அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!வருக! வருக!! || பிலாலியா உலமா பேரவையின் ''வெள்ளி அரங்கம்" இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. || சங்கைமிகு உலமாக்கள் தங்கள் சிறப்பான சொற்பொழிவுகள் மூலம் வெள்ளி மேடைகளை அலங்கரிக்க பிலாலியா உலமா பேரவை வாழ்த்துகிறது! ||

Thursday, 27 February 2020

ஜனநாயக நாட்டில் ஜனங்களின் நிலை.............





மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.வ

ஓர் இஸ்லாமிய மாணவி அஜித் தோவலிடம், "நாங்கள் இங்கு பாதுகாப்பாக இல்லை. கடைகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. நாங்கள் மாணவர்கள். ஆனால் எங்களால் படிக்க இயலவில்லை. காவல்துறை அவர்கள் பணியை சரியாக செய்யவில்லை. நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். இரவில் உறங்கக்கூட முடியவில்லை," என்று கூறி கதறி அழுதார்.
வன்முறைகளுக்கு யார் காரணம்?

நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ''திங்கள்கிழமை பகலில் இந்த வன்முறை தொடங்கியது. பெட்ரோல் பம்ப்களுக்கு சிலர் தீ வைத்தனர். சிலர் இந்த பகுதியில் உள்ள கடைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்'' என்று விவரித்தார்.

இந்த பகுதியை சேர்ந்த சிலர், நடந்த வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டதற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருந்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் வைக்கிறார்கள் என்று அவர்கள் விளக்கவில்லை.

முஸ்லிம்களை போலீசார் கொன்றதாக வன்முறை சம்பவங்கள் நடந்த இடத்தை சேர்ந்த ஓர் இளைஞர் குற்றம்சாட்டினார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை சேர்ந்த ஒருவர், வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு நடத்தி, சேதங்களை ஏற்படுத்தியவர்கள் வெளிப்பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுடன் இருந்த போலீசார் இதனை தடுத்து நிறுத்தவில்லை என்றும் கூறினார்.

கிட்டத்தட்ட 5-6 மணி நேரங்களுக்கு கல்வீச்சு நடந்ததாகவும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

ஆசாத் சிக்கன் என்ற கடையின் உரிமையாளரான புரே கான் கூறுகையில், கல்வீச்சு நடந்தபோது அதனை தடுக்க போலீசார் முயற்சிக்கவில்லை. எங்களால் வெளியே ஓடவும் முடியவில்லை. எங்கள் கட்டடத்தின் கீழே உள்ள பகுதிக்கு தீ வைக்கப்பட்டதால் நாங்கள் உடனடியாக மேல்மாடிக்கு சென்றோம்'' என்று கூறினார்.

இவரது வீட்டில் இருந்த ஒரு மூதாட்டி, ''எங்கள் வீட்டில் எதுவும் தற்போது இல்லை. எல்லாம் தீக்கிரையாகிவிட்டது'' என்று அழுகுரலில் கூறினார்.

சந்த்பாக் பகுதியில் வசித்துவரும் ஜாஹிட் என்பவர் கூறுகையில், ''இந்த பகுதியால் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பகுதியில் பெட்ரோல் குண்டுகள் எறிந்தவர்கள் அனைவரும் வேறு பகுதியில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டவர்கள். அவர்களால் தான் இந்த வன்முறைகள் அரங்கேறின'' என்றார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா ஆகியோரே இந்த வன்முறைகளுக்கு காரணம் என்று ஜாஹிட் குற்றம்சாட்டினார்.

வன்முறை தொடங்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர் "ஜாஃபராபாத் மற்றும் சந்த்பாக் ஆகிய பகுதிகளில் சாலைகளில் போராடுபவர்களை கலைக்க டெல்லி போலீசுக்கு நாங்கள் மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பின் நீங்கள் சொல்வதை கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்ப செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம்," என்று கபில் மிஸ்ரா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

""ஜாஃபராபாத் போராட்டத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாம் வீதிகளில் இறங்க வேண்டும்," என்றும் அவர் கூறியிருந்தார்.

2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் மிஸ்ரா, கட்சியுடனான மோதலால் 2019இல் பாஜகவில் இணைந்தார்.

கோயிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்

சந்த்பாக் பகுதியில் உள்ள இந்து கோயில் ஓன்றை, வன்முறையில் இருந்து எந்த சேதமும் அடையாமல் காக்க அங்குள்ள இஸ்லாமியர்கள் பாதுகாத்து வருவதை அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டினார்.

சூறையாடல் மற்றும் சேதங்களில் இருந்து இந்து கோயில்கள் மற்றும் கடைகளை பாதுகாக்க இரவிலும் இஸ்லாமியர்கள் தூங்காமல் விழிப்புடன் இருக்கின்றனர்.

மேற்கூறிய கோயில் அர்ச்சகரிடம் பேச பிபிசி எடுத்து கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை.

இந்த பகுதியில் வாழ்ந்துவரும் சஞ்சய் தோமர் கூறுகையில், ''பல ஆண்டுகளாக சந்த்பாக் பகுதியில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். நேற்று போல எந்த ஒரு நாளும் மோசமாக இருந்ததில்லை. தற்போதைய நிலை மனதில் வலியை ஏற்படுத்துகிறது'' என்று கூறினார்.
நமது ஜனநாயக நாட்டின் ஜனங்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது.

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ}(13)سورة الحجرات.

وقال الرسول صلى الله عليه وسلم في حديث صحيح: (الناس سواسية كأسنان المشط الواحد. لا فضل لعربي على عجمي إلا بالتقوى]]

ஒரு மனிதருக்கு அல்லாஹ் அதிகாரத்தை தருவது அவருக்கு நன்மையாகவும் அமையலாம். அவரை சோதித்து தண்டிப்பதற்காகவும் அமையலாம்.

அதிகாரத்திற்கு வந்த பிறகு யார் பெருந்தன்மையாளர்களாக மாறிவிடுகிறார்களோ அவர்களுக்கு அதிகாரம் நன்மையானது. யார் குரூரமானவர்களாக மாறிவிடுகிறார்களோ அவர்களுக்கு அதிகாரம் ஒரு சாபமே.

இது வரலாற்றுச் சத்தியம்.

அதனால்தான் அதிகாரப் பொறுப்பிற்கு வருகிறவர்கள் அதற்கு முன்னர் எப்படி இருந்தாலும் தாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ள நான் அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்வேன் என்று கூறுவதை நாம் பார்த்திருக்கலாம்.

சமீபத்தில் இலங்கை தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று ஜனாதிபதியாக ஆனபோது. எனக்கு முஸ்லிம்களும் தமிழ் மக்களும் வாக்களிக்கவில்லை. ஆயினும் நான் அவர்களுக்கும் பொதுவானவனாவே நடந்து கொள்வேன் என்று கூறினார் .

அப்படி கூறினால் தான் அவர் ஜனாதிபதி பதவிக்கு பொருந்தமானவர் என்று உலகம் சொல்லும்.

அவர் பொறுப்பிற்கு வந்த பிறகு சொன்னபடி நடந்தால் அவரை நல்லவர் என்று வரலாறு போற்றும்.

அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் தனக்குப்பிறகு இஸ்லாமிய அரசுக்கு பொறுப்பேற்க உமர் ரலி அவர்களின் பெயரை அறிவித்தார்கள்.

வரலாறு அந்த சூழலை பேசுகிறது.

في شهر جمادى الآخرة سنة 13هـ، مرض الخليفة أبو بكر واشتد به المرض،][ فلما ثقل واستبان له من نفسه، جمع الناس إليه فقال: «إنه قد نزل بي ما قد ترون، ولا أظنني إلا ميتاً لما بي، وقد أطلق الله أيمانكم من بيعتي وحل عنكم عقدتي، ورد عليكم أمركم، فأمِّروا عليكم من أحببتم، فإنكم إن أمَّرتم في حياة مني كان أجدر أن لا تختلفوا بعدي»، فتشاور الصحابة، ثم رجعوا إلى أبي بكر فقالوا: «رأيُنا يا خليفة رسول الله رأيُك»، قال: «فأمهلوني حتى أنظر لله ولدينه ولعباده»، ثم وقع اختيار أبي بكر بعد أن استشار بعض الصحابة على عمر بن الخطاب

உமர் ரலி அவர்களின் தேர்வை உஸ்மான் ரலி அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் ரலி உஸைது பின் ஹுழைர் ரலி போன்றாவர்களிடம் கூறி அது பற்றி கருத்து கூறுமாறு அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கேட்ட போது அனைவரும் அவருடைய புறவாழ்வை விட அகவாழ்வு சிறந்த்து எனவே உங்களுடைய தேர்வு சரியே என்றனர்.

ஆனால் தல்ஹா பின் உபைதில்லாஹ் ரலி அவர்கள் மட்டும் தனது பயத்தை வெளிப்படையாக கூறினார். உமர் கடுமையானவராயிற்றே !

உலகின் மகா தீர்க்க சிந்தனையாளர்களில் ஒருவரான அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள் கூறினார்கள்

நான் இருக்கையில் உங்களுக்கு அவர் கடுமையானவராக தோன்றுகீறார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்பாரானால் மென்மையானவராக மாறிவிடுவார் என்று கூறினார்.

فقد قال طلحة بن عبيد الله رضي الله عنه لأبي بكر الصديق: ما أنت قائل لربك إذا سألك عن استخلافك عمر علينا وقد ترى غلظته؟ فقال أبو بكر: أجلسوني، أبا الله تخوفونني؟ خاب من تزود من أمركم بظلم، أقول: اللهم استخلفت عليهم خيرَ أهلك. وبيَّن لمن نبهه إلى غلظة عمر وشدته فقال: ذلك لأنه يراني رقيقًا، ولو أفضى الأمر إليه لترك كثيرًا مما هو عليه[


வரலாறு என்ன காட்டுகிறது


உமர் ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாகா நிதானத்துடன் மென்மையாக மக்கள் மீது பேரன்பும் பெரும் கருணையும் கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்


ஆட்சிப் பொறுப்பென்பது நல்லவர்களை மேலும் நல்வழிப்படுத்தும் மோசாமானவர்களை மேலும் கொடூராமாக்கி விடும்.


நம்முடைய மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் பழைய வரலாறு நல்லதாக இல்லை. பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த குற்றச் சாட்டுக்கு ஆளானவர்கள். அவ்வாறு மக்கள் கொல்லைப்பட்டத்தை காருக்கு முன்னாள் விழுந்து சாகும் மிருகங்களுக்கு நான் பொறுப்பேறக முடியாது என்று கூறியவர்கள்.


முதலில் அவர்களிடம் சிறிய அதிகாரம் இருந்தது. சிறிய அளவில் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள். இப்போது அவர்களிடம்  நாட்டின் மைய அதிகாரம் இருக்கிறது. அதற்கேற்ப இன்னும் பெரிய அளவில் அதிகார மிருகத்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள்.


நாடாளுமன்றத்தில் அவர்கள் பேசுகிற வார்த்தைகளிலும் அவர்கள் வெளிப்படுத்துகிற உடல்மொழிகளிலும் கீழ்த்தர மனிதர்கள் பெரும் பொறுப்புக்களில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.


கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த  குடியுரிமை சட்ட திருத்த மசோதா (Citizenship Amendment Bill)  இந்த ஆட்சியாளர்களின் மனிதாபிமானமற்ற இயல்புக்கு வெளிப்படையான சாட்சியாகும்.


அந்த சட்ட திருத்தம் என்ன சொல்கிறது.


ஏற்கெனவே இருக்கிற சட்டம் என்ன சொல்கிறது.


அரசியலமைப்புச்சட்டம் 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதில் குடியுரைமை பற்றிய தெளிவான விளக்கங்கள் இருக்க வில்லை. நாடு பிரிவினைக்கு ஆளான போது ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்தனர். அதனால் 1955 ம் ஆண்டு குடியுரிமை சட்டம் இயற்றப் பட்டது அதில் குடியுரிமைக்கு மூன்று தகுதிகள் கூறப்பட்டிருந்தன.


1.   1950 ஜனவரி 26 ம் தேதியில் இந்தியாவை இருப்பிடமாகக் கொண்டவர்கள். பெற்றோர்களில் ஒருவர் இந்தியாராக இருந்து 5 வருடமாக இந்தியாவில் தங்கியிருப்பவர்.


2.    பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்


3.   பொற்றோரில் ஒருவரி இந்தியராக இருக்கும் நிலையில் குடியுரிமை கோரி மனுச்செய்பவர்


.

இந்த ஆரம்ப கால சட்ட விதிகளில் துளியும் மதக் கலப்பு இருக்கவில்லை.


இம்மசோதா தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைசி கூறினார்.


இந்திய அரசியல் சாசனம் தொகுக்கப் பட்ட போது அது பகவானின் பெயராலோ அல்லது குதாவின் பெயராலோ ஆரம்பிக்கப் படக் கூடாது என்னும் அளவுக்கு அன்றைய தலைவர்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்தார்கள்.


இப்போது பாஜ அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் என்ன சொல்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோரில், 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே அந்த திருத்தம்.


ஒருவகையில் பார்த்தால் இந்தச் சட்ட திருத்தம் மிக வேடிக்கையானதாக தோன்றும்


ஏனெனில்


பாஜக அரசு அக்கம் பக்கத்திலுள்ள நேபாளம் பூட்டான் மியான்மர் ஆகிய மூன்று நாடுகளை விட்டு விட்டு மற்ற மூன்று நாடுகளை மட்டும் குறிப்பிடுவதற்கு - முஸ்லிம் வெறுப்பு அல்லது இஸ்லாத்தின் மீது அவதூறு கூறுதல் என்பதை தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.


பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் கூட பிரிட்டிஷ் காலத்தில் ஒன்று பட்ட இந்தியாவில் இருந்தவை என்று கூறலாம். ஆப்கானிஸ்தான் ஒரு போதும் பிரிட்டிஷின் ஒன்று பட்ட இந்தியாவில் இருக்கவில்லை.


பக்கத்திலுள்ள இந்த நாடுகளில் சிறுபான்மையினர் மதரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பாஜக அரசு சொல்வது உண்மையாக இருக்குமானால் (இன்றைய தி ஹிந்து தமிழ் ) கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போல ) இந்தியாவின் அண்டை நாடும், சமயச்சார்பான அரசுமான பூடானின் அதிகாரபூர்வ மதமாக வஜ்ராயன பௌத்தம் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டது? பூடானைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட அளவிலேயே பிரார்த்தனை செய்ய முடியும். எல்லைப் பிராந்தியங்களில் உள்ள பல பூட்டானிய கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் வழிபடுவதற்காக இந்தியாவுக்குப் பயணிக்கும் நிலை உள்ளது. ஆனால், குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவில் அவர்கள் பலனாளிகளாக இல்லை.


மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலை ஏவப்பட்டு, நிறைய பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த நிலையில் அவர்கள் ஏன் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை?


அவர்களை அரசியல் அகதிகள் என்கிறார் உள்துறை அமைச்சர். பொளத்த மதவாத துன்புறுத்தல் என்று உலகிற்கே தெரிந்த ஒரு உண்மையை பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்கிறார்.


உண்மையில் உலகின் மிக மோசமான அகதிகள் என்று ஐநா சபை பட்டியலிட்டிருக்கிற ரோகிங்கியா அகதிகளே  இன்றைய நிலையின் உலகின் அதி தீவிர கருணைக்கு உரியவர்கள்,


அவர்களை புறக்கணிக்கிற ஒரு சட்ட மசோதாவை இந்தியப் பிரதமர் மோடி கருணையின் அடையாளம் என்கிறார்,


அதே போல பொளத்த மதவாத தாக்குதலுக்கு ஆளாகி இலட்சக்கணக்கான தழிழ் அகதிகள் இந்தியாவில் குடியேறியுள்ளனர். அவர்களையும் அரசியல் அகதிகள் என  கூறி இந்த சட்ட மசோதா ஏற்க மறுக்கிறது.


உண்மையில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் அடைக்கலாமாகியுள்ளோர் என்று எடுத்துக் கொள்ளப் படுமானால் ரோகிங்கியா அகதிகளும். இலங்கை தமிழ் அகதிகளுமே இதில் இந்தியக் குடியுரிமை பெற முதல் தகுதி படைத்தவர்கள். இவர்களுக்கு இந்திய மரபுத் தொடர்பும் உள்ளது


இன்னொரு எதார்த்தம் என்ன வென்றால், மக்களுக்கு நன்மையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் குடியுரிமைச் சட்ட திருத்தத்தில்

இவர்கள் உள்ளடக்க்ப் பட்டிருந்தால் இன்று நாடுமுழுவதும் பெரும் மகிழ்சி அலை உருவாகியிருக்கும்.


காரணம் அரசு கொண்டு வந்துள்ள மசோதாவினால் நன்மை அடைந்த இலட்சக்கணக்கான மக்கள் இதை கொண்டாடியிருப்பார்கள்.


தமிழகத்தின் மக்கிழ்ச்சிக்கும் அளவே இருந்திருக்காது. அகதி முகாம்களில் வாழ்கிற மக்களின் வாழ்விம் பெரும் சந்தோசம் பார்ந்திருக்கும்.


தற்போதுள்ள பெரிய கேள்வி என்ன வென்றால் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள மசோதாவினால் நன்மை அடையப் போவது எத்தனை போர் ?


ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான். பங்களாதேஷிலிருந்து மதரீதியாக துன்புறுத்தப் பட்டு 2014 டிஸம்பர் 31 ம் தேதிக்குள்ளாக இந்தியாவிற்குள் குடிபெயர்ந்தோர் எத்தனை பேர் என்ற கேள்விக்கு அரசு இதுவரை பதில் சொல்ல வில்லை.


அப்படியானால் இந்தச் சட்ட்த்தால் யார் நன்மைய அடைகிறார்கள் ?


அசாம் மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட குடிமக்கள் பதிவேற்ற சட்ட்த்தால் சுமார் 19 இலட்சம் மக்கள் இந்தியர்கள் அல்ல என்று அறிவிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்கிறவர்கள். சரியான சான்று அளிக்க முடியாதவர்கள்.


இந்தப் 19 இலட்சம் பேர்களில் சுமார் 5 இலட்சம் பேர் பங்களாதேஷி இந்துக்கள். மற்ற 14 இலட்சம் பேர் பங்காளி முஸ்லிம்கள்.


அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்ட்த்தின் மூலம் பங்காளி இந்துக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவார்கள். பங்காளி முஸ்லிம்கள் நிலமற்றவர்களாகி விடுவார்கள்.


தேவையே இன்றி பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவின் மூலம் உடனடியாக ஏற்படக் கூடிய ஒரே நிகழ்வு இந்த 5 இலட்சம் பங்காளி இந்துக்களை இந்தியர்களாக்குவதுதான்.


இந்த அப்பட்டமான மதப் பாகுபாட்டை இது இந்திய அரசியல் சாசனத்தின் பன்பிற்கு எதிரானது என்று எவ்வளவுதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதறிக் கதறி பேசிய போதும் இந்திய உள்துறை அமைச்சர் மிக தந்திரமான வார்த்தைகளில் இந்தியாவின் சட்ட பூர்வ முஸ்லிம்களை இந்தச் சட்டம் 01 சதவீதம் கூட பாதிக்காது என்கிறார்.


ஆனால் தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் மிக சரியாக இந்த மசோதாவை எதிர்த்தார்கள்.


முன்னாள் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், அரசியல் சாசனத்தின் அடிப்படை பன்பை பாதுகாப்பது தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை. இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிந்தும் இந்துத்துவாவை அமுல் படுத்தும் நோக்கில் இந்தச் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒரு துக்க நாள் என்றார்.


பாஜாக அரசு நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்குகிறது என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் , இந்த மசோதாவின் மூலம் நாட்டை மதரீதியாக பாஜக பிளவு படுத்துகிறது. பாஜகவினர் ஒரு சமூகத்தின் பேரைக் குறிப்பிடாமல் அவர்களை குறிவைக்கின்றனர். 18 லிருந்து 20 கோடி மக்களின் நம்பிக்கையை நாம் இழக்க நேரிடும். இந்தியாவின் பாரம்பரியம் பற்றி தெரியாத உங்களால் இந்தியாவை பாதுகாக்க முடியாது. தயவை செய்து இந்தியக் குடியரசை இரு ஜுராஸீக்களின் குடியரசாக மாற்றி விடாதீர்கள் ( don’t covert this Indian republic into a juracik republic என்று கபில் சிபல் அவர்கள் உணர்ச்சி பொங்க கூறினார்.


இந்த நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட பலரும் இந்தச் சட்ட திருத்த்த்தின் அநீதியான அம்சம் குறித்து மிகுந்த கவலை கொண்டு பேசிய போதும் பாஜக அரசு தனது மிருக பலத்தால் இம்மசோதாவை வெற்றி பெறச் செய்துள்ளது. இதற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்கவும் கூடும். நீதிமன்றங்கள் கூட இன்றுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கிற்கு பணிந்து போக்க கூடும்.


இந்திய மக்களாகிய நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால்

தி ஹிந்து தமிழ் நாளிதழ் தெளிவாக நாம் சுட்டிக்காட்டுகிறது.


அரசமைப்புரீதியான எந்தத் தர்க்கத்துக்குள்ளும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா வரவில்லை. ஆனால், குதர்க்கமான அரசியல் தர்க்கம் அதில் இருக்கவே செய்கிறது. சட்டத்தின்படி இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவதற்கான முதல் முயற்சி இது . இது அரசமைப்புக்கு ஒவ்வாத சட்டம் என்று நீதித் துறை வலியுறுத்திக் கூற வேண்டும். அப்படிச் செய்யாமல்போனால், இது முடிவாக அல்ல; இதுபோன்ற சட்டரீதியான நகர்வுகளுக்கு இது தொடக்கமாகவே அமையும். காலப்போக்கில் நாம் அறிந்த அரசமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.


எனவே இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், இந்த நாட்டின் பன்முகத் தன்மையை நேசிக்கிறவர்கள், இந்த நாட்டின் மதச்சார்பின்மையை நம்புகிறவர்கள், குறிப்பாக சிறுபான்மையினத்தை சார்ந்தவர்கள் இந்தச் சட்ட திருத்த்திற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்தாக வேண்டும்.


தமிழ நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை இம்மசோதாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதே போல பல பல அரசியல் கட்சிகளும் ஜனநாயக அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்திருகின்றன,


நமது ஊரில் அத்தகைய கண்டனக் கூட்டம் நடை பெறும் போது மக்கள் திரளாக பங்கேக வேண்டும்.


பாஜக அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்.


ஆட்சியிலிருப்பவர்களுக்கு இஸ்லாத்தின் சார்பில் ஒன்று சொல்லிக் கொள்வோம்.


அதிகாரத்தை மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினால் வரலாற்றில் வாழ்வீர்கள்.


இது காந்தியின் தேசம்.


யாருக்கெல்லாம் சொந்த மாக ஒரு நாடு இல்லையே அவர்கள் எல்லோரும் இங்கு வரலாம். இந்தியா அவர்களுக்கு தாய் வீடு என்றார் காந்தியடிகள்.


காந்தி இறந்து பல்லாண்டுகளாகி விட்ட போதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்.


அவரது தேசத்தை ஆளும் வாய்ப்பை பெற்ற நீங்கள் ஹிட்லர்களாகிவிடாதீர்கள்.


வரலாறு நல்லவர்களுக்கானது.  நல்லோர்கள் காலம் கடந்து வாழ்வார்கள்.


சிலுவைப்படையினர் பைத்துல் முகத்தஸை கைப்பற்றிய போது அங்கிருந்த முஸ்லிம்களை ஈவு இரக்க மின்றி கொன்று குவித்தனர். அங்கிருந்த குப்பத்துஸ் ஸஹ்ரா என்ற பாறையின் முன்பகுதியில் முழங்கால் அளவு இரத்தம் தேங்கியிருந்த்தாக வரலாறு கூறிகிறது.


அதே பைத்துல் முகத்தஸை சுல்தான் சலாஹுத்தின் மீட்ட போது அங்கிருந்தவர்கள் தமது உடமைகளுடன் வெளியேற அனுமதித்தார். அதற்கு 10 திர்ஹம் அவர்கள் செலுத்தினால் போதுமானது என்றார், அப்படி 10 திர்ஹம் செலுத்த முடியாதவர்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து செலுத்தினார். தனது சகோதர்ர்களுக்கும் அவ்வாறு செய்ய உத்தரவிட்டார், அங்கிருந்து வெளியே கிருத்துவர்களுக்கு அடைக்கலம் தர அக்கம் பக்கத்திலிருந்த கிருத்துவ அரசுகள் முன் வரவில்லை. அப்போது சலாஹீத்தீன் அய்யூபி தனது நிலப்பரப்பிலிருந்தே ஒரு பகுதியை ஒதுக்கி அங்கே அவர்கள் தங்கிக் கொள்ள அனுமதித்தார்.


இதுதான் வரலாற்றில் வாழ்வதற்கான வழி.


தற்போது பாஜக அரசு முன்னெடுத்துச் செல்கிற திட்டங்கள் இந்திய தேசத்தை மட்டும் அல்ல பாஜகவையும் பெரும் சீரழிவுக்கும் இழிவுக்கும் தள்ளிவிடும் என்று எச்சரிக்கிறோம்.


யா அல்லாஹ்   இந்திய தேசத்தை மதவெறியர்களின் குடியரசாக இல்லாமல் சுல்தான் சலாஹுத்தீன்களின் குடியரசாக மாற்றி தருவாயாக!

Thursday, 20 February 2020

இறைநம்பிக்கையின் இறுதி முடிவு வெற்றியே!!




இன்றைக்கு இந்திய மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் தங்களின் குடி உரிமைக்காக தெருக்களில் வந்து  பெண்கள் உட்பட!  போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினரே அவராகவே ஒரு குற்றத்தை சித்தரித்து இந்த இஸ்லாமிய மக்களின் மீது திணிக்கிறார்கள்.
எல்லாம் தெரிந்த அரசும் காவல்துறைக்கு சாதகமாக பேசுகிறது.
மக்களுக்காக மட்டுமே பணியாற்ற கூடிய காவல்துறையின் நிலையும், அரசின் நிலையும் இப்படி என்றால் அப்ப மக்களின் நிலைமை....?
உரிமையையும் பறித்து பாதுகாப்பும் இல்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?
கவிக்கோ அப்துற் ரஹ்மான் கவி நடையில் சொல்வார் இல்லையா?
  சுடும் வரை நெருப்பு
          சுற்றும் வரை பூமி
                    போராடும் வரை மனிதன்
மக்கள் அனைவரும் அநீதி இழைக்கப்பட்டவராக இந்தியாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இரண்டு மாதங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
- [عن عبدالله بن عباس:] أنَّ النبيَّ ﷺ قالَ.      يَومَالفَتْحِ: لا هِجْرَةَ بَعْدَ الفَتْحِ ولَكِنْ جِهادٌ ونِيَّةٌ، وإذا اسْتُنْفِرْتُمْ فانْفِرُوا.                                               
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், '(மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் என்பது கிடையாது; ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போருக்காகப் புறப்படும்படி (உங்கள் தலைவரின் தரப்பிலிருந்து) கோரப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2825.
அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
இஸ்லாமியர்களுக்கு ஹிஜ்ரத் என்பது இல்லை ஆனால் போராட்டங்கள் கியாமத் நாள் வரைக்கும் தொடங்கும்.

இஸ்லாமிய வரலாற்றில் நிறைய போராட்டங்கள் நடந்திருக்கிறது. அல்லாஹ்வின் மீது முழுநம்பிக்கை வைத்து போராடிய முஃமின்கள்
தோற்றதாக சரித்திரம் இல்லை
ஏன் தோல்வி இல்லை என்று தெரியுமா?
அல்லாஹுத்தஆலா சொல்லுவான்

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ‏.                             
நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது.
(அல்குர்ஆன் : 30:47)

இந்த ஆயத்தின் மூலம் ஒரு முஃமினுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமை.
அப்பொழுது உண்மையான முஃமின்களாக வாழ்பவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி இருக்கும் ஏன் இது அல்லாஹ்வின் வாக்குறுதி!
கொஞ்சம் வரலாறுகள் எடுத்துப் பாருங்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்ரூத்தை வெற்றிகொண்டது, முஸா அலைஹிஸ்ஸலாம் பிர்அவ்னை வெற்றி கொண்டதும்,நமது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப்போர் ,உஹதுப் போர் ,கந்தக்போர், போன்ற பல்வேறு போர்க்களத்தில் வெற்றி பெற்றதற்கும்
ஆக பெரும் காரணம் அல்லாஹ்வின் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கை தான் இக்கட்டான சூழ்நிலை தனக்கு துணையாக யாரும் இல்லை என்ற கட்டம் ஆனாலும் மனம் தளரவில்லை அல்லாஹ்வின் மீது வைத்த நம்பிக்கை குறையவில்லை அதனால் அல்லாஹ் வெற்றியை கொடுத்தார்
நமது இந்திய தேசம்

அன்னிய,ஆங்கிலேய ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டு சுதந்திர தேசமாக மாறியதன் பின்னணியில் மதம்,இனம்,மொழி இவற்றையெல்லாம் கடந்து ஒட்டுமொத்த மக்களும் ஓரணியில் திரண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். இருப்பினும் இந்திய சுதந்திரப் போராட்டப் பங்களிப்பில் தங்களது சதவிகிதத்தை விடவும் அற்பணிப்புகள் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களில் நிரம்பியிருக்கின்றன.

வரலாறுகளை எடுத்துப் பாருங்கள் வெற்றி பெறுவதற்கு எந்த ஒரு காரணமும் முஃமீன்களிடம்  இல்லை இறை நம்பிக்கையை தவிர!
இறை நம்பிக்கையோடு வாழும் முஃமின்களுக்கு அல்லாஹ் உதவி செய்வது அவன் மீது கடமை!

ஏனென்றால் இந்த நேரத்தில் நமக்கு ஆட்களின்  பலத்தை விட ஈமானிய பலம் மிக மிக முக்கியம்.

وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (122) [آل عمران :
 122]

நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன் 3:122)

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (160) [آل عمران : 160]

அல்லாஹ் உங்களுக்கு உதவி
 செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 3:160)
இதே முஃமினுடைய தன்மைகளைப் பற்றி இறைவன் சொல்லும்போது
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ (11) [المؤمنون : 1 – 11]

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 23:1-11)

முஃமீனுக்கு உண்டான எல்லாம் தன்மைகளும் நம்மிடத்தில் கொண்டுவந்த பிறகு அநியாயக்காரர்கள் இடத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான்

وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ
 تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌  لَا تَعْلَمُوْنَهُمُ‌  اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏ 

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 8:60)

وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏ 

அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீங்களும்  அதன் பக்கம் இணங்கி வாருங்கள். அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுங்கள்; நிச்சயமாக அவன் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 8:61)

وَاِنْ يُّرِيْدُوْۤا اَنْ يَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ‌ هُوَ الَّذِىْۤ اَيَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِيْنَۙ‏ 

(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (உங்களை
பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவனாக இருக்கின்றான். அவன்தான் உங்களை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
 ‌  
இந்த மூன்று குர்ஆன் ஆயத்து என்ன சொல்லுகிறது என்பதை ரத்தினச் சுருக்கமாக பார்த்தோமென்றால் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு முன்னாள் முஸ்லிம்களாகிய இருக்கக்கூடிய நாம் அவர்களுக்கு எதிராக நம்முடைய பலத்தை நம்முடைய திறமையை நம்முடைய ஆயுதங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்றும்.

அதேபோல அவர்கள் சமாதானமாக வந்தாள் நீங்களும் சமாதானமாக போங்கள் அந்தப் பொறுப்பை அல்லாஹ்விடமே சாட்டுங்கள் என்றும் சொல்லுகிறான்.

அல்லது அந்த எதிரிகள் உங்களுக்கு சதி செய்தால் அல்லாஹ்வே உங்களுக்கு போதுமானவன் நான்தான் உங்களை உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களை கொண்டும் பலப்படுத்துகிறேன்.
கடைசியாக உள்ள அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்லுகிறான் முஃமின்களுக்கு உதவி செய்வது எண்ணின் மீது கடமை என்று.
எனவே எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நமக்கு ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள நம்பிக்கையை அணு அளவு கூட குறைத்து விடாமல் எல்லா விஷயத்திற்கும் தயாராக நாம் இருப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தௌபீக் செய்வானாக!

Thursday, 13 February 2020

இளவர்களுக்கு இறைவனின் போதனை(பிப்ரவரி 14)



இன்றைய நாள் காதலர் தினம்  இதன் பின்னணி வரலாறு பெரும்பாலும் நம் அனைவருக்கும் தெரியும்!
ரோமாபுரியை ஆட்சி செய்து வந்த அரசன் கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் அவனது படையில் ஆண்கள் சேரும் விகிதம் குறைவடைந்து கொண்டே போனது. இதை அறிந்த அரசன் அதற்கான காரணம் ஆண்கள் காதல் வயப்பட்டும் குடும்பத்தோடு நிம்மதியாக வாழ நினைத்தும் படையில் சேர்ந்து போரில் உயிர் போய்விட்டால் குடும்பத்தை பார்க்க எவரும் இல்லை
என்ற காரணத்தாலும் படையில் சேராமல் இருப்பது
தெரியவந்தது. உடனே ஒரு அதிர்ச்சியான ஒரு கட்டளையை பின்பற்றசொசொன்னான். அதாவது
ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தான். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான்.

இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார். அந்தநாள் கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள். இந்த நாளை வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

தன் நாட்டு அரசனின் கட்டளைக்கு மாற்றமாக தரகர் வேலை பார்த்து திருட்டுத்தனமாக திருமணத்தை செய்து வைத்து கேவலமான முறையில் தண்டனை பெற்ற ஒருவனின் பெயரால் இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது‌.
வரலாறும் கேவலம் இந்த தினத்தில் நிகழும் காரியங்களும் ஆக கேவலம்!

ஆண் பெண் முறைகேடான உறவை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்லாம் மனிதர்களுக்கு ஒரு விஷயத்தை ஏவுகிறது என்றால் அதன்மூலம் மனிதகுலம் அனைவருக்கும் நன்மையை உலக முடிவு நாள் வரை காணமுடியும்

இஸ்லாம் ஒரு விஷயத்தை தடுக்கிறது என்றால் உலக முடிவு நாள் வரை மனித குலத்திற்கு பயங்கரமான பின்விளைவுகள் இருக்கும் என்பதை சமீப காலத்தில் நாம் பார்த்து வருகிறோம்.
நமது சமூகத்தில் சில பிற்போக்குவாதிகள் இப்படிச் சொல்வார்கள் காதல் புனிதமானது என்று.
ஒரு விஷயம் இன்றைய தினம் பிப்ரவரி 14ல் உலகம் முழுவதிலும் திருட்டுத்தனமாக காதல் செய்து கொண்டிருக்கும் ஜோடிகள் திருட்டுத்தனமாக சந்தித்துக் கொள்வதும், முத்தங்களைப் பரிமாறிக் கொள்வதிலும், இத்தோடு நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சில கேவலமான செயல்களில் ஈடுபட்டு, அன்றைய ஒரு நாள் சந்தோஷத்திற்காக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்துமனநோயாளியாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ இளைஞர்களையும் ,யுவதிகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

காதல் எனும் போர்வையில் கழிசடை யான செயல்களை செய்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இளைஞர்கள் யுவதிகள் நிறைய!
இதில் வருத்தம் என்வென்றால் அல்லாஹ் ,ரஸூலை ஏற்ற முஸ்லீம்களும் இருகிறார்கள்!

قال رسول الله صلى الله عليه وسلم: "إن الله كتب
 على ابن ءادم حظه من الزنا أدرك ذلك لا محالة فالعين تزني وزناها النظر واليد تزني وزناها اللمس والرجل تزني وزناها الخطى واللسان يزني وزناها المنطق والفم يزني وزناه القبل والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك أو يكذبه".

النظر بشهوة أي بتلذذ للأجنبية حرام، وتكليمها ليتلذذ بهذا الكلام حرام، ولمسها بدون حائل أيضًا حرام. .                                                               
أغلب البشر لا يسلمون من هذا، وأكثر هذا كله   النظر، زنا العين.                                                 .
بعض الناس يكلمون خطيبتهم قبل العقد بشهوة، بتكليمها يتلذذون هذا أيضا حرام.                       
ஆனால் இந்த செயல்களெல்லாம் காதல் என்ற பெயரால் நடந்தால் தவறில்லை என்று ஒழுக்கங்கெட்ட சமூக விரோதிகளால் சினிமாக்கள் மூலமும், கதைகள் மூலமும் சித்தரிக்கப்படுகிறது.

வழிகேட்டு ஒழுக்கங்கெட்டுப் போனவர்கள் இந்த சித்தரிப்புகளை நடைமுறைப் படுத்தலாம் ஆனால் நல்வழியில் ஒழுக்கத்துடன் நடக்க விரும்பும் இறைநம்பிக்கையாளன் இதை எதிர்ப்பவனாகத் தான் இருப்பான்.

இறை வேதங்கள் மற்றும் இறைத்தூதர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளாவிட்டால் கூட பொதுவான நியாயமும் மனசாட்சியும் ஒரு பெண்ணை தவறாக தொடுவதும் அவளிடம் வரம்புமீறிய பேச்சுக்களைப் பேசுவதும் மற்ற அருவருக்கத்தக்க செயல்களை செய்வதும் கூடாதென்றுதான் சொல்கின்றன.

காதலன், காதலி என்று சொல்லப்படுபவர்கள் ஒருவர் மீது ஒருவர் நேசங்கொண்டு திருமண பந்தத்தின் மூலம் இணைய விரும்புகிறவர்கள் அதற்க்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் தானே தவிர கூடாத காரியங்களை செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல.

காதலிப்பவர்கள் திருமணம் செய்யாமலும் போகலாம், அப்படித்தான் பலருக்கும் நடக்கிறது. இவ்வாறு இருக்கையில் மேற்கண்ட தவறுகளை செய்துவிட்டு பிரிந்தால் இறைவனுக்கு மாறு செய்த குற்றத்தோடு வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்த குற்றமும் வந்து சேரும். தவறுகள் திருமணத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் கூட! ஏனென்றால் திருமணம் செய்து கொள்பவர் அவ்வாறான தவறுகள் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையோடு தான் திருமணம் செய்கிறார்.
காதலிப்பவர்கள் கூடாத காரியங்கள் செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல!
رواية: لا يخلون أحدكم بامرأة فإن الشيطان ثالثهما.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் பெண்ணுடன் தனியாக இருக்க வேண்டாம், அப்படியிருந்தால் அவர்களிருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருபான். [நூல்: அஹ்மத் 114, திர்மிதி 2165]
பேண வேண்டியது. ஏனென்றால் அவர்களைஇது எல்லோருக்கும் பொதுவான எச்சரிக்கை என்றாலும் காதலிப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் அவசியம் ஷைத்தான் இலகுவாக வழிகெடுத்து விட வாய்ப்புள்ளது.

ஒரு ஆண் அன்னியப் பெண்ணை பார்த்து ரசிக்கக் கூடாது என்பது மார்க்கத்தின் தடை உத்தரவு. இதை மீறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை, அல்லாஹ் கூறுகிறான்:
                             قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِن.             أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ.    خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ .                                             
“இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மறைவிடங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும். இது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
மேலும் இறைனபிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும்.” [அல்குர்ஆன் 24:30,31]

இந்த வசனங்களில் ஆண், பெண் இருதரப்பினருக்கும் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளவும், கற்பைப் பேணிக்கொள்ளவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

இது எல்லோருக்கும் பொதுவான கட்டளைதான், ஒருவர் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்பதற்காக இதை மீறக் கூடாது. ஏனென்றால் அவள் இவரது மனைவியல்ல, இவர் அவளைத் திருமணம் செய்ய இயலாமல் கூடப் போகலாம்
.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல.” நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.

தான் விரும்பும் பெண்ணை தொடர்ந்து பார்ப்பதும் கூட தவறு என்று கூறும்போது காதலில் இதுகூட செய்யக்கூடாதா என்ற கேள்வி கேட்கப்படலாம்.

இறைநம்பிக்கையுடன் அவனது வழிகாட்டுதல் படி செயல்படவேண்டுமென்று நினைப்பவர் இதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

இறைவழிகாட்டுதலுக்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவன் ஒருத்தியை காதலி என்று சொல்லிக்கொள்வதால், அவள் அன்னியப் பெண் என்கிற நிலை மாறிவிடாது, ஒரு அன்னியப் பெண்ணிடம் பேண வேண்டிய வரைமுறையை அவளிடத்திலும் பேண வேண்டும்.

இதனை இறைவழிகாட்டுதல் மட்டுமின்றி மனசாட்சியும் வலியுறுத்தத்தான் செய்கிறது. தவறான பார்வை மட்டுமின்றி தான் விரும்பும் பெண்ணுடன் கூடாத அசிங்கப் பேச்சுக்களைப் பேசுவதும், தவறான எண்ணத்துடன் தொடுவதும் சிறு விபச்சாரம் என்ற அடிப்படையில் இறைவனிடம் தீமையாக பதியப்படும். அதற்குத் தகுந்தாற்போல் மறுமையில் தண்டனையும் கிடைக்கும்.
இதுவெல்லாம் இஸ்லாம் கூறும் தனி மனித ஒழுக்கங்கள் ஆகும்.
சற்று யோசித்துப் பாருங்கள் இஸ்லாம் சொல்வது போல் இருந்தாள் இந்த உலகத்தில் ஆனால் பெண்ணிற்கும் பெண்ணினால் ஆணிற்கும் எந்த ஆபத்தும் இருக்காது.

 இதை மீறுவதால் தான் நிறைய பெண்கள் சில ஆண்களின் நம்பி கருப்பை இழக்கிறார்கள் நிறைய ஆண்கள் பெண்களின் நம்பி தன் வாழ்க்கையையே இழக்கிறார்கள்.!

பெண்களைப்பற்றி  அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ.     نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي.    الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ.       عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ  مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ.       لَعَلَّكُمْ تُفْلِحُونَ.             
                  
இறைநம்பிக்கையாளர்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்திக்கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக்கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதில் (வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளை அவர்கள் நெஞ்சுப்பகுதிகளில் போட்டுக்கொள்ளவும் மேலும் தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களான அடிமைகள் அல்லது ஆடவர்களில் (வயோதிகத்தின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும் தம் அலங்காரத்தில் தாம் மறைத்து வைத்திருப்பது அறியப்படுவதற்காக தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும் நம்பிக்கயாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹுவின் பக்கம் மீளுங்கள்” அல்குர்ஆன் 24:31

 இந்த வசனத்தில் ஒரு பெண் தன் அலங்காரத்தை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள் யார் யார் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான்.

இந்தப் பட்டியலில் காதலன் என்று ஒருவன் இல்லை, தன் கணவனாக வரவேண்டுமென்று ஒருவனைப் பற்றி ஒரு பெண் விரும்பிவிடுவதால் அவனுக்கு கூடுதல் சலுகை கிடையாது என்பதை உணரவேண்டும்.

இந்த வசனத்தில் அந்நிய ஆணின் கவனத்தை திருப்புகிற விதத்தில் காலை வேகமாகத் தரையில் தட்டிக் கூட நடக்கக் கூடாது என்று தடை செய்கிறான் இறைவன்!

ஒரு அந்நிய ஆணை கெட்ட எண்ணத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது என்பதில் ஒரு பெண் கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறான். அப்படியிருக்கையில் ஒருவனின் தவறான ஆசைகளை தூண்டுகிற விதத்தில் நடந்துகொள்வதும் தவறு செய்ய அனுமதிப்பதும் எப்படித் தகும்?

இந்த விஷயங்களை எல்லாம் மக்களும் கடைப்பிடித்தால் வன்புணர்ச்சிகள் குறையும் , பெண்களின் கற்புகள் பாதுகாக்கப்படும் ,இளைஞர்களின் வாழ்வு முன்னேறும்,சுற்றுலா இடங்களுக்கு குடும்பத்தோடு போகலாம்,
இஸ்லாமிய போதனைகளை ஏற்று நடக்கும் பாக்கியத்தை நாம் அனைவருக்கும் தருவானாக!