنت له شَفِيعًا وشهيدا يوم القيامة.  – البزار


No comments: